என் மலர்
கிரிக்கெட் (Cricket)

மொத்தம் 32 முறை.. விராட் கோலியும் ரன் அவுட்டும்
- 8 முறை விராட் கோலி ரன் அவுட் ஆகி உள்ளார்.
- 24 முறை எதிர் திசையில் இருந்த பேட்ஸ்மேன் ரன் அவுட் ஆகியுள்ளார்.
ஐபிஎல் தொடரின் இன்றைய ஆட்டத்தில் டெல்லி- பெங்களூரு அணிகள் விளையாடி வருகிறது. இந்த போட்டியில் முதலில் விளையாடி பெங்களூரு அணி 20 ஓவர் முடிவில் 163 ரன்கள் எடுத்தது.
ஒரு கட்டத்தில் ஆர்சிபி 3 ஓவரில் 53 ரன்கள் குவித்தது. அடுத்த ஓவரில் பில் சால்ட் மற்றும் விராட் கோலி இடையேயான குழப்பத்தால் சால்ட் ரன் அவுட் ஆனார். அதனையடுத்து ஆர்சிபி தடுமாறியது.
இந்த ரன் அவுட் மூலம் விராட் கோலி களத்தில் இருக்கும் போது 32 ரன் அவுட் சம்பவம் நடந்துள்ளது. அதில் 8 முறை விராட் கோலி ரன் அவுட் ஆகி உள்ளார். 24 முறை எதிரில் இருந்தவர் ரன் அவுட் ஆகியுள்ளனர்.
சமீபத்தில் பார்டர் கவாஸ்கர் தொடரின் போது ஜெய்ஸ்வால் 82 ரன்கள் எடுத்திருந்தபோது, ஒரு மோசமான ரன் அவுட்டில் சிக்கி ஆட்டமிழந்தார். இந்த ஜோடி மூன்றாவது விக்கெட்டுக்கு 102 ரன்கள் சேர்த்தது. ஜெய்ஸ்வால் அடித்த பந்து கம்மின்ஸ் இடம் பிடிபட்டது. ஆனால் ஜெய்ஸ்வால் ஓடி வந்ததை பார்க்காமல் விராட் கோலி பின்னால் திரும்பி கம்மின்ஸ் பந்தை பிடித்தாரா என்று பார்த்தார்.
இதனால் ஜெய்ஸ்வால் ஓடி வந்ததை விராட் கோலி கவனிக்கவில்லை. ஒரு கட்டத்தில் விராட் கோலி கவனித்த போது ஜெய்ஸ்வால் எதிர்முனைக்கே வந்துவிட்டார். மேலும் விராட் கோலி ஜெய்ஸ்வாலை நம்பி ஓடி இருந்தால் நிச்சயம் அந்த ரன்னை எடுத்திருக்கலாம். ஆனால் விராட் கோலி தேவையில்லாமல் ரன் ஓடாமல் நிற்க ஜெய்ஷ்வால் சுலபமாக ரன் அவுட் ஆனார்.
இதேபோல் சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட், அக்ஷர் படேல் ஆகியோரும் விராட் கோலியுடன் ஓடும் போது ரன் அவுட் ஆகியுள்ளனர்.
8 முறை விராட் கோலி ரன் அவுட் ஆனதில் 2 முறை ரோகித்துடன் இருக்கும் போது அவர் அவுட் ஆனார். அந்த 2 போட்டியிலும் ரோகித் சர்மா இரட்டை சதம் அடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.






