என் மலர்
தலைப்புச்செய்திகள்
- சூரத்தில் உணவுப் பாதுகாப்பு பிரச்சாரத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
- மோடி மற்றும் அவரது மறைந்த தாயின் புகைப்படங்களை கையில் ஏந்தி இளைஞர் தேம்பித் தேம்பி அழுதார்.
குஜராத் மாநிலம் சூரத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்றார். அந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இளைஞர் ஒருவர் பிரதமர் மோடி மற்றும் அவரது மறைந்த தாயின் புகைப்படங்களை கையில் ஏந்தி உணர்ச்சிவசப்பட்டு தேம்பித் தேம்பி அழுதார்.
இதை பார்த்த மோடி, இளைஞரின் கையில் இருந்த புகைப்படத்தை வாங்கி கையெழுத்திட்டு, இளைஞருக்கு ஆறுதல் கூறினார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலானது.
இதனையடுத்து, சூரத்தில் உணவுப் பாதுகாப்பு பிரச்சாரத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
- சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் டி20 தொடரில் தென் ஆப்பிரிக்கா- ஆஸ்திரேலியா அணி நேற்று மோதினர்.
- இதில் ஆஸ்திரேலியா 137 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
வதோதரா:
சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் டி20 தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் ஆஸ்திரேலியா - தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் ஜாக் காலிஸ் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய தொடக்கம் முதலே அதிரடியில் பட்டையை கிளப்பியது. நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலியா ஒரு விக்கெட் இழப்பிற்கு 260 ரன்கள் குவித்தது.
பின்னர் 268 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணி 17 ஓவர்களில் 123 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் ஆஸ்திரேலியா 137 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. தென் ஆப்பிரிக்க அணியில் அம்லா 30 ரன்கள் அடிக்க, ஆஸ்திரேலியா தரப்பில் பென் லாப்லின் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
இந்த போட்டியில் ஆஸ்திரேலியா பேட்டிங் செய்த போது வாட்சன் அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தார். அந்த வகையில் ஷபலாலா வீசிய பந்தை லாங் ஆப் திசையில் அடித்தார். அந்த திசையில் இருந்த பீல்டிங் ஜாம்பவான் ஜான்டி ரோட்ஸ் பறந்து வந்து அந்த பந்தை தடுத்தார். 55 வயதில் இவர் இப்படி பீல்டிங் செய்தது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
தென் ஆப்பிரிக்கா அணிக்காக 1992-ம் ஆண்டு ஜான்டி ரோட்ஸ் அறிமுகமானார். இவரது சிறந்த பீல்டிங்கால் பல போட்டிகளை வென்று கொடுத்துள்ளார். அந்தரத்தில் பறந்த கேட்ச் மற்றும் ரன் அவுட் அடிப்பதில் வல்லவராக திகழ்ந்தார். இவரது பீல்டிங்கால் உலகின் சிறந்த பீல்டர் என்ற பெயருக்கு சொந்தக்காரர் ஆனார்.
அதன் பிறகு யாரு சிறந்த பீல்டிங் செய்தாலும் ஜான்டி ரோட்ஸ் மாதிரி பீல்டிங் செய்வதாக கூறப்பட்டு வந்தது. அந்த அளவுக்கு அவரது பீல்டிங் பேசப்பட்டது.
- உலகிலேயே மகளிருக்கு மிக அதிக மரியாதை வழங்கும் சமுதாயம் தமிழ்ச் சமுதாயம்.
- கல்வி, வேலைவாய்ப்புகளில் பெண்கள் முன்னேறியிருக்கிறார்கள்.
சென்னை:
பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
ஆக்கும் சக்தியாகவும், காக்கும் சக்தியாகவும் திகழும் மகளிரைப் போற்றும் உலக மகளிர் தினம் இன்று கொண்டாடப்படும் நிலையில், உலகெங்கும் வாழும் மகளிருக்கு இனிய வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
உலகம் எங்குமே பெண்கள் பலவீனமானவர்கள் என்ற பொய்யான நம்பிக்கை நிலவி வருகிறது. ஆண்களைவிட பெண்களுக்குத் தான் போர்க்குணம் அதிகம் ஆகும். ஆண்கள் வென்று விட்டதாக பெருமிதப்பட்டுக் கொண்டாலும், அவர்களின் வெற்றிக்கு பின்னணியில் இருப்பது பெண்கள் தான். சங்க காலத்திலிருந்து நிகழ்காலம் வரை இதற்கு ஏராளமான நாயகியரை உதாரணமாகக் கூற முடியும்.
உலகிலேயே மகளிருக்கு மிக அதிக மரியாதை வழங்கும் சமுதாயம் தமிழ்ச் சமுதாயம். பெண்களை கடவுளுக்கும் மேலாக வைத்து வழிபடும் சமுதாயமும் தமிழ்ச் சமுதாயம் தான். மனித நாகரிகங்கள் வளரக் காரணமாகவும், வாழ்வாதாரம் மற்றும் பாசன ஆதாரமாகவும் திகழும் நதிகளுக்குக் கூட பெண்களின் பெயரை சூட்டியதிலிருந்தே மகளிரை தமிழ் சமுதாயம் எந்த அளவுக்கு மதித்திருக்கிறது என்பதை உணர்ந்து கொள்ளலாம். நடைமுறை வாழ்விலும் அதே மரியாதை வழங்கப்பட வேண்டும்.
ஆனால், அந்த மரியாதை பெண்களுக்கு வழங்கப்படுவதில்லை என்பது மட்டுமின்றி, அவர்கள் அச்சமின்றி சுதந்திரமாக நடமாடக்கூட முடியாத நிலை தான் தமிழ்நாட்டில் நிலவுகிறது. பாடத்தையும், நற்பண்புகளையும் கற்றுத்தர வேண்டிய பள்ளிக்கூடங்கள் கூட இன்று பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பானவையாக இல்லை. பொது இடங்களும் பெண்களுக்கு ஆபத்தான இடமாக மாறியுள்ளன. 2023ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது 2024ஆம் ஆண்டில் குழந்தைகளுக்கு எதிரான, குறிப்பாக பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கை 52 விழுக்காடு அதிகரித்திருக்கிறது என்பதிலிருந்தே பெண்களுக்கு தமிழ்நாடு எந்த அளவுக்கு பாதுகாப்பற்ற மாநிலமாக மாறியிருக்கிறது என்பதை புரிந்து கொள்ள முடியும். இது உண்மையாகவே கவலையளிக்கும் செய்தியாகும்.
கல்வி, வேலைவாய்ப்புகளில் பெண்கள் முன்னேறியிருக்கிறார்கள். அதற்கு அவர்களின் அறிவும், திறனும் தான் காரணம். அவர்களுக்கு உரிமையும், அதிகாரமும் எட்டாக்கனியாக உள்ளன. அவற்றை போராடிப் பெறும் திறன் மகளிருக்கு உண்டு. பெண்கள் அச்சமின்றி, நடமாடும் சூழலை அரசு ஏற்படுத்திக் கொடுத்தாலே பெண்கள் தங்களுக்குத் தேவையான அனைத்தையும் வென்றெடுத்துக் கொள்வர். பெண்களுக்கு பாதுகாப்பான சூழல் என்றைக்கு ஏற்படுகிறதோ, அன்று தான் உண்மையான மகளிர் நாளாக அமையும். அத்தகைய நிலையை ஏற்படுத்துவதற்காக உழைக்க இந்த நாளில் அனைவரும் உறுதியேற்றுக் கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார்.
- தமிழகத் தாய்மார்கள், சகோதர சகோதரிகள் அனைவருக்கும், இனிய மகளிர் தின நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்
- சமூகத்தைப் பெண்களுக்குப் பாதுகாப்பானதாக மாற்ற இந்த நாளில் உறுதி ஏற்போம்.
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
சர்வதேச மகளிர் தினமான இன்று, தமிழகத் தாய்மார்கள், சகோதர சகோதரிகள் அனைவருக்கும், இனிய மகளிர் தின நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
பெண்களின் சுதந்திரத்தையும், சமூகம், பொருளாதாரம், கலாச்சாரம், அரசியல் போன்ற துறைகளில் மகளிரின் பங்களிப்புகளையும் அங்கீகரித்துப் போற்றவும், பெண்களுக்கு எதிரான ஏற்றத்தாழ்வு மற்றும் பாகுபாட்டை ஒழிக்கவும், சமூகத்தைப் பெண்களுக்குப் பாதுகாப்பானதாக மாற்றவும், இந்த நாளில் உறுதி ஏற்போம் என்று தெரிவித்துள்ளார்.
- அண்ணா அறிவாலயம், முரசொலி மாறன் அரங்கில் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
- தி.மு.க. எம்.பி.க்களின் செயல்பாடுகள் குறித்து விவாதிக்க இக்கூட்டம் நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது.
சென்னை:
தி.மு.க. பாராளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நாளை அண்ணா அறிவாலயத்தில் நடைபெறுகிறது.
நாளை காலை 10.30 மணி அளவில் அண்ணா அறிவாலயம், முரசொலி மாறன் அரங்கில் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வருகிற திங்கட்கிழமை பாராளுமன்றம் கூட உள்ள நிலையில், தி.மு.க. எம்.பி.க்களின் செயல்பாடுகள் குறித்து விவாதிக்க இக்கூட்டம் நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது.
- இன்றைக்கு தமிழ்நாடு பெண்களுக்கு துளி கூட பாதுகாப்பு இல்லாத மாநிலமாக மாறியிருப்பது மிகுந்த கவலைக்குரியது.
- பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்கத் திராணியற்ற ஒரு ஆட்சியாக இன்றைய ஸ்டாலின் மாடல் திமுக ஆட்சி இருப்பதும் வெட்கக்கேடானது.
சென்னை:
சர்வதேச மகளிர் தினத்தையொட்டி அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
அன்பை அள்ளிக் கொடுப்பதில் அன்னையாக, அறிவை அருளும் ஆசிரியையாக, பாசத்தோடு அரவணைக்கும் சகோதரியாக, மனதோடு மனம் கலந்த மனைவியாக, மகளாக, நட்பைக் காட்டும் தோழியாக, தர்மத்தைச் சொல்லும் பாட்டியாக என, வாழ்நாள் முழுவதும் நம்மோடு பயணிக்கின்றவர்கள்தான் பெண்கள்.
தமிழ் கூறும் நல்லுலகில் வாழும் மகளிர் அனைவருக்கும் எனது உளப்பூர்வமான சர்வதேச மகளிர் தினம் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அதே சமயம், இன்றைக்கு தமிழ்நாடு பெண்களுக்கு துளி கூட பாதுகாப்பு இல்லாத மாநிலமாக மாறியிருப்பது மிகுந்த கவலைக்குரியது. சிறுமி முதல் மூதாட்டி வரை, எந்தவொரு பெண்ணுக்கும் பாதுகாப்பு இல்லை என்பதும், பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்கத் திராணியற்ற ஒரு ஆட்சியாக இன்றைய ஸ்டாலின் மாடல் திமுக ஆட்சி இருப்பதும் வெட்கக்கேடானது.
அன்புச் சகோதரிகளே- உங்களுக்காக, உங்கள் பாதுகாப்புக்காக என்றைக்கும் அ.தி.மு.க. போராடும்.
2026ல் மீண்டும் அஇஅதிமுக ஆட்சி அமைந்ததும், இன்று நீங்கள் அச்சத்துடன் இருக்கின்ற நிலை மாறி, மிகவும் பாதுகாப்புடன், சுதந்திரமாக செயல்பட்டு, பல சாதனைகளைப் புரிகின்ற காலமாக நம் ஆட்சிக்காலம் நிச்சயம் இருக்கும்! என்று கூறியுள்ளார்.
- பாதுகாப்பாக இருந்தால் தானே சந்தோஷத்தை உணர முடியும்.
- 2026-ல் நாம எல்லாம் சேர்ந்து மகளிருக்கான பாதுகாப்பை உறுதி செய்ய தவறிய இவர்களை மாற்றுவோம்.
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் வீடியோ ஒன்றை வெளியிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது,
எல்லோருக்கும் வணக்கம்.
இன்றைக்கு மகளிர் தினம். தமிழ்நாடு முழுவதும் உள்ள என்னுடைய அம்மா, அக்கா, தங்கை, தோழி என்று உங்கள் அத்தனை பேருக்கும் இந்த தினத்தில் வாழ்த்து சொல்லாமல் இருக்க முடியாது. எங்கள் அனைவருக்கும் மகளிர் தின வாழ்த்துகள்.
சந்தோஷம் தானே. பாதுகாப்பாக இருந்தால் தானே சந்தோஷத்தை உணர முடியும். அப்படி எந்த பாதுகாப்பும் இல்லாதபோது insecurity-ஆ இருக்கும்போது எந்த சந்தோஷமும் இருக்காது தானே. அப்படி என்று நீங்கள் நினைப்பது எனக்கு புரியுது. என்ன செய்ய...
நீங்கள், நாம எல்லோரும் சேர்ந்து தான் இந்த தி.மு.க. அரசை தேர்ந்தெடுத்தோம். ஆனா அவங்க இப்படி ஏமாத்துவாங்கன்னு இப்ப தான் தானே தெரியுது. எல்லாமே இங்கே மாறக்கூடியது தானே. மாற்றத்திற்கு உரியது தானே
2026-ல் நாம எல்லாம் சேர்ந்து மகளிருக்கான பாதுகாப்பை உறுதி செய்ய தவறிய இவர்களை மாற்றுவோம். அதற்கு மகளிர் தினமான இன்று நாம் எல்லோரும் சேர்ந்து உறுதி ஏற்போம்.
ஒண்ணு மட்டும் சொல்கிறேன். எல்லா சூழ்நிலையிலும் உங்கள் மகனா, அண்ணா, தம்பியா, தோழனா உங்களோடு நான் நிற்பேன். நன்றி, வணக்கம்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
- வெள்ளி விலையில் மாற்றமில்லை.
- பார் வெள்ளி ஒரு லட்சத்து எட்டாயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
சென்னை:
தங்கம் விலை கடந்த மாதம் (பிப்ரவரி) முதல் ஏற்ற, இறக்கத்துடன் இருக்கிறது. கடந்த 4-ந்தேதியில் இருந்து விலை அதிகரித்து காணப்பட்டது. நேற்று முன்தினமும் அதேபோல் விலை உயர்ந்து, ஒரு கிராம் ரூ.8 ஆயிரத்து 65-க்கும், ஒரு சவரன் ரூ.64 ஆயிரத்து 520-க்கும் விற்பனை ஆனது. இதனை தொடர்ந்து நேற்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 குறைந்து ஒரு சவரன் ரூ.64,240-க்கு விற்கப்படுகிறது.
இந்த நிலையில், வார இறுதிநாளான இன்று தங்கம் விலை சற்று உயர்ந்துள்ளது. கிராமுக்கு 10 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.8,040-க்கும் சவரனுக்கு 80 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.64,320-க்கும் விற்பனையாகிறது.
வெள்ளி விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் வெள்ளி 108 ரூபாய்க்கும் பார் வெள்ளி ஒரு லட்சத்து எட்டாயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-
07-03-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 64,240
06-03-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 64,480
05-03-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 64,520
04-03-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 64,080
03-03-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 63,520
கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-
07-03-2025- ஒரு கிராம் ரூ.108
06-03-2025- ஒரு கிராம் ரூ.108
05-03-2025- ஒரு கிராம் ரூ.107
04-03-2025- ஒரு கிராம் ரூ.107
03-03-2025- ஒரு கிராம் ரூ.106
- நமது அரசு எப்போதும் பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதற்காக பாடுபட்டுள்ளது
- பிரதமர் மோடியின் எக்ஸ் தள கணக்கை தமிழக செஸ் வீராங்கனை வைஷாலி கையாள்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி, மகளிர் தின வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
உலக மகளிர் தினத்தில் நமது பெண் சக்திக்கு தலைவணங்குவோம். நமது அரசு எப்போதும் பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதற்காக பாடுபட்டுள்ளது
எனது சமூக வலைதள கணக்குகளை பல்வேறு துறைகளில் முத்திரை பதிக்கும் பெண்கள் கையாள்வார்கள் என்று தெரிவித்துள்ளார்.
மகளிர் தினத்தையொட்டி பிரதமர் மோடியின் எக்ஸ் தள கணக்கை தமிழக செஸ் வீராங்கனை வைஷாலி கையாள்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
- இன்றைய முக்கியச் செய்திகள்
- இன்றைய அரசியல், சினிமா, விளையாட்டு செய்திகளை ஒரு சில வரிகளில் பெறுங்கள்.
தமிழக அரசியல், பொது நிகழ்வுகள், தேசிய அரசியல், விளையாட்டு மற்றும் உலக நடப்புகள் குறித்த அனைத்து செய்திகளையும் ஒரே பதிவில் அறிந்து கொள்ளுங்கள்..
- இளையராஜாவை சந்தித்து அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்தனர்.
- பண்ணைபுரத்தில் ஹார்மோனியம் வாசித்த கைகள், இன்று லண்டனில் சிம்பொனி படைக்கிறது.
திரைத்துறையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ள இசைஞானி இளையராஜா, அடுத்ததாக முதன்முறையாக நேரடியாக சிம்பொனி இசை நிகழ்ச்சி ஒன்றை நடத்தவுள்ளார். இன்று, லண்டனில் உள்ள அப்பல்லோ அரங்கத்தில் இந்த சிம்பொனி இசை நிகழ்ச்சி பிரம்மாண்டமான முறையில் நடைபெறவுள்ளது. இதற்காக இளையராஜாவை சந்தித்து அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்தனர்.
இந்த நிலையில், சிம்பொனி இசை நிகழ்ச்சியை நடத்த உள்ள இசைஞானி இளையராஜாவுக்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக நடிகர் ரஜினிகாந்த் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
பண்ணைபுரத்தில் ஹார்மோனியம் வாசித்த கைகள், இன்று லண்டனில் சிம்பொனி படைக்கிறது.
சாமி, உங்களால் இந்தியாவிற்கே பெருமை! பாராட்டுகள் என்று கூறியுள்ளார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- பா.ஜ.க.வுடன் கூட்டணி என்று எங்கள் பொதுச்செயலாளர் சொல்லவில்லை.
- எங்களுடைய அரசியல் எதிரி தி.மு.க. தான் என்று சொல்லி இருக்கிறார்.
சிவகங்கையில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதனிடம், பா.ஜ.க. கூட்டணிக்காக கட்சிகள் தவம் கிடப்பதாக மாநில தலைவர் அண்ணாமலை கூறியிருப்பது தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது அவர் கூறியதாவது:
* கூட்டணிக்காக யாரும் தவம் கிடக்கவில்லை. அவர் எங்களை சொல்லவில்லை.
* பா.ஜ.க.வுடன் கூட்டணி என்று எங்கள் பொதுச்செயலாளர் சொல்லவில்லை. எங்களுடைய அரசியல் எதிரி தி.மு.க. தான் என்று சொல்லி இருக்கிறார்.
* இவர் சொல்வதை பற்றி நாங்கள் கவலைப்படவில்லை. அதைப்பற்றி கண்டு கொள்ளவும் இல்லை என்று கூறினார்.






