என் மலர்
கிரிக்கெட் (Cricket)
- இங்கிலாந்து அணிக்கு எதிரான இந்திய டெஸ்ட் அணி அறிவிக்கப்பட்டது.
- இந்த அணியில் 8 ஆண்டுகளுக்கு பிறகு கருண் நாயர் இடம் பிடித்துள்ளார்.
ஜெய்ப்பூர்:
அடுத்த மாதம் நடைபெற உள்ள இங்கிலாந்து அணிக்கு எதிரான இந்திய டெஸ்ட் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் இந்திய அணியின் புதிய டெஸ்ட் கேப்டனாக சுப்மன் கில்லும், துணை கேப்டனாக ரிஷப் பண்ட்டும் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
இந்திய டெஸ்ட் அணியில் 8 ஆண்டுகளுக்கு பிறகு கருண் நாயர் இடம் பிடித்துள்ளார்.
இந்நிலையில், டெஸ்ட் அணியில் இடம்பிடித்தது தொடர்பாக கருண் நாயர் கூறியதாவது:
மீண்டும் வந்ததற்கு நன்றி. மகிழ்ச்சியாகவும், பெருமையாகவும், அதிர்ஷ்டமாகவும் இருக்கிறேன். நீங்கள் அனைவரும் அறிந்தது போலவே நானும் இதை அறிந்தேன். அழைப்புக்காக ஆவலுடன் காத்திருந்தேன். நெருங்கியவர்களிடமிருந்து நிறைய செய்திகள் வந்தன.
உண்மையிலேயே மகிழ்ச்சியாகவும், பெருமையாகவும் இருக்கிறது. கடந்த 12-16 மாதங்களாக நான் நன்றாக பேட்டிங் செய்து வருகிறேன். இது எனது செயல்முறைகளை அப்படியே வைத்திருப்பது மற்றும் எனக்கு வேலை செய்த அதே விஷயங்களைச் செய்வது பற்றியது என தெரிவித்தார்.
- டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
- முதலில் பேட் செய்த பஞ்சாப் அணி 20 ஓவரில் 206 ரன்கள் எடுத்தது.
ஜெய்ப்பூர்:
ஐ.பி.எல். தொடரின் 66-வது லீக் போட்டி ராஜஸ்தானின் ஜெய்ப்பூரில் நடைபெற்றது. இதில் பஞ்சாப் கிங்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் களமிறங்கிய பஞ்சாப் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 206 ரன்கள் எடுத்தது. ஷ்ரேயஸ் அய்யர் அரை சதம் கடந்து 53 ரன்னில் அவுட்டானார்.
கடைசி கட்டத்தில் இறங்கிய ஸ்டோய்னிஸ் 16 பந்தில்44 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இதையடுத்து, 207 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி அணி களமிறங்கியது. கே.எல்.ராகுல் 35 ரன்னும், டூ பிளசிஸ் 23 ரன்னும் எடுத்தனர். கருண் நாயர் 27 பந்தில் 44 ரன்கள் சேர்த்து அவுட்டானார்.
சமீர் ரிஸ்வி 22 பந்தில் அரை சதம் கடந்தார்.
இறுதியில், டெல்லி அணி 19.3 ஓவரில் 208 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. சமீர் ரிஸ்வி 58 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.
- ஷ்ரேயாஸ் அய்யர் அரைசதம் அடித்தார்.
- மார்கஸ் ஸ்டோய்னிஸ் 16 பந்தில் 44 ரன்கள் விளாசினார்.
ஐபிஎல் 2025 சீசனின் 65ஆவது போட்டி ஜெய்ப்பூரில் நடைபெற்று வருகிறது. இதில் பஞ்சாப் கிங்ஸ்- டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. டாஸ் வென்ற டெல்லி அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி பஞ்சாப் கிங்ஸ் அணியின் பிரியான்ஷ் ஆர்யா, பிரப்சிம்ரன் சிங் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். பிரியான்ஷ் ஆர்யா 9 பந்தில் 6 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பிரப்சிம்ரன் சிங் 28 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
அடுத்து வந்த ஜோஷ் இங்கிலிஸ் 12 பந்தில் 32 ரன்கள் விளாசினார். கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர் 34 பந்தில் 53 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். மார்கஸ் ஸ்டோய்னிஸ் கடைசி நேரத்தில் அதிரடியாக விளையாடி 16 பந்தில் 44 ரன்கள் அடிக்க பஞ்சாப் கிங்ஸ் 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்க 206 ரன்கள் குவித்துள்ளது.
- இங்கிலாந்து தரப்பில் சோயிப் பஷீர் 6 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
- ஆட்டநாயகனாக சோயிப் பஷிர் தேர்வு செய்யப்பட்டார்.
ஜிம்பாப்வே கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒரே ஒரு டெஸ்ட் போட்டி (4 நாள் ஆட்டம்) கொண்ட தொடரில் விளையாடியது. இதில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடியது. முதல் இன்னிங்சில் 6 விக்கெட்டுகளை இழந்து 565 ரன்கள் குவித்த நிலையில் டிக்ளேர் செய்தது. அதிகபட்சமாக ஆலி போப் 171 ரன்களும், டக்கெட் 140 ரன்களும், ஜாக் கிராலி 124 ரன்களும் குவித்தனர். ஜிம்பாப்வே தரப்பில் அதிகபட்சமாக முசரபானி 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய ஜிம்பாப்வே அணிக்கு சீரான இடைவெளியில் விக்கெட் விழுந்தது. இருப்பினும் தொடக்க ஆட்டக்காரர் ஆன பிரையன் பென்னட் நிலைத்து நின்று ஆடி அணியை மீட்டெடுத்தார். சிறப்பாக ஆடி சதமடித்த பிரையன் பென்னட் 139 ரன்களில் அவுட்டானார்.
முடிவில் ஜிம்பாப்வே முதல் இன்னிங்சில் 63.2 ஓவர்களில் 265 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆகி 'பாலோ-ஆன்' ஆனது. இங்கிலாந்து தரப்பில் ஷோயப் பஷிர் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
பின்னர் 300 ரன்கள் பின்தங்கிய நிலையில் தொடர்ந்து 2-வது இன்னிங்சை ஆடிய ஜிம்பாப்வே நேற்றைய முடிவில் 2 விக்கெட்டுக்கு 30 ரன் எடுத்துள்ளது. பென் கரண் 4 ரன்களுடனும், சீன் வில்லியம்ஸ் 22 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
இன்று 3-வது நாள் ஆட்டம் தொடங்கியது. தொடர்ந்து விளையாடிய ஜிம்பாப்வே அணி 255 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. இதனால் இங்கிலாந்து அணி 45 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிகபட்சமாக சீன் வில்லியம்ஸ் 88 ரன்கள் எடுத்தார். இங்கிலாந்து தரப்பில் சோயிப் பஷீர் 6 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
- முகமது சமி போன்ற ஒரு பந்து வீச்சாளரை நாங்கள் எப்போதும் தேர்வு செய்யவே விரும்புவோம்.
- ஷ்ரேயாஸ் கடந்த சில காலமாக ஒருநாள் கிரிக்கெட் தொடரில் சிறப்பாக விளையாடி வருகிறார்.
இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக அடுத்த மாதல் இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. ரோகித், விராட் கோலி டெஸ்ட் போட்டியில் இருந்து விலகி நிலையில் யார் இந்திய அணியின் புதிய கேப்டன் என்ற எதிர்பார்ப்பு அனைவரிடத்திலும் இருந்தது.
இந்நிலையில் இங்கிலாந்துக்கு எதிரான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டது. இதில் இந்திய அணியின் புதிய கேப்டனாக சுப்மன் கில் தேர்வு செய்யப்பட்டார். இந்த பட்டியலில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட முகமது சமி மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் இடம் பெறவில்லை.
இது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அஜித் அகார்கர் கூறியதாவது:-
இந்தத் தொடரிலிருந்து சமி நீக்கப்பட்டுள்ளதாக மருத்துவ குழுவினர் எங்களிடம் கூறியுள்ளனர். அவர் தொடருக்குத் தகுதி பெற முயற்சித்து வருகிறார். ஆனால் கடந்த வாரம் அவருக்கு பின்னடைவு ஏற்பட்டது. மேலும் அவருக்கு சில எம்ஆர்ஐ ஸ்கேன்கள் எடுக்கப்பட்டுள்ளன.
அவர் ஐந்து டெஸ்ட் போட்டிகளில் விளையாட முடியாது என்று நினைக்கிறேன். குறைந்தபட்சம் தொடரின் சில போட்டிகளில் அவர் இருப்பார் என்று நாங்கள் நம்பினோம். ஆனால் தற்போது அவர் உடல் தகுதி பெறவில்லை என்றால், காத்திருப்பது மிகவும் கடினம். அது துரதிர்ஷ்டவசமானது. அவரைப் போன்ற ஒரு பந்து வீச்சாளரை நாங்கள் எப்போதும் தேர்வு செய்யவே விரும்புவோம்.
ஷ்ரேயாஸ் கடந்த சில காலமாக ஒருநாள் கிரிக்கெட் தொடரில் சிறப்பாக விளையாடி வருகிறார். அது மட்டுமல்லாமல் உள்நாட்டு கிரிக்கெட்டு தொடரிலும் அவர் அபாரமாக ரன்களை சேர்த்து இருக்கிறார். ஆனால் தற்போதைய சூழலில் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஷ்ரேயாஸ் அவர்களுக்கு இடம் இல்லை.
என்று அஜித் அகார்கர் கூறினார்.
- இவ்விரு அணிகளும் இதுவரை 33 முறை நேருக்கு நேர் சந்தித்து இருக்கின்றன.
- இதில் 17-ல் பஞ்சாப் அணியும், 16-ல் டெல்லி அணியும் வென்று இருக்கின்றன.
10 அணிகள் பங்கேற்றுள்ள 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில், குஜராத் டைட்டன்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், பஞ்சாப் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் ஆகிய அணிகள் இறுதிப்போட்டிக்கு முந்தைய பிளே-ஆப் சுற்றுக்கு முன்னேறி உள்ளன.
சென்னை, ராஜஸ்தான், ஐதராபாத், கொல்கத்தா, லக்னோ, டெல்லி அணிகள் அடுத்த சுற்று வாய்ப்பை இழந்து விட்டன. மீதமுள்ள லீக் ஆட்டங்கள் டாப்-2 இடம் யாருக்கு என்பதை முடிவு செய்யும். முதல் இரு இடங்களுக்குள் வரும் அணிக்கு இறுதிப்போட்டிக்குள் நுழைய இரு வாய்ப்பு கிடைக்கும் என்பது கவனிக்கத்தக்கது.
இந்த நிலையில் ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் ஸ்டேடியத்தில் இன்று நடக்கும் 66-வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் - டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மல்லுக்கட்டுகின்றன. இதில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.
இவ்விரு அணிகளும் இதுவரை 33 முறை நேருக்கு நேர் சந்தித்து இருக்கின்றன. இதில் 17-ல் பஞ்சாப் அணியும், 16-ல் டெல்லி அணியும் வென்று இருக்கின்றன.
- இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் பிரையன் பென்னட் 139 ரன்கள் எடுத்தார்.
- முதல் இன்னிங்சில் ஜிம்பாப்வே அணி 265 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
இங்கிலாந்து - ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டி நாட்டிங்ஹாமில் உள்ள ட்ரென்ட் பிரிட்ஜ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதல் இன்னிங்சில் களமிறங்கிய இங்கிலாந்து அணி தொடங்கம் முதலே அதிரடியாக விளையாடியது. இதில் ஒல்லி போப் 172 ரன்களையும், பென் டக்கெட் 140 ரன்களையும், ஜாக் கிராலி 124 ரன்களையும் குவித்தனர். இதனால் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி 6 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 565 ரன்களை குவித்தது. ஜிம்பாப்வே அணி தரப்பில் பிளெசிங் முஸரபானி 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.
இதனையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய ஜிம்பாப்வே அணி 265 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இங்கிலாந்து தரப்பில் சோயப் பஷீர் 3 விக்கெட்டுகளையும், பென் ஸ்டோக்ஸ் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதனால் அந்த அணி முதல் இன்னிங்ஸில் 300 ரன்கள் பின் தங்கியதுடன் ஃபாலோ ஆனும் ஆனது. இதனையடுத்து அந்த அணி 2-வது இன்னிங்சில் விளையாடி வருகிறது.
அதிகபட்சமாக பிரையன் பென்னட் சதமடித்து அசத்தியதுடன் 139 ரன்களைச் சேர்த்து அவுட் ஆனார். அவர் 97 பந்துகளில் சதமடித்ததன் மூலம் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் ஜிம்பாப்வே அணிக்காக அதிவேக சதமடித்த வீரர் எனும் சாதனையைப் படைத்துள்ளார். முன்னதாக அந்த அணியின் முன்னாள் கேப்டன் சீன் வில்லியம்ஸ் 106 பந்துகளில் சதமடித்ததே சாதனையாக இருந்த நிலையில் அதனை பிரையன் பென்னட் முறியடித்துள்ளார்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேக சதமடித்த ஜிம்பாப்வே வீரர்கள்:-
பிரையன் பென்னட் - 97 பந்துகள்
சீன் வில்லியம்ஸ் - 106 பந்துகள்
நீல் ஜான்சன் - 107 பந்துகள்
சீன் வில்லியம்ஸ் - 115 பந்துகள்
பிராண்டன் டெய்லர் - 117 பந்துகள்
- நாங்கள் 1-2 சுற்றுப்பயணத்திற்கு கேப்டன்களைத் தேர்ந்தெடுக்கவில்லை.
- நாங்கள் எதிர்காலைத்தை கருத்தில் கொண்டு முன்னேற விரும்புகிறோம்.
மும்பை:
இந்திய கிரிக்கெட் அணி அடுத்த மாதம் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இந்தியா- இங்கிலாந்து இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி ஜூன் 20-ந்தேதி லீட்சில் தொடங்குகிறது.
இந்நிலையில் இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான 17 பேர் கொண்ட இந்திய அணியை பி.சி.சி.ஐ. இன்று அறிவித்தது. இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக சுப்மன் கில் நியமனம் செய்யப்பட்டுள்ளார். துணை கேப்டனாக ரிஷப் பண்ட் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் நாங்கள் மிகவும் நம்பிக்கையுடன் இருக்கிறோம், அதனால்தான் கில்லை தேர்ந்தெடுக்கிறோம் என இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைத் தேர்வாளர் அஜித் அகர்கர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
நாங்கள் 1-2 சுற்றுப்பயணத்திற்கு கேப்டன்களைத் தேர்ந்தெடுக்கவில்லை. நாங்கள் எதிர்காலைத்தை கருத்தில் கொண்டு முன்னேற விரும்புகிறோம். கடந்த 2 ஆண்டுகளில் அவரிடம் (கில்) சில முன்னேற்றங்களைக் கண்டிருக்கிறோம்.
இங்கிலாந்தில் 5 போட்டிகள் கொண்ட தொடரை விளையாடுவது கடினமாக இருக்கும். ஒருவேளை நாம் கொஞ்சம் கற்றுக்கொள்ள வேண்டியிருக்கும். ஆனால் நாங்கள் மிகவும் நம்பிக்கையுடன் இருக்கிறோம். அதனால்தான் நாங்கள் அவரைத் தேர்ந்தெடுக்கிறோம்.
என்று கூறினார்.
- 65-வது லீக் போட்டியில் பெங்களூரு, ஐதராபாத் அணிகள் நேற்று மோதின.
- இந்த போட்டியில் ஐதராபாத் அணி 42 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
லக்னோ:
ஐ.பி.எல். தொடரின் 65-வது லீக் போட்டி லக்னோவில் நேற்று நடைபெற்றது. இதில் பெங்களூரு, ஐதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்ற ஆர்சிபி அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் களமிறங்கிய ஐதராபாத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 231 ரன்கள் குவித்தது. இதையடுத்து, 232 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆர்சிபி அணி 189 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் 42 ரன்கள் வித்தியாசத்தில் ஐதராபாத் அணி வெற்றி பெற்றது.
இந்நிலையில் ஐதராபாத் அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் மற்றும் பெங்களூரு அணியின் கேப்டன் ரஜத் பட்டிதாருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
அதன்படி மெதுவாக பந்து வீசியதாக ஐதராபாத் அணியின் கேப்டனுக்கு ரூ.12 லட்சம் அபராதமாக விதிக்கப்பட்டது. நடப்பு ஐபிஎல் தொடரில் இது முதல் முறையாக விதியை மீறியதால் ரூ. 12 லட்சம் மட்டுமே அபராதமாக விதிக்கப்பட்டது. ஆர்சிபி கேப்டனுக்கு இது 2-வது முறை என்பதால் அவருக்கு ரூ.24 லட்சம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஆர்சிபி அணி வீரர்களுக்கு ரூ.6 லட்சம் அல்லது போட்டி கட்டணத்தில் இருந்து 25 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதில் எது குறைந்த கட்டணமாக பார்க்கப்படுகிறதோ அதை அபராதமாக வசூக்கப்படும் என ஐபிஎல் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
- இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் 8 ஆண்டுகளுக்கு பிறகு கருண் நாயர் இடம் பிடித்துள்ளார்.
- டெஸ்ட்டில் கருண் நாயரின் அதிகபட்ச ஸ்கோர் 303 ரன்கள் ஆகும்.
இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்த நிலையில் புதிய டெஸ்ட் கேப்டனை பிசிசிஐ தேர்வு செய்தது.
அஜித் அகர்கர் தலைமையிலான தேர்வுக் குழு அடுத்து வரும் இங்கிலாந்து டெஸ்ட் மட்டுமல்லாமல் நீண்ட காலத்திற்கு அணியை வழிநடத்தக்கூடிய கேப்டனை இன்று அறிவித்துள்ளது.
அந்த வகையில் இந்திய அணியின் புதிய டெஸ்ட் கேப்டனாக சுப்மன் கில் அறிவிக்கப்பட்டார். மேலும் துணை கேப்டனாக ரிஷப் பந்த் அறிவிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் இந்திய டெஸ்ட் அணியில் 8 ஆண்டுகளுக்கு பிறகு, கருண் நாயர் இடம் பிடித்துள்ளார். உள்நாட்டுப் போட்டிகளில் தொடர்ச்சியாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவதால் மீண்டும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. அவர் கடைசியாக 2017-ம் ஆண்டும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக விளையாடியிருந்தார்.
டெஸ்ட்டில் 6 போட்டிகளில் விளையாடி 374 ரன்கள் குவித்துள்ளார். இவரின் அதிகபட்ச ஸ்கோர் 303 ரன்கள் ஆகும். இதனை இங்கிலாந்து எதிராக அவர் அடித்தது குறிப்பிடத்தக்கது.
இந்திய அணி விவரம்:
சுப்மன் கில் (கேப்டன்), ரிஷப் பந்த் (துணை கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், கேஎல் ராகுல், சாய் சுதர்சன், அபிமன்யு ஈஸ்வரன், கருண் நாயர், நிதிஷ் ரெட்டி, ரவீந்திர ஜடேஜா, துருவ் ஜூரல் (விக்கெட் கீப்பர்), வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாகூர், ஜஸ்ப்ரித் பும்ரா, பிரசித் கிருஷ்ணா, ஆகாஷ் தீப், அர்ஷ்தீப் சிங், குல்தீப் யாதவ், முகமது சிராஜ்.
- தீப்தி சர்மா சார்பில் அவரது சகோதரர் சுமித் சர்மா போலீசாரிடம் இந்தப் புகாரை அளித்தார்.
- இந்த புகார் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ரூ.25 லட்சம் பண மோசடியில் ஈடுபட்டதாக உ.பி. வாரியர்ஸ் அணி வீராங்கனை ஆருஷி கோயல் மீது அந்த அணியின் கேப்டனும் இந்திய கிரிக்கெட் வீராங்கனையுமான தீப்தி சர்மா பரபரப்பு புகார் அளித்துள்ளார்.
குடும்ப அவசர நிலை எனக் கூறி ஆருஷியும் அவரது தாயாரும் தன்னிடம் இருந்து இருந்து பணம் வாங்கி ஏமாற்றியதாக தீப்தி சர்மா தனது புகாரில் தெரிவித்துள்ளார்.
மேலும், ஆக்ராவில் உள்ள தனது குடியிருப்பில் புகுந்து தங்கம், வெள்ளி, ரூ.2 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு பணத்தையும் ரொக்கத்தை ஆருஷி கோயல் திருடிச் சென்றதாகவும் தனது புகாரில் அவர் தெரிவித்துள்ளார்.
தீப்தி சர்மா சார்பில் அவரது சகோதரர் சுமித் சர்மா போலீசாரிடம் இந்தப் புகாரை அளித்தார். இந்த புகார் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- பும்ரா அடிக்கடி காயம் அடைவதால், அவரை தேர்ந்தெடுக்க பிசிசிஐ தயங்கியது.
- துணை கேப்டனாக ரிஷப் பந்த் அறிவிக்கப்பட்டுள்ளார்.
இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்த நிலையில் புதிய டெஸ்ட் கேப்டனை பிசிசிஐ தீவிரமாகத் தேடி வந்தது.
அஜித் அகர்கர் தலைமையிலான தேர்வுக் குழு அடுத்து வரும் இங்கிலாந்து டெஸ்ட் மட்டுமல்லாமல் நீண்ட காலத்திற்கு அணியை வழிநடத்தக்கூடிய கேப்டனை தேடியது.
அந்த வகையில் சுப்மன் கில் அடுத்த டெஸ்ட் கேப்டன் ஆக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ இன்று (மே 24) அறிவித்துள்ளது. மேலும் துணை கேப்டனாக ரிஷப் பந்த் அறிவிக்கப்பட்டுள்ளார்.

பும்ரா அடிக்கடி காயம் அடைவதால், அவரை தேர்ந்தெடுக்க பிசிசிஐ தயக்கம் காட்டி வந்த நிலையில் சுப்மன் கில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
நடப்பு ஐபிஎல் தொடரில் குஜராத் அணியின் கேப்டனாக சுப்மன் கில் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். மேலும் இதுவரை 32 டெஸ்ட் போட்டிகளில் சுப்மன் கில் விளையாடியுள்ளார்.
இந்நிலையில் ஜூன் 20 ஆம் தேதி ஹெடிங்லியில் தொடங்கும் ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட இங்கிலாந்து டெஸ்ட் தொடர் முதல் சுப்மன் கில் இந்திய அணியை வழிநடத்த உள்ளார்.
இந்திய அணி விவரம்:
சுப்மன் கில் (கேப்டன்), ரிஷப் பந்த் (துணை கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், கேஎல் ராகுல், சாய் சுதர்சன், அபிமன்யு ஈஸ்வரன், கருண் நாயர், நிதிஷ் ரெட்டி, ரவீந்திர ஜடேஜா, துருவ் ஜூரல் (விக்கெட் கீப்பர்), வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாகூர், ஜஸ்ப்ரித் பும்ரா, பிரசித் கிருஷ்ணா, ஆகாஷ் தீப், அர்ஷ்தீப் சிங், குல்தீப் யாதவ், முகமது சிராஜ்.






