என் மலர்tooltip icon

    தலைப்புச்செய்திகள்

    • சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி தண்டபாணி வீட்டிற்கு சென்று முறையீட்டுள்ளனர்.
    • சி.சி.டி.வி. காட்சி உள்ளிட்ட ஆவணங்களை பாதுகாக்க உத்தரவிட வேண்டும் என்று முறையீட்டனர்.

    கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி 39 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக உயர்நீதிமன்ற நீதிபதி தண்டபாணி முன்பு தமிழக வெற்றிக்கழகத்தினர் முறையீடு செய்துள்ளனர்.

    சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி தண்டபாணி வீட்டிற்கு சென்று முறையீட்டுள்ளனர்.

    கரூர் துயரச் சம்பவம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரிக்க வேண்டும் என்றும் சி.சி.டி.வி. காட்சி உள்ளிட்ட ஆவணங்களை பாதுகாக்க உத்தரவிட வேண்டும் என்று முறையீட்டனர்.

    இதனை தொடர்ந்து, கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் விசாரணைக்கு எடுக்க நீதிபதி தண்டபாணி ஒப்புதல் அளித்துள்ளார். இதனால் நாளை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது. 

    • தமிழக வெற்றிக்கழக கூட்டத்திற்கு காவல்துறையினரால் முழுமையான பாதுகாப்பு வழங்கப்பட்டது.
    • எடப்பாடி பழனிசாமி சிறிது கூட மனசாட்சி இல்லாமல் முதலமைச்சர் மீதும், காவல்துறை மீதும் பழி போடுகிறார்.

    சென்னை:

    கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி 39 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக தமிழக அரசு மீது எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன் வைத்தார். இதற்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதில் கூறியதாவது:-

    * பிரசார கூட்டத்திற்காக காவல்துறை விதித்த நிபந்தனைகளை த.வெ.க.வினர் பின்பற்றவில்லை.

    * ஆம்புலன்ஸை வழிமறித்து ஒட்டுமொத்த தமிழகத்திற்கும் தவறான மன ஓட்டத்தை புகுத்தியவர் எடப்பாடி பழனிசாமி.

    * தமிழக வெற்றிக்கழக கூட்டத்திற்கு காவல்துறையினரால் முழுமையான பாதுகாப்பு வழங்கப்பட்டது.

    * அ.தி.மு.க.வினர் ஆம்புலன்ஸ் மீது தாக்குதல் நடத்தியதே த.வெ.க. தொண்டர்களின் இந்த மனநிலைக்கு காரணம்.

    * எடப்பாடி பழனிசாமி பொறுப்பற்ற முறையில் மக்கள் மத்தியில் வதந்திகளையும், கற்பனை கதைகளையும் பரப்பி வருகிறார்.

    * த.வெ.க. தொண்டர்களின் இந்த மனநிலைக்கு மாற்றிய எடப்பாடி பழனிசாமியும் இந்த துயர சம்பவத்திற்கு பொறுப்பேற்க வேண்டியவர்தான்.

    * எடப்பாடி பழனிசாமி சிறிது கூட மனசாட்சி இல்லாமல் முதலமைச்சர் மீதும், காவல்துறை மீதும் பழி போடுகிறார் என்றார்.

    • விஜய் பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 8 குழந்தைகள் உள்பட 39 பேர் உயிரிழந்தனர்
    • இச்சம்பவத்திற்கு அரசியல் தலைவர்கள், நடிகர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

    கரூரில் வேலுசாமிபுரம் பகுதியில் தவெக தலைவர் விஜய் பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 8 குழந்தைகள் உள்பட 39 பேர் உயிரிழந்தனர்.

    தமிழ்நாட்டையே உலுக்கி உள்ள இச்சம்பவத்திற்கு அரசியல் தலைவர்கள், நடிகர்கள் என பலரும் இரங்கலும் தங்களது கண்டனங்களையும் தெரிவித்து வருகின்றனர்.

    கரூர் கூட்ட நெரிசலில் தனது 1½ வயது மகனைப் பறிகொடுத்த காது கேளாத, வாய் பேச முடியாத தாயார் இடிந்துபோய் நிற்கும் காட்சி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    கரூர் வேலுச்சாமிபுரம் வடிவேல் தெரு பகுதியில் விமல் மற்றும் மாதேஸ்வரி தம்பதியின் 1½ வயது குழந்தை துருவ் விஷ்ணு கூட்ட நெரிசலில் மிதிப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தது. இந்த குழந்தையை அவரது அத்தை விஜய் பிரசாத்திற்கு அழைத்து சென்றார். அடுத்த மாதம் பிறந்தநாள் கொண்டாட இருந்த நிலையில், குழந்தை உயிரிழந்தது.

    சிறுவனின் அத்தை உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    • தமிழக அரசு சார்பில் ரூ.10 லட்சமும், த.வெ.க. சார்பில் தலா ரூ.20 லட்சமும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
    • காயமடைந்தவர்களுக்கு தலா 50 ஆயிரம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி 39 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கி உள்ளது. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா தமிழக அரசு சார்பில் ரூ.10 லட்சமும், த.வெ.க. சார்பில் தலா ரூ.20 லட்சமும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில், கரூர் பெருந்துயரத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு மத்திய அரசின் சார்பில் தலா ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என பிரமர் மோடி அறிவித்துள்ளார். மேலும் காயமடைந்தவர்களுக்கு தலா 50 ஆயிரம் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    • எதிர்க்கட்சிகள் கூட்டத்திற்கு அரசும், காவல்துறையும் உரிய பாதுகாப்பு வழங்கவில்லை.
    • ரூ.10 லட்சம் கொடுத்து ஒரு உயிரை வாங்க முடியுமா?

    கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி 39 பேர் உயிரிழந்த சம்பவத்தை அடுத்து அரசியல் தலைவர்கள் வந்த வண்ணம் உள்ளனர். அங்கு கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கும், படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களையும் சந்தித்து ஆறுதல் கூறி வருகின்றனர்.

    இந்த நிலையில், பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரனும் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார். இதன்பின், செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில்,

    * எதிர்க்கட்சிகள் கூட்டத்திற்கு அரசும், காவல்துறையும் உரிய பாதுகாப்பு வழங்கவில்லை.

    * ரூ.10 லட்சம் கொடுத்து ஒரு உயிரை வாங்க முடியுமா?

    * 39 பேரின் உயிரிழப்புக்கு தமிழக அரசும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் பொறுப்பேற்க வேண்டும்.

    * 6 மணி நேரத்திற்கு மேலாக காத்திருந்த தொண்டர்கள் தண்ணீர் கூட இல்லாமல் தவித்துள்ளனர்.

    * கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.1 கோடி அரசு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார். 

    • விஜய் பிரசாரத்தில் பங்கேற்பதற்காக மணிகண்டன் தனது நண்பர்களுடன் சென்றுள்ளார்.
    • நடிகர் விஜய் மதியம் 12 மணிக்கே வருவதாக இருந்ததால் காலையிலேயே புறப்பட்டு சென்றுள்ளார்.

    திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் தீர்த்தம்பாளையத்தை சேர்ந்தவர் மணி கண்டன் (வயது 33). இவரது மனைவி நிவேதிதா. இவர்களுக்கு சஷ்டிகா(6), துகிலன்(3) ஆகிய 2 குழந்தைகள் உள்ளனர். மணிகண்டன் அப்பகுதியில் செல்போன் கடை நடத்தி வந்தார். நடிகர் விஜய்யின் தீவிர ரசிகரான இவர் தமிழக வெற்றி கழகத்தில் உறுப்பினராக உள்ளார். கட்சி ஆரம்பித்தது முதல் தொடர்ந்து பணியாற்றி வந்துள்ளார்.

    இந்தநிலையில் கரூர் வேலுச்சாமிபுரத்தில் நடைபெற்ற த.வெ.க., தலைவர் விஜய் பிரசாரத்தில் பங்கேற்பதற்காக மணிகண்டன் தனது நண்பர்களுடன் சென்றுள்ளார். அப்போது அவரது மனைவியிடம் வருங்கால முதல்வர் வருகிறார். அவரை பார்த்து விட்டு வருகிறேன் என தெரிவித்து விட்டு கரூருக்கு புறப்பட்டு சென்றுள்ளார்.

    நடிகர் விஜய் மதியம் 12 மணிக்கே வருவதாக இருந்ததால் காலையிலேயே புறப்பட்டு சென்றுள்ளார். விஜய் பிரசாரத்தில் பங்கேற்ற மணிகண்டன் கூட்டநெரிசலில் சிக்கியதால் அவருக்கு மூச்சு த்திணறல் ஏற்பட்டுள்ளது. மயக்கமடைந்த அவரை பொதுமக்கள் மீட்டு கரூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்த நிலையில், அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

    இதேப்போல் திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் செம்மாண்டம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ஜெயபிரகாஷ்.இவரது மனைவி கோகுல பிரியா (29). இவர்களுக்கு திருமணமாகி கவுசவி என்ற குழந்தை உள்ளது. அவர் அப்பகுதியில் விசைத்தறி நடத்தி வந்தனர்.

    கோகுலபிரியா சிறுவயதில் இருந்தே விஜய்யின் தீவிர ரசிகர். இதனால் நேற்று கரூருக்கு பிரச்சாரம் செய்ய வந்த விஜயை பார்ப்பதற்காக கோகுலபிரியா அவரது கணவர் ஜெயபிரகாஷ், குழந்தையுடன் கரூருக்கு சென்றுள்ளார். பிரச்சாரத்தில் கூட்ட நெரிசல் அதிகரிக்கவே, குழந்தையுடன் அவர்களால் நிற்க முடியவில்லை. இதையடுத்து ஜெயபிரகாஷ் குழந்தையுடன் கூட்டத்தில் இருந்து வெளியேறினார்.

    கோகுல பிரியாவும் கூட்டத்தில் இருந்து வெளியேற முயன்றார். ஆனால் அவரால் முடிய வில்லை. இதனால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கினார். அவரை பொதுமக்கள் மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்த போது அவர் இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

    இதனிடையே மனைவி காணாததை கண்டு அதிர்ச்சியடைந்த ஜெயபிரகாஷ் , கோகுலபிரியாவின் செல்போனை தொடர்பு கொண்டுள்ளார். ஆனால் செல்போனை எடுக்க வில்லை. இந்தநிலையில் கூட்ட நெரிசலில் சிக்கி மயக்கமடைந்தவர்கள் கரூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டிருப்பதாக தகவல் கிடைத்ததையடுத்து ஜெயபிரகாஷ் அங்கு குழந்தையுடன் சென்றார். அப்போது கோகுலபிரியா உயிரிழந்ததை பார்த்து கதறி துடித்தார். இந்த சம்பவம் அனைவரின் நெஞ்சையும் உருக்குவதாக இருந்தது.

    கரூர் விஜய் பிரசாரத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி வெள்ளகோவிலை சேர்ந்த 2பேர் பலியான சம்பவம் அப்பகுதி பொதுமக்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இன்று காலை மணிகண்டன், கோகுலபிரியா ஆகியோரின் உடல்கள் பிரேத பரிசோ தனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இதையடுத்து உடல்கள் வெள்ள கோவிலுக்கு கொண்டு வரப்பட்டது. 2பேரின் உடல்களுக்கு தமிழக செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் மற்றும் உறவினர்கள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.

    • யார் ஆறுதல் சொன்னாலும் நம் உறவுகளின் இழப்பைத் தாங்கவே இயலாதுதான்.
    • காயமடைந்து சிகிச்சை பெற்று வருவோருக்குத் தலா 2 லட்ச ரூபாயும் அளிக்க எண்ணுகிறேன்.

    சென்னை :

    கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்கு தலா ரூ.20 லட்சம் வழங்கப்படும் என த.வெ.க. தலைவர் விஜய் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் எக்ஸ் தள பக்கத்தில்வெளியிட்டுள்ள பதிவில்,

    என் நெஞ்சில் குடியிருக்கும் அனைவருக்கும் வணக்கம்.

    கற்பனைக்கும் எட்டாத வகையில், கரூரில் நேற்று நிகழ்ந்ததை நினைத்து, இதயமும் மனதும் மிகமிகக் கனத்துப் போயிருக்கும் சூழல். நம் உறவுகளை இழந்து தவிக்கும் பெருந்துயர்மிகு மனநிலையில், என் மனம் படுகிற வேதனையை எப்படிச் சொல்வதென்றே தெரியவில்லை. கண்களும் மனசும் கலங்கித் தவிக்கிறேன்.

    நான் சந்தித்த உங்கள் எல்லோருடைய முகங்களும் என் மனதில் வந்து போகின்றன. பாசமும் நேசமும் காட்டும் என் உறவுகளை நினைக்க நினைக்க, அது என் இதயத்தை மேலும் மேலும் அதன் இடத்திலிருந்தே நழுவச் செய்கிறது.

    என் சொந்தங்களே… நம் உயிரனைய உறவுகளை இழந்து தவிக்கும் உங்களுக்கு, சொல்லொணா வேதனையுடன் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிற அதே வேளையில், இப்பெரும் சோகத்தை உங்கள் மனதுக்கு நெருக்கமாக நின்று பகிர்ந்துகொள்கிறேன்.

    நமக்கு ஈடு செய்யவே இயலாத இழப்புதான். யார் ஆறுதல் சொன்னாலும் நம் உறவுகளின் இழப்பைத் தாங்கவே இயலாதுதான். இருந்தும், உங்கள் குடும்பத்தில் ஒருவனாக, உறவினை இழந்து தவிக்கும் நம் சொந்தங்களின் குடும்பம் ஒவ்வொன்றுக்கும் தலா 20 லட்ச ரூபாயும், காயமடைந்து சிகிச்சை பெற்று வருவோருக்குத் தலா 2 லட்ச ரூபாயும் அளிக்க எண்ணுகிறேன். இழப்பிற்கு முன்னால் இது ஒரு பெரும் தொகையன்றுதான். இருந்தும், இந்த நேரத்தில், என்னுடைய உறவுகளான உங்களுடன் மனம்பற்றி நிற்க வேண்டியது உங்கள் குடும்பத்தைச் சேர்ந்தவனாக என் கடமை.

    அதேபோல, காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் அனைத்து உறவுகளும் மிக விரைவில் குணமடைந்து வீடு திரும்ப இறைவனைப் பிரார்த்திக்கின்றேன். சிகிச்சையில் இருக்கும் நம் உறவுகள் அனைவருக்கும் அனைத்து உதவிகளையும் நம் தமிழக வெற்றிக் கழகம் உறுதியாகச் செய்யும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

    இறைவன் அருளால், அனைத்தில் இருந்தும் நாம் மீண்டு வர முயற்சிப்போம் என்று கூறியுள்ளார். 



    • மிதுனம் பண வரவுகள் சிறப்பாக இருக்கும் வாரம்.
    • மீனம் சகாயங்கள் நிறைந்த வாரம்.

    மேஷம்

    அனுகூலமான வாரம். ராசி அதிபதி செவ்வாய் தன் வீட்டை தானே பார்ப்பதால் பிறருக்கு வழிகாட்டியாக வாழ்வீர்கள். எந்த ஒரு செயலிலும் சுறுசுறுப்பாக செயல்படும் தன்மை கூடும். புதிய நல்ல வாய்ப்புகள் தேடி வரும். அதை பயன்படுத்திக் கூடிய சந்தர்ப்பங்களும் உருவாகும். தடைபட்ட பத்திரப்பதிவு இந்த வாரம் நடந்து முடியும்.

    புத ஆதித்ய யோகத்தால் மாணவர்களுக்கு கல்வி ஆர்வம் அதிகரிக்கும். பணிபுரியும் பெண்களுக்கு சம்பள உயர்வும், சலுகைகளும் உற்சாகத்தை அதிகரிக்கும். சிலருக்கு அரசின் இலவச தொகுப்பு வீடு கிடைக்கும். தம்பதிகளிடம் புரிதல் அதிகரிக்கும். வாழ்க்கை துணையால் எதிர்பாராத அதிர்ஷ்ட பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு.

    ஆரோக்யத்தில் சிறு சிறு பிரச்சினைகள் வந்து போகலாம்.சிலர் ஆயுள் காப்பீட்டு பாலிசி எடுக்கலாம். 29.9.2025 அன்று 3.55 காலை வரை சந்திராஷ்டமம் இருப்பதால் முக்கிய பேச்சு வார்த்தைகளை ஒத்தி வைக்கவும். பணம் விஷயத்தில் சிக்கனமாக இருப்பது நல்லது. சனிக்கிழமை விரதம் இருந்து மகாவிஷ்ணுவை வழிபடுவதால் கடன் சார்ந்த பாதிப்புகள் குறையும்.

    ரிஷபம்

    முக்கிய தேவைகள் பூர்த்தியாகும் வாரம். பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சனி பகவானின் பார்வையில் சூரியன் சஞ்சரிக்கிறார்.ஆன்ம பலம் பெருகும். எடுக்கும் முயற்சியில் சில தடைகள் வந்தாலும் வெற்றி நிச்சயம். எதிர்பார்த்த இடத்தில் இருந்து விரும்பிய உதவிகள் கிடைக்கும். வாழ்க்கையில் நிலவிய நெருக்கடிகள் சங்கடங்கள் குறையும்.பதவி உயர்வு இடமாற்றம் போன்றவற்றில் இருந்த நடைமுறை சிக்கல்கள் சீராகும்.

    அலுவலகத்தில் திறமைகளை வெளிப்படுத்தக்கூடிய சந்தர்ப்பங்கள் உருவாகும்.தொழில் போட்டிகளை சமாளிக்கும் திறமை கூடும். நீங்கள் என்ன நினைக்கிறீர்களோ அதை பிரபஞ்சம் வழங்கும். நல்ல எண்ணங்களை வளர்த்துக் கொள்ளும் போது நினைத்தது நினைத்தபடியே நடக்கும்.புதிய சொத்துக்கள் வாங்கக்கூடிய நேரம் உள்ளது.

    29.9.2025 அன்று 3.55 காலை முதல் 1.10.2025 அன்று மதியம் 2.27 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் ஆடம்பரச் செலவுகளை குறைப்பது நல்லது. முன்பின் அறிமுகம் இல்லாத நபர்களிடம் யோசித்துப் பேச வேண்டும். புரட்டாசி மாத சனிக்கிழமையில் மகாவிஷ்ணுவை வழிபட தனவரவில் நிலவிய தடைகள் அகலும்.

    மிதுனம்

    பண வரவுகள் சிறப்பாக இருக்கும் வாரம். வார இறுதியில் ராசி அதிபதி புதன் பூர்வ புண்ணிய ஸ்தானம் செல்கிறார்.இது அதிர்ஷ்டம் அரவணைக்கும் காலமாகும். லட்சியங்களையும் இலக்குகளையும் அடைவதற்கு சாதகமான நேரம். குடும்பத்தில் அன்பு கூடும். அமைதி நிலவும். பண வரவு அமோகமாக இருக்கும்.

    பங்குச் சந்தை முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்றுத் தரும், பத்திரிக்கை நிறுவனங்கள், கூட்டுறவு வங்கிகளின் பங்குகளில் நீண்ட கால முதலீடு செய்யலாம்.முக்கியமான பணிகளை தெளிவாக செய்வதன் மூலம் மதிப்பு கூடும்.சில தம்பதிகள் இணைந்து கூட்டுத் தொழிலில் ஈடுபடலாம். அதற்கு தேவையான நிதியும், சந்தர்ப்பமும் தானாக உருவாகும்.மறு திருமண முயற்சி பலிதமாகும்.

    திருமணத்திற்கு அதிக வசதியுள்ள வரன் அமை யும்.1.10.2025 அன்று மதியம் 2.27 முதல் 3.10.2025 இரவு 9.27 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் சற்று பொறுமையோடு இருக்க வேண்டும்.ஆரோக்கி யத்தில் அக்கறை செலுத்த வேண்டும்.உடன் பணிபுரிபவர்களை அனுசரித்துச் செல்லவும்.புரட்டாசி சனிக்கிழமை மகாவிஷ்ணுவை வழிபடுவதால் பணப்புழக்கம் அதிகமாகும்.

    கடகம்

    புதிய நம்பிக்கை பிறக்கும் வாரம்.கடக ராசிக்கு வெற்றி ஸ்தானமான மூன்றாம் இடத்தில் புத ஆதித்ய யோகம் ஏற்படுகிறது.கடக ராசியினருக்கு இது வாழ்வியல் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய சிறந்த யோகமாகும்.புதிய தெளிவும் நம்பிக்கையும் ஏற்படும்.குடும்பத்தில் நிலவிய குழப்பங்கள் முற்றுப் புள்ளியாகும். தம்பதிகளிடையே சுமூக உறவு நிலவும்.முன்னோர்களின் நல்லாசியும், குல தெய்வ அருளும் கிடைக்கும்.

    தொழில் உத்தியோக அனுகூலம் நல்ல விதமாக இருக்கும். பிள்ளை களின் சுப நிகழ்வுகள் திட்டமிட்டபடி நடக்கும்.இழந்த பதவி தேடி வரும்.விருப்ப விவாகத்திற்கு பெற்றோர் சம்மதம் கிடைக்கும். பங்குச் சந்தை மற்றும் அதிர்ஷ்டம் சார்ந்த விஷயங்களில் ஆதாயம் கூடும். 3.10.2025 இரவு 9.27-க்கு சந்திராஷ்டமம் ஆரம்பிப்பதால் புதிய முயற்சிகள் மற்றும் திருமணம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் மிகுந்த கவனம் தேவை.

    கை,கால் வலி, அலைச்சல் போன்ற சிறுசிறு அசவுகரியங்கள் இருக்கும். புரட்டாசி மாதத்தில் மகாவிஷ்ணுவை வழிபடு வதால் சர்ப்ப தோஷங்களால் ஏற்படும் பாதிப்புகள் அகலும்.

    சிம்மம்

    சங்கடங்கள் நீங்கும் வாரம்.உச்சம் பெற்ற தனம், வாக்கு, குடும்ப ஸ்தான அதிபதி புதனுடன் ராசி அதிபதி சூரியன் சேர்க்கை பெற்றுள்ளார். புகழ், அந்தஸ்து கவுரவம் கூடும். நம்பிக்கை, நாணயம் உயரும். தங்கு தடையில்லாத பணவரவு ஏதாவது ஒரு வழியில் வந்து கொண்டே இருக்கும். நிலையற்ற வருமானத்தில் தள்ளாடிய குடும்பம் நிலையான வருமானத்தில் தலை நிமிர்ந்து நிற்கும்.

    வீடு, மனை பற்றிய நீண்ட நாள் கனவுகளும் முயற்சிகளும் நிறைவேறும். போட்டி, பொறாமைகள் அகலும். வாழ்க்கை துணைக்கு விரும்பிய உத்தியோக உயர்வு உண்டு. நோய்,நொடிகள் நிவர்த்தியாகும்.சுப செலவுகள் அதிகரிக்கும்.குழந்தை பாக்கியம் கிட்டும்.மாமியார் மருமகள் கருத்து ஒற்றுமை மேம்படும்.எதிர்கால தேவைக்காக இன்சூரன்ஸ் பாலிசி எடுக்கலாம் அல்லது சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்யலாம்.

    சகோதர விரோதம், அரசு வகைச் சிக்கல்கள் அகலும். மாணவர்களுக்கு கல்வி தொடர்பான முயற்சியில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். புரட்டாசி மாதத்தில் மகாவிஷ்ணுவை வழிபடு வதால் அஷ்டம சனி காலத்தில் ஏற்படக்கூடிய இன்னல்கள் குறையும்.

    கன்னி

    கடன் சுமை குறையும் வாரம். வார இறுதியில் ராசி அதிபதி புதன் தன ஸ்தானம் சென்று செவ்வாயுடன் இணைகிறார். 2, 8 என்ற பண பர ஸ்தானங்கள் வலிமையாக இயங்குகிறது.வியாபாரத்தில் நல்ல லாபம் உண்டாகும். வாங்கிய கடனை அடைப்பீர்கள். சிலர் உழைப்பை நம்பாமல் அதிர்ஷ்டத்தை தேடிச் செல்லலாம்.

    வாழ்க்கைத் துணை, நண்பர்களின் உதவியால் சில முக்கிய பணிகளை செய்து முடிப்பீர்கள். மங்களகரமான சுப நிகழ்வுகள் கைகூடும். ஆடை, ஆபரணச் சேர்க்கை அதிகரிக்கும். அலங்காரப் பொருட்கள் வீட்டை அலங்கரிக்கும். விவாகரத்து வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். வேலை பார்க்கும் இடத்தில் சாதகமான சூழல் உண்டாகும். அரசு சார்ந்த துறைகளால் ஆதாயம் உண்டு.

    சனி வக்ரமாக இருப்பதால் முதலீட்டாளர்கள் கவனமாக செயல்பட வேண்டும். மனைவி வழிச் சொத்தை உயில் மாற்றம் செய்வதில் மாமனாரிடம் இருந்த எதிர்ப்புகள் அகலும். புரட்டாசி மாத சனிக்கிழமை மகா விஷ்ணுவை வழிபடுவதால் கண்டகச் சனியால் ஏற்படக் கூடிய பாதிப்புகள் குறையும்.

    துலாம்

    சுதிர சொத்துக்கள் சேரும் வாரம். ராசியில் உள்ள செவ்வாயை குரு பகவான் பார்க்கிறார். இது குரு மங்கள யோகமாகும்.இதுவரை சொத்துக்கள் இல்லாதவர்களுக்கும் சொத்து சேரும். சிலருக்கு அரசாங்கத்தின் மூலம் இலவச வீடு மனைகள் கிடைக்கலாம். விற்க முடியாமல் கிடந்த பழைய குடும்ப சொத்துக்களை விற்று புதிய சொத்துக்கள் வாங்கலாம்.

    புத்திர பாக்கி யத்தில் நிலவிய தடைகள் நீங்கி கர்மம் செய்ய புத்திரன் பிறப்பான். பிள்ளை களுக்கு திருமணம் செய்து மருமகன், மருமகள் வரக் கூடிய அமைப்பு உள்ளது. கலைத் துறையி னருக்கு திறமைக்கேற்ற புகழும், கவுரவமும் கிடைக்கும். கணவன்-மனை விக்குள் எற்பட்ட கருத்துவேறுபாடு குறையும். ஆன்மீக நாட்டம் உண்டாகும்.

    பணம் பல வழிகளில் வந்தாலும் அதற்கேற்ற செலவுகளும் இருக்கும்.திட்டமிட்டு செயலாற்றினால் காரிய வெற்றி உண்டாகும். இல்லத்தில் நடைபெறும் சுப நிகழ்வுகள் மன மகிழ்ச்சியை அதிகரிக்கும்.பெண்களுக்கு புதிய தொழில் சிந்தனை உண்டாகும். புரட்டாசி மாதம் மகாவிஷ்ணுவை வழிபடுவதால் கர்ம வினை தாக்கம் குறையும்.

    விருச்சிகம்

    முழுமையான அனுகூலம் கிடைக்கும் வாரம். ராசிக்கு 11-ம்மிடமான லாப ஸ்தானத்தில் தொழில் ஸ்தான அதிபதி சூரியன் சஞ்சாரம் செய்கிறார்.சுய ஜாதக ரீதியான தோஷங்களும் சாபங்களும் விலகும். குடும்பத்தில் சந்தோஷமும் மகிழ்ச்சியும் கூடும்.சகோதர, சகோதரிகளுக்காக பணம் செலவு செய்ய நேரும்.தந்தையுடன் ஏற்பட்ட மனக்கசப்பு மறையும். அயல்நாட்டு குடியுரிமைக்கு முயன்ற வர்களின் விருப்பம் நிறைவேறும்.

    இளம் வயதி னருக்கு திருமணத்திற்கு வரன் பார்க்கத் துவங்கலாம். தள்ளிப் போன வழக்குகள் மீண்டும் விசாரணைக்கு வரும். வேலை இல்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும்.வெளிநாட்டு வேலை வாய்ப்பு முயற்சி சாதகமாகும். பெண்கள் நண்பிகளுடன் இணைந்து தீபாவளிக்கு ஏற்ற சீசன் வியாபார முயற்சியில் ஈடுபடுவார்கள்.

    நிலுவையில் உள்ள வாடகை வருமானம், சம்பள பாக்கிகள் கிடைக்கும். அடமான நகைகள் மீண்டு வரும். புரட்டாசி மாத சனிக்கிழமை மகாவிஷ்ணுவை வழிபடுவதால் பூர்வீகம் சார்ந்த பிரச்சினைகள் அகலும்.

    தனுசு

    எதிர்மறை பலன்கள் சீராகும் வாரம். ராசிக்கு குரு சனி பார்வை உள்ளது. யாரை நம்புவது யாரை நம்ப கூடாது என்ற பாடத்தை குருவும் சனியும் கற்பிப்பார்கள். நோய் விபத்து கண்டங்களால் ஏற்பட்ட பாதிப்புகள் அகலும்.மனதில் நிலவிய குழப்பங்கள் விலகும். சூழ்நிலை கைதியாக வாழ்ந்த நிலை மாறும். தொழிலாளிகளின் குறைகளைக் கேட்டறிந்து அதனை தீர்க்க முயல்வது நிறுவனத்தை வளரச் செய்யும்.

    குடும்ப ஸ்தானத்திற்கு செவ்வாயின் பார்வை இருப்பதால் முன் கோபத்தைக் குறைந்து எதிலும் நிதானமாக செயல்பட வேண்டும்.இது வரை தடைபட்ட திருமணம், குழந்தை பாக்கியம் கைகூடும். கணவர் மனைவி உறவு சுமூகமாக இருக்கும். தாய் வழி உறவினர்களால் ஆதாயங்கள் இருக்கும். வருமானம் ஒன்றுக்கு மேற்பட்ட வழிகளில் வந்து குவியும்.

    விற்காமல் கிடந்த முன்னோர்கள் சொத்து விற்கும். பூர்வீகச் சொத்தை பிரிப்பதில் இருந்து வந்து சர்ச்சைகள் விலகும். குழந்தைகளால் ஏற்பட்ட மன உளைச்சல் குறையும். வீடு, வாகனம் வாங்குதல் போன்ற சுப பலன்கள் நடக்கும். புரட்டாசி மாதத்தில் மகா விஷ்ணுவை வழிபட பாக்கிய பலம் அதிகரிக்கும்.

    மகரம்

    பாக்கிய பலன்கள் மிகுதியாகும் வாரம்.பாக்கியாதிபதி புதன் உச்சம் பெறுவதால் மகர ராசிக்கு வாழ்க்கையில் நடைபெற வேண்டிய அனைத்து சுப பலன்களும் நடக்கும். தன்னம்பிக்கை, தைரியம், துணிச்சல் மேலோங்கும். எதிர்பாராத புதிய திருப்பங்கள் உண்டாகும்.புதிய முயற்சியில் ஈடுபட்டால் நல்ல அனுகூலமான பலன்களையும் ஆதாயங்களையும் பெற முடியும்.

    வீண் பழிகளில் இருந்து விடுபடுவீர்கள். வருமானம் பெருகும். பணப்புழக்கம் சரளமாகும். முன்னோர்களின் நல்லாசிகள் கிடைக்கும்.வெளிநாட்டில் இருப்பவர்கள் பூர்வீகம் வந்து செல்வதில் இருந்த நடைமுறை சிக்கல்கள் நீங்கும். சகோதர வகையில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகள் சாதகமாகும்.

    வீடு கட்ட, அல்லது புதிய தொழில் துவங்க கடன் கிடைக்கும்.வேலையில் நிலவிய நெருக்கடிகள் விலகி நிம்மதியுடன் பணிபுரிய முடியும்.சிலர் உயர் கல்விக்காக இடம் பெயரலாம். கை, கால் வலி, அலைச்சல் போன்ற சிறுசிறு அசவுகரியங்கள் இருக்கும். வரவுக்கு மீறிய செலவை தவிர்க்க வேண்டும்.புரட்டாசி மாதம் மகாவிஷ்ணுவை வழிபட மகத்தான மாற்றங்கள் வந்து சேரும்.

    கும்பம்

    மகிழ்ச்சியான வாரம். ராசி அதிபதி சனி தன ஸ்தானத்தில் இருப்பதால் வருமானமும், சந்தோஷமும் அதிகரிக்கும்.கும்ப ராசியினருக்கு ராஜயோக அதிர்ஷ்டத்தை அனுபவிக்கும் வாரமாகும்.பேச்சில் தெளிவு இருக்கும்.பண வரவு பேசாத உறவுகளையும் பேச வைக்கும்.குல தெய்வத்தின் பரிபூரண அருள் கிடைக்கும். திருமண முயற்சிகள் நல்ல முன்னேற்றம் தரும்.

    ஒரு சிலர் வீடு, வேலை மாற்றம் செய்ய நேரும். புதிய வாகனங்கள் வாங்கும் முயற்சி பலிதமாகும். எதிரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் அகன்று எதிர்ப்புகள் இல்லாத நிலை உருவாகும்.கோச்சார சர்ப்ப தோஷத்தால் சில தம்பதிகள் தொழில், உத்தியோக நிமித்தமாக பிரிந்து வாழலாம். தம்பதிகள் விட்டுக் கொடுத்துச் செல்ல வேண்டிய நேரம். அரசு வழி காரியங்கள் சித்திக்கும்.

    தொழில், உத்தியோகத்தில் சில முக்கிய மாற்றங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எதிரிகளிடம் நிலவிய போட்டி பொறாமைகள் மறையும்.பய உணர்வு நீங்கும்.பெண்களுக்கு பொன், பொருள் ஆபரணச் சேர்க்கையில் ஆர்வம் அதிகரிக்கும். தேவையற்ற வாக்கு பிரயோகங்களை தவிர்க்க வேண்டும்.புரட்டாசி மாதம் மகாவிஷ்ணுவை வழிபடுவதால் குடும்பத்தில் நிம்மதி நிலைக்கும்.

    மீனம்

    சகாயங்கள் நிறைந்த வாரம்.ராசி அதிபதி குரு 4ம்மிடத்தில் நிற்பதால் தடைபட்ட வீடு கட்டும் பணி துரிதமடையும். வாகனம், வயல்வெளி, தோட்டம் வாங்கும் யோகம் உண்டு. தாய் வழிச் சொத்துக்கள் பணம் நகைகள் கிடைக்க வாய்ப்பு உள்ளது. தாய் வழி உறவுகளின் அன்பு. அனுசரனை மகிழ்ச்சியை கூட்டும். சுகபோக வாழ்க்கை உண்டாகும்.

    ரியல் எஸ்டேட் மற்றும் கட்டுமானத் துறையினர் தொழிலில் சாதனை படைப்பார்கள். ஏற்றுமதி, இறக்குமதி தொழிலில் புதிய ஆர்டர்கள் கிடைக்கும். பரிபூரண குல தெய்வ அருள் உண்டாகும். சமுதாய அந்தஸ்து அதிகரிக்கும். பூர்வீகச் சொத்தால் பயன் உண்டு.பெண்கள் விலை உயர்ந்த ஆபரணங்கள் வாங்கி மகிழ்வார்கள்.பிள்ளைகளின் எதிர்கால நலனுக்கு ஒரு தொகையை முதலீடு செய்யும் ஆர்வம் உண்டாகும்.

    மகன், மகளின் முதல் மாதச் சம்பளம் உங்களை ஆனந்தப்படுத்தும். ஆரோக்கியம் அதிகரிக்கும். மாணவர்களுக்கு உயர்கல்வி படிக்கும் ஆர்வம் அதிகரிக்கும்.எதிர் பாலினத்தவரிடம் கவனமாக பழகவும். ஆன்லைன் மோகத்தில் பணத்தை இழக்க வாய்ப்பு உள்ளதால் எச்சரிக்கையாக இருக்கவும். புரட்டாசி மாதம் மகா விஷ்ணுவை வழிபடுவதால் குடும்ப சங்கடங்கள் குறையும்.

    • த.வெ.க. தலைவர் விஜய் கட்சி நிர்வாகிகளிடம் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது.
    • விஜயின் பிரசார பயணத்தை தற்காலிகமாக ஒத்திவைக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    கரூரில் நேற்று இரவு கூட்ட நெரிசலில் சிக்கி 39 பேர் உயிரிழந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இச்சம்பவத்திற்கு பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

    கூட்ட நெரிசலில் சிக்கி 39 பேர் உயிரிழந்தது தொடர்பாக த.வெ.க. பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் உள்ளிட்ட 4 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இச்சம்பவம் தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது.

    இச்சம்பவம் தொடர்பாக த.வெ.க. தலைவர் விஜய் கைதாவாரா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

    இந்த நிலையில், கரூர் கூட்டத்தில் 39 பேர் உயிரிழந்துள்ள நிலையில், அடுத்து மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கை குறித்து சென்னை நீலாங்கரை இல்லத்தில் த.வெ.க. தலைவர் விஜய் கட்சி நிர்வாகிகளிடம் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது.

    இதனை தொடர்ந்து த.வெ.க. தலைவர் விஜயின் பிரசார பயணத்தை தற்காலிகமாக ஒத்திவைக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    • உயிரிழந்தோரின் குடும்பத்தாருக்கு என் ஆழ்ந்த இரங்கல்கள்.
    • காயமடைந்தோர் விரைவில் நலம் பெற இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

    கரூரில் வேலுசாமிபுரம் பகுதியில் தவெக தலைவர் விஜய் பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 8 குழந்தைகள் உள்பட 39 பேர் உயிரிழந்தனர்.

    தமிழ்நாட்டையே உலுக்கி உள்ள இச்சம்பவத்திற்கு அரசியல் தலைவர்கள், நடிகர்கள் என பலரும் இரங்கலும் தங்களது கண்டனங்களையும் தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில், விஜய் பரப்புரையின்போது உயிரிழந்தவர்களுக்கு நடிகர் கார்த்தி இரங்கல் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "கரூரிலிருந்து வந்த செய்தி தாங்க முடியாத துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்தோரின் குடும்பத்தாருக்கு என் ஆழ்ந்த இரங்கல்கள். காயமடைந்தோர் விரைவில் நலம் பெற இறைவனைப் பிரார்த்திக்கிறேன். இனி ஒருபோதும் இவ்வாறு நடைபெறாமல் இருக்க அனைவரும் ஒத்துழைப்போம்" என்று தெரிவித்தார்.

    • புஸ்ஸி ஆனந்த் உள்ளிட்ட 4 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
    • ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது.

    கரூரில் நேற்று இரவு கூட்ட நெரிசலில் சிக்கி 39 பேர் உயிரிழந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இச்சம்பவத்திற்கு பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

    மேலும், கூட்ட நெரிசலில் சிக்கி 39 பேர் உயிரிழந்தது தொடர்பாக த.வெ.க. பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் உள்ளிட்ட 4 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இச்சம்பவம் தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில், கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக தமிழக அரசிடம் கவர்னர் ஆர்.என்.ரவி விரிவான அறிக்கை கேட்டுள்ளார். 

    • விஜய் பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 8 குழந்தைகள் உள்பட 39 பேர் உயிரிழந்தனர்
    • இச்சம்பவத்திற்கு அரசியல் தலைவர்கள், நடிகர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

    கரூரில் வேலுசாமிபுரம் பகுதியில் தவெக தலைவர் விஜய் பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 8 குழந்தைகள் உள்பட 39 பேர் உயிரிழந்தனர்.

    தமிழ்நாட்டையே உலுக்கி உள்ள இச்சம்பவத்திற்கு அரசியல் தலைவர்கள், நடிகர்கள் என பலரும் இரங்கலும் தங்களது கண்டனங்களையும் தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில், விஜயை கைது செய்யவேண்டும் என்று நடிகை ஓவியா தெரிவித்துள்ளார். நடிகை ஓவியா "arest vijay" என்று இன்ஸ்டா ஸ்டோரி வைத்துள்ளார். 

    ×