என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது டெஸ்ட்: முதல் நாள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்த பாகிஸ்தான்
    X

    தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது டெஸ்ட்: முதல் நாள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்த பாகிஸ்தான்

    • பாகிஸ்தான் கேப்டன் மசூத் 87 ரன்னில் ஆட்டமிழந்தார்.
    • தென் ஆப்பிரிக்கா தரப்பில் மகாராஜ், ஹார்மர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

    தென் ஆப்பிரிக்கா அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட், 3 டி20, 3 ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. முதலில் டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் டெஸ்டில் பாகிஸ்தான் வெற்றி பெற்றது.

    இதனையடுத்து இரு அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

    அதன்படி பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர்களாக அப்துல்லா ஷஃபீக்- இமாம் களமிறங்கினர். இதில் இமாம் 17 ரன்னில் ஆட்டமிழந்தார். அதனை தொடர்ந்து கேப்டன் மசூத் - அப்துல்லா இருவரும் ஜோடி சேர்ந்து சிறப்பான விளையாடி அரை சதம் அடித்தனர்.

    அப்துல்லா 57 ரன் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார். பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் களமிறங்கிய பாபர் அசாம் 16 ரன்கள் எடுத்த போது மகாராஜ் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார்.

    அதனை தொடர்ந்து சவுத் சகீல்- மசூத் ஜோடி சேர்ந்து நிதானமாக விளையாடினர். சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட மசூத் 87 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ரிஸ்வான் 19 ரன்னில் வெளியேறினார்.

    இதனால் பாகிஸ்தான் அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 259 ரன்கள் எடுத்திருந்தது. தென் ஆப்பிரிக்கா தரப்பில் மகாராஜ், ஹார்மர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

    Next Story
    ×