search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "RCBvDC"

    • முதலில் ஆடிய பெங்களூரு 174 ரன்கள் எடுத்தது.
    • தொடர்ந்து ஆடிய டெல்லி 151 ரன்கள் மட்டுமே எடுத்து தோற்றது.

    பெங்களூரு:

    16-வது ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பெங்களூரில் இன்று நடைபெற்ற முதல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரு, டெல்லி கேப்பிட்டல் அணிகள் மோதின. டாஸ் வென்ற டெல்லி பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட் செய்த பெங்களூரு அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 174 ரன்கள் எடுத்தது. தொடக்க ஆட்டக்காரரான விராட் கோலி அரை சதமடித்து அவுட்டானார். மஹிபால் லாம்ரோர் 26 ரன்னிலும், மேக்ஸ்வெல் 24 ரன்னிலும், டுபிளிசிஸ் 22 ரன்னிலும் அவுட்டாகினர்.

    டெல்லி அணி சார்பில் மிட்செல் மார்ஷ், குல்தீப் யாதவ் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

    இதையடுத்து, 175 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி அணி களமிறங்கியது. தொடக்கம் முதல் டெல்லி விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது.

    ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் மணீஷ் பாண்டே மட்டும் தாக்குப்பிடித்து அரை சதமடித்து ஆட்டமிழந்தார். அக்சர் படேல் 21 ரன்னும், டேவிட் வார்னர் 19 ரன்னும் எடுத்தனர்.

    கடைசி கட்டத்தில் நோர்க்யா 23 ரன்கள் எடுத்தார்.

    இறுதியில், டெல்லி அணி 9 விக்கெட்டுக்கு 151 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 23 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி வெற்றி பெற்றது.

    பெங்களூரு அணி சார்பில் விஜயகுமார் விஷாக் 3 விக்கெட்டும், சிராஜ் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    • முதலில் ஆடிய பெங்களூரு அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 150 ரன்கள் எடுத்தது.
    • டெல்லி அணியில், அதிரடியாக ஆடிய அலிஸ் கேப்சி 38 பந்துகளில் ஆட்டமிழந்தார்.

    மும்பை:

    மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் இன்று மும்பை டிஒய் பாட்டீல் ஸ்டேடியத்தில் நடைபெற்ற ஆட்டத்தில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற டெல்லி அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 150 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக எலிஸ் பெர்ரி 67 ரன்கள் (நாட் அவுட்) சேர்த்தார்.

    இதையடுத்து 151 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் துவக்க வீராங்கனை ஷபாலி வர்மா ரன் எதுவும் எடுக்காமல் வந்த வேகத்தில் விக்கெட்டை இழந்தார். கேப்டன் மெக் லேனிங் 15 ரன்களில் வெளியேறினார். அதிரடியாக ஆடிய அலிஸ் கேப்சி 38 பந்துகளில் ஆட்டமிழந்தார். ஜெமிமா ரோட்ரிக்ஸ் 32 ரன்கள் எடுத்தார்.

    அதன்பின் மரிசான் கேப், ஜெஸ் ஜோனாசன் இருவரும் நிதானமாக ஆடி அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றனர். கடைசி ஓவரின் 4வது பந்தில் பவுண்டரி அடித்து ஜோனாசன் வெற்றியை உறுதி செய்தார். டெல்லி அணி 2 பந்துகள் மீதமிருந்த நிலையில், 4 விக்கெட் இழப்பிற்கு 154 ரன்கள் சேர்த்தது. இதனால் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மரிசான் கேப் 32 ரன்களுடனும், ஜோனாசன் 29 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். 

    டெல்லி கேப்பிட்டல்ஸ் வெற்றி பெற்றுள்ள நிலையில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் தொடர்ந்து 6-வது தோல்வியை சந்தித்துள்ளது.#IPL2019 #RCBvDC
    ஐபிஎல் தொடரின் 20-வது லீக் போட்டி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்றது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் - டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற டெல்லி அணி கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர் பந்து வீச்சு தேர்வு செய்தார்.

    அதன்படி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் முதலில் களம் இறங்கியது. ரபாடா நான்கு விக்கெட்டுக்கள் வீழ்த்த ஆர்சிபி 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 149 ரன்களே அடித்தது. விராட் கோலி 41 ரன்னும், மொயீன் அலி 32 ரன்களும் சேர்த்தனர்.

    பின்னர் 150 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி கேப்பிட்டல்ஸ் களம் இறங்கியது. தொடக்க வீரர் தவான் ரன்ஏதும் எடுக்காமல் டக்அவுட் ஆனார். அடுத்து பிரித்வி ஷா உடன் கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. அணியின் ஸ்கோர் 69 ரன்னாக இருக்கும்போது பிரித்வி ஷா 28 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.



    அடுத்து வந்த இங்கிராம் 22 ரன்னிலும், ரிஷப் பந்த் 18 ரன்னிலும், கிறிஸ் மோரிஸ் ரன்ஏதும் எடுக்காமலும் ஆட்டமிழந்தனர். ஷ்ரேயாஸ் அய்யர் 67 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். ஒரு கட்டத்தில் டெல்லி அணி 6 பந்தில் மூன்று விக்கெட்டுக்களை இழந்ததால் ஆட்டத்தில் சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    என்றாலும், டெல்லி கேப்பிட்டல்ஸ் 18.4 ஓவரில் 152 ரன்கள் எடுத்து நான்கு விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆர்சிபி தான் விளையாடிய ஆறு போட்டிகளிலும் தோல்வியை சந்தித்துள்ளது.
    ×