என் மலர்
கிரிக்கெட் (Cricket)

தென் ஆப்பிரிக்கா ஏ அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர்: ரிஷப் பண்ட் கேப்டனாக நியமனம்
- தென் ஆப்பிரிக்கா ஏ அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு நான்கு நாட்கள் கொண்ட இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது.
- துணை கேப்டனாக தமிழக வீரர் சாய் சுதர்சன் நியமிக்கப்பட்டுள்ளார்.
மும்பை:
இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள தென் ஆப்பிரிக்கா அணி 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இந்த போட்டி நவம்பர் மாதம் 14-ம் தேதி கொல்கத்தாவில் தொடங்குகிறது.
இந்த தொடருக்கு தயாராகும் விதமாக தென் ஆப்பிரிக்கா ஏ அணி தற்போது இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு நான்கு நாட்கள் கொண்ட இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. இதில் முதல் 4 நாள் டெஸ்ட் போட்டி அக்டோபர் 30-ம் தேதி தொடங்குகிறது. 2-வது நான்கு நாள் டெஸ்ட் போட்டி நவம்பர் 6-ம் தேதி நடைபெறுகிறது.
இந்நிலையில் தென் ஆப்பிரிக்கா ஏ அணிக்கு எதிரான இந்திய ஏ அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் காயம் காரணமாக கடந்த சில மாதங்களாக விளையாடாத ரிஷப் பண்ட், தற்போது மீண்டும் திரும்பி இருக்கிறார். இந்த அணியின் கேப்டனாக ரிஷப் பண்ட் நியமிக்கபட்டுள்ளார். இந்த இந்திய ஏ அணியில் சாய் சுதர்சன் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
கடந்த ஜூலை மாதம் மான்செஸ்டரில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான 4-வது டெஸ்ட் போட்டியின் போது காலில் காயம் ஏற்பட்டது. இதன் மூலம் அவர் போட்டியில் பங்கேற்காமல் இருந்தார்.
முதல் நான்கு நாள் போட்டிக்கான இந்திய அணி:-
ரிஷப் பண்ட் (கேப்டன், விக்கெட் கீப்பர்), ஆயுஷ் மாத்ரே, என். ஜெகதீசன் (விக்கெட் கீப்பர்), சாய் சுதர்சன் (துணைக் கேப்டன்), தேவதத் படிக்கல், ரஜத் பட்டிதார், ஹர்ஷ் துபே, தனுஷ் கோடியன், மனவ் சுதர், அன்ஷுல் கம்போஜ், யாஷ் தாக்கூர், ஆயுஷ் பதோனி, சரண்ஷ் ஜெயின், குர்னூர் பிரார், கலீல் அகமது.
2-வது நான்கு நாள் போட்டிக்கான இந்திய அணி:-
ரிஷப் பண்ட் (கேப்டன், விக்கெட் கீப்பர்), கே.எல். ராகுல், துருவ் ஜூரல் (விக்கெட் கீப்பர்), சாய் சுதர்சன் (துணைக் கேப்டன்), தேவதத் படிக்கல், ருதுராஜ் கெய்க்வாட், ஹர்ஷ் துபே, தனுஷ் கோடியன், மனவ் சுதர், கலீல் அகமது, குர்னூர் பிரார், அபிமன்யு ஈஸ்வரன், பிரசித் கிருஷ்ணா, முகமது சிராஜ், ஆகாஷ் தீப்.






