என் மலர்
கிரிக்கெட் (Cricket)

விராட் கோலி ஒருநாள் கிரிக்கெட்டின் மாஸ்டர்- டக் அவுட் விமர்சனத்துக்கு அர்ஷ்தீப் சிங் பதிலடி
- ஃபார்ம் என்பது விராட் கோலிக்கு வெறும் வார்த்தையாகும்.
- அவருடன் இந்திய அணியில் விளையாடும் வாய்ப்பு கிடைத்தது எனக்கு ஆசிர்வாதமாகும்.
ஆஸ்திரேலியா- இந்தியா அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி பெர்த்தில் நடந்தது. மழையால் 26 ஓவர்களாக நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் விளையாடிய இந்தியா 136 ரன்கள் மட்டுமே எடுத்தது. அடுத்ததாக டிஎல்எஸ் விதிமுறைப்படி 26 ஓவரில் ஆஸ்திரேலியாவுக்கு 131 ரன்கள் இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டது. அதைத் துரத்திய ஆஸ்திரேலியா 21.1 ஓவரிலேயே வெற்றி பெற்றது.
முன்னதாக அந்தப் போட்டியில் 224 நாட்கள் கழித்து விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் இந்தியாவுக்காக விளையாடியது ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. அந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் ரோகித் சர்மா 8 ரன்னிலும் விராட் கோலி டக் அவுட்டாகி ஏமாற்றத்தைக் கொடுத்தார். அதனால் 7 மாதங்களுக்குப் பின் விளையாடும் அவர்கள் ஃபார்மை இழந்து விட்டார்களா என்ற விமர்சனங்கள் எழுந்துள்ளது.
இந்நிலையில் விராட் கோலி போன்றவருக்கு ஃபார்ம் என்பது வெறும் வார்த்தை மட்டுமே என்று இந்திய வீரர் அர்ஷ்தீப் சிங் தெரிவித்துள்ளார்.
இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு:-
ஃபார்ம் என்பது விராட் கோலிக்கு வெறும் வார்த்தையாகும். ஏனெனில் இந்தியாவுக்காக 300-க்கும் மேற்பட்ட ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள அவருக்கு எப்படி தொடர்ந்து செல்ல வேண்டும் என்பது தெரியும். அவருடன் இந்திய அணியில் விளையாடும் வாய்ப்பு கிடைத்தது எனக்கு ஆசிர்வாதமாகும்.
முன்னோக்கி செல்கையில் இத்தொடரில் அவர் நிறைய ரன்கள் அடிப்பார்கள் என்று நான் கருதுகிறேன். ஒருநாள் கிரிக்கெட்டில் அவர் மாஸ்டராக செயல்பட்டுள்ளார். அதைப்பற்றி அவர் என்ன நினைக்கிறார் என்பதை வேண்டுமானால் அடுத்த செய்தியாளர்கள் சந்திப்பில் நீங்கள் கேளுங்கள்.
என்று அர்ஷ்தீப் சிங் கூறினார்.






