என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "executes"

    • ஈரானுக்குள் சட்டவிரோதமாக ஆயுதங்களை கொண்டுசெல்ல உதவியதாக குற்றச்சாட்டு.
    • இஸ்ரேலுக்கு உளவு பார்த்ததாகக் குற்றம்சாட்டப்பட்ட மூவரை ஈரான் அரசு தூக்கிலிட்டது.

    துபாய்:

    இஸ்ரேல்-ஈரான் இடையே போர் நிறுத்தம் ஏற்பட்டுள்ளது என அமெரிக்க அதிபர் டிரம்ப் சமீபத்தில் அறிவித்தார். ஆனாலும் இரு நாடுகளும் தொடர்ந்து சண்டையிட்டு வருகின்றன.

    இதற்கிடையே, இஸ்ரேலுடனான மோதலின் போது கடந்த 10 நாட்களில் உளவு பார்த்ததாக ஏற்கனவே 3 பேருக்கு ஈரான் தூக்கு தண்டனை நிறைவேற்றியிருந்தது.

    இந்நிலையில், இஸ்ரேலுக்காக உளவு பார்த்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட 3 பேருக்கு ஈரானில் தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

    அந்நாட்டின் அசர்பைஜான் மாகாணம் உர்மியா சிறைச்சாலையில் அசர் ஷொஜாய், எட்ரிஸ் அலி, ரசுல் அகமது ரசுல் ஆகிய 3 பேருக்கும் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது.

    இஸ்ரேலுக்கு உளவு பார்த்ததாகக் குற்றம்சாட்டப்பட்ட மூவரை ஈரான் அரசு தூக்கிலிட்டுள்ளது என ஈரானிய நீதித்துறை செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

    ஈரானுக்குள் சட்டவிரோதமாக ஆயுதங்களைக் கொண்டு செல்வதற்கு உதவியதாக இவர்கள் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    சவுதி அரேபியா நாட்டில் பயங்கரவாத வழக்குகளில் மரண தண்டனை விதிக்கப்பட்ட 37 பேருக்கு இன்று தண்டனை நிறைவேற்றப்பட்டது. #Saudiexecutes
    ரியாத்:

    சவுதி அரேபியா நாட்டில் கொலை, கொள்ளை, கற்பழிப்பு, போதை பொருள் கடத்தல் மற்றும் பயங்கரவாத குற்றங்களில் ஈடுபடுவோருக்கு மரண தண்டனை வழங்கப்படுகிறது.

    இந்நிலையில், நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் பயங்கரவாத சித்தாந்தத்தை பரப்பியும், பயங்கரவாதிகளாக செயல்பட்டும் வந்த உள்நாட்டினர் 37 பேருக்கு நீதிமன்ற தீர்ப்பின்படி இன்று தலைகளை வெட்டி, மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. #Saudiexecutes #37executed #37terroristsexecuted 
    ஈரானில் கடந்த 2017-ம் ஆண்டு பாராளுமன்றம் மீது நிகழ்த்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலுக்கு காரணமான 8 ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பினருக்கு இன்று மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. #Iran
    தெஹ்ரான்:

    ஈரான் தலைநகர் தெஹ்ரானில், ஐ.எஸ் பயங்கரவாதிகள் கடந்த 2017-ம் ஆண்டு பாராளுமன்றம் மற்றும் வழிபாட்டுத்  தலம் மீது நடத்திய தாக்குதலில் 18 பேர் பரிதாபமாக கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்தில் தொடர்புடைய ஐ.எஸ் அமைப்பினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

    இந்த தாக்குதலில் சம்பந்தபட்ட ஐ.எஸ் அமைப்பினரை பிடித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில், இந்த பாராளுமன்றத்தில் தாக்குதல் நடத்திய குற்றத்திற்காக சுமார் 8 பயங்கரவாதிகளுக்கு இன்று தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது. இந்த வழக்கில் மேலும் பலர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

    ஈரான் நாட்டில் 2007-ம் ஆண்டுக்கு பிறகு தற்போதுதான் அதிக அளவிலான குற்றவாளிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது. #Iran
    ×