என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    • பாகிஸ்தான் ராணுவத்தினர் தாக்குதலில் ஆப்கானிஸ்தானில் மூன்று உள்ளூர் கிரிக்கெட் வீரர்கள் பலியானார்கள்.
    • இதனால் முத்தரப்பு போட்டியில் இருந்து விலகுவதாக ஆப்கானிஸ்தான் அறிவித்தது.

    லாகூர்:

    பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், இலங்கை ஆகிய 3 நாடுகள் இடையிலான 20 ஓவர் கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் 17-ந்தேதி முதல் 29-ந்தேதி வரை ராவல்பிண்டி, லாகூரில் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது.

    இதற்கிடையே, பாகிஸ்தான் ராணுவத்தினர் எல்லை தாண்டி நடத்திய வான்வெளி தாக்குதலில் ஆப்கானிஸ்தானில் மூன்று உள்ளூர் கிரிக்கெட் வீரர்கள் பலியானார்கள். இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த ஆப்கானிஸ்தான், முத்தரப்பு போட்டியில் இருந்து விலகுவதாகவும் அறிவித்தது.

    இந்த நிலையில் ஆப்கானிஸ்தான் அணி விலகியதால் அதற்கு பதிலாக ஜிம்பாப்வே அணி சேர்க்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. இதன் தொடக்க ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி, ஜிம்பாப்வேயை அடுத்த மாதம் 17-ந்தேதி எதிர்கொள்கிறது.

    • டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங் தேர்வு செய்தது.
    • அதன்படி, முதலில் ஆடிய இங்கிலாந்து 288 ரன்கள் எடுத்தது.

    இந்தூர்:

    13-வது மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகளும் தங்களுக்குள் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும்.

    இந்நிலையில், இந்தூரில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதின. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 288 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் ஹீதர் நைட் சிறப்பாக ஆடி சதமடித்து 109 ரன்கள் எடுத்தார். எமி ஜோன்ஸ் அரை சதம் கடந்து 56 ரன்கள் எடுத்தார்.

    இந்தியா சார்பில் தீப்தி சர்மா 4 விக்கெட்டும், ஸ்ரீ சரனி 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 289 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. ஸ்மிருதி மந்தனா, ஹர்மன்பிரித் கவுர், தீப்தி சர்மா அரை சதம் கடந்தனர்.

    இறுதியில் இந்திய அணி 6 விக்கெட்டுக்கு 284 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் இங்கிலாந்து அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது. புள்ளிப் பட்டியலில் 2வது இடத்துக்கு முன்னேறிய இங்கிலாந்து அரையிறுதிக்கு தகுதிபெற்றது.

    • சமூக வலைத்தளத்தில் இருவரும் அடிக்கடி படங்கனை பரிமாறிக் கொண்டனர்.
    • விரைவில் இந்தூர் மருமகளாகப் போகிறார் என இசையமைப்பாளர தெரிவித்துள்ளார்.

    இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீராங்கனை ஸ்மிரிதி மந்தனா. 29 வயதான இவர் தற்போது நடைபெற்று வரும் மகளிர் உலக கோப்பை தொடரில் விளையாடி வருகிறார். மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இவர், துணைக் கேப்டனாக உள்ளார்.

    இவரை விரைவில் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக மத்திய பிரதேச மாநிலம் இந்தூரைச் சேர்ந்த மியூசிக் டைரக்டர் பலாஷ் முச்சல் உறுதிப்படுத்தியுள்ளார்.

    பி.டி.ஐ. நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் "ஸ்மிரிதி மந்தனா விரைவில் இந்தூர் மருமகளாக இருக்கிறார். இவ்வளவுதான் சொல்ல முடியும். நான் உங்களுக்கு தலைப்புச் செய்தி கொடுத்துவிட்டேன்" எனத் தெரிவித்துள்ளார். ஆனால், திருமணம் எங்கு நடைபெறும், எப்போதும் நடைபெறும் என்பது குறித்து தெரிவிக்கவில்லை.

    சமீப காலமாக இருவரும் அடிக்கடி சமூக வலைத்தளங்களில் படங்கனை பகிர்ந்து கொண்டனர். இதனால் இருவருடைய தொடர்பு குறித்து வதந்தி பரவி வந்தது. இந்த நிலையில், பலாஷ் முச்சல் இதை உறுதிப்படுத்தியுள்ளார்.

    பலாஷ் முச்சல் தனது சசோதரி பலாக் முச்சல் உடல் இணைந்து பல படங்களுக்கு இசையமைத்துள்ளார்.

    • ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பெர்த் போட்டியில் சுப்மன் கில் கேப்டனாக அறிமுகம் ஆனார்.
    • மழையால் ஆட்டம் 26 ஓவராக குறைக்கப்பட்டு, ஆஸ்திரேலியா 131 இலக்கை எளிதாக எட்டியது.

    இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான முதல் ஒருநாள் போட்டி பெர்த்தில் இன்று நடைபெற்றது. அடிக்கடி மழை குறுக்கீடு செய்ததால் இந்தியா இடைவெளி விட்டுவிட்டு 26 ஓவர்களே விளையாடின. இதில் 9 விக்கெட் இழப்பிற்கு 136 ரன்கள் அடித்தது. ஒரு கட்டத்தில் 16.4 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 52 ரன்கள் எடுத்திருந்தது. அதன்பின் 26 ஓவராக குறைக்கப்பட்டது. 9.2 ஓவரில் 84 ரன்கள் அடித்தது.

    டக்வொர்த் லீவிஸ் விதிப்படி ஆஸ்திரேயாலியாவுக்கு 26 ஓவரில் 131 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. 21.1 ஓவரிலேயே இலக்கை எட்டி ஆஸ்திரேலியா 131 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இந்த போட்டி சுப்பன் கில்லுக்கு கேப்டனாக முதல் போட்டியாகும். முதல் போட்டியிலேயே தோல்வியை சந்தித்துள்ளார். மேலும் டெஸ்ட், ஒருநாள், டி20 என மூன்று வடிவிலான கிரிக்கெட்டிலும் கேப்டனாக முதல் போட்டியில் தோல்வியை சந்தித்த 2ஆவது இந்திய கேப்டன் என்ற மோசமான சாதனையை பதிவு செய்துள்ளார்.

    இதற்கு முன்னதாக விராட் கோலி கேப்டனாக விளையாடிய முதல் போட்டிகளில் தோல்வியை சந்தித்துள்ளார்.

    என்றாலும் பின்னர் விராட் கோலி கேப்டன் காலத்தில் இந்தியா அபாரமான சாதனைகளை படைத்துள்ளது. அதேபோல் சுப்மன் கில் தலைமையின் கீழ் இந்தியா சாதனைகளை படைக்கும் என நம்பிக்கை வைப்போம்.

    • இங்கிலாந்து வீராங்கனை நைட் 109 ரன்கள் விளாசினார்.
    • இந்திய வீராங்கனை தீப்தி சர்மா 4 விக்கெட் வீழ்த்தினார்.

    50 ஓவர் ஐசிசி மகளிர் உலக கோப்பையை இந்தியா நடத்தி வருகிறது. பாகிஸ்தான் விளையாடும் போட்டிகள் மட்டும் இலங்கையில் நடக்கிறது.

    இந்தூரில் இன்று நடைபெற்று வரும் போட்டியில் இந்தியா- இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. இந்த போட்டியில் பெற்றால்தான் அரையிறுதி வாய்ப்பு பிரகாசித்துக் கொள்ள முடியும் என்பதால் வெற்றி பெறும் முனைப்போடு இந்திய வீராங்கனைகள் களம் இறங்கினர்.

    டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங் தேர்வு செய்தது. தொடக்க வீராங்கனை ஏமி ஜோன்ஸ் 68 பந்தில் 56 ரன்கள் விளாசினார். அடுத்து வந்த ஹீதர் நைட் அபாரமாக விளையாடினார். அவர் 91 பந்தில் 15 பவுண்டரி, 1 சிக்சருடன் 109 ரன்கள் விளாசினார். கேப்டன் ஸ்சிவர்-ப்ரன்ட் 49 பந்தில் 38 ரன்கள் அடிக்க இங்கிலாந்து 50 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 288 ரன்கள் குவித்துள்ளது.

    இந்திய அணி சார்பில் தீப்தி சர்மா 10 ஓவரில் 51 ரன்கள் விட்டுக்கொடுத்து 4 விக்கெட் வீழ்த்தினார்.

    • மழை அடிக்கடி குறுக்கீடு செய்ததால் போட்டி 26 ஓவராக குறைக்கப்பட்டது
    • டக்வொர்த் லீவிஸ் விதிப்படி ஆஸ்திரேலியாவுக்கு 131 ரன்க்ள வெற்றி இலக்காக நிர்ணயித்தது.

    இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது.

    இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் மோதும் முதல் ஒருநாள் போட்டி இந்திய நேரப்படி இன்று காலை 9 மணிக்கு பெர்த்தில் தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி இந்தியா முதலில் பேட்டிங் செய்தது. நீண்ட இடைவெளிக்கு பிறகு அணிக்கு திரும்பிய சீனியர் வீரர்களான ரோகித் சர்மா, விராட் கோலி மிகுந்த ஏமாற்றம் அளித்தனர். ரோகித் சர்மா 1 பவுண்டரியுடன் 8 ரன்னில் ஹேசில்வுட் பந்தில் ஆட்டம் இழந்தார். கோலி ரன் எதுவும் எடுக்காமல் ஸ்டார்க் பந்தில் டக் அவுட்டானார். அடுத்து கேப்டன் சுப்மன்கில் 10 ரன்னில் (2 பவுண்டரி), நாதன் எல்லீஸ் பந்தில் அவுட் ஆனார். இந்திய அணி 8.1 ஓவரில் 25 ரன்னில் 3 விக்கெட்டை இழந்து திணறியது.

    அதன்பின் மழை அடிக்கடி குறுக்கீடு செய்தது. 16.4 ஓவரில் மழை குறுக்கீடு செய்தது. அதன்பின் போட்டி 26 ஓவராக குறைக்கப்பட்டது. 16.4 ஓவரில் இந்தியா 4 விக்கெட் இழப்பிற்க 52 ரன் எடுத்திருந்தது.

    கே.எல். ராகுல், அக்சர் படேல் ஆகியோர் ஆட்டத்தை தொடங்கினர். இருவரும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த முயற்சித்தினர். 20ஆவது ஓவரின் கடைசி பந்தில் அக்சர் படேல் ஆட்டமிழந்தார். அவர் 38 பந்தில் 31 ரன்கள் அடித்தார்.

    அடுத்து வந்த வாஷிங்டன் சுந்தர் 10 பந்தில் 10 ரன்கள் எடுத்து வெளியேறினார். மறுமுனையில் கே.எல். ராகுல் 31 பந்தில் 38 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். நிதிஷ் குமார் ரெட்டி 11 பந்தில் 19 ரன்கள் அடிக்க இந்தியா 26 ஓவரில் 136 ரன்கள் எடுத்துள்ளது. டக்வொர்த் லீவிஸ் விதிப்படி ஆஸ்திரேலியாவுக்கு 131 ரன்க்ள வெற்றி இலக்காக நிர்ணயித்தது.

    இதனையடுத்து ஆடிய ஆஸ்திரேலிய அணி 21.1 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 131 ரன்கள் அடித்து வெற்றி பெற்றது. அதிகபட்சமாக மிட்செல் மார்ஸ் 50 ரன்களும் ஜோஷ் பிலிப்பெ 37 ரன்களும் அடித்தனர்.

    இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 1 - 0 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா முன்னிலை பெற்றுள்ளது.

    • 16.4 ஓவரில் மழை குறுக்கீடு செய்ததால், 26 ஓவராக ஆட்டம் குறைப்பு.
    • கே.எல். ராகுல், அக்சர் படேல், நிதிஷ் குமார் ரெட்டி ஆட்டத்தால் இந்தியா 136 ரன்கள் சேர்த்தது.

    இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது.

    இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் மோதும் முதல் ஒருநாள் போட்டி இந்திய நேரப்படி இன்று காலை 9 மணிக்கு பெர்த்தில் தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி இந்தியா முதலில் பேட்டிங் செய்தது. நீண்ட இடைவெளிக்கு பிறகு அணிக்கு திரும்பிய சீனியர் வீரர்களான ரோகித் சர்மா, விராட் கோலி மிகுந்த ஏமாற்றம் அளித்தனர். ரோகித் சர்மா 1 பவுண்டரியுடன் 8 ரன்னில் ஹேசில்வுட் பந்தில் ஆட்டம் இழந்தார். கோலி ரன் எதுவும் எடுக்காமல் ஸ்டார்க் பந்தில் டக் அவுட்டானார். அடுத்து கேப்டன் சுப்மன்கில் 10 ரன்னில் (2 பவுண்டரி), நாதன் எல்லீஸ் பந்தில் அவுட் ஆனார். இந்திய அணி 8.1 ஓவரில் 25 ரன்னில் 3 விக்கெட்டை இழந்து திணறியது.

    அதன்பின் மழை அடிக்கடி குறுக்கீடு செய்தது. 16.4 ஓவரில் மழை குறுக்கீடு செய்தது. அதன்பின் போட்டி 26 ஓவராக குறைக்கப்பட்டது. 16.4 ஓவரில் இந்தியா 4 விக்கெட் இழப்பிற்க 52 ரன் எடுத்திருந்தது.

    கே.எல். ராகுல், அக்சர் படேல் ஆகியோர் ஆட்டத்தை தொடங்கினர். இருவரும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த முயற்சித்தினர். 20ஆவது ஓவரின் கடைசி பந்தில் அக்சர் படேல் ஆட்டமிழந்தார். அவர் 38 பந்தில் 31 ரன்கள் அடித்தார்.

    அடுத்து வந்த வாஷிங்டன் சுந்தர் 10 பந்தில் 10 ரன்கள் எடுத்து வெளியேறினார். மறுமுனையில் கே.எல். ராகுல் 31 பந்தில் 38 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். நிதிஷ் குமார் ரெட்டி 11 பந்தில் 19 ரன்கள் அடிக்க இந்தியா 26 ஓவரில் 136 ரன்கள் எடுத்துள்ளது. டக்வொர்த் லீவிஸ் விதிப்படி ஆஸ்திரேலியாவுக்கு 131 ரன்க்ள வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.

    • ரோகித் சர்மா 1 பவுண்டரியுடன் 8 ரன்னில் ஹேசல்வுட் பந்தில் ஆட்டம் இழந்தார்.
    • கோலி ரன் எதுவும் எடுக்காமல் ஸ்டார்க் பந்தில் டக் அவுட்டானார்.

    இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது.

    இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் முதல் ஒருநாள் போட்டி இந்திய நேரப்படி இன்று காலை 9 மணிக்கு பெர்த்தில் தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

    நீண்ட இடைவெளிக்கு பிறகு ஆடிய சீனியர் வீரர்களான ரோகித் சர்மா, வீராட் கோலி மிகுந்த ஏமாற்றம் அளித்தனர். ரோகித் சர்மா 1 பவுண்டரியுடன் 8 ரன்னில் ஹேசல்வுட் பந்தில் ஆட்டம் இழந்தார். கோலி ரன் எதுவும் எடுக்காமல் ஸ்டார்க் பந்தில் டக் அவுட்டானார்.

    அடுத்து கேப்டன் சுப்மன்கில் 10 ரன்னில் (2 பவுண்டரி), நாதன் எல்லீஸ் பந்தில் அவுட் ஆனார். இந்திய அணி 8.1 ஓவரில் 25 ரன்னில் 3 விக்கெட்டை இழந்து திணறியது.

    4-வது விக்கெட்டுக்கு ஸ்ரேயாஸ் அய்யருடன் அக்ஷர் படேல் ஜோடி சேர்ந்தார். இந்திய அணி 8.5 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 25 ரன் எடுத்து இருந்த போது மழையால் ஆட்டம் சிறிது பாதிக்கப்பட்டது. இதனால் ஆட்டம் 49 ஓவர்களாக குறைக்கப் பட்டது. அதாவது ஒரு ஓவர் குறைக்கப்பட்டது.

    இந்திய அணி 11.5 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 37 ரன் எடுத்த போது ஆட்டம் மீண்டும் மழையால் தடைபட்டது. மழை நின்ற நிலையில், தற்போது மீண்டும் ஆட்டம் தொடங்கியுள்ளது. இதனால் ஆட்டம் 35 ஓவர்களாக குறைக்கப் பட்டது.

    ஆட்டம் தொடங்கியவுடன் ஸ்ரேயாஸ் 11 ரன்னில் ஹேசல்வுட் பந்தில் ஆட்டம் இழந்தார். இந்திய அணி 14.2 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 46 ரன்கள் எடுத்திருந்த நிலையில் மீண்டும் மழை குறுக்கிட்டது.

    இதனால் மீண்டும் போட்டி தொடங்கிய நிலையில் ஆட்டம் 32 ஓவர்களாக குறைக்கப் பட்டது. ஆனால் மழை மேலும் குறுக்கீடு செய்ய ஆட்டம் தற்போது 26 ஓவர்களாக குறைக்கப்பட்டுள்ளது.

    • இந்திய அணி 11.5 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 37 ரன் எடுத்த போது ஆட்டம் மீண்டும் மழையால் தடைபட்டது.
    • ஆட்டம் தொடங்கியவுடன் ஸ்ரேயாஸ் 11 ரன்னில் ஹேசல்வுட் பந்தில் ஆட்டம் இழந்தார்.

    இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது.

    இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் முதல் ஒருநாள் போட்டி இந்திய நேரப்படி இன்று காலை 9 மணிக்கு பெர்த்தில் தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

    நீண்ட இடைவெளிக்கு பிறகு ஆடிய சீனியர் வீரர்களான ரோகித் சர்மா, வீராட் கோலி மிகுந்த ஏமாற்றம் அளித்தனர். ரோகித் சர்மா 1 பவுண்டரியுடன் 8 ரன்னில் ஹேசல்வுட் பந்தில் ஆட்டம் இழந்தார். கோலி ரன் எதுவும் எடுக்காமல் ஸ்டார்க் பந்தில் டக் அவுட்டானார்.

    அடுத்து கேப்டன் சுப்மன்கில் 10 ரன்னில் (2 பவுண்டரி), நாதன் எல்லீஸ் பந்தில் அவுட் ஆனார். இந்திய அணி 8.1 ஓவரில் 25 ரன்னில் 3 விக்கெட்டை இழந்து திணறியது.

    4-வது விக்கெட்டுக்கு ஸ்ரேயாஸ் அய்யருடன் அக்ஷர் படேல் ஜோடி சேர்ந்தார். இந்திய அணி 8.5 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 25 ரன் எடுத்து இருந்த போது மழையால் ஆட்டம் சிறிது பாதிக்கப்பட்டது. இதனால் ஆட்டம் 49 ஓவர்களாக குறைக்கப் பட்டது. அதாவது ஒரு ஓவர் குறைக்கப்பட்டது.

    இந்திய அணி 11.5 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 37 ரன் எடுத்த போது ஆட்டம் மீண்டும் மழையால் தடைபட்டது. மழை நின்ற நிலையில், தற்போது மீண்டும் ஆட்டம் தொடங்கியுள்ளது. இதனால் ஆட்டம் 35 ஓவர்களாக குறைக்கப் பட்டது.

    ஆட்டம் தொடங்கியவுடன் ஸ்ரேயாஸ் 11 ரன்னில் ஹேசல்வுட் பந்தில் ஆட்டம் இழந்தார். இதனையடுத்து மழை குறுக்கிட்டதால் மீண்டும் ஆட்டம் தடைபட்டது. தற்போது இந்திய அணி 14.2 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 46 ரன்கள் எடுத்துள்ளது.

    • இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் முதல் ஒருநாள் போட்டி இன்று தொடங்கியது.
    • ரோகித் சர்மா 1 பவுண்டரியுடன் 8 ரன்னில் ஹேசல்வுட் பந்தில் ஆட்டம் இழந்தார்.

    இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது.

    இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் முதல் ஒருநாள் போட்டி இந்திய நேரப்படி இன்று காலை 9 மணிக்கு பெர்த்தில் தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

    நீண்ட இடைவெளிக்கு பிறகு ஆடிய சீனியர் வீரரான ரோகித் சர்மா 1 பவுண்டரியுடன் 8 ரன்னில் ஹேசல்வுட் பந்தில் ஆட்டம் இழந்தார்.

    இந்த போட்டியில் விளையாடும் ரோஹித் சர்மா, 500ஆவது சர்வதேச போட்டியில் விளையாடும் 5ஆவது இந்திய வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.

    • டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது
    • மழை குறுக்கிட்டதால் ஆட்டம் தடைபட்டது

    இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது.

    இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் முதல் ஒருநாள் போட்டி இந்திய நேரப்படி இன்று காலை 9 மணிக்கு பெர்த்தில் தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

    நீண்ட இடைவெளிக்கு பிறகு ஆடிய சீனியர் வீரர்களான ரோகித் சர்மா, வீராட் கோலி மிகுந்த ஏமாற்றம் அளித்தனர். ரோகித் சர்மா 1 பவுண்டரியுடன் 8 ரன்னில் ஹேசல்வுட் பந்தில் ஆட்டம் இழந்தார். கோலி ரன் எதுவும் எடுக்காமல் ஸ்டார்க் பந்தில் டக் அவுட்டானார்.

    அடுத்து கேப்டன் சுப்மன்கில் 10 ரன்னில் (2 பவுண்டரி), நாதன் எல்லீஸ் பந்தில் அவுட் ஆனார். இந்திய அணி 8.1 ஓவரில் 25 ரன்னில் 3 விக்கெட்டை இழந்து திணறியது.

    4-வது விக்கெட்டுக்கு ஸ்ரேயாஸ் அய்யருடன் அக்ஷர் படேல் ஜோடி சேர்ந்தார். இந்திய அணி 8.5 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 25 ரன் எடுத்து இருந்த போது மழையால் ஆட்டம் சிறிது பாதிக்கப்பட்டது. இதனால் ஆட்டம் 49 ஓவர்களாக குறைக்கப் பட்டது. அதாவது ஒரு ஓவர் குறைக்கப்பட்டது.

    இந்திய அணி 11.5 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 37 ரன் எடுத்த போது ஆட்டம் மீண்டும் மழையால் தடை பட்டது. மழை நின்ற நிலையில், தற்போது மீண்டும் ஆட்டம் தொடங்கியுள்ளது. இதனால் ஆட்டம் 35 ஓவர்களாக குறைக்கப் பட்டது.

    • ஆசிய கோப்பையில் பாகிஸ்தான் வீரர்களுக்கு இந்திய வீரர்கள் கை குலுக்க மறுத்தனர்.
    • இந்த நிகழ்வை கிண்டல் செய்யும் வகையில் ஆஸ்திரேலியா வீரர்கள் சைகை செய்து காட்டினர்.

    ஆசிய கோப்பை கிரிக் கெட் போட்டி சமீபத்தில் ஐக்கிய அரபு எமிரேட்சில் நடைபெற்றது. இதில் சூர்ய குமார் யாதவ் தலைமை யிலான இந்திய அணி சாம்பியன் பட்டம் பெற்றது. இந்தப் போட்டித் தொடரில் இந்திய அணி 3 முறையும் பாகிஸ்தானை தோற்கடித்து இருந்தது.

    ஆசிய கோப்பை கிரிக் கெட்டில் பாகிஸ்தான் வீரர் களுடன் இந்திய வீரர்கள் கைகுலுக்க மறுத்துவிட்ட னர். பகல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு எதிரொலி யாக இந்திய வீரர்கள் இந்த முடிவை எடுத்தனர். போட்டி முடிந்த பிறகு இரு அணி வீரர்களும் கைகுலுக் குவது வாடிக்கையானது. ஆனால் கைகுலுக்கும் நிகழ்வை இந்தியா புறக் கணித்து விட்டது. இது மிகுந்த சர்ச்சையை ஏற் படுத்தியது.

    மேலும் ஆசிய கோப் பையை பாகிஸ்தான் கிரிக் கெட் வாரிய தலைவரும், அந்நாட்டு மந்திரியுமான மோஷின் நக்வியிடம் இருந்து வாங்க சூர்யகுமார் யாதவ் மறுத்து விட்டார்.

    இதற்கிடையே பாகிஸ் தானுக்கு எதிராக இந்திய வீரர்கள் கைகுலுக்காததை வைத்து ஆஸ்திரேலிய வீரர், வீராங்கனைகள் பங்கேற்ற கேலி வீடியோ ஒன்று வெளியானது. இந்தியா-ஆஸ்தி ரேலியா ஒருநாள் தொடரை யொட்டி இந்த விளம்பர வீடியோவை கயோ ஸ்போர்ட்ஸ் வெளியிட்டது.

    அந்த வீடியோவில், வர்ணனையாளர் இயன் ஹிக்கின்ஸ், இந்திய வீரர்களின் "மிகப்பெரிய பலவீனம்" என்று கூறி, கை குலுக்காத விஷயத்தைக் குறிப்பிடுகிறார். அதைத் தொடர்ந்து, ஆஸ்திரேலிய வீரர்களான ஜோஷ் ஹேசில்வுட், மிட்ச் மார்ஷ், கிளென் மேக்ஸ்வெல், அலிசா ஹீலி, அலானா கிங் மற்றும் சோஃபி மோலினக்ஸ் ஆகியோர், கை குலுக்கலுக்குப் பதிலாக என்னென்ன 'வாழ்த்துக்களை' தெரிவிக்கலாம் என்று தங்களது பாணியில் செய்து காட்டுகின்றனர்.

    அப்போது ஆஸ்திரேலிய மகளிர் அணி வீராங்கனை சோஃபி மோலினக்ஸ், தனது இரண்டு நடுவிரல்களையும் கேமராவை நோக்கிக் காட்டி, 'bras d'honneur' எனப்படும் இத்தாலிய சைகையையும் செய்தார். இது மிக மோசமான சைகையாகும்.

    மற்றொரு வீரரான ஜோஷ் ஹேசில்வுட், துப்பாக்கியால் சுடுவது போன்ற சைகையைச் செய்தது, மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கிளென் மேக்ஸ்வெல், ஆலிசா ஹீலி. மிட்செல் மார்ஷ் போன்ற மற்ற வீரர்கள் தங்கள் பங்குக்கு கேலி செய்யும் வகையில் சில சைகைகளை செய்து இப்படிதான் இந்திய அணிக்கு கைகுலுக்காமல் வித்தியாசமான வரவேற்பை அளிக்கலாம் என கூறினர்.

    இந்த வீடியோ வெளியான சில நிமிடங்களிலேயே, இந்திய ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பொங்கி எழுந்தனர். இந்திய ரசிகர்களின் கடும் எதிர்ப்பைத் தொடர்ந்து, 'காயோ ஸ்போர்ட்ஸ்' தளம், அந்த சர்ச்சைக்குரிய வீடியோவை சமூக வலைதளப் பக்கங்களிலிருந்தும் உடனடியாக நீக்கியது.

    இந்நிலையில் இந்த கேலி வீடியோ குறித்து ஆஸ்திரேலிய கேப்டன் மிச் சேல் மார்ஷ் மவுனம் கலைத்துள்ளார். இது தொடர்பாக அவரிடம் நேற்று நிருபர்கள் கேள்வி எழுப்பினார்கள். இதற்கு பதில் அளித்து பேசிய மார்ஷ், "நான் உண்மையில் அந்த விளம்பரத்தை பார்க்க வில்லை. அதில் பிரச்சினை உள்ளதா? என்று எனக்கு தெரியவில்லை. அதைப்பற்றி நான் கருத்து தெரிவிக்க வேண்டியது இல்லை.

    இந்தியா-ஆஸ்திரேலியா வீரர்கள், ரசிகர்கள் இடை யே ஒரு சிறப்பு பெற்றதாக இந்த தொடர் இருக்கும். இந்த தொடரின் 3 ஆட்டத்துக்கு 1.75 லட்சம் டிக்கெட்டுகள் விற்று விட்டதாக கூறப்படுகிறது. வீராட் கோலி, ரோகித் சர்மா ஆஸ்திரேலியாவில் விளையாடும் கடைசி போட்டி என்பதால் ரசிகர் களின் எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கிறது" என்று தெரிவித்தார்.

    ×