என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    • ரோகித் சர்மா டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார்.
    • சுப்மன் கில் அல்லது பும்ரா கேப்டனாக நியமிக்கப்பட வாய்ப்புள்ளது.

    இந்திய அணியின் டெஸ்ட் அணி கேப்டனாக இருந்த ரோகித் சர்மா, நேற்று டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். அவர் ஓய்வு பெற்றுள்ளதால், சுப்மன் கில் கேப்டனாக அதிக வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது. இல்லையென்றால் பும்ரா கேப்டனாக நியமிக்கப்படுவார்.

    இந்த நிலையில் ரோகித் சர்மாவிடம் இருந்து கற்றுக் கொண்டதை எப்போதும் நினைவில் வைத்திருப்பேன் என சுப்மன் கில் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக சுப்மன் கில் கூறியதாவது:-

    டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு வீரராகவும், கேப்டனாகவும் நீங்கள் செய்த சாதனைகளுக்கு இந்தியா நன்றி தெரிவிக்கிறது. எனக்கும் மற்றும் எல்லோருக்கும் நீங்கள் உத்வேகமாக இருந்தீர்கள். உங்களுடன் விளையாடிய மற்றும் உங்களுக்கு எதிராக விளையாடிய அனைவருக்கும் உத்வேகமாக இருந்தீர்கள். நாங்கள் உங்களிடம் இருந்து கற்றுக்கொண்ட விசயங்களை எப்போதும் ஞாபத்தில் வைத்திருப்பேன்.

    நான் விளையாடிய சிறந்த கேப்டன்களில் ஒருவரான ரோகித் சர்மாவுக்கு இனிய ஓய்வு வாழ்த்துக்கள். நன்றி கேப்டன்.

    இவ்வாறு ரோகித் சர்மா தெரிவித்துள்ளார்.

    • இந்தியா டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதால் பாகிஸ்தானில் பதற்றம் நிலவுகிறது.
    • பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் வெளிநாட்டு வீரர்கள் விளையாடி வருவதால் பாதுகாப்பு குறித்து கவலை.

    இந்தியா- பாகிஸ்தான் இடையில் போர் பதற்றம் அதிகரித்துள்ளது. இன்று காலை பாகிஸ்தான் இந்தியாவின் 15 இடங்களை குறிவைத்து டிரோன் தாக்குதல் நடத்தியது. ஆனால் இந்திய வான் பாதுகாப்பு சிஸ்டம் அவைகளை இடைமறித்து தாக்கி அழித்தது. அதேவேளையில் பாகிஸ்தானின் முக்கிய நகரங்களான லாகூர், இஸ்லாமாபாத், ராவல்பிண்டி, சியால்கோட் போன்ற இடங்களில் இந்தியா டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் சில இடங்களில் சேதம் ஏற்பட்டுள்ளது.

    தற்போது அங்கு பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 தொடர் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடர் வருகிற 18ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்த நிலையில் டிரோன் தாக்குதல் மற்றும் இரு நாடுகளுக்கு இடையிலான பதற்றம் அதிகரிப்பு காரணமாக பாகிஸ்தான் சூப்பர் லீக்கை தொடர்ந்து நடத்த வேண்டுமா? என பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு யோசிக்க தொடங்கியது.

    ஏனென்றால் டேவிட் வார்னர், ஜேசன் ஹோல்டர், வான் டர் டுசன் உள்ளிட்ட வெளிநாட்டு வீரர்கள் விளையாடி வருகின்றன. இதனால் பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு முக்கிய ஆலோசனை கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. இந்த கூட்டத்தில் பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரை தொடர்ந்து நடத்துவது குறித்து விவாதிக்கப்படும்.

    மேலும், பாகிஸ்தான் அரசின் ஆலோசனையை கிரிக்கெட் போர்டு பன்பற்றும் எனத் தெரிகிறது.

    பாகிஸ்தான் சூப்பர் லீக் சிஇஓ சல்மான் நசீர், வெளிநாட்டு வீரர்களை சந்தித்து பேசியுள்ளார். அப்போது இந்த சூழ்நிலையை உன்னிப்பாக கவனித்து வருகிறோம். இதைப் பற்றி கவலைப்பட வேண்டாம் என உறுதி அளித்துள்ளார்.

    தற்போதைய சூழ்நிலை குறித்து ஆலோசனை நடத்தப்படலாம். ஆனால், பாகிஸ்தான் ராணுவத்தால் வெளிநாட்டு வீரர்களுக்கு பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

    • பாதுகாப்பு நடவடிக்கை காரணமாக தரம்சாலா உள்ளிட்ட விமான நிலையங்கள் மூடல்.
    • ஞாயிற்றுக்கிழமை தரம்சாலாவில் நடைபெற இருந்த போட்டி வேறு இடத்திற்கு மாற்ற முடிவு.

    ஐபிஎல் 2025 சீசன் லீக் போட்டிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன. இதில் பஞ்சாப் கிங்ஸ்- மும்பை இந்தியன்ஸ் அணிகள் வருகிற 11ஆம் தேதி தரம்சாலா மைதானத்தில் பலப்பரீட்சை நடத்த இருந்தன.

    பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா, பாகிஸ்தானுக்கு எதிராக ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை மேற்கொண்டு 9 இடங்களில் உள்ள பயங்கரவாதிகள் முகாம்களை அழித்தது. இதற்கு பதிலடி கொடுப்போம் என பாகிஸ்தான் தெரிவித்துள்ளது. இதனால் முன்னெச்சரிக்கை காரணமாக தரம்சாலா உள்ளிட்ட பல்வேறு விமான நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.

    இதனால் வீரர்கள் தரம்சாலாவிற்கு செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக போட்டியை வேறு இடத்திற்கு மாற்ற பிசிசிஐ யோசனை செய்து வருகிறது. இந்த நிலையில் குஜராத் மாநிலம் அகமதாபத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்திற்கு மாற்ற பிசிசிஐ முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    பிசிசிஐ-யிடம் இருந்து அதிகாரப்பூர்வ தகவல் கிடைத்ததும், போட்டியை நடத்த நாங்கள் தயாராக இருக்கிறோம் என குஜராத் கிரிக்கெட் சங்கம் தெரிவித்துள்ளது.

    • இது சிஎஸ்கே அணியின் 3வது வெற்றி ஆகும்.
    • கொல்கத்தாவுக்கு கிடைத்த 6வது தோல்வி இதுவாகும்.

    ஐ.பி.எல். தொடரின் 57-வது போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்றது. இதில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற கொல்கத்தா பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய கொல்கத்தா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 179 ரன்கள் எடுத்தது. இதையடுத்து, 180 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சிஎஸ்கே அணி 19.4 ஓவரில் 183 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இது சிஎஸ்கே அணியின் 3வது வெற்றி ஆகும். கொல்கத்தாவுக்கு கிடைத்த 6வது தோல்வி இதுவாகும்.

    இப்போட்டியில் இறுதி ஓவரில் சிக்ஸ் அடித்து வெற்றிக்கு உதவிய கேப்டன் எம்.எஸ். தோனி இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    இதன்மூலம் ஐபிஎல் வரலாற்றில் 100 முறை அவுட் ஆகாமல் இருந்து சி.எஸ்.கே கேப்டன் தோனி போட்டியை முடித்துக் கொடுத்துள்ளார். இதில் சேஸிங்கில் 42 முறையும் வெற்றி பெட்ரா போட்டிகளில் 60 முறையும் தோனி நாட் அவுட்டாக இருந்துள்ளார். 

    • உர்வில் படேல் 11 பந்தில் 4 சிக்சர் உள்பட 31 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
    • அதிரடியாக ஆடிய பிரேவிஸ் 25 பந்தில் 4 சிக்சர், 4 பவுண்டரி உள்பட 52 ரன்கள் குவித்து வெளியேறினார்.

    ஐ.பி.எல். தொடரின் 57-வது போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்றது. இதில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற கொல்கத்தா பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய கொல்கத்தா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 179 ரன்கள் எடுத்தது. இதையடுத்து, 180 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சிஎஸ்கே அணி 19.4 ஓவரில் 183 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இது சிஎஸ்கே அணியின் 3வது வெற்றி ஆகும். கொல்கத்தாவுக்கு கிடைத்த 6வது தோல்வி இதுவாகும்.

    இந்த வெற்றியின்மூலம் 2019ம் ஆண்டுக்குப் பிறகு முதல்முறையாக 180+ என்ற இலக்கை வெற்றிகரமாக எட்டி சென்னை சூப்பர் கிங்ஸ் அசத்தியுள்ளது

    கடந்த 6 ஆண்டுகளில் இந்த இலக்கை எட்ட முயன்று 12 முறை தோல்வியை தழுவிய நிலையில், நேற்றைய போட்டியில் ஆறுதல் வெற்றி கிடைத்துள்ளது.

    • ஆர்சிபி அணி புள்ளிப்பட்டியலில் 2 ஆம் இடத்தில் உள்ளது.
    • இந்த ஐபிஎல் சீசனில் ஆர்சிபி அணிக்காக 10 போட்டிகளில் விளையாடிய படிக்கல் 247 ரன்கள் எடுத்திருந்தார்

    நடப்பு ஐபிஎல் தொடரில் எழுச்சி பெற்றுள்ள ஆர்சிபி அணி புள்ளிப்பட்டியலில் 2 ஆம் இடத்துக்கு முன்னேறி அசத்தியுள்ளது. எளிதாக பிளேஆப் சுற்றுக்கு பெங்களூரு அணி தகுதி பெரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்நிலையில், காயம் காரணமாக நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து ஆர்சிபி அணி வீரர் படிக்கல் விலகியுள்ளார். படிக்கலுக்கு பதிலாக மயங்க் அகர்வாலை ஆர்சிபி அணி எடுத்துள்ளது.

    இந்த ஐபிஎல் சீசனில் ஆர்சிபி அணிக்காக 10 போட்டிகளில் விளையாடியுள்ள படிக்கல் 247 ரன்கள் எடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

    • ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலால் எல்லைப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
    • தரமசாலாவில் இன்று பஞ்சாப் - டெல்லி அணிகள் மோதுகின்றன.

    பஹல்காம் தாக்குதலுக்கு பதில் அளிக்கும் விதமாக இந்திய ராணுவத்தால் 'ஆபரேஷன் சிந்தூர்' நடத்தப்பட்டது. .

    பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் பயங்கரவாதிகளின் முகாம்கள் மீது இந்திய பாதுகாப்புப் படையினர் தாக்குதல் நடத்தினர்.

    இந்நிலையில், எல்லைப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவி வருவதால் இமாச்சலப்பிரதேச மாநிலம் தரம்சாலாவில் இன்று நடைபெறவிருந்த பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி ரத்து செய்யப்படலாம் என்று தகவல் வெளியானது.

    இந்நிலையில், தரம்சாலாவில் இன்று நடைபெறும் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டியை நடத்த பிசிசிஐக்கு இந்திய அரசு அனுமதி அளித்துள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது.

    அதே சமயம் மே 11ம் தேதி தரம்சாலாவில் மும்பை இந்தியன்ஸ்- பஞ்சாப் கிங்ஸ் இடையே நடைபெற இருந்த ஐ.பி.எல். போட்டிகள் மும்பைக்கு மாற்றப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    • ஐ.பி.எல். தொடரின் 57-வது போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்தது.
    • இதில் கொல்கத்தா அணியை சென்னை அணி வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

    கொல்கத்தா:

    ஐ.பி.எல். தொடரின் 57-வது போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்தது. இதில் கொல்கத்தா, சென்னை அணிகள் மோதின. முதலில் ஆடிய கொல்கத்தா அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 179 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து ஆடிய சென்னை அணி 19.4 ஓவரில் 183 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.

    இந்நிலையில், சிஎஸ்கே கேப்டன் எம்.எஸ்.தோனி, ஐ.பி.எல். வரலாற்றில் 200 விக்கெட் வீழ்த்திய முதல் விக்கெட் கீப்பர் என்ற மகத்தான சாதனை படைத்துள்ளார்.

    கொல்கத்தா அணிக்கு எதிராக நேற்று நடந்த போட்டியில் சுனில் நரைனை ஸ்டம்பிங் செய்தார். தொடர்ந்து, அங்கிரிஷ் ரகுவன்ஷியின் கேட்சை பிடித்தார். இதன்மூலம் 200 விக்கெட் வீழ்த்திய முதல் விக்கெட் கீப்பர் என்ற சாதனை படைத்துள்ளார். இதில் 153 கேட்சுகள் மற்றும் 47 ஸ்டம்பிங் அடங்கும்.

    • சிஎஸ்கே-ராஜஸ்தான் ராயல்ஸ் போட்டிக்கான டிக்கெட் விற்பனை ஆன்லைன் மூலம் இன்று தொடங்குகிறது.
    • ஒரு நபருக்கு 2 டிக்கெட் மட்டுமே வழங்கப்படும் என சி.எஸ்.கே. நிர்வாகம் அறிவித்துள்ளது.

    சென்னை:

    நடப்பு ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதும் லீக் ஆட்டம் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ. சிதம்பரம் ஸ்டேடியத்தில் வரும் 12-ம் தேதி இரவு 7.30 மணிக்கு நடக்கிறது.

    சேப்பாக்கத்தில் நடக்கும் 7-வது ஆட்டம் இதுவாகும். இந்தப் போட்டிக்கான டிக்கெட் விற்பனை ஆன்லைன் மூலம் இன்று தொடங்குகிறது.

    இன்று காலை 10.15 மணியில் இருந்து www.chennaisuperkings.com என்ற இணைய தளத்தின் வாயிலாக டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து பெற்றுக் கொள்ளலாம். ரூ.1,700, ரூ.2,500, ரூ.3,500, ரூ.4,000, ரூ.7,500 ஆகிய விலைகளில் டிக்கெட் விற்கப்படுகிறது.

    ஒரு நபருக்கு 2 டிக்கெட் மட்டுமே வழங்கப்படும் என சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகம் அறிவித்துள்ளது.

    நடப்பு ஐ.பி.எல். தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பங்கேற்ற 12 போட்டிகளில் 3 வெற்றி, 9 தோல்வி பெற்று புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.

    • முதலில் ஆடிய கொல்கத்தா அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 179 ரன்கள் எடுத்தது.
    • தொடர்ந்து ஆடிய சென்னை அணி 19.4 ஓவரில் 183 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

    கொல்கத்தா:

    ஐ.பி.எல். தொடரின் 57-வது போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்தது. இதில் கொல்கத்தா, சென்னை அணிகள் மோதின.

    முதலில் ஆடிய கொல்கத்தா அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 179 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து ஆடிய சென்னை அணி 19.4 ஓவரில் 183 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.

    இந்நிலையில், வெற்றிக்கு பிறகு சி.எஸ்.கே. கேப்டன் எம்.எஸ்.தோனியிடம் ஓய்வு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

    அதற்கு பதிலளித்த தோனி, எனக்கு இப்போது 43 வயது ஆகிறது. நீண்ட நாள் கிரிக்கெட் விளையாடிவிட்டேன். ஐ.பி.எல். தொடரில் எனது கடைசி ஆண்டு என யாருக்கும் தெரியாது. நான் ஆண்டுக்கு 2 மாதங்கள் மட்டுமே விளையாடுகிறேன். இந்த ஐ.பி.எல். முடிந்த உடன் அடுத்த 8 மாதத்துக்கு எனது உடல் இந்த அழுத்தத்தை தாங்குகிறதா என்பதை பார்க்க வேண்டும். ஓய்வு குறித்து இப்போதைக்கு எந்த முடிவும் நான் எடுக்கவில்லை. எல்லா இடங்களிலும் கிடைக்கும் ரசிகர்கள் அன்பு மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது என தெரிவித்தார்.

    • இந்தியாவுக்காக 67 டெஸ்ட் போட்டியில் விளையாடி 4,301 ரன் அடித்தார்.
    • இதில் 12 சதங்களும், 18 அரை சதங்களும் அடங்கும்.

    புதுடெல்லி:

    சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார் ரோகித் சர்மா.

    இந்திய அணிக்காக 67 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 4,301 ரன்கள் அடித்துள்ளார். இதில் 12 சதங்களும், 18 அரை சதங்களும் அடங்கும்.

    இந்நிலையில், டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்ற ரோகித் சர்மாவுக்கு பி.சி.சி.ஐ. வாழ்த்து தெரிவித்துள்ளது.

    இதுதொடர்பாக, பிசிசிஐ தனது எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், நன்றி கேப்டன், வெள்ளைப் பந்தின் சகாப்தம் முடிவுக்கு வந்தது. ரோகித் சர்மா டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுகிறார். அவர் ஒருநாள் போட்டிகளில் இந்தியாவை தொடர்ந்து வழிநடத்துவார். உங்களை நினைத்துப் பெருமைப்படுகிறோம் என பதிவிட்டுள்ளது.

    • டாஸ் வென்ற கொல்கத்தா பேட்டிங் தேர்வு செய்தது.
    • முதலில் ஆடிய கொல்கத்தா 20 ஓவரில் 179 ரன்கள் எடுத்தது.

    கொல்கத்தா:

    ஐ.பி.எல். தொடரின் 57-வது போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்றது. இதில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற கொல்கத்தா பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய கொல்கத்தா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 179 ரன்கள் எடுத்தது. கேப்டன் ரகானே 48 ரன்கள் எடுத்து அவுட்டானார். ரசல் 38 ரன்னும், மனீஷ் பாண்டே 36 ரன்னும், சுனில் நரைன் 26 ரன்னும் எடுத்தனர்.

    சிஎஸ்கே சார்பில் நூர் அகமது 4 விக்கெட் வீழ்த்தி அசத்தினார்.

    இதையடுத்து, 180 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சிஎஸ்கே களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்கள் இருவரும் டக் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தனர்.

    அடுத்து இறங்கிய உர்வில் படேல் 11 பந்தில் 4 சிக்சர் உள்பட 31 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அஷ்வின் 8 ரன்னும், ஜடேஜா 19 ரன்னும் எடுத்தனர்.

    அதிரடியாக ஆடிய பிரேவிஸ் 25 பந்தில் 4 சிக்சர், 4 பவுண்டரி உள்பட 52 ரன்கள் குவித்து வெளியேறினார்.

    6வது விக்கெட்டுக்கு ஷிவம் துபேவுடன் எம்.எஸ்.தோனி இணைந்தார். இந்த ஜோடி சிறப்பாக விளையாடியது.

    இறுதியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 19.4 ஓவரில் 183 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இது சிஎஸ்கே அணியின் 3வது வெற்றி ஆகும். கொல்கத்தாவுக்கு கிடைத்த 6வது தோல்வி இதுவாகும்.

    ×