என் மலர்
தலைப்புச்செய்திகள்
- த.வெ.க. கரூர் மாவட்ட செயலாளார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
- கூட்ட நெரிசல் குறித்து விசாரணையின் அடிப்படையில் மேல் நடவடிக்கை எடுக்கப்படும்.
கரூர்:
கரூரில் கூட்ட நெரிசல் ஏற்பட்ட இடத்தை சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் நேரில் ஆய்வு மேற்கொண்டார். இதன்பின் செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில்,
* கரூர் கூட்டத்திற்கு தேவையான பாதுகாப்பு தரப்பட்டது.
* கரூர் கூட்ட நெரிசலில் ஏற்பட்ட உயிரிழப்பு தொடர்பாக 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
* த.வெ.க. கரூர் மாவட்ட செயலாளர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு கூட்ட நெரிசல் தொடர்பாக விசாரணை நடைபெறுகிறது.
* கூட்ட நெரிசல் குறித்து ஆணைய விசாரணையின் அடிப்படையில் மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
- காலராத்திரி என்றால் இருளை அழிப்பவள் என்று பொருள்.
- காலராத்திரி தேவியை வழிபடுவதால் துன்பங்கள், தடைகள் நீங்கி, பக்தர்களுக்கு தைரியமும், நன்மைகளும் கிடைக்கும்.
நவராத்திரி என்பது 9 நாட்கள் கொண்ட பண்டிகையாகும். நவராத்திரி பார்வதி/சக்தியின் ஒன்பது வடிவங்களை வழிபடும் புண்ணிய காலம். நவ - ஒன்பது, ராத்திரி - இரவு. ஒன்பது இரவுகள் – பத்து நாட்கள் நடைபெறும் திருவிழா.
இந்தக்காலத்தில் துர்கை, லட்சுமி, சரஸ்வதி ஆகிய தேவிகளின் வித்தியாசமான வடிவங்கள் வழிபடப்படுகின்றன. துர்கை அம்மன் அசுரர்களை வதம் செய்து உலகை காப்பாற்றிய வெற்றி நினைவாகக் கொண்டாடப்படுகிறது.
அனைத்து வடிவங்களிலும் பெண் சக்தியின் அடையாளமாகவும் இருக்கிறார். நவராத்திரியில் தெய்வத்தின் ஒவ்வொரு அவதாரத்தையும் தனித்தனி நாளில் கொண்டாடுகிறோம். நவராத்திரியின் ஒவ்வொரு நாளும் ஒரு தேவிக்கு அர்ப்பணிக்கப்படுகிறது.
நவராத்திரியின் 7-வது நாளான இன்று வழிபட வேண்டிய தெய்வம் 'காலராத்திரி தேவி'. காலராத்திரி என்பவள் நவராத்திரியில் வழிபடப்படும் துர்கையின் ஓர் சக்தி வடிவமாகும்.
காலராத்திரி தேவி
காலராத்திரி என்பது துர்கா தேவியின் ஒன்பது வடிவங்களில் ஒன்றாகவும், துர்கைகளில் ஏழாவது உருவமாகவும் கருதப்படுகிறார். துர்கையில் 9 வடிவங்களிலும் மிகவும் உக்கிரமான வடிவமாக தேவி காலராத்திரி விளங்குகிறார். நவராத்திரி ஏழாம் நாளில் காலராத்திரி தேவியை வழிபட வேண்டும்.
காலராத்திரி தேவியின் சிறப்பு அம்சங்கள்:
காலராத்திரி என்பது "கால" என்றால் காலம் அல்லது இருள், "ராத்திரி" என்றால் இரவு என்று பொருள். எனவே காலராத்திரி என்றால் இருளை அழிப்பவள் என்று பொருள்.
ஷும்பன் – நிஷும்பன் வதம்
மார்கண்டேய புராணத்தின் தேவி மாஹாத்மியம் படி, அசுரர்களின் அரசனான ஷும்பன் - நிஷும்பன் இருவரும் உலகையும் தேவர்களையும் துன்புறுத்தினர்.
அவர்களை அழிக்க அம்பிகை தேவியின் உடலிலிருந்து பல உக்கிர வடிவங்கள் தோன்றின. அதில் ஒன்றுதான் காலராத்திரி.
காலராத்திரி தோன்றியதும், மஹாசுரர்களின் படைகள் அனைத்தும் இருளில் மூழ்கின. தேவியின் மூச்சில் இருந்து தீக்கதிர்கள் பீறிட்டன. யுத்தத்தில் காலராத்திரி தேவி பல அசுரர்களை அழித்து, ஷும்பன்–நிஷும்பன் படைகளை முறியடித்தார்.
ரக்தபீஜன் வதம்
மார்கண்டேய புராணத்தில் ஷும்பனுக்கு உதவியாக ரக்தபீஜன் என்ற அசுரன் இருந்தான். அவன் ரத்தத்தின் ஒரு துளி பூமியில் விழுந்தால், அதிலிருந்து மற்றொரு ரக்தபீஜன் உருவாகும் என்று வரத்தை பெற்று இருந்தான். இதனால் அவன் அசுரர்களின் பெரும் பலம் வாய்ந்தவனாக இருந்தான். அந்த அசுரனை யாராலும் அழிக்க முடியவில்லை.
அப்போது காலராத்திரி தோன்றி, போர்க்களத்தில் அவன் ரத்தத்தை குடித்தார். அதன் மூலம் அவன் ரத்தம் தரையில் சிந்தாமல் தடுத்துவிட்டு, அவனை முழுமையாக அழித்தார்.
இந்த தேவியை வழிபடுவதால் துன்பங்கள், தடைகள் நீங்கி, பக்தர்களுக்கு தைரியமும், நன்மைகளும் கிடைக்கும். தன் பக்தர்களுக்கு எல்லா விதமான மகிழ்ச்சியையும், செல்வத்தையும், இருளை நீக்கும் சக்தியையும் தருபவர்.
ஸ்லோகம்:
'ஓம் தேவி காலராத்ரியாயை நம' என்று ஜபிக்க வேண்டும்.
- காலை 9 மணி முதல் பிற்பகல் 2 வரை மின் தடை செய்யப்படும்.
- டி.வி.நகர், கிருஷ்ணவேணி நகர், லலிதாம்பாள் நகர், ரோஜாம்பாள் நகர்.
சென்னை:
சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது. காலை 9 மணி முதல் பிற்பகல் 2 வரை மின் தடை செய்யப்படும். பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
அந்த வகையில், நாளை மின் தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, சென்னையில் நாளை (29.09.2025) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக பின்வரும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். அதன்படி,
ராமாபுரம்: டி.வி.நகர், கிருஷ்ணவேணி நகர், லலிதாம்பாள் நகர், ரோஜாம்பாள் நகர், ஸ்ரீலட்சுமி நகர், கார்த்திக் பாலாஜி நகர், சபரி நகர், டி.எல்.எப்., குப்தா கம்பெனி, மவுண்ட் பூந்தமல்லி மெயின் ரோடு, கமலா நகர், ஸ்ரீராம் நகர், வெங்கடேஸ்வரா அவென்யூ, சுபஸ்ரீ நகர்.
- கரூர் கூட்ட நெரிசலில் பலர் உயிரிழந்த சம்பவம் மிகவும் வேதனை அளிக்கிறது.
- உயிரிழந்தவர்களின் குடும்பங்கங்களுக்கு விஜய் தயவுசெய்து இழப்பீடு வழங்க வேண்டும்.
கரூரில் வேலுசாமிபுரம் பகுதியில் தவெக தலைவர் விஜய் பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 39 பேர் உயிரிழந்தனர். இதனைத் தொடர்ந்து அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், விஜய் பரப்புரையின்போது உயிரிழந்தவர்களுக்கு நடிகர் விஷால் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "முழுக்க முழுக்க முட்டாள்தனம். விஜய்யின் பரப்புரையின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் குழந்தைகள் உட்பட 30க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததைக் கேட்டு மனம் வேதனைப்படுத்துகிறது.
பாதிக்கப்பட்ட ஒவ்வொருவருக்கும் என் இதயம் அஞ்சலி செலுத்துகிறது, மேலும் அவர்கள் ஒவ்வொருவருக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர்களின் ஆன்மா சாந்தியடையட்டும்.
இறந்தவர்களுக்கு இழப்பீடு வழங்குமாறு தமிழக வெற்றிக்கழகம் கட்சியினரிடம் வேண்டுகோள் விடுகிறேன். ஏனெனில் அதுதான் குறைந்தபட்சமாக அந்த கட்சியால் செய்யக்கூடிய விஷயமாகும்.
எதிர்காலத்தில் நடைபெறும் எந்தவொரு அரசியல் பேரணிகளிலும் இப்போதிலிருந்து போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படும் என்று நான் நம்புகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
- விஜய் பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 39 பேர் உயிரிழந்தனர்.
- கரூரில் நிகழ்ந்த இந்த மனதை உறையவைக்கும் விபத்து அனைவரையும் ஆழ்ந்த துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.
கரூரில் வேலுசாமிபுரம் பகுதியில் தவெக தலைவர் விஜய் பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 39 பேர் உயிரிழந்தனர். இதனைத் தொடர்ந்து அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், விஜய் பரப்புரையின்போது உயிரிழந்தவர்களுக்கு நடிகர் சூரி இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "கரூரில் நிகழ்ந்த இந்த மனதை உறையவைக்கும் விபத்து அனைவரையும் ஆழ்ந்த துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. உயிரிழந்தவர்களின் ஆன்மா இறைவனின் திருவடியில் நிம்மதியும் அமைதியும் பெற பிரார்த்திக்கிறோம்.
மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளவர்கள் இறைவன் கருணையால் விரைவில் முழு நலம் பெற வேண்டுகிறோம். இந்த வேதனை நிறைந்த தருணத்தில், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நம் இதயப்பூர்வமான அனுதாபங்களைத் தெரிவித்து, மனதாலும் செயலாலும் அவர்களுக்கு தோள் கொடுப்போம். எனது ஆழ்ந்த இரங்கல்கள்" என்று தெரிவித்துள்ளார்.
- குழந்தைகள், பெண்கள் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர் என்பது ஆற்றவொண்ணாப் பெருந்துயரமாகும்.
- உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு ரூ.50 இலட்சம் என வழங்க வேண்டுமென திருமா கோரிக்கை
கரூரில் வேலுசாமிபுரம் பகுதியில் தவெக தலைவர் விஜய் பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 39 பேர் உயிரிழந்தனர்.
கடும் நெரிசலில் சிக்கி உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு விசிக தலைவர் திருமாவளவன் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் அவர்களின் பரப்புரை பயணத்தில் இன்று கரூரில் நடந்த கொடுந்துயரம் நெஞ்சைப் பதற வைக்கிறது.
கடும் நெரிசலில் சிக்கி மிதிபட்டு மூச்சுத் திணறி, குழந்தைகள், பெண்கள் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர் என்பது ஆற்றவொண்ணாப் பெருந்துயரமாகும். மேலும், பலர் உயிருக்குப் போராடும் நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்பது கூடுதல் கவலையளிக்கிறது. அவர்கள் அனைவரையும் காப்பாற்றும் வகையில் உயர் சிகிச்சை அளித்திட தமிழ்நாடு அரசு தீவிர நடவடிக்கைகளைப் போர்க்காலச் சூழலின் அடிப்படையில் மேற்கொள்ள வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.
அத்துடன், உயிரிழந்த அனைவரின் குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த வருத்தங்களையும் இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்குத் தலா ரூ.பத்து இலட்சம் இழப்பீடாக வழங்கிட தமிழ்நாடு அரசு அறிவிப்புச் செய்துள்ளது. எனினும், அத்தொகையைக் குறைந்தது தலா ஐம்பது இலட்சம் என வழங்கிட முன்வரவேண்டுமென மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கு வேண்டுகோள் விடுக்கிறேன் .காயமடைந்தோர் அனைவருக்கும் உரிய இழப்பீடுவழங்க வேண்டுமெனவும் கேட்டுக் கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
- கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் சந்நிதி எதிரில் உள்ள ஸ்ரீ அனுமனுக்கு திருமஞ்சனம்.
- திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் குளக்கரை ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு திருமஞ்சனம்.
இன்றைய பஞ்சாங்கம்
விசுவாவசு ஆண்டு புரட்டாசி-12 (ஞாயிற்றுக்கிழமை)
பிறை : வளர்பிறை
திதி : சஷ்டி நண்பகல் 12.09 மணி வரை பிறகு சப்தமி
நட்சத்திரம் : கேட்டை பின்னிரவு 2.24 மணி வரை பிறகு மூலம்
யோகம் : மரண, அமிர்தயோகம்
ராகுகாலம் : மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை
எமகண்டம் : நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை
சூலம் : மேற்கு
நல்ல நேரம் : காலை 7 மணி முதல் 8 மணி வரை, மாலை 3 மணி முதல் 4 மணி வரை
திருவல்லிக்கேணி கோவிலில் ஆஞ்சநேயருக்கு திருமஞ்சனம், காஞ்சிபுரம் காமாட்சியம்மனுக்கு பால் அபிஷேகம்
இன்று சஷ்டி விரதம். திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் மோகினி அவதாரம். குலசேகரப்பட்டினம் ஸ்ரீ முத்தாரம்மன் சிம்ம வாகனத்தில் மகிஷாசுரமர்த்தினி கோலத்துடன் காட்சி. கரூர் தான்தோன்றிமலை ஸ்ரீ கல்யாண வேங்கடரமண சுவாமி சேஷ வாகனத்தில் பவனி. சிருங்கேரி ஸ்ரீ சாரதாம்பாள் வீணை சாரதா அலங்காரம். சூரியனார்கோவில் ஸ்ரீ சூரிய நாராயணருக்கு திருமஞ்சனம். கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் சந்நிதி எதிரில் உள்ள ஸ்ரீ அனுமனுக்கு திருமஞ்சனம்.
திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் குளக்கரை ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு திருமஞ்சனம். திருத்தணி ஸ்ரீ முருகப் பெருமான் பால் அபிஷேகம். ராமேஸ்வரம் ஸ்ரீ பர்வத வர்த்தினியம்மன் ஊஞ்சலில் காட்சி. காஞ்சி ஸ்ரீ காமாட்சியம்மன், இருக்கன்குடி, சமயபுரம் ஸ்ரீ மாரியம்மன் கோவில்களில் பால் அபிஷேகம். சாத்தூர் ஸ்ரீ வேங்கடேசப் பெருமாள் புறப்பாடு.
இன்றைய ராசிபலன்
மேஷம்-தெளிவு
ரிஷபம்-விவேகம்
மிதுனம்-நன்மை
கடகம்-நட்பு
சிம்மம்-கண்ணியம்
கன்னி-மேன்மை
துலாம்- நேர்மை
விருச்சிகம்-வெற்றி
தனுசு- ஜெயம்
மகரம்-ஆக்கம்
கும்பம்-விருத்தி
மீனம்-நிறைவு
- பிரசித்தி பெற்ற திருக்கோவில்களிலும் நவராத்திரி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.
- பார்வதி தேவியின் மிகவும் உக்கிரமான மற்றும் மிகவும் பாதுகாப்பான வடிவமான காலராத்திரி தேவியை வழிபட வேண்டிய நாள்.
நவராத்திரி விழா தொடங்கி நடைபெற்று வருகிறது. அம்பாளுக்கு உகந்த பண்டிகை என்பதால் பெண்கள் பய பக்தியுடன் கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். ஒவ்வொரு நாளுக்கு உகந்த தேவியை மனமுருகி வழிபட்டு வருகின்றனர்.
நவராத்திரி பூஜைக்கான சுலோகங்கள், மந்திரங்கள் எதுவும் தெரியவில்லையா? கவலையே வேண்டாம். 'ஓம் ஸ்ரீலலிதா தேவியே நம' என்பதை 108 தடவை சொன்னாலே போதும். நினைத்த பலன் கிடைக்கும்.
மேலும், வீட்டில் அமைக்கப்பட்டு இருக்கும் கொலுவை காண வருமாறு நண்பர்கள், உறவினர்களை அழைத்து அவர்களை உபசரிக்கின்றனர். பிரசித்தி பெற்ற திருக்கோவில்களிலும் நவராத்திரி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.
அந்த வகையில், நவராத்திரியின் ஏழாம் நாளான இன்று பக்தர்கள் பார்வதி தேவியின் மிகவும் உக்கிரமான மற்றும் மிகவும் பாதுகாப்பான வடிவமான காலராத்திரி தேவியை வழிபட வேண்டிய நாள். காலராத்திரி பயமின்மை மற்றும் துணிச்சலின் பண்புகளை உள்ளடக்கியதால், வலிமை மற்றும் பாதுகாப்பை நாடுபவர்களுக்கு இந்த நாள் குறிப்பிடத்தக்கது.
காலராத்திரி தேவியை வழிபட இன்று பக்தர்கள் ஆரஞ்சு நிறத்திலான ஆடையே அணிய வேண்டும். ஆரஞ்சு நிறமானது மகிழ்ச்சி, சக்தி மற்றும் அரவணைப்பின் நிறம். இன்றைய நாளில் ஆரஞ்சு நிற ஆடையே அணிந்து பூஜை அறை மற்றும் இல்லத்தை ஆரஞ்சு நிறத்திலான மலர்களை கொண்டு அலங்கரியுங்கள்.
- விஜய் பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 39 பேர் உயிரிழந்தனர்.
- மு.க.ஸ்டாலின் விமானம் மூலம் திருச்சி சென்று அங்கிருந்து கார் மூலம் கரூர் சென்றடைந்தார்.
கரூரில் வேலுசாமிபுரம் பகுதியில் தவெக தலைவர் விஜய் பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 39 பேர் உயிரிழந்தனர்.
கூட்ட நெரிசல் குறித்து கேட்டறிந்த முதலமைச்சர் முக ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் அவசர ஆலோசனை நடத்தினார்.
உடனடியாக விமானத்தில் திருச்சி சென்று அங்கிருந்து கார் மூலம் கரூர் சென்றடைந்தார். மருத்துவமனைக்கு சென்ற கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோருக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். மேலும், முதலமைச்சர் ஸ்டாலின் அங்கு உயிரிழந்தோர் குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் கூறினார்.
கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி காயமடைந்தோரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய வீடியோவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
அந்த பதிவில், "இரவு முழுவதும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் சிந்திய கண்ணீரும், அவர்களது துக்கம் நிறைந்த அழுகுரல் ஏற்படுத்திய வலியும் என் நெஞ்சத்திலிருந்து அகலவில்லை" என்று பதிவிட்டுள்ளார்.
- விஜய் பரப்புரை கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 30 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
- நாம் தமிழர் உறவுகள் மக்களின் உயிர் காக்க குருதிக்கொடை வழங்க கரூர் மருத்துவமனை விரைக
கரூரில் தவெக தலைவர் விஜய் பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 30 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதனைத் தொடர்ந்து அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "கரூரில் தவெக தலைவர் விஜய் பரப்புரை கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 30 க்கும் மேற்பட்டோர் மரணமடைந்ததுடன், குழந்தைகள் மற்றும் பெண்கள் உட்பட மேலும் பலர் படுகாயமடைந்து, பலர் கவலைக்கிடமாக உள்ள பெருந்துயரச் செய்தி பெரும் அதிர்ச்சியும், மிகுந்த மனவேதனையும் தருகிறது. கரூர் முழுவதும் தங்கள் உறவுகளை இழந்து கதறும் மக்களின் மரண ஓலம் நெஞ்சை பிளக்கிறது.
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு என்னுடைய ஆறுதலைத்தெரிவித்து துயரத்தில் பங்கெடுக்கின்றேன்.
படுகாயமடைந்தவர்களுக்கு தமிழ்நாடு அரசு உரிய உயர் சிகிச்சை அளித்து உயிர்காத்திட வேண்டுமென வலியுறுத்துகிறேன்.
வருங்காலத்தில் இதுபோன்று, அப்பாவி மக்களின் உயிர் அநியாயமாக பறிபோகும் பெருந்துயரங்கள் நிகழ்ந்தேறா வண்ணம் உரிய பாதுகாப்பு முன்னேற்பாடுகளை தமிழ்நாடு அரசு மேற்கொள்ள வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.
நாம் தமிழர் உறவுகள் மக்களின் உயிர் காக்க குருதிக்கொடை வழங்க கரூர் மருத்துவமனை விரைக!
கரூர் தவெக கூட்ட நெரிசலில் சிக்கி படுகாயமடைந்த பலர் உயிருக்கு போராடி வரும் நிலையில்,
கரூர் மற்றும் சுற்று வட்டார மாவட்டங்களில் உள்ள நம்முடைய நாம் தமிழர் கட்சி உறவுகள் உடனடியாக அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவமனைகளுக்கு விரைந்து, குருதி மற்றும் தேவையான மருத்துவ உதவிகள் செய்து கொடுத்து மக்களின் உயிர் காக்க வேண்டுமென அறிவுறுத்துகிறேன்.
உடனடியாக நாம் தமிழர் கட்சியின் ஒவ்வொரு உறவுகளும் மக்களின் உயிர் காக்கும் இப்பெரும்பணியில் தவறாமல் பங்கேற்க வேண்டும்.
எனதன்பு தம்பி, தங்கைகள் கூடுதல் தகவல்களுக்கு நம்முடைய நாம் தமிழர் கட்சி குருதிக்கொடை பாசறை பொறுப்பாளர்களை தொடர்பு கொள்ளவும்!" என்று தெரிவித்துள்ளார்.
- இன்றைய ராசிபலன்
- 12 ராசிகளுக்கும் ஆன இன்றைய ராசிபலன்கள்
மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிபலன்களுக்கான இன்றைய ராசிபலன்கள்
மேஷம்
வரவைக் காட்டிலும் செலவு கூடும் நாள். நேற்று செய்யாமல் விட்ட காரியமொன்றால் இன்று அவதிப்பட நேரிடும். உத்தியோகத்தில் சக பணியாளர்களிடம் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம்.
ரிஷபம்
புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும் நாள். வியாபாரத்தை விரிவுபடுத்தும் எண்ணம் மேலோங்கும். சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்து படைத்தவர்களின் சந்திப்பு கிடைக்கும்.
மிதுனம்
எண்ணங்கள் எளிதில் நிறைவேறும் நாள். இடையூறுகள் அகலும். வெளிவட்டாரப் பழக்கம் விரிவடையும். வீடு, வாகனம் வாங்க எடுத்த முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.
கடகம்
பயணத்தால் பலன் கிடைக்கும் நாள். வரவை விடச் செலவு அதிகரிக்கும். வீட்டிலுள்ளவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. மாற்று மருத்துவத்தால் உடல்நலம் சீராகும்.
சிம்மம்
நட்பால் நல்ல காரியம் நடைபெறும் நாள். பணிகள் விரைந்து நடைபெற அடுத்தவர் உதவி கிடைக்கும். சிறிய பிரச்சனைகளைப் பெரிதுபடுத்தாமல் இருப்பது நல்லது.
கன்னி
மகிழ்ச்சி கூடும் நாள். செல்வ நிலையை உயர்த்த என்ன வழியென்று யோசிப்பீர்கள். உத்தியோகத்தில் உங்கள் வேலையை சக பணியாளர்களும் பகிர்ந்துகொள்வர்.
துலாம்
மனக்குழப்பம் அகலும் நாள். வரவு திருப்தி தரும் நாள். நேற்றைய பிரச்சனை இன்று நல்ல முடிவிற்கு வரும். உத்தியோகத்தில் சக பணியாளர்களிடம் அன்பாக நடந்து கொள்ளவும்.
விருச்சிகம்
நம்பிக்கைகள் நடைபெறும் நாள். நல்லவர்களின் நட்பு கிடைக்கும். பணவரவு திருப்தி தரும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் பாராட்டுகளைப் பெறும் வாய்ப்பு உண்டு.
தனுசு
கொடுத்த வாக்கைக் காப்பாற்றி மகிழும் நாள். வீடு, இடம் வாங்குவதில் ஆர்வம் கூடும். உத்தியோகத்தில் சக பணியாளர்களை நம்பி பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டாம்.
மகரம்
வி.ஐ.பி.க்களின் சந்திப்பு கிடைத்து மகிழும் நாள். வெற்றிச் செய்திகள் விடிகாலையிலேயே வரலாம். பிறரிடம் ஒப்படைத்த பொறுப்புகள் நல்ல விதம் நடைபெறும்.
கும்பம்
சச்சரவுகள் அகன்று சாதனை படைக்கும் நாள். குடும்பத்தினர்களோடு இருந்த கருத்து வேறுபாடுகள் அகலும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் ஆதரவு திருப்தி தரும்.
மீனம்
இனிமையான நாள். இல்லத்திற்குத் தேவையான அத்தியாவசிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பிள்ளைகளின் கல்வி நலன் கருதி எடுத்த முயற்சி வெற்றி பெறும்.
- கூட்டநெரிசலில் சிக்கி உயிரிழந்த 39 பேரில் 35 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டன.
- மீதமுள்ள 4 பேரின் உடல்களை அடையாளம் காணும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
கரூர்:
கரூரில் வேலுச்சாமிபுரம் பகுதியில் தவெக தலைவர் விஜய் நேற்று பிரசாரம் செய்தார். விஜய் பேசி முடித்து புறப்பட்டபின், கூட்டம் கலைந்து செல்லும்போது கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்த கூட்ட நெரிசலில் சிக்கி 10 குழந்தைகள், 17 பெண்கள் உட்பட 39 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 39 பேரில் 35 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டன. இதில் கரூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் 28 பேர், ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் தலா 2 பேர், சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். மீதமுள்ள 4 பேரின் உடல்களை அடையாளம் காணும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 50 பேரும், கரூரில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் 61 பேரும் என மொத்தம் 111 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 17 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உயிரிழந்தோர் உடலுக்கு நேரில் சென்று மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
சிகிச்சை பெற்று வருவோருக்கு ஆறுதல் கூறினார்.
இந்நிலையில், அடையாளம் காணப்பட்ட 35 பேரின் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. அவர்கள் தங்கள் உறவினர்களை ஆம்புலன்சில் ஏற்றிச் சென்றனர். உயிரிழந்தோர் உடல்களைப் பெறும்போது உறவினர்கள் கதறி அழுதது உருக்கத்தை ஏற்படுத்தியது.






