என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஜிம்பாப்வே கிரிக்கெட் அணி"

    • குர்பாஸ் அதிகபட்சமாக 37 ரன்கள் சேர்த்தார்.
    • ஜிம்பாப்வே வீரர் பிராட் எவன்ஸ் 5 விக்கெட் சாய்த்தார்.

    ஜிம்பாப்வே- ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஒரே ஒரு டெஸ்ட் போட்டி ஹராரேயில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற ஜிம்பாப்வே பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் களம் இறங்கிய ஆப்கானிஸ்தான் ஜிம்பாப்வேயின் பந்துவீச்சை தாக்குப் பிடிக்க முடியாமல் முதல் இன்னிங்சில் 127 ரன்களில் சுரண்டது. தொடக்க வீரர் இப்ராஹிம் ஜத்ரன் 19 ரண்களும் அப்துல் மாலிக் 30 ரன்களும் அடித்தனர். அதன்பின் வந்த குர்பாஸ் 37 ரன்கள் சேர்த்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தனர்.

    ஜிம்பாப்வே அணியின் பிராட் எவன்ஸ் ஐந்து விக்கெட் வீழ்த்தி அசத்தினார். முசாரபானி 3 விக்கெட் வீழ்த்தினார்.

    பின்னர் ஜிம்பாவே அணி முதல் இன்னிங்சில் பேட்டிங் செய்து வருகிறது. அந்த அணி 9 ரன்கள் எடுப்பதற்குள் பிரையன் பென்னெட்டை இழந்தது. அவர் 6 ரன்களில் ஷியாவுர் ரகுமான் பந்தில் ஆட்டம் இழந்தார்.

    • ஜிம்பாப்வே இரண்டு இன்னிங்சிலும் முறையே 149 ரன்களும், 165 ரன்கள் எடுத்தது.
    • நியூசிலாந்து முதல் இன்னிங்சில் 307 ரன்கள் குவித்தது.

    ஜிம்பாப்வே- நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நேற்று முன்தினம் புலவாயோவில் தொடங்கியது. டாஸ் வென்ற ஜிம்பாப்வே பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் களம் இறங்கிய ஜிம்பாப்வே முதல் இன்னிங்சில் 149 ரன்னில் சுருண்டது. நியூசிலாந்து வீரர் மாட் ஹென்ரி 6 விக்கெட் வீழ்த்தினார். நாதன் ஸ்மித் 3 விக்கெட் கைப்பற்றினார்.

    பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய நியூசிலாந்து 307 ரன்கள் குவித்து ஆல்அவுட் ஆனது. டேவன் கான்வே 88 ரன்களும், டேரில் மிட்செல் 80 ரன்களும் அடித்தனர். 158 ரன்கள் பின்தங்கிய நிலையில் ஜிம்பாப்வே 2ஆவது இன்னிங்சை தொடங்கியது.

    நேற்றைய 2ஆவது நாள் ஆட்ட முடிவில் ஜிம்பாப்வே 2 விக்கெட் இழப்பிற்கு 31 ரன்கள் எடுத்திருந்தது. இன்று 3ஆவது நாள் ஆட்டம் தொடங்கியது. தொடர்ந்து விளையாடிய ஜிம்பாப்வே 165 ரன்னில் ஆல்அவுட் ஆனது. மிட்செல் சான்ட்னெர் 4 விக்கெட்டும் மாட் ஹென்ரி மற்றும் ஓ'ரூர்கே ஆகியோர் தலா 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    ஜிம்பாப்வே 165 ரன்களில் சுருண்டதால், ஒட்டுமொத்தமாக 7 ரன்கள் மட்டுமே முன்னிலை பெற்றது. இதனால் 8 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து 2ஆவது இன்னிங்சில் பேட்டிங் செய்தது. 1 விக்கெட் இழப்பிற்கு 8 ரன்கள் எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    ஜிம்பாப்வே கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக லால்சந்த் ராஜ்புட் நியமனம் செய்யப்பட்டுள்ளார். #LalchandRajput
    ஜிம்பாப்வேயில் கடந்த சில மாதங்களுக்கு முன் உலகக்கோப்பைக்கான தகுதிச் சுற்று நடைபெற்றது. இதில் ஜிம்பாப்வே அணி தோல்வியடைந்து, அடுத்த ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற இருக்கும் உலகக்கோப்பைக்கு தகுதி பெற முடியாமல் போனது.

    இதனால் ஜிம்பாப்வே அணியின் கேப்டன், பயிற்சியாளர்கள் உள்பட பலர் அதிரடியாக நீக்கப்பட்டனர். அதன்பின் கடந்த ஜூன் மாதம் இந்தியாவின் முன்னாள் வீரரான லால்சந்த் ராஜ்புட் இடைக்கால பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார்.



    இந்நிலையில் நிரந்தர தலைமை பயிற்சியாளராக அதிகாரப்பூர்வமாக நியமிக்கப்பட்டுள்ளார். இநதியாவின் முன்னாள் தொடக்க வீரரான லால்சந்த் ராஜ்புட், இந்திய அணியின் பயிற்சியாளராகவும், ஆப்கானிஸ்தான், மும்பை இந்தியன்ஸ் அணியின் பயிற்சியாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.

    செப்டம்பர்-நவம்பர் மாதத்தில் ஜிம்பாப்வே தென்ஆப்பிரிக்கா மற்றும் வங்காள தேசம் சென்று விளையாட இருக்கிறது.
    ×