என் மலர்
ஐ.பி.எல்.(IPL)

IPL 2025: மிகவும் மதிப்புமிக்க வீரர் விருது விருதை வென்றார் சூர்யகுமார் யாதவ்
- பஞ்சாப் அணியை 6 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆர்சிபி அணி கோப்பையை வென்றுள்ளது
- ஐபிஎல் சீசனில் சிறப்பாக விளையாடிய வீரர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டது.
ஐபிஎல் 2025 இறுதிப் போட்டியில் பஞ்சாப் அணியை 6 ரன் வித்தியாசத்தில் வென்று ஆர்சிபி அணி கோப்பையை வென்றுள்ளது.
இதனையடுத்து நடப்பு ஐபிஎல் சீசனில் சிறப்பாக விளையாடிய வீரர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டது. அதில், மிகவும் மதிப்பு மிகுந்த வீரர் என்ற விருதை மும்பை இந்தியன்ஸ் வீரர் சூர்யகுமார் யாதவ் வென்றார். 320.5 புள்ளிகள் பெற்று இந்த விருதை அவர் வென்றார்.
மிகவும் மதிப்பு மிகுந்த வீரர் என்ற விருது ஐபிஎல் தொடரில் வழங்கப்படும் மிகவும் சிறப்பான விருதாகும். ஒரு ஐபிஎல் தொடரில் ஒட்டுமொத்தமாக ஒரு அணிக்கு ஒரு வீரர் அளித்த பங்களிப்பின் அடிப்படையில் இந்த விருது வழங்கப்படுகிறது. இந்த விருது முன்னர் ஐபிஎல் தொடர் நாயகன் என்ற பெயரில் வழங்கப்பட்டு வந்தது. அதிகபட்சமாக இந்த விருதை சுனில் நரைன் 3 முறை வென்றுள்ளார்.
Next Story






