என் மலர்
ஐ.பி.எல்.(IPL)

தரம்சாலாவில் இருந்து அகமதாபாத்திற்கு மாறும் பஞ்சாப்- மும்பை இந்தியன்ஸ் போட்டி..!
- பாதுகாப்பு நடவடிக்கை காரணமாக தரம்சாலா உள்ளிட்ட விமான நிலையங்கள் மூடல்.
- ஞாயிற்றுக்கிழமை தரம்சாலாவில் நடைபெற இருந்த போட்டி வேறு இடத்திற்கு மாற்ற முடிவு.
ஐபிஎல் 2025 சீசன் லீக் போட்டிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன. இதில் பஞ்சாப் கிங்ஸ்- மும்பை இந்தியன்ஸ் அணிகள் வருகிற 11ஆம் தேதி தரம்சாலா மைதானத்தில் பலப்பரீட்சை நடத்த இருந்தன.
பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா, பாகிஸ்தானுக்கு எதிராக ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை மேற்கொண்டு 9 இடங்களில் உள்ள பயங்கரவாதிகள் முகாம்களை அழித்தது. இதற்கு பதிலடி கொடுப்போம் என பாகிஸ்தான் தெரிவித்துள்ளது. இதனால் முன்னெச்சரிக்கை காரணமாக தரம்சாலா உள்ளிட்ட பல்வேறு விமான நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.
இதனால் வீரர்கள் தரம்சாலாவிற்கு செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக போட்டியை வேறு இடத்திற்கு மாற்ற பிசிசிஐ யோசனை செய்து வருகிறது. இந்த நிலையில் குஜராத் மாநிலம் அகமதாபத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்திற்கு மாற்ற பிசிசிஐ முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிசிசிஐ-யிடம் இருந்து அதிகாரப்பூர்வ தகவல் கிடைத்ததும், போட்டியை நடத்த நாங்கள் தயாராக இருக்கிறோம் என குஜராத் கிரிக்கெட் சங்கம் தெரிவித்துள்ளது.






