என் மலர்tooltip icon

    ஐ.பி.எல்.(IPL)

    ஐ.பி.எல் 2025: டெல்லி அணிக்கு எதிராக டாஸ் வென்ற ஆர்சிபி பந்து வீச்சு தேர்வு
    X

    ஐ.பி.எல் 2025: டெல்லி அணிக்கு எதிராக டாஸ் வென்ற ஆர்சிபி பந்து வீச்சு தேர்வு

    • 46-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ்- பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
    • சமபலம் வாய்ந்த அணிகள் மோதும் இந்த ஆட்டத்தில் யார் கை ஓங்கும் என்பதை கணிப்பது கடினமாகும்.

    டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நடக்கும் 46-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ்- பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

    டெல்லி அணி 8 ஆட்டங்களில் ஆடி 6 வெற்றி, 2 தோல்வியுடன் (மும்பை, குஜராத் அணிகளிடம்) வலுவான நிலையில் உள்ளது.

    பெங்களூரு அணி 9 ஆட்டங்களில் ஆடி 6 வெற்றி, 3 தோல்வி (குஜராத், டெல்லி, பஞ்சாப் அணிகளிடம்) அடைந்துள்ளது. பெங்களூரு அணியில் பேட்டிங்கில் விராட்கோலி சூப்பர் பார்மில் இருக்கிறார்.

    சொந்த மண்ணில் நடந்த டெல்லிக்கு எதிரான முந்தைய ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூரு அணி தோற்றது. அதற்கு பதிலடி கொடுத்து புள்ளி பட்டியலில் ஏற்றம் காண பெங்களூரு அணி வரிந்து கட்டும். சமபலம் வாய்ந்த அணிகள் மோதும் இந்த ஆட்டத்தில் யார் கை ஓங்கும் என்பதை கணிப்பது கடினமாகும்.

    இவ்விரு அணிகளும் இதுவரை 32 முறை நேருக்கு நேர் சந்தித்து இருக்கின்றன. இதில் பெங்களூரு 19 ஆட்டத்திலும், டெல்லி 12 ஆட்டத்திலும் வெற்றி பெற்றுள்ளன. ஒரு ஆட்டம் முடிவு இல்லாமல் போனது.

    இந்நிலையில், இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. இதில், டாஸ் வெ்னற ஆர்சிபி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனால், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்குகிறது.

    Next Story
    ×