என் மலர்
கிரிக்கெட் (Cricket)
- தென் ஆப்பிரிக்கா ஏ அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு நான்கு நாட்கள் கொண்ட இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது.
- துணை கேப்டனாக தமிழக வீரர் சாய் சுதர்சன் நியமிக்கப்பட்டுள்ளார்.
மும்பை:
இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள தென் ஆப்பிரிக்கா அணி 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இந்த போட்டி நவம்பர் மாதம் 14-ம் தேதி கொல்கத்தாவில் தொடங்குகிறது.
இந்த தொடருக்கு தயாராகும் விதமாக தென் ஆப்பிரிக்கா ஏ அணி தற்போது இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு நான்கு நாட்கள் கொண்ட இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. இதில் முதல் 4 நாள் டெஸ்ட் போட்டி அக்டோபர் 30-ம் தேதி தொடங்குகிறது. 2-வது நான்கு நாள் டெஸ்ட் போட்டி நவம்பர் 6-ம் தேதி நடைபெறுகிறது.
இந்நிலையில் தென் ஆப்பிரிக்கா ஏ அணிக்கு எதிரான இந்திய ஏ அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் காயம் காரணமாக கடந்த சில மாதங்களாக விளையாடாத ரிஷப் பண்ட், தற்போது மீண்டும் திரும்பி இருக்கிறார். இந்த அணியின் கேப்டனாக ரிஷப் பண்ட் நியமிக்கபட்டுள்ளார். இந்த இந்திய ஏ அணியில் சாய் சுதர்சன் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
கடந்த ஜூலை மாதம் மான்செஸ்டரில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான 4-வது டெஸ்ட் போட்டியின் போது காலில் காயம் ஏற்பட்டது. இதன் மூலம் அவர் போட்டியில் பங்கேற்காமல் இருந்தார்.
முதல் நான்கு நாள் போட்டிக்கான இந்திய அணி:-
ரிஷப் பண்ட் (கேப்டன், விக்கெட் கீப்பர்), ஆயுஷ் மாத்ரே, என். ஜெகதீசன் (விக்கெட் கீப்பர்), சாய் சுதர்சன் (துணைக் கேப்டன்), தேவதத் படிக்கல், ரஜத் பட்டிதார், ஹர்ஷ் துபே, தனுஷ் கோடியன், மனவ் சுதர், அன்ஷுல் கம்போஜ், யாஷ் தாக்கூர், ஆயுஷ் பதோனி, சரண்ஷ் ஜெயின், குர்னூர் பிரார், கலீல் அகமது.
2-வது நான்கு நாள் போட்டிக்கான இந்திய அணி:-
ரிஷப் பண்ட் (கேப்டன், விக்கெட் கீப்பர்), கே.எல். ராகுல், துருவ் ஜூரல் (விக்கெட் கீப்பர்), சாய் சுதர்சன் (துணைக் கேப்டன்), தேவதத் படிக்கல், ருதுராஜ் கெய்க்வாட், ஹர்ஷ் துபே, தனுஷ் கோடியன், மனவ் சுதர், கலீல் அகமது, குர்னூர் பிரார், அபிமன்யு ஈஸ்வரன், பிரசித் கிருஷ்ணா, முகமது சிராஜ், ஆகாஷ் தீப்.
- வெஸ்ட் இண்டீஸ் அணி வேகப்பந்து வீச்சை பயன்படுத்தவில்லை.
- 5 சுழற்பந்து வீச்சாளர்கள் மட்டுமே 50 ஓவர்களையும் வீசியுள்ளனர்.
வெஸ்ட் இண்டீஸ் அணி 3 டி20, 3 ஒருநாள் போட்டியில் விளையாடுவதற்காக வங்கதேசதுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. அதன்படி இரு அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டியில் வங்கதேசம் அணி 74 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனையடுத்து இரு அணிகளுக்கு இடையேயான 2-வது ஒருநாள் போட்டி இன்று நடைபெற்றது. இதில் வங்கதேசம் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த வங்கதேசம் அணி, 50 ஓவரில் 7 விக்கெட்டுகளை இழந்து 213 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக சவுமியா சங்கர் 45 ரன்கள் எடுத்தார். வெஸ்ட் இண்டீஸ் அணி தரப்பில் மோதி 3 விக்கெட்டும் அகேல் ஹோசைன், அலிக் அதனேஸ் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
முன்னதாக இந்த போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி வேகப்பந்து வீச்சை பயன்படுத்தவில்லை. 5 சுழற்பந்து வீச்சாளர்கள் மட்டுமே 50 ஓவர்களையும் வீசியுள்ளனர். ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் இந்த சம்பவம் முதல் முறையாக அரங்கேறியுள்ளது.
அகேல் ஹோசைன், ரோஸ்டன் சேஸ், காரி பியர், குடகேஷ் மோதி, மற்றும் அலிக் அதனேஸ் ஆகியோர் 10 ஓவர்கள் வீசியுள்ளனர். இதன்மூலம் 50 ஓவர் போட்டியில் சுழற்பந்து வீச்சாளர்களை மட்டுமே பயன்படுத்திய முதல் நாடாக வெஸ்ட் இண்டீஸ் சாதனை படைத்துள்ளது.
- முதல்நாள் ஆட்டத்தின் முடிவில் பாகிஸ்தான் 5 விக்கெட் இழப்புக்கு 259 ரன் எடுத்து இருந்தது.
- கேப்டன் ஷான் மசூத் 87 ரன்னும், சவுத் சகீல் 66 ரன்னும், அப்துல்லா ஷபிக் 57 ரன்னும் எடுத்தனர்.
ராவல்பிண்டி:
பாகிஸ்தான்-தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் ராவல்பிண்டியில் நேற்று தொடங்கியது. முதலில் விளையாடிய பாகிஸ்தான் முதல்நாள் ஆட்டத்தின் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 259 ரன் எடுத்து இருந்தது.
இன்று 2-வது நாள் ஆட்டம் நடைபெற்றது. தொடர்ந்து ஆடிய பாகிஸ்தான் 333 ரன்னில் (113.4 ஓவர்) ஆல்அவுட் ஆனது. கேப்டன் ஷான் மசூத் 87 ரன்னும், சவுத் சகீல் 66 ரன்னும், அப்துல்லா ஷபிக் 57 ரன்னும் எடுத்தனர். தென் ஆப்பிரிக்க சுழற்பந்து வீரர் கேசவ் மகாராஜ் 7 விக்கெட் வீழ்த்தினார்.
- பாகிஸ்தான்-தென்ஆப்பிரிக்கா இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கிய நிலையில் ரிஸ்வான் நீக்கப்பட்டு உள்ளார்.
- ஒரு நாள் தொடர் நவம்பர் 4-ந்தேதி தொடங்குகிறது.
பாகிஸ்தான் ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டனாக விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் முகமது ரிஸ்வான் செயல்பட்டு வந்தார். இந்த நிலையில் அவரை நீக்கிவிட்டு அப்ரிடியை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கேப்டனாக நியமித்து உள்ளது.
கேப்டன் பதவியில் இருந்து ரிஸ்வான் நீக்கப்பட்டதற்கான காரணம் குறித்து எந்தவொரு தகவலும் வெளியிடப்படவில்லை. அணியின் பயிற்சியாளர் மைக் ஹெசன், தேர்வுக்குழு உறுப்பினர்கள் உள்ளிட்டவர்கள் பங்கேற்ற கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
பாகிஸ்தான்-தென்ஆப்பிரிக்கா இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கிய நிலையில் ரிஸ்வான் நீக்கப்பட்டு உள்ளார். அப்ரிடியும் இந்த டெஸ்டில் ஆடி வருகிறார்.
பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வரும் தென் ஆப்பிரிக்கா டெஸ்ட் தொடருக்கு பிறகு மூன்று 20 ஓவர் ஆட்டத்திலும், 3 ஒரு நாள் போட்டிகளிலும் விளையாடுகிறது.
ஒரு நாள் தொடர் நவம்பர் 4-ந்தேதி தொடங்குகிறது. இந்த தொடரில் 25 வயதான வேகப்பந்து வீச்சாளர் ஷகீன்ஷா அப்ரிடி கேப்டனாக செயல்படுவார்.
இதற்கு முன்பு கடந்த 2024-ல் 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் பாகிஸ்தானை அவர் வழிநடத்தி உள்ளார். மொத்தம் 66 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 131 விக்கெட்டுகளை அப்ரிடி கைப்பற்றி உள்ளார்.
- குர்பாஸ் அதிகபட்சமாக 37 ரன்கள் சேர்த்தார்.
- ஜிம்பாப்வே வீரர் பிராட் எவன்ஸ் 5 விக்கெட் சாய்த்தார்.
ஜிம்பாப்வே- ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஒரே ஒரு டெஸ்ட் போட்டி ஹராரேயில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற ஜிம்பாப்வே பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் களம் இறங்கிய ஆப்கானிஸ்தான் ஜிம்பாப்வேயின் பந்துவீச்சை தாக்குப் பிடிக்க முடியாமல் முதல் இன்னிங்சில் 127 ரன்களில் சுரண்டது. தொடக்க வீரர் இப்ராஹிம் ஜத்ரன் 19 ரண்களும் அப்துல் மாலிக் 30 ரன்களும் அடித்தனர். அதன்பின் வந்த குர்பாஸ் 37 ரன்கள் சேர்த்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தனர்.
ஜிம்பாப்வே அணியின் பிராட் எவன்ஸ் ஐந்து விக்கெட் வீழ்த்தி அசத்தினார். முசாரபானி 3 விக்கெட் வீழ்த்தினார்.
பின்னர் ஜிம்பாவே அணி முதல் இன்னிங்சில் பேட்டிங் செய்து வருகிறது. அந்த அணி 9 ரன்கள் எடுப்பதற்குள் பிரையன் பென்னெட்டை இழந்தது. அவர் 6 ரன்களில் ஷியாவுர் ரகுமான் பந்தில் ஆட்டம் இழந்தார்.
- பாகிஸ்தான் கேப்டன் மசூத் 87 ரன்னில் ஆட்டமிழந்தார்.
- தென் ஆப்பிரிக்கா தரப்பில் மகாராஜ், ஹார்மர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
தென் ஆப்பிரிக்கா அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட், 3 டி20, 3 ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. முதலில் டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் டெஸ்டில் பாகிஸ்தான் வெற்றி பெற்றது.
இதனையடுத்து இரு அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
அதன்படி பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர்களாக அப்துல்லா ஷஃபீக்- இமாம் களமிறங்கினர். இதில் இமாம் 17 ரன்னில் ஆட்டமிழந்தார். அதனை தொடர்ந்து கேப்டன் மசூத் - அப்துல்லா இருவரும் ஜோடி சேர்ந்து சிறப்பான விளையாடி அரை சதம் அடித்தனர்.
அப்துல்லா 57 ரன் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார். பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் களமிறங்கிய பாபர் அசாம் 16 ரன்கள் எடுத்த போது மகாராஜ் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார்.
அதனை தொடர்ந்து சவுத் சகீல்- மசூத் ஜோடி சேர்ந்து நிதானமாக விளையாடினர். சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட மசூத் 87 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ரிஸ்வான் 19 ரன்னில் வெளியேறினார்.
இதனால் பாகிஸ்தான் அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 259 ரன்கள் எடுத்திருந்தது. தென் ஆப்பிரிக்கா தரப்பில் மகாராஜ், ஹார்மர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
- ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் நிதிஷ் ரெட்டி அறிமுகமானார்.
- நிதிஷ் குமார் 19 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இந்திய அணி, 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுவதற்காக ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இந்த தொடருக்கான இந்திய அணியில் ஆல் ரவுண்டர் நிதிஷ் குமார் இடம் பெற்றார்.
இந்நிலையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் அவர் ஆடும் லெவனில் இடம் பெற்றார். இதன்மூலம் ODI கிரிக்கெட்டில் அறிமுகமான நிதிஷ் ரெட்டிக்கு இந்திய அணியின் முன்னாள் கேப்டன் ரோகித் சர்மா புகழாரம் சூட்டி வரவேற்றார்.
அதில் ரோகித் கூறியதாவது:-
கேப் எண் 260, நிதிஷ் ரெட்டி, ODI கிளப்புக்கு வரவேற்கிறோம். "நிதிஷ் ரெட்டி.. இந்திய அணியில் நீங்கள் நீண்ட தூரம் செல்வீர்கள் என 110% எனக்கு நம்பிக்கை உள்ளது. அனைத்து ஃபார்மேட்டிலும் சிறந்த வீரராக நீங்கள் நிச்சயம் வளர்வீர்கள்.
என கூறினார்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் நிதிஷ் குமார் 19 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் பாபர் அசாம் 16 ரன்னில் ஆட்டமிழந்தார்.
- 16 ரன்கள் எடுத்த போது மகாராஜ் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார்.
தென் ஆப்பிரிக்கா அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட், 3 டி20, 3 ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. முதலில் டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் டெஸ்டில் பாகிஸ்தான் வெற்றி பெற்றது.
இதனையடுத்து இரு அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
அதன்படி பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர்களாக அப்துல்லா ஷஃபீக்- இமாம் களமிறங்கினர். இதில் இமாம் 17 ரன்னில் ஆட்டமிழந்தார். அதனை தொடர்ந்து கேப்டன் மசூத் - அப்துல்லா இருவரும் ஜோடி சேர்ந்து சிறப்பான விளையாடி அரை சதம் அடித்தனர். அப்துல்லா 57 ரன் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார்.
இதனையடுத்து பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் பாபர் அசாம் களமிறங்கினார். சற்று தடுமாறினாலும் பின்னர் சிறப்பாக ஆடினார். அவர் 16 ரன்கள் எடுத்த போது மகாராஜ் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். அவர் அவட் ஆனதும் சுற்றியிருந்த ரசிகர்கள் கவலையுடன் சோகத்துடன் காணப்பட்டனர்.
அவர் டெஸ்டில் சதம் அடித்து கிட்டத்தட்ட 1000 நாட்கள் மேல் ஆகிவிட்டது. பாபர் அசாம் டெஸ்ட் போட்டியில் கடைசியாக சதம் அடித்தது 2022 டிசம்பர் 26 அன்று, நியூசிலாந்துக்கு எதிராக கராச்சியில் நடந்த போட்டியில் 161 ரன்கள் எடுத்தார்.
அன்றிலிருந்து அவர் டெஸ்ட் சதம் அடிக்கவில்லை. 2025 அக்டோபர் வரை அவரது அதிகபட்ச ஸ்கோர் 81 மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.
- இங்கிலாந்து 20 ஓவரில் 4 விக்கெட்டுகளை இழந்து 236 ரன்கள் எடுத்தது
- இங்கிலாந்து தரப்பில் ஆதில் ரஷித் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இங்கிலாந்து அணி டி20, ஒருநாள் தொடரில் விளையாடுவதற்காக நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. முதலில் டி20 தொடர் நடைபெற்று வருகிறது.
இரு அணிகளுக்கு இடையேயான 2-வது டி20 போட்டி இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் ஆடிய இங்கிலாந்து அணி ஹாரி ப்ரூக்- சால்ட் ஜோடியின் அதிரடியால் 20 ஓவரில் 4 விக்கெட்டுகளை இழந்து 236 ரன்கள் எடுத்தது. ப்ரூக் 35 பந்தில் 78 ரன்களும் சால்ட் 56 பந்தில் 85 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
இதனையடுத்து களமிறங்கிய நியூசிலாந்து அணியில் 4 பேர் மட்டுமே இரட்டை இலக்க ரன்களை எடுத்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்தனர். இதனால் நியூசிலாந்து அணி 18 ஓவரில் 171 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இங்கிலாந்து தரப்பில் ஆதில் ரஷித் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
- ஃபார்ம் என்பது விராட் கோலிக்கு வெறும் வார்த்தையாகும்.
- அவருடன் இந்திய அணியில் விளையாடும் வாய்ப்பு கிடைத்தது எனக்கு ஆசிர்வாதமாகும்.
ஆஸ்திரேலியா- இந்தியா அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி பெர்த்தில் நடந்தது. மழையால் 26 ஓவர்களாக நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் விளையாடிய இந்தியா 136 ரன்கள் மட்டுமே எடுத்தது. அடுத்ததாக டிஎல்எஸ் விதிமுறைப்படி 26 ஓவரில் ஆஸ்திரேலியாவுக்கு 131 ரன்கள் இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டது. அதைத் துரத்திய ஆஸ்திரேலியா 21.1 ஓவரிலேயே வெற்றி பெற்றது.
முன்னதாக அந்தப் போட்டியில் 224 நாட்கள் கழித்து விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் இந்தியாவுக்காக விளையாடியது ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. அந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் ரோகித் சர்மா 8 ரன்னிலும் விராட் கோலி டக் அவுட்டாகி ஏமாற்றத்தைக் கொடுத்தார். அதனால் 7 மாதங்களுக்குப் பின் விளையாடும் அவர்கள் ஃபார்மை இழந்து விட்டார்களா என்ற விமர்சனங்கள் எழுந்துள்ளது.
இந்நிலையில் விராட் கோலி போன்றவருக்கு ஃபார்ம் என்பது வெறும் வார்த்தை மட்டுமே என்று இந்திய வீரர் அர்ஷ்தீப் சிங் தெரிவித்துள்ளார்.
இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு:-
ஃபார்ம் என்பது விராட் கோலிக்கு வெறும் வார்த்தையாகும். ஏனெனில் இந்தியாவுக்காக 300-க்கும் மேற்பட்ட ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள அவருக்கு எப்படி தொடர்ந்து செல்ல வேண்டும் என்பது தெரியும். அவருடன் இந்திய அணியில் விளையாடும் வாய்ப்பு கிடைத்தது எனக்கு ஆசிர்வாதமாகும்.
முன்னோக்கி செல்கையில் இத்தொடரில் அவர் நிறைய ரன்கள் அடிப்பார்கள் என்று நான் கருதுகிறேன். ஒருநாள் கிரிக்கெட்டில் அவர் மாஸ்டராக செயல்பட்டுள்ளார். அதைப்பற்றி அவர் என்ன நினைக்கிறார் என்பதை வேண்டுமானால் அடுத்த செய்தியாளர்கள் சந்திப்பில் நீங்கள் கேளுங்கள்.
என்று அர்ஷ்தீப் சிங் கூறினார்.
- இங்கிலாந்து வீரர்கள் ப்ரூக் 35 பந்தில் 78 ரன்களும் சால்ட் 56 பந்தில் 85 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
- இங்கிலாந்து 20 ஓவரில் 4 விக்கெட்டுகளை இழந்து 235 ரன்கள் எடுத்தது.
இங்கிலாந்து அணி டி20, ஒருநாள் தொடரில் விளையாடுவதற்காக நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. முதலில் டி20 தொடர் நடைபெற்று வருகிறது.
இரு அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி மழை காரணமாக தடைப்பட்டது. இந்நிலையில் 2-வது டி20 இன்று நடந்தது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்களாக பில் சால்ட்- பட்லர் களமிறங்கினர். பட்லர் 4 ரன்னிலும் பெத்தெல் 24 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.
இதனையடுத்து கேப்டன் ஹாரி ப்ரூக்- சால்ட் ஜோடி சேர்ந்து நியூசிலாந்து அணியின் பந்து வீச்சை நாலாபுறமும் பறக்க விட்டனர். இதனால் அணியின் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது.
இருவரும் அரை சதம் அடித்து அசத்தினர். அதிரடியாக விளையாடிய ப்ரூக் 35 பந்தில் 78 ரன்களும் சால்ட் 56 பந்தில் 85 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
இதனையடுத்து வந்த வீரர்கள் சாம் கரன், டாம் பான்டன் அவர்கள் பங்குக்கு அதிரடியாக விளையாடினர். இறுதியில் இங்கிலாந்து 20 ஓவரில் 4 விக்கெட்டுகளை இழந்து 236 ரன்கள் எடுத்தது.
- இந்த ஆட்டத்தை 42 ஆயிரத்து 423 ரசிகர்கள் நேரில் கண்டுகளித்தனர்.
- சர்வதேச ஒருநாள் போட்டியில் இந்த ஆண்டில் இந்தியாவின் முதல் தோல்வி இதுவாகும்.
ஆஸ்திரேலியா- இந்தியா அணிகள் மோதிய முதல் ஒருநாள் போட்டி நேற்று நடந்தது. இந்த போட்டியில் அடிக்கடி மழை குறுக்கிட்டதால் போட்டி 26 ஓவர்களாக குறைக்கப்பட்டது. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 26 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 136 ரன்கள் எடுத்தது.
இதனையடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி, 21.1 ஓவரில் 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 131 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரில் ஆஸ்திரேலியா 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இரு அணிகளுக்கு இடையேயான 2-வது ஒருநாள் போட்டி 23-ந் தேதி நடக்கவுள்ளது.
இந்நிலையில் இந்த போட்டி நடைபெற்ற மைதானத்தில் மழையால் ஆடுகளம் தார்ப்பாயால் மூடப்பட்ட நிகழ்வு இப்போது தான் முதல்முறையாக நடந்துள்ளது.
இந்த ஆட்டத்தை 42 ஆயிரத்து 423 ரசிகர்கள் நேரில் கண்டுகளித்தனர். பெர்த் ஆப்டஸ் ஸ்டேடியம் புதிதாக கட்டப்பட்டு 2018-ம் ஆண்டு திறக்கப்பட்ட பிறகு இங்கு மழையால் ஆடுகளம் தார்ப்பாயால் மூடப்பட்ட நிகழ்வு இப்போது தான் முதல்முறையாக நடந்துள்ளது.
சர்வதேச ஒருநாள் போட்டியில் இந்த ஆண்டில் இந்தியாவின் முதல் தோல்வி இதுவாகும். ஏற்கனவே 8 ஆட்டங்களில் தொடர்ச்சியாக வெற்றி பெற்றிருந்தது.






