என் மலர்
கிரிக்கெட் (Cricket)
- நான் செய்த Celebration எனக்கு மிகவும் பிடித்த படங்களுள் ஒன்றான காந்தாராவில் இடம் பெற்ற காட்சி.
- இந்த மைதானம்தான் என் வீடு என்பதை மீண்டும் ஞாபகப்படுத்தவே அப்படி செய்தேன்.
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நேற்றிரவு நடந்த 24-வது லீக் ஆட்டத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் - டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற டெல்லி கேப்டன் அக்சர் படேல் பந்து வீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுக்கு 163 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து 164 ரன் இலக்கை நோக்கி ஆடிய டெல்லி அணி 17.5 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 169 ரன்கள் சேர்த்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அதிகபட்சமாக கே.எல். ராகுல் 93 ரன்கள் அடித்தார். அவரே ஆட்ட நாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டார்.
இந்த போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கே.எல். ராகுல் சிக்சர் அடித்து போட்டியை முடித்து வைத்தார். இந்த வெற்றியை கே.எல்.ராகுல், தனது பேட்டை தரையில் வட்டமிட்டு அடித்து ஆக்ரோஷமாக கொண்டாடினார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.
இந்நிலையில் ஆக்ரோஷமாக கொண்டாடியதற்காக காரணத்தை கேஎல் ராகுல் கூறியுள்ளார். அதில், சின்னசாமி மைதானம் மிகவும் ஸ்பெஷலான இடம். ஆர்சிபிக்கு எதிரான போட்டியில் வென்ற பின்பு நான் செய்த Celebration எனக்கு மிகவும் பிடித்த படங்களுள் ஒன்றான காந்தாராவில் இடம் பெற்ற காட்சி. இந்த மைதானம்தான் என் வீடு என்பதை மீண்டும் ஞாபகப்படுத்தவே அப்படி செய்தேன் என ராகுல் கூறினார்.
- 3 முறை சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் நடப்பு தொடரில் நிலையற்ற ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.
- சேப்பாக்கத்தில் இவ்விரு அணிகள் மோதிய 11 ஆட்டங்களில் 8-ல் சென்னையும், 3-ல் கொல்கத்தாவும் வெற்றி கண்டுள்ளது.
18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழாவில், சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் இன்று நடைபெறும் 25-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்சை எதிர்கொள்கிறது.
5 முறை சாம்பியனான சென்னை அணி நடப்பு சீசனில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியாமல் தடுமாறி வருகிறது. உள்ளூரில் நடந்த தொடக்க ஆட்டத்தில் 4 விக்கெட் வித்தியாசத்தில் மும்பையை வீழ்த்தி வெற்றிகரமாக தொடங்கிய சென்னை அணி அதன் பிறகு தொடர்ச்சியாக 4 ஆட்டங்களில் (பெங்களூரு, ராஜஸ்தான், டெல்லி, பஞ்சாப் அணிகளிடம்) தோல்வியை சந்தித்துள்ளது. இதில் சொந்த ஊரில் அடைந்த 2 தோல்வியும் அடங்கும்.
முல்லாப்பூரில் நடந்த முந்தைய ஆட்டத்தில் 220 ரன் இலக்கை நோக்கி ஆடிய சென்னை அணி 201 ரன்கள் எடுத்து 18 ரன் வித்தியாசத்தில் தோற்றது. சென்னை அணி இதுவரை 17 வீரர்களை பயன்படுத்தி பார்த்து விட்டது. இருப்பினும் அவர்களால் இன்னும் சரியான அணி கலவையை அடையாளம் காண முடியவில்லை. பேட்டிங், பந்து வீச்சு மட்டுமின்றி பீல்டிங்கும் மோசமாக இருக்கிறது. கடந்த 5 ஆட்டங்களில் 12 கேட்ச் வாய்ப்புகளை கோட்டை விட்டுள்ளனர். அது அந்த அணிக்கு பெருத்த பின்னடைவாக அமைந்துள்ளது. எனவே பீல்டிங்கில் வெகுவாக முன்னேற்றம் காண வேண்டியது அவசியமானதாகும்.
காயத்தால் ருதுராஜ் கெய்க்வாட் விலகி இருப்பதால் எஞ்சிய தொடருக்கு மூத்த வீரர் டோனி மீண்டும் கேப்டனாக செயல்படுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. டோனியின் கேப்டன்ஷிப்பில் சென்னை அணி எழுச்சி பெறுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். பேட்டிங்கில் ரச்சின் ரவீந்திரா, டிவான் கான்வே, ஷிவம் துபே நம்பிக்கை அளிக்கிறார்கள். இருந்தாலும் தொடக்கம் முதலே வலுவான ஷாட்கள் மூலம் ரன் வேகத்தை அதிகரிக்கும் துடிப்பான பேட்ஸ்மேன்கள் இல்லை. மிடில் வரிசையும் பலவீனமாக தெரிகிறது. டோனி களத்தில் நின்றும் இலக்கை விரட்டிப்பிடிக்க முடியவில்லை.
பந்து வீச்சில் நூர் அகமது, கலீல் அகமது, பதிரானா, ஆர்.அஸ்வின் ஓரளவு நன்றாக பந்து வீசுகிறார்கள். ஆனால் ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜாவின் செயல்பாடு (5 ஆட்டத்தில் 85 ரன் மற்றும் 2 விக்கெட்) மெச்சும்படி இல்லை. இதனால் அணியில் சில மாற்றங்கள் செய்யப்பட வாய்ப்புள்ளது.
3 முறை சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் நடப்பு தொடரில் நிலையற்ற ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. தொடக்க ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூருவிடம் பணிந்த கொல்கத்தா அணி அடுத்த ஆட்டத்தில் 8 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தானை வீழ்த்தியது. 3-வது ஆட்டத்தில் 8 விக்கெட் வித்தியாசத்தில் மும்பையிடம் சரண் அடைந்தது. அதற்கு அடுத்த ஆட்டத்தில் 80 ரன் வித்தியாசத்தில் ஐதராபாத்தை பந்தாடியது. முந்தைய ஆட்டத்தில் 4 ரன் வித்தியாசத்தில் லக்னோவிடம் போராடி தோற்றது. அந்த ஆட்டத்தில் லக்னோ நிர்ணயித்த 239 ரன் இலக்கை தூரத்திய கொல்கத்தா 234 ரன் எடுத்து வெற்றியை நெருங்கி கோட்டை விட்டது.
கொல்கத்தா அணிக்கு பேட்டிங்கில் கேப்டன் ரஹானே, வெங்கடேஷ் அய்யர், ரகுவன்ஷி, ரிங்கு சிங் நல்ல பார்மில் உள்ளனர். விக்கெட் கீப்பர் குயின்டான் டி காக் ராஜஸ்தானுக்கு எதிராக 97 ரன்கள் விளாசினார். ஆனால் மற்ற 4 ஆட்டங்களில் 20 ரன்னை கூட தொடவில்லை. இதே போல் சுனில் நரின், ஆந்த்ரே ரஸ்செல் போதிய பங்களிப்பு அளித்தால் மேலும் வலுவடையும். பந்து வீச்சில் வைபவ் அரோரா, வருண் சக்ரவர்த்தி, ஹர்ஷித் ராணா தங்களுக்குரிய நாளாக அமைந்தால் மிரட்டி விடுவார்கள்.
மொத்தத்தில் சரிவில் இருந்து மீண்டு வெற்றிப் பாதைக்கு திரும்ப சென்னை அணியும், 3-வது வெற்றியை குறி வைத்து கொல்கத்தாவும் வரிந்து கட்டுவதால் ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது. மெதுவான தன்மை கொண்ட சேப்பாக்கம் ஆடுகளம் சுழலுக்கு சாதகமாக இருக்கும். இரு அணிகளிலும் தரமான சுழற்பந்து வீச்சாளர்கள் இருப்பதால் சுழல் தாக்குதலை நேர்த்தியாக கையாளும் அணியின் கையே ஓங்கும் எனலாம்.
இவ்விரு அணிகளும் இதுவரை 29 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் 19-ல் சென்னையும், 10-ல் கொல்கத்தாவும் வெற்றி பெற்று இருக்கின்றன. சேப்பாக்கத்தில் இவ்விரு அணிகள் மோதிய 11 ஆட்டங்களில் 8-ல் சென்னையும், 3-ல் கொல்கத்தாவும் வெற்றி கண்டுள்ளது.
போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-
சென்னை: ரச்சின் ரவீந்திரா, டிவான் கான்வே, ராகுல் திரிபாதி, ஷிவம் துபே, விஜய் சங்கர், ரவீந்திர ஜடேஜா, டோனி (கேப்டன்), ஆர்.அஸ்வின், நூர் அகமது, முகேஷ் சவுத்ரி, கலீல் அகமது, பதிரானா.
கொல்கத்தா: குயின்டான் டி காக், சுனில் நரின், ரஹானே (கேப்டன்), வெங்கடேஷ் அய்யர், அங்கிரிஷ் ரகுவன்ஷி, ரிங்கு சிங், ஆந்த்ரே ரஸ்செல், ரமன்தீப் சிங், மொயீன் அலி அல்லது ஸ்பென்சர் ஜான்சன், ஹர்ஷித் ராணா, வைபவ் அரோரா, வருண் சக்ரவர்த்தி.
இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.
- லேசான எலும்பு முறிவால் ஐபிஎல் தொடரின் எஞ்சிய போட்டிகளில் பங்கேற்கவில்லை.
- 2025 சீசன் எங்களுக்கு சிறந்ததாக அமையும் என எதிர்பார்க்கிறேன்.
நடப்பு ஐபிஎல் தொடரின் சென்னை அணியின் கேப்டனாக இருந்த வந்த ருதுராஜ் காயம் காரணமாக விலகியுள்ளார். ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் ஆர்ச்சர் பந்து வீச்சில் ருதுராஜ் காயமடைந்தார். இதன் காரணமாக அவர் விலகியுள்ளார்.
அவருக்கு பதிலாக மீண்டும் எம்.எஸ்.தோனி கேப்டனாக நியமிக்கபட்டு உள்ளார் என அணியின் தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், சிஎஸ்கே ரசிகர்களுக்கு ருதுராஜ் நன்றி தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் அவர் கூறியிருப்பதாவது:-
லேசான எலும்பு முறிவால் ஐபிஎல் தொடரின் எஞ்சிய போட்டிகளில் பங்கேற்கவில்லை. ஆனால் வீரர்களுடன் தொடர்ந்து பயணித்து அவர்களை ஊக்கப்படுத்துவேன். கடந்த சில போட்டிகளில் நாங்கள் சிறப்பாக ஆடவில்லை. இளம் விக்கெட் கீப்பர் அணியை வழிநடத்த உள்ளதால் அனைத்தும் மாறும் என உறுதியாக நான் நம்புகிறேன்.
2025 சீசன் எங்களுக்கு சிறந்ததாக அமையும் என எதிர்பார்க்கிறேன். தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் ரசிகர்களுக்கு மிக்க நன்றி என கூறியுள்ளார்.
- முதலில் ஆடிய ஆர்சிபி 20 ஓவரில் 163 ரன்கள் எடுத்தது.
- தொடர்ந்து ஆடிய டெல்லி 169 ரன்கள் எடுத்து வென்றது.
பெங்களூரு:
ஐபிஎல் தொடரின் 24வது லீக் ஆட்டம் பெங்களூருவில் இன்று நடைபெற்றது. இதில் ஆர்சிபி, டெல்லி அணிகள் மோதின. டாஸ் வென்ற டெல்லி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட் செய்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 163 ரன்கள் எடுத்தது. பில் சால்ட், டிம் டேவிட் தலா 37 ரன்கள் எடுத்தனர். ரஜத் படிதார் 25 ரன்னும், விராட் கோலி 22 ரன்னும் எடுத்தனர்.
டெல்லி அணி சார்பில் விப்ராஜ் நிகம், குல்தீப் யாதவ் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
இதையடுத்து, 164 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி அணி களமிறங்கியது. முன்னணி வீரர்கள் விரைவில் ஆட்டமிழந்தனர். 58 ரன்கள் எடுப்பதற்குள் 4 விக்கெட்டுகளை இழந்து திணறியது.
அடுத்து இறங்கிய கே.எல்.ராகுல்- ஸ்டப்ஸ் ஜோடி பொறுப்புடன் ஆடியது. சிறப்பாக ஆடிய கே.எல்.ராகுல் அரை சதமடித்தார்.
இறுதியில், டெல்லி கேப்பிட்டல்ஸ் 17.5 ஓவரில் 169 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. டெல்லி அணி பெறும் 4வது வெற்றி இதுவாகும். ஆர்.சி.பி. பெறும் 2வது தோல்வி இதுவாகும்.
கே.எல்.ராகுல் 93 ரன்னும், ஸ்டப்ஸ் 38 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர்.
- 8 முறை விராட் கோலி ரன் அவுட் ஆகி உள்ளார்.
- 24 முறை எதிர் திசையில் இருந்த பேட்ஸ்மேன் ரன் அவுட் ஆகியுள்ளார்.
ஐபிஎல் தொடரின் இன்றைய ஆட்டத்தில் டெல்லி- பெங்களூரு அணிகள் விளையாடி வருகிறது. இந்த போட்டியில் முதலில் விளையாடி பெங்களூரு அணி 20 ஓவர் முடிவில் 163 ரன்கள் எடுத்தது.
ஒரு கட்டத்தில் ஆர்சிபி 3 ஓவரில் 53 ரன்கள் குவித்தது. அடுத்த ஓவரில் பில் சால்ட் மற்றும் விராட் கோலி இடையேயான குழப்பத்தால் சால்ட் ரன் அவுட் ஆனார். அதனையடுத்து ஆர்சிபி தடுமாறியது.
இந்த ரன் அவுட் மூலம் விராட் கோலி களத்தில் இருக்கும் போது 32 ரன் அவுட் சம்பவம் நடந்துள்ளது. அதில் 8 முறை விராட் கோலி ரன் அவுட் ஆகி உள்ளார். 24 முறை எதிரில் இருந்தவர் ரன் அவுட் ஆகியுள்ளனர்.
சமீபத்தில் பார்டர் கவாஸ்கர் தொடரின் போது ஜெய்ஸ்வால் 82 ரன்கள் எடுத்திருந்தபோது, ஒரு மோசமான ரன் அவுட்டில் சிக்கி ஆட்டமிழந்தார். இந்த ஜோடி மூன்றாவது விக்கெட்டுக்கு 102 ரன்கள் சேர்த்தது. ஜெய்ஸ்வால் அடித்த பந்து கம்மின்ஸ் இடம் பிடிபட்டது. ஆனால் ஜெய்ஸ்வால் ஓடி வந்ததை பார்க்காமல் விராட் கோலி பின்னால் திரும்பி கம்மின்ஸ் பந்தை பிடித்தாரா என்று பார்த்தார்.
இதனால் ஜெய்ஸ்வால் ஓடி வந்ததை விராட் கோலி கவனிக்கவில்லை. ஒரு கட்டத்தில் விராட் கோலி கவனித்த போது ஜெய்ஸ்வால் எதிர்முனைக்கே வந்துவிட்டார். மேலும் விராட் கோலி ஜெய்ஸ்வாலை நம்பி ஓடி இருந்தால் நிச்சயம் அந்த ரன்னை எடுத்திருக்கலாம். ஆனால் விராட் கோலி தேவையில்லாமல் ரன் ஓடாமல் நிற்க ஜெய்ஷ்வால் சுலபமாக ரன் அவுட் ஆனார்.
இதேபோல் சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட், அக்ஷர் படேல் ஆகியோரும் விராட் கோலியுடன் ஓடும் போது ரன் அவுட் ஆகியுள்ளனர்.
8 முறை விராட் கோலி ரன் அவுட் ஆனதில் 2 முறை ரோகித்துடன் இருக்கும் போது அவர் அவுட் ஆனார். அந்த 2 போட்டியிலும் ரோகித் சர்மா இரட்டை சதம் அடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
- அதிகபட்சமாக டிம் டேவிட் 37 ரன்கள் குவித்தார்.
- டெல்லி அணி தரப்பில் விப்ராஜ் நிகம், குல்தீப் யாதவ் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
ஐபிஎல் தொடரின் இன்றைய ஆட்டத்தில் ஆர்சிபி- டெல்லி அணிகள் மோதி வருகிறது. இதில் டாஸ் வென்ற டெல்லி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி பெங்களூரு அணியின் தொடக்க வீரர்களாக சால்ட் - விராட் கோலி களமிறங்கினர்.
தொடக்கம் முதலே சால்ட் அதிரடியாக விளையாடினார். குறிப்பாக 3 -வது ஓவரில் இரண்டு சிக்ஸ் 3 பவுண்டரி விளாசினார். சால்ட் 17 பந்தில் 37 ரன்கள் எடுத்த நிலையில் எதிர்பாராதவிதமாக ரன் அவுட் ஆனார்.
அதனையடுத்து படிக்கல் 1, விராட் கோலி 22, படிதார் 1, லிவிங்ஸ்டன் 4, ஜித்தேஷ் சர்மா 3, குர்ணால் பாண்ட்யா 18 ஆகியோர் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். இறுதியில் வந்த டிம் டேவிட் அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தார்.
இறுதியில் 20 ஓவர் முடிவில் 163 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக டிம் டேவிட் 33 ரன்கள் குவித்தார். டெல்லி அணி தரப்பில் விப்ராஜ் நிகம், குல்தீப் யாதவ் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
- சதமும், பந்துவீச்சில் 4 விக்கெட்டுகளையும் வீழ்த்திய முதல் வீராங்கனை எனும் சாதனையை ஹீலி மேத்யூஸ் படைத்தார்.
- அவரது அணி தோல்வியடைந்த போதிலும், ஆட்டநாயகி விருது மேத்யூஸ்-க்கு வழங்கப்பட்டது.
மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை தொடருக்கான தகுதிச்சுற்று போட்டிகள் பாகிஸ்தானில் நடைபெற்று வருகின்றன. இதில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் ஸ்காட்லாந்து மகளிர் அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணியை வீழ்த்தி த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது.
இந்த போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டனும் ஆல்ரவுண்டருமான ஹேலி மேத்யூஸ் ஒரு உலக சாதனையைப் பதிவு செய்தார்.
அதன்படி இப்போட்டியில் சதம் விளாசி ஆட்டநாயகி விருதை கைப்பற்றியதன் மூலம் 54 ஆண்டுகால ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் பேட்டிங்கில் சதமும், பந்துவீச்சில் 4 விக்கெட்டுகளையும் வீழ்த்திய முதல் வீராங்கனை எனும் சாதனையை ஹீலி மேத்யூஸ் படைத்தார்.
இருப்பினும் அவரது அணியானது இப்போட்டியில் தோவ்லியைத் தழுவியது. இதன்மூலம் ஒரே போட்டியில் சதம் அடித்து நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தியும், அந்த அணி தோல்வியைத் தழுவியது இதுவே முதல் முறையாகும்.
மேலும் மகளிர் ஒருநாள் சர்வதேச கிரிக்கெட்டில் தோல்வியடைந்த போட்டிகளில் அதிக ஆட்ட நாயகி விருதுகளை வென்ற வீராங்கனை எனும் மோசமான சாதனையையும் ஹீலி மேத்யூஸ் பெற்றுள்ளார்.
அவரது அணி தோல்வியடைந்த போதிலும், அவர் இந்த விருதை வெல்வது இது 5-வது முறையாகும். இந்தப் பட்டியலில், அவர் தனது சக நாட்டவரான ஸ்டெஃபனி டெய்லரை முந்தி முதலிடத்தைப் பிடித்துள்ளார்.
மகளிர் சர்வதேச கிரிக்கெட்டில் தோல்வியடைந்த அட்டத்தில் அதிக ஆட்ட நாயகி விருதுகள்
5-ஹேலி மேத்யூஸ்
4-ஸ்டஃபானி டெய்லர்
2-எமி சாட்டர்த்வைட்
2-நிக்கோலா பிரவுன்
2-கிளேர் டெய்லர்
- ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியில் ஆர்சிபி- டெல்லி அணிகள் மோதி வருகிறது.
- இந்த போட்டியில் ஸ்டார்க் ஒரே ஓவரில் 30 ரன்கள் கொடுத்தார்.
ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியில் ஆர்சிபி- டெல்லி அணிகள் மோதி வருகிறது. இதில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி ஆர்சிபி அணியின் தொடக்க வீரர்களாக பில் சால்ட் - விராட் கோலி களமிறங்கினர். முதல் ஓவரில் 7 ரன்களை மட்டுமே எடுத்த ஆர்சிபி, 2-வது ஓவர் முடிவில் 23 ரன்கள் குவித்தது.
இதனையடுத்து 3-வது ஓவரை ஸ்டார்க் வீசினார். இந்த ஓவரை சால்ட் விளாசினார். முதல் பந்தில் 6, அடுத்த பந்துகள் முறையே 4,4,4,6 என பறக்க விட்டார். கடைசி பந்து லெக் பய்ஸ் முறையில் 5 ரன்களும் நோபால் முறையில் 1 விட்டுக்கொடுத்தார். இதன் மூலம் ஒரே ஓவரில் ஸ்டார்க் 30 ரன்களை விட்டுக்கொடுத்தார்.
இதற்கு முன்பு 2024-ம் ஆண்டு சன்ரைசர்ஸ் அணிக்கு எதிராக ஒரே ஓவரில் 25 ரன்கள் விட்டுக்கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- இவ்விரு அணிகளும் இதுவரை 31 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன.
- பெங்களூரு அணி 19 ஆட்டத்திலும், டெல்லி அணி 11 ஆட்டத்திலும் வெற்றி பெற்று இருக்கின்றன.
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் இன்று நடைபெறும் 24-வது லீக் ஆட்டத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் - டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
டெல்லி அணி தனது முதல் மூன்று ஆட்டங்களில் லக்னோ, ஐதராபாத், சென்னை அணிகளை அடுத்தடுத்து பதம் பார்த்து 'ஹாட்ரிக்' வெற்றியை ருசித்தது.
இவ்விரு அணிகளும் இதுவரை 31 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் பெங்களூரு அணி 19 ஆட்டத்திலும், டெல்லி அணி 11 ஆட்டத்திலும் வெற்றி பெற்று இருக்கின்றன. ஒரு ஆட்டம் முடிவு இல்லாமல் போனது.
- சேப்பாக்கத்தில் நாளை சென்னை - கொல்கத்தா அணிகள் மோதுகிறது.
- சென்னை அணி தொடர்ச்சியாக 4 தோல்விகளை சந்தித்துள்ளது.
நடப்பு ஐபிஎல் தொடரின் சென்னை அணியின் கேப்டனாக இருந்த வந்த ருதுராஜ் காயம் காரணமாக விலகியுள்ளார். ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் ஆர்ச்சர் பந்து வீச்சில் ருதுராஜ் காயமடைந்தார். இதன் காரணமாக அவர் விலகியுள்ளார்.
அவருக்கு பதிலாக மீண்டும் எம் எஸ் தோனி கேப்டனாக நியமிக்கபட்டு உள்ளார் என அணியின் தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் தெரிவித்துள்ளார்.
கடந்த 2022-ம் ஆண்டில் ஜடேஜா கேப்டனாக நியமிக்கப்பட்டார். அப்போது சிஎஸ்கே தொடர் தோல்விகளை சந்தித்தது. இதனையடுத்து மீண்டும் எம் எஸ் தோனி கேப்டனாக நியமிக்கப்பட்டார். அதேபோல இந்தமுறையும் தோனி கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதுவரை 5 போட்டிகளில் விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4 போட்டிகளில் தோல்வியடைந்துள்ளது. இதன் மூலம் புள்ளிப்பட்டியலில் சிஎஸ்கே 4-வது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
- தசைப்பிடிப்பு காரணமாக 39-வது ஓவரின் போது 95 ரன்னில் Retired hurt ஆகி மேத்யூஸ் வெளியேறினார்.
- இதனையடுத்து 41 ஓவரில் ஒரு பந்தை மட்டும் சந்தித்து 99 ரன்களுடன் மீண்டும் Retired hurt ஆகி வெளியேறினார்.
ஐசிசி மகளிர் உலகக் கோப்பை தொடருக்கான தகுதிச் சுற்று போட்டி நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் ஸ்காட்லாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதின.
இதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் விளையாடிய ஸ்காட்லாந்து அணி 45 ஓவர்களில் 244 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அதனை தொடர்ந்து விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தனர்.
ஒருமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கேப்டன் மேத்யூஸ் தசைப்பிடிப்பு காரணமாக 39-வது ஓவரின் போது 95 ரன்னில் Retired hurt ஆகி வெளியேறினார்.
இதனையடுத்து 41 ஓவர் 3 பந்தில் களமிறங்கிய அவர், அந்த பந்தை பவுண்டரிக்கு விளாசினார். அடித்த உடனே தசைப்பிடிப்பு காரணமாக கீழே விழுந்தார். நடக்க முடியாமல் இருந்த அவரை Stretcher-ல் கொண்டு சென்றனர். 4-வது பந்தில் 9-வது விக்கெட் இழந்ததால் மீண்டும் மேத்யூஸ் களமிறங்க வேண்டி இருந்தது. இதனால் அணியின் வெற்றிக்காக மீண்டும் களமிறங்கிய அவர் சதம் விளாசி அசத்தினார். அவர் 113 பந்தில் 114 ரன்களுடன் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
எனினும் அவரால் அணியை வெற்றி பாதைக்கு அழைத்து செல்ல முடியவில்லை. 11 ரன்கள் வித்தியாசத்தில் ஸ்காட்லாந்து வெற்றி பெற்றது.
உடல் மோசமாக இருந்தாலும் அணிக்காக விளையாடிய விதம் அனைத்து கிரிக்கெட் ரசிகர்களையும் கவர்ந்துள்ளது.
- சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஆறு சீசன்களில் ராயுடு விளையாடியுள்ளார்.
- 2023-ம் ஆண்டு ஐபிஎல் கோப்பையை அம்பதி ராயுடு பெற்றுக்கொள்ளுமாறு தோனி கேட்டுக்கொண்டார்.
ஐபிஎல் தொடர் கடந்த மாதம் 22-ந் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை 23 போட்டிகள் முடிவடைந்துள்ளது. இதில் புள்ளிப்பட்டியலில் குஜராத் அணி முதல் இடத்தில் உள்ளது. அடுத்த 3 மூன்று இடங்கள் முறையே டெல்லி, பெங்களூரு, பஞ்சாப் ஆகிய அணிகள் உள்ளன.
யாரும் எதிர்பார்க்காத வகையில் சென்னை அணி 9-வது இடத்தில் உள்ளன. சிஎஸ்கே பேட்டிங் கவலையளிக்க கூடிய வகையில் உள்ளது. கடைசி நேரத்தில் வந்து ஆட்டத்தை முடித்து கொடுக்கும் தோனி கடந்த சில போட்டிகளில் அதனை செய்யமுடியவில்லை. இதனால் அவர் மீது விமர்சனங்கள் எழுந்தது.
இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஆறு சீசன்களில் விளையாடிய ராயுடு, அணிக்கும் தோனிக்கும் தொடர்ந்து ஆதரவளிப்பதாக சமூக ஊடகங்களில் ஏராளமான எதிர்மறையான செய்திகள் பரவி வந்தன.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், நான் ஒரு தோனி ரசிகராக இருந்தேன். தோனி ரசிகராக இருந்து கொண்டிருக்கிறேன், இருப்பேன் என சிஎஸ்கே அணியின் முன்னாள் வீரர் அம்பதி ராயுடு கூறியுள்ளார்.
இது குறித்து ராயுடு கூறியதாவது:-
நான் ஒரு தோனி ரசிகராக இருந்தேன். தோனி ரசிகராக இருந்து கொண்டிருக்கிறேன். எப்போதும் தோனி ரசிகராகவே இருப்பேன். யார் என்ன சொன்னாலும், என்ன நினைத்தாலும் அது பற்றி கவலையில்லை. இதனால் ஒரு சதவீதம் கூட மாற்றம் நிகழப்போவதில்லை.
எனவே தயவுசெய்து பணம் செலுத்திய பி.ஆர்-களில் பணத்தை செலவிடுவதை நிறுத்திவிட்டு, அதை தொண்டு நிறுவனங்களுக்கு நன்கொடையாக வழங்குங்கள். பல ஏழை மக்கள் பயனடையலாம்.
என அம்பதி ராயுடு கூறினார்.






