search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    மகளிர் பிரீமியர் லீக்: பெங்களூரு அணியை வீழ்த்தியது டெல்லி கேப்பிட்டல்ஸ்
    X

    அலிஸ் கேப்சி

    மகளிர் பிரீமியர் லீக்: பெங்களூரு அணியை வீழ்த்தியது டெல்லி கேப்பிட்டல்ஸ்

    • முதலில் ஆடிய பெங்களூரு அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 150 ரன்கள் எடுத்தது.
    • டெல்லி அணியில், அதிரடியாக ஆடிய அலிஸ் கேப்சி 38 பந்துகளில் ஆட்டமிழந்தார்.

    மும்பை:

    மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் இன்று மும்பை டிஒய் பாட்டீல் ஸ்டேடியத்தில் நடைபெற்ற ஆட்டத்தில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற டெல்லி அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 150 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக எலிஸ் பெர்ரி 67 ரன்கள் (நாட் அவுட்) சேர்த்தார்.

    இதையடுத்து 151 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் துவக்க வீராங்கனை ஷபாலி வர்மா ரன் எதுவும் எடுக்காமல் வந்த வேகத்தில் விக்கெட்டை இழந்தார். கேப்டன் மெக் லேனிங் 15 ரன்களில் வெளியேறினார். அதிரடியாக ஆடிய அலிஸ் கேப்சி 38 பந்துகளில் ஆட்டமிழந்தார். ஜெமிமா ரோட்ரிக்ஸ் 32 ரன்கள் எடுத்தார்.

    அதன்பின் மரிசான் கேப், ஜெஸ் ஜோனாசன் இருவரும் நிதானமாக ஆடி அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றனர். கடைசி ஓவரின் 4வது பந்தில் பவுண்டரி அடித்து ஜோனாசன் வெற்றியை உறுதி செய்தார். டெல்லி அணி 2 பந்துகள் மீதமிருந்த நிலையில், 4 விக்கெட் இழப்பிற்கு 154 ரன்கள் சேர்த்தது. இதனால் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மரிசான் கேப் 32 ரன்களுடனும், ஜோனாசன் 29 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

    Next Story
    ×