என் மலர்
தலைப்புச்செய்திகள்
- இப்படி ஒரு குறுகலான நெரிசல் மிகுந்த இடத்தை தேர்தல் பிரசாரத்திற்கு ஒதுக்கியது ஏன்?
- போலீசார் தடியடி நடத்தியபோது தள்ளுமுள்ளு ஏற்பட்டதும் உயிர் பலிகளுக்கு காரணம் என மக்கள் கூறுகின்றனர்.
கரூர் கூட்ட நெரிசலில் 40 உயிர்கள் பலியானதற்கு அரசு உரிய பதில் கூற வேண்டும் என தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தி உள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், குறுகலான பாதை, நெரிசல் மிகுந்த பாதை என நான் சந்தித்த பாதிக்கப்பட்ட மக்கள் அனைவரும் கூறுகின்றனர்.
இப்படி ஒரு குறுகலான நெரிசல் மிகுந்த இடத்தை தேர்தல் பிரசாரத்திற்கு ஒதுக்கியது ஏன்?
போலீசார் தடியடி நடத்தியபோது தள்ளுமுள்ளு ஏற்பட்டதும் உயிர் பலிகளுக்கு காரணம் என மக்கள் கூறுகின்றனர்.
பெரிய மைதானம் போன்ற இடத்தில் தான் விஜய் பிரசாரத்திற்கு இடம் ஒதுக்கியிருக்க வேண்டும். இது யாருடைய தவறு? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
- முறையான பாதுகாப்பு வழங்காமல் தமிழக வெற்றிக்கழக கூட்டத்திற்கு அனுமதி வழங்கக்கூடாது
- அவசர வழக்கை இன்று மாலை 4.30 மணிக்கு விசாரிக்க உயர்நீதிமன்ற நீதிபதி செந்தில்குமார் அனுமதி வழங்கி உள்ளார்.
கரூரில் த.வெ.க. கூட்ட நெரிசலில் சிக்கி காயம் அடைந்த கண்ணன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர வழக்கு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.
முறையான பாதுகாப்பு வழங்காமல் தமிழக வெற்றிக்கழக கூட்டத்திற்கு அனுமதி வழங்கக்கூடாது என்று செந்தில் கண்ணன் தாக்கல் செய்த அவசர வழக்கை இன்று மாலை 4.30 மணிக்கு விசாரிக்க உயர்நீதிமன்ற நீதிபதி செந்தில்குமார் அனுமதி வழங்கி உள்ளார்.
- ஆகாஷ் (வயது 24) என்பவரும், கோகுலஸ்ரீ (வயது 24) என்பவருக்கும் திருமண நிச்சயம் நடந்தது.
- அடுத்த மாதம் இருவருக்கும் திருமணம் நடைபெறவிருந்தது.
கரூர் த.வெ.க. தலைவர் விஜய் பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி 40 பேர் பலியான சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இதில் நெஞ்சை உருக்கும் உருக்கமான தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த பிரசார கூட்டத்திற்கு சென்ற திருமண நிச்சயம் முடிந்த ஜோடி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கரூர் வேலுச்சாமிபுரத்தை சேர்ந்த ஆகாஷ் (வயது 24) என்பவரும், கோகுலஸ்ரீ (வயது 24) என்பவருக்கும் கடந்த சில நாட்களுக்கு முன் திருமண நிச்சயம் நடந்தது. அடுத்த மாதம் இருவருக்கும் திருமணம் நடைபெறவிருந்தது.
திருமண நிச்சயம் முடிந்த ஆகாஷ், கோகுலஸ்ரீ ஜோடி நேற்று கரூரில் நடந்த தவெக கூட்டத்தில் பங்கேற்க சென்றபோது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆகாஷ் தாய் கதறி அழுதது நெஞ்சை உலுக்கியது.
- பெரிய இடத்தில் அனுமதி கொடுத்திருக்க வேண்டும்.
- பார்க்கும் காட்சிகள் அனைத்தும் வேதனையாக உள்ளது.
கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தாரையும், படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களின் குடும்பத்தாரையும் பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் சந்தித்து ஆறுதல் கூறினார். இதன்பின், செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:-
* திருச்சியில் என்னுடைய நடைபயணத்திலும் மின் தடை ஏற்பட்டது.
* கேட்ட இடத்தில் அனுமதி கொடுத்திருக்க வேண்டும்.
* பெரிய இடத்தில் அனுமதி கொடுத்திருக்க வேண்டும்.
* பார்க்கும் காட்சிகள் அனைத்தும் வேதனையாக உள்ளது. நடிகர்களை பார்க்க சென்று உயிரை விடுவதா?
* பொதுமக்களும், த.வெ.க.வும் பொறுப்புடன் நடந்திருக்க வேண்டும் என்றார்.
- இச்சம்பவம் தமிழகம் மட்டுமல்லாது நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.
- மேலும் ஒருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்படுகிறது.
கரூரில் நேற்று இரவு தமிழக வெற்றிக்கழகத்தின் சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 9 குழந்தைகள் உட்பட 39 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவம் தமிழகம் மட்டுமல்லாது நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.
இதில் படுகாயம் அடைந்து பல பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில், பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
இந்த நிலையில், கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 40-ஆக உயர்ந்துள்ளது. மருத்துவமனையில் சிகிக்சை பெற்று வந்த கவின் என்பவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இதனிடையே, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மேலும் ஒருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்படுவதால், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
- ஹேமலதாவுக்கு சாய்லெட்சனா (8), சாய்ஜீவா (4) என்ற 2 குழந்தைகள் உள்ளனர்.
- ஹேமலதா தனது 2 குழந்தைகளையும் விஜய் பிரசார கூட்டத்திற்கு அழைத்து சென்றார்.
கரூர் த.வெ.க. தலைவர் விஜய் பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி 40 பேர் பலியான சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இதில் நெஞ்சை உருக்கும் உருக்கமான தகவல்கள் வெளியாகியுள்ளன. கரூர் விஸ்வநாதபுரி பகுதியை சேர்ந்தவர் ஆனந்தஜோதி இவரது மனைவி ஹேமலதா (வயது 30). அவர்களின் குழந்தைகள் சாய்லெட்சனா (8), சாய்ஜீவா (4). ஹேமலதா தனது 2 குழந்தைகளையும் விஜய் பிரசார கூட்டத்திற்கு அழைத்து சென்றார்.
பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி ஹேமலதா, குழந்தைகள் சாய்லெட்சனா,சாய்ஜீவா ஆகியோர் மூச்சு திணறி உயிரிழந்தனர்.
- துயரமான நேரத்தில் தேவையற்ற விவாதம் கூடாது.
- சதி இருந்தால் ஆதாரங்களுடன் நிரூபிக்க வேண்டும்.
கரூர்:
கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோரை நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். இதன்பின் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:-
* கரூரில் துடைக்க முடியாத பெருந்துயரம் நிகழ்ந்துவிட்டது. குழந்தைகள் உள்ளிட்ட 39 பேர் உயிரிழந்தது பெருந்துயரம்.
* உறவுகளை இழந்தவர்களுக்கு எப்படி ஆறுதல் சொல்வது? என்று தெரியவில்லை.
* கூட்ட நெரிசலில் எதிர்பாராதவிதமாக விபத்து நிகழ்ந்துள்ளது. இனிமேல் இதுமாதிரி பெருந்துயரம் நிகழக்கூடாது.
* நடக்கவே கூடாத துயரம் நடந்துவிட்டது. யாரையும் குறை சொல்லி பயனில்லை. இனி இதுபோல் நிகழாமல் தவிர்க்க வேண்டும்.
* எல்லோரும் சேர்ந்த இந்த தவறை செய்துவிட்டோம். எதிர்காலத்தில் மீண்டும் நிகழாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
* விஜயின் கடந்த கூட்டங்களில் பாதுகாப்பு கொடுக்க தான் செய்தனர். இதனால் பாதுகாப்பு குறைபாடு என பொதுவாக சொல்ல கூடாது.
* பொதுக்கூட்டங்களில் ஆம்புலன்ஸ் வந்தால் வழிவிட வேண்டும்.
* துயரமான நேரத்தில் தேவையற்ற விவாதம் கூடாது. சதி இருந்தால் ஆதாரங்களுடன் நிரூபிக்க வேண்டும்.
* அரசியல் கட்சி கூட்டங்களில் குடிநீரை அரசு வழங்க முடியாது.
* சந்தேகங்கள் இருப்பின் அவை விசாரணையில் தெளிவாகும் என்றார்.
- விஜய் பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 8 குழந்தைகள் உள்பட 39 பேர் உயிரிழந்தனர்.
- விஜயை கைது செய்ய வேண்டும் என்று நடிகை ஓவியா வலியுறுத்தியுள்ளார்.
கரூரில் வேலுசாமிபுரம் பகுதியில் தவெக தலைவர் விஜய் பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 8 குழந்தைகள் உள்பட 39 பேர் உயிரிழந்தனர்.
தமிழ்நாட்டையே உலுக்கி உள்ள இச்சம்பவத்திற்கு அரசியல் தலைவர்கள், நடிகர்கள் என பலரும் இரங்கலும் தங்களது கண்டனங்களையும் தெரிவித்து வருகின்றனர்.
இந்த விவகாரத்தில் விஜயை கைது செய்ய வேண்டும் என்று நடிகை ஓவியா வலியுறுத்தியுள்ளார். இதனால் விஜய் செய்யப்படுவாரா? என்று கேள்வி எழுந்துள்ளது.
தெலுங்கானாவில் புஷ்பா 2 பட வெளியீட்டின்போது ஏற்பட்ட கூட்டநெரிசலில் சிக்கி ரேவதி என்ற 39 வயது பெண் உயிரிழந்தது தொடர்பாக அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்டது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அதே போல் தமிழ்நாட்டிலும் விஜய் செய்யப்படுவாரா? என்று அவரது ரசிகர்களும் த.வெ.க. தொண்டர்களும் அச்சம் அடைந்துள்ளனர்.
- சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி தண்டபாணி வீட்டிற்கு சென்று முறையீட்டுள்ளனர்.
- சி.சி.டி.வி. காட்சி உள்ளிட்ட ஆவணங்களை பாதுகாக்க உத்தரவிட வேண்டும் என்று முறையீட்டனர்.
கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி 39 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக உயர்நீதிமன்ற நீதிபதி தண்டபாணி முன்பு தமிழக வெற்றிக்கழகத்தினர் முறையீடு செய்துள்ளனர்.
சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி தண்டபாணி வீட்டிற்கு சென்று முறையீட்டுள்ளனர்.
கரூர் துயரச் சம்பவம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரிக்க வேண்டும் என்றும் சி.சி.டி.வி. காட்சி உள்ளிட்ட ஆவணங்களை பாதுகாக்க உத்தரவிட வேண்டும் என்று முறையீட்டனர்.
இதனை தொடர்ந்து, கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் விசாரணைக்கு எடுக்க நீதிபதி தண்டபாணி ஒப்புதல் அளித்துள்ளார். இதனால் நாளை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.
- தமிழக வெற்றிக்கழக கூட்டத்திற்கு காவல்துறையினரால் முழுமையான பாதுகாப்பு வழங்கப்பட்டது.
- எடப்பாடி பழனிசாமி சிறிது கூட மனசாட்சி இல்லாமல் முதலமைச்சர் மீதும், காவல்துறை மீதும் பழி போடுகிறார்.
சென்னை:
கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி 39 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக தமிழக அரசு மீது எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன் வைத்தார். இதற்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதில் கூறியதாவது:-
* பிரசார கூட்டத்திற்காக காவல்துறை விதித்த நிபந்தனைகளை த.வெ.க.வினர் பின்பற்றவில்லை.
* ஆம்புலன்ஸை வழிமறித்து ஒட்டுமொத்த தமிழகத்திற்கும் தவறான மன ஓட்டத்தை புகுத்தியவர் எடப்பாடி பழனிசாமி.
* தமிழக வெற்றிக்கழக கூட்டத்திற்கு காவல்துறையினரால் முழுமையான பாதுகாப்பு வழங்கப்பட்டது.
* அ.தி.மு.க.வினர் ஆம்புலன்ஸ் மீது தாக்குதல் நடத்தியதே த.வெ.க. தொண்டர்களின் இந்த மனநிலைக்கு காரணம்.
* எடப்பாடி பழனிசாமி பொறுப்பற்ற முறையில் மக்கள் மத்தியில் வதந்திகளையும், கற்பனை கதைகளையும் பரப்பி வருகிறார்.
* த.வெ.க. தொண்டர்களின் இந்த மனநிலைக்கு மாற்றிய எடப்பாடி பழனிசாமியும் இந்த துயர சம்பவத்திற்கு பொறுப்பேற்க வேண்டியவர்தான்.
* எடப்பாடி பழனிசாமி சிறிது கூட மனசாட்சி இல்லாமல் முதலமைச்சர் மீதும், காவல்துறை மீதும் பழி போடுகிறார் என்றார்.
- விஜய் பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 8 குழந்தைகள் உள்பட 39 பேர் உயிரிழந்தனர்
- இச்சம்பவத்திற்கு அரசியல் தலைவர்கள், நடிகர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
கரூரில் வேலுசாமிபுரம் பகுதியில் தவெக தலைவர் விஜய் பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 8 குழந்தைகள் உள்பட 39 பேர் உயிரிழந்தனர்.
தமிழ்நாட்டையே உலுக்கி உள்ள இச்சம்பவத்திற்கு அரசியல் தலைவர்கள், நடிகர்கள் என பலரும் இரங்கலும் தங்களது கண்டனங்களையும் தெரிவித்து வருகின்றனர்.
கரூர் கூட்ட நெரிசலில் தனது 1½ வயது மகனைப் பறிகொடுத்த காது கேளாத, வாய் பேச முடியாத தாயார் இடிந்துபோய் நிற்கும் காட்சி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கரூர் வேலுச்சாமிபுரம் வடிவேல் தெரு பகுதியில் விமல் மற்றும் மாதேஸ்வரி தம்பதியின் 1½ வயது குழந்தை துருவ் விஷ்ணு கூட்ட நெரிசலில் மிதிப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தது. இந்த குழந்தையை அவரது அத்தை விஜய் பிரசாத்திற்கு அழைத்து சென்றார். அடுத்த மாதம் பிறந்தநாள் கொண்டாட இருந்த நிலையில், குழந்தை உயிரிழந்தது.
சிறுவனின் அத்தை உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
- தமிழக அரசு சார்பில் ரூ.10 லட்சமும், த.வெ.க. சார்பில் தலா ரூ.20 லட்சமும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
- காயமடைந்தவர்களுக்கு தலா 50 ஆயிரம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி 39 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கி உள்ளது. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா தமிழக அரசு சார்பில் ரூ.10 லட்சமும், த.வெ.க. சார்பில் தலா ரூ.20 லட்சமும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், கரூர் பெருந்துயரத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு மத்திய அரசின் சார்பில் தலா ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என பிரமர் மோடி அறிவித்துள்ளார். மேலும் காயமடைந்தவர்களுக்கு தலா 50 ஆயிரம் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.






