என் மலர்
கிரிக்கெட் (Cricket)

ஸ்மிரிதி மந்தனாவுக்கு விரைவில் திருமணம்: இசையமைப்பாளரை கரம் பிடிக்கிறார்..!
- சமூக வலைத்தளத்தில் இருவரும் அடிக்கடி படங்கனை பரிமாறிக் கொண்டனர்.
- விரைவில் இந்தூர் மருமகளாகப் போகிறார் என இசையமைப்பாளர தெரிவித்துள்ளார்.
இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீராங்கனை ஸ்மிரிதி மந்தனா. 29 வயதான இவர் தற்போது நடைபெற்று வரும் மகளிர் உலக கோப்பை தொடரில் விளையாடி வருகிறார். மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இவர், துணைக் கேப்டனாக உள்ளார்.
இவரை விரைவில் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக மத்திய பிரதேச மாநிலம் இந்தூரைச் சேர்ந்த மியூசிக் டைரக்டர் பலாஷ் முச்சல் உறுதிப்படுத்தியுள்ளார்.
பி.டி.ஐ. நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் "ஸ்மிரிதி மந்தனா விரைவில் இந்தூர் மருமகளாக இருக்கிறார். இவ்வளவுதான் சொல்ல முடியும். நான் உங்களுக்கு தலைப்புச் செய்தி கொடுத்துவிட்டேன்" எனத் தெரிவித்துள்ளார். ஆனால், திருமணம் எங்கு நடைபெறும், எப்போதும் நடைபெறும் என்பது குறித்து தெரிவிக்கவில்லை.
சமீப காலமாக இருவரும் அடிக்கடி சமூக வலைத்தளங்களில் படங்கனை பகிர்ந்து கொண்டனர். இதனால் இருவருடைய தொடர்பு குறித்து வதந்தி பரவி வந்தது. இந்த நிலையில், பலாஷ் முச்சல் இதை உறுதிப்படுத்தியுள்ளார்.
பலாஷ் முச்சல் தனது சசோதரி பலாக் முச்சல் உடல் இணைந்து பல படங்களுக்கு இசையமைத்துள்ளார்.






