என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    2-வது டி20 போட்டியில் இங்கிலாந்து ருத்ரதாண்டவம்: நியூசிலாந்துக்கு இமாலய இலக்கு
    X

    2-வது டி20 போட்டியில் இங்கிலாந்து ருத்ரதாண்டவம்: நியூசிலாந்துக்கு இமாலய இலக்கு

    • இங்கிலாந்து வீரர்கள் ப்ரூக் 35 பந்தில் 78 ரன்களும் சால்ட் 56 பந்தில் 85 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
    • இங்கிலாந்து 20 ஓவரில் 4 விக்கெட்டுகளை இழந்து 235 ரன்கள் எடுத்தது.

    இங்கிலாந்து அணி டி20, ஒருநாள் தொடரில் விளையாடுவதற்காக நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. முதலில் டி20 தொடர் நடைபெற்று வருகிறது.

    இரு அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி மழை காரணமாக தடைப்பட்டது. இந்நிலையில் 2-வது டி20 இன்று நடந்தது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்களாக பில் சால்ட்- பட்லர் களமிறங்கினர். பட்லர் 4 ரன்னிலும் பெத்தெல் 24 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

    இதனையடுத்து கேப்டன் ஹாரி ப்ரூக்- சால்ட் ஜோடி சேர்ந்து நியூசிலாந்து அணியின் பந்து வீச்சை நாலாபுறமும் பறக்க விட்டனர். இதனால் அணியின் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது.

    இருவரும் அரை சதம் அடித்து அசத்தினர். அதிரடியாக விளையாடிய ப்ரூக் 35 பந்தில் 78 ரன்களும் சால்ட் 56 பந்தில் 85 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

    இதனையடுத்து வந்த வீரர்கள் சாம் கரன், டாம் பான்டன் அவர்கள் பங்குக்கு அதிரடியாக விளையாடினர். இறுதியில் இங்கிலாந்து 20 ஓவரில் 4 விக்கெட்டுகளை இழந்து 236 ரன்கள் எடுத்தது.

    Next Story
    ×