என் மலர்
கிரிக்கெட் (Cricket)
- ஆஸ்திரேலியா- இங்கிலாந்து அணிகள் மோதும் ஆஷஸ் தொடர் வருகிற 21-ந் தேதி தொடங்க உள்ளது.
- இந்த தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெறுகிறது.
ஆஸ்திரேலியா- இங்கிலாந்து அணிகள் மோதும் மிகவும் பிரபலமான ஆஷஸ் தொடர் வருகிற 21-ந் தேதி தொடங்க உள்ளது. இந்த தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெறுகிறது.
இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி பெர்த் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெறுவதால் ஆஸ்திரேலியா இந்த தொடரை வெல்ல அதிக வாய்ப்புள்ளது.
இந்த நிலையில் இந்த தொடர் குறித்து கருத்துக்கள் சமூக வலைதளங்களில் பேசும் பொருளாக வலம் வர தொடங்கி உள்ளது. அந்த வகையில் இந்த தொடரில் யார் தொடரை கைப்பற்றுவார்கள் என கேள்வி எழுந்துள்ளது. அதற்கு பல்வேறு அணிகளின் முன்னாள் வீரர்கள் பதில் அளித்து வருகின்றனர்.
அந்த வகையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் தினேஷ் கார்த்திக் ஆஸ்திரேலியா 3-2 என்ற கணக்கில் தொடரில் வெற்றி பெறும் என கூறியுள்ளார்.
ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் ஆஸ்திரேலியா 4-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றும் என தெரிவித்துள்ளார். மேலும் மற்ற முன்னாள் ஆஸ்திரேலியா வீரர்களான மெக்ராத், ஆஸ்திரேலியா (5-0) வெற்றி பெறும். கிளார்க் ஆஸ்திரேலியா (3-1) வெற்றி பெறும்.
இதே போல முன்னாள் இங்கிலாந்து வீரர்களான குக், இங்கிலாந்து (3-1) என வெற்றி பெறும் என கூறியுள்ளார். மேலும் ஸ்வான் (இங்கிலாந்து 3-2), டி லாயிட் (இங்கிலாந்து 5-0), ஓ'கீஃப் (இங்கிலாந்து 3-0) என வெற்றி பெறும் என கருத்து தெரிவித்துள்ளனர்.
ஆனால் வாகன் மட்டும் இந்த தொடர் டிராவில் முடிவடையும் என தெரிவித்துள்ளார்.
- வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து வெற்றி பெற்றது.
- முதல் போட்டியில் மிட்செல் ஆட்டநாயகன் விருது வென்றார்.
வெலிங்டன்:
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஆடி வருகிறது. இதில் இவ்விரு அணிகள் இடையிலான முதல் போட்டி நேற்று முடிவடைந்தது.
அந்த போட்டியில் டேரில் மிச்செலின் அபார சதத்தின் உதவியுடன் நியூசிலாந்து அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 2-வது போட்டி 19-ம் தேதி நடைபெற உள்ளது.
முதல் போட்டியின்போது தொடை பகுதியில் ஏற்பட்ட காயத்திற்கு ஸ்கேன் செய்ய உள்ளதால் மிட்செல் 2-வது போட்டியில் இருந்து விலகியதாக நேற்று தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் காயத்தின் தன்மை அதிகமாக இருப்பதால் ஒருநாள் தொடரில் இருந்தே அவர் விலகியுள்ளார். இது நியூசிலாந்து அணிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது. அவருக்கு பதிலாக நிக்கோலஸ் அணியில் இடம் பிடித்துள்ளார்.
முதல் போட்டியில் இவர் ஆட்ட நாயகன் விருது வென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- கடந்த சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 10-வது இடத்தை பிடித்தது.
- கடந்த சீசன் முடிந்தவுடன் சேப்பாக்கத்தை புதுபிக்க நிர்வாகம் முடிவு செய்தது.
ஐபிஎல் தொடரின் மினி ஏலம் அடுத்த மாதம் 15-ந் தேதி நடக்கவுள்ளது. அதற்கு முன்னதாக 10 அணிகளும் தங்களிடம் உள்ள வீரர்களை தக்க வைத்தல், கழற்றி விடுதல் மற்றும் டிரேட் முறையில் வீரர்களை மாற்றியுள்ளனர்.
இதனால் மினி ஏலத்தில் எந்த வீரர்கள் எந்த அணிக்கு இடம் பெற உள்ளனர் என்பது குறித்து ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர். குறிப்பாக சிஎஸ்கே அணியில் பெரிய மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. நட்சத்திர ஆல் ரவுண்டர் ஜடேஜாவை ராஜஸ்தான் அணிக்கு கொடுத்து விட்டு அந்த அணியின் கேப்டனாக சஞ்சு சாம்சனை சென்னை அணி டிரேட் முறையில் வாங்கியுள்ளது.
மேலும் சென்னை அணியில் இருந்து பல வீரர்கள் கழற்றி விடப்பட்டுள்ளனர். இதனால் எந்த வீரரை சென்னை அணி ஏலத்தில் எடுக்கவுள்ளது என்ற ஆவல் ரசிகர்ளிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை அணியின் இத்தனை மாற்றத்திற்கு முக்கிய காரணமாக போன சீசன் அமைந்தது ஆகும். கடந்த சீசனில் சென்னை அணி யாரும் எதிர்பார்க்காத வகையில் புள்ளி பட்டியலில் கடைசி இடத்தை பிடித்தது. குறிப்பாக சென்னையில் விளையாடி நிறைய போட்டிகள் தோல்வியடைந்தது.
இதனால் சிஎஸ்கே அணியின் சொந்த மைதானமான சேப்பாக்கத்தை புதுபிக்க நிர்வாகம் முடிவு செய்தது. அதன்படி ஐபிஎல் சீசன் முடிந்த உடனே ஜூன் மாதம் இதற்கான வேலையை அணி நிர்வாகம் தொடங்கியது. இதனால் இந்த ஆண்டு இறுதி வரை சர்வதேச போட்டிகள் இங்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
இந்த மைதானத்தை புதுபிக்க முதன்மை காரணம், உலகத் தரம் வாய்ந்த வடிகால் அமைப்பை நிறுவுதல், அவுட்ஃபீல்டை மாற்றுதல், பிட்ச் மற்றும் புல் மேற்பரப்பை மேம்படுத்துதல் ஆகும். இதனால் மழை பெய்த பிறகு விரைவாக விளையாட்டைத் தொடர அனுமதிக்கும் மற்றும் உயர்தர போட்டிகளை உறுதிப்படுத்தவும் ஆகும்.
இந்நிலையில் இந்த மைதானத்தை புதுபிக்க நடந்த வேலைகள் குறித்த வீடியோவை தமிழ்நாடு கிரிக்கெட் அசோசியன்ஸ் வெளியிட்டுள்ளது. இதில் வேலை தொடங்கியதில் இருந்து மைதானம் ரெடியாகும் வரை உள்ள காட்சிகள் இடம் பெற்றுள்ளது.
- ஆடுகளம் அமைப்பவரை அவரின் செயல்பாட்டுக்கு ஏற்ற வகையில் விட்டு விடுவது நல்லது.
- பிட்ச் தயாரிப்பவரிடம் நீங்கள் அதிகமாக தலையிடக்கூடாது.
கொல்கத்தா, நவ.18-
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான கொல்கத்தா டெஸ்டில் இந்திய அணி 124 ரன் இலக்கை எடுக்க முடி யாமல் 93 ரன்னில் சுருண்டு படு தோல்வி அடைந்தது.இரு அணிகளும் பேட்டிங் செய்ய முடியாத அளவுக்கு ஆடுகளம் மோசமாக இருந் தது. 3 தினங்களில் போட்டி முடிவடைந்தது.
தொடக்க நாளில் இருந்தே கொல்கத்தா ஆடு களம் (பிட்ச்) சுழற்பந்து வீச்சுக்கு உகந்ததாக இருந் தது. இது மாதிரியான பிட்சை அமைக்குமாறு ஆடு கள பராமரிப்பாளரிடம் பயிற்சியாளர் காம்பீர் கேட் டுள்ளார். இதனால் தான் இந்திய அணி 4 சுழற்பந்து வீரர்களுடன் களம் இறங் கியது. அதே நேரத்தில் இந்திய பேட்ஸ்மேன்க ளாலும் இந்த ஆடுகளத்தில் நிலைத்து நின்று ஆட முடிய வில்லை. இதனால் காம்பீர் கடும் விமர்சனத்தை சந்தித் துள்ளார்.
இந்திய அணி முன்னாள் கேப்டன் கங்குலி, முன்னாள் வீரர்கள் புஜாரா, ஹர்பஜன் சிங் ஆகியோர் ஆடுகளம் தொடர்பாக காம்பீரை சாடி இருந்தனர்.
இந்த நிலையில் முன் னாள் கேப்டனும், டெலிவி சன் வர்ணனையாளருமான கவாஸ்கரும் இது தொடர் பாக தனது கருத்தை பதிவு செய்துள்ளனர். ஆடுகளத் தின் தன்மை தொடர்பாக தலையிடக்கூடாது என்று அவர் காம்பீரை அறிவுறுத்தி உள்ளார். இதுகுறித்து கவாஸ்கர் கூறியதாவது:-
ஆடுகள பராமரிப்பாள ரை நீங்கள் (காம்பீர்) தனி யாக விட்டு விட வேண்டும். பிட்ச் நிலைமைகளை உத்தர விட முயற்சிக்கக் கூடாது. அது சில நேரங்களில் எதிர் விளைவை ஏற்படுத்தும். ஆடுகளம் அமைப்பவரை அவரின் செயல்பாட்டுக்கு ஏற்ற வகையில் விட்டு விடு வது நல்லது. ஏனென்றால் அவர் மற்றவர்களை விட தனது வேலையை பற்றி நன்கு அறிவார்.
பிட்ச் தயாரிப்பவரிடம் நீங்கள் அதிகமாக தலை யிடக்கூடாது. இதனால் ஏற் படும் விளைவுகளை தவிர்க்க வேண்டும்.
இவ்வாறு கவாஸ்கர் கூறியுள்ளார்.
- கடந்த 2024-ம் ஆண்டு சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியால் பேட் கம்மின்ஸ் ரூ.20.50 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டு, அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார்.
- தற்போது மூன்றாவது முறையாக கேப்டனாக சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியை வழிநடத்த உள்ளார்.
அடுத்த ஆண்டு நடைபெற உள்ள ஐ.பி.எல். சீசனுக்கான மினி ஏலம் வருகிற டிசம்பர் மாதம் 16-ந்தேதி அபுதாபியில் நடைபெற உள்ளது. இந்த மினி ஏலத்திற்கு முன்பாக அணிகள் தங்களுக்கு தேவையான வீரர்களை தக்க வைத்துக்கொள்ளவும், விடுவிக்க விரும்பும் வீரர்களை விடுவிக்கவும் கடந்த 15-ந்தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டது.
அதன்படி, ஐ.பி.எல். தொடரில் பங்கேற்று விளையாடும் 10 அணிகளும் தங்களுக்குத் தேவையான வீரர்களை தக்கவைத்தும், விடுவித்தும் உள்ளனர். இதனை தொடர்ந்து, அடுத்த சீசனில் தங்களது அணிக்கான பயிற்சியாளர்கள், உதவிப்பயிற்சியாளர்கள் மற்றும் புதிய கேப்டன்களை தேர்வு செய்யும் பணியில் அணி நிர்வாகம் ஈடுபட்டு வருகிறது.
அந்த வகையில், அடுத்த ஆண்டு ஐ.பி.எல். சீசனில் ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணியின் கேப்டனாக வேகப்பந்து வீச்சாளர் பேட் கம்மின்ஸ் (ஆஸ்திரேலியா) தொடருவார் என்று அந்த அணி நிர்வாகம் அறிவித்துள்ளது.
கடந்த 2024-ம் ஆண்டு சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியால் பேட் கம்மின்ஸ் ரூ.20.50 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டு, அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார். கடந்த இரண்டு சீசன்களாக சன்ரைசர்ஸ் அணியை பேட் கம்மின்ஸ் கேப்டனாக வழிநடத்தி வருகிறார். தற்போது மூன்றாவது முறையாக கேப்டனாக சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியை வழிநடத்த உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- சமீபத்தில் நடந்த மகளிர் உலக கோப்பையை இந்தியா வென்றது.
- ஸ்மிருதி மந்தனாவுக்கு நவம்பர் 20-ம் தேதி திருமணம் நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மும்பையை சேர்ந்த 29 வயதாகும் இடது கை பேட்டரான ஸ்மிருதி மந்தனா இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீராங்கனையாகவும், துணை கேப்டனாகவும் இருந்து வருகிறார். இவருக்கு நாடு முழுவதும் லட்சக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர்.
சமீபத்தில் நடந்த மகளிர் உலக கோப்பை இறுதி போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணியை வீழ்த்தி இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது.
இந்நிலையில் உலக கோப்பையை தனது கையில் டாட்டூவாக ஸ்மிருதி மந்தனா போட்டுள்ளார். இது தொடர்பான புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இதற்கிடையே ஸ்மிருதி மந்தனாவும், இசையமைப்பாளர் பலாஷ் முச்சல் என்பவரும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வருகின்றனர். இருவருக்கும் நவம்பர் 20-ம் தேதி திருமணம் நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
- பாகிஸ்தானுக்கும் அதன் கிரிக்கெட் வாரியத்திற்கும் ஒரு பெருமையான தருணம்.
- நமது இளம் வீரர்கள் அற்புதமாக விளையாடினார்கள்
ஆசிய கோப்பை ரைசிங் ஸ்டார் டி20 போட்டி கத்தார் தலைநகர் தோஹாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதின. இதில் பாகிஸ்தான் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது.
இந்திய அணியை பாகிஸ்தான் வீழ்த்திய நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் மொஷின் நக்வி தனது எக்ஸ் பக்கத்தில் இந்த இளம் பாகிஸ்தான் அணியை பாராட்டி பதிவிட்டுள்ளார். இது வைரலாகி வருகிறது.
மொஷின் நக்வி தனது எக்ஸ் பக்கத்தில், பாகிஸ்தானுக்கும் அதன் கிரிக்கெட் வாரியத்திற்கும் இன்று என்ன ஒரு பெருமையான தருணம்! எங்கள் பாகிஸ்தான் அணி 13.2 ஓவர்களில் இலக்கை துரத்தி, இந்தியா ஏ அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது.
இது தோஹாவில் நடந்த ஆசிய கோப்பை ரைசிங் ஸ்டார்ஸ் போட்டியில் ஆதிக்கம் செலுத்தும் அச்சமற்ற மற்றும் மறக்க முடியாத செயல்திறன். நமது இளம் வீரர்கள் அற்புதமாக விளையாடினார்கள். பாகிஸ்தானின் எதிர்காலம் பிரகாசமாக ஜொலிக்கிறது. தேசத்திற்கு வாழ்த்துகள்! என்று பதிவிட்டுள்ளார்.
- இந்தியாவின் தோல்விக்குத் தற்கால பேட்ஸ்மேன்களின் டெக்னிக்தான் காரணம்.
- கிரிக்கெட்டில் இப்போது நிலைத்து நின்று ஆடுவதற்கோ, சுழற்பந்தை எதிர்கொள்ளும் கலைக்கோ முக்கியத்துவம் இல்லை.
கொல்கத்தா:
இந்தியா- தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்றது. இதில் தென் ஆப்பிரிக்கா 30 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்நிலையில் இந்திய அணியின் தோல்விக்கு காரணம் பேட்ஸ்மேன்களிடம் சரியான டெக்னிக் இல்லாதது தான் என இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் கெவின் பீட்டர்சன் தெரிவித்துள்ளார்,
இது குறித்து அவர் கூறியதாவது:-
கொல்கத்தாவில் ஆடுகளத்தைப் பார்த்தேன். ஸ்கோரைப் பார்த்தேன். முடிவையும் பார்த்தேன். இந்தியாவின் தோல்விக்குத் தற்கால பேட்ஸ்மேன்களின் டெக்னிக்தான் காரணம். இப்போதெல்லாம் பேட்ஸ்மேன்கள் சிக்சர்கள் அடிக்கவும், ஸ்விட்ச்-ஹிட் ஆடவும்தான் கற்றுக்கொள்கிறார்கள்.
வீரர்களுக்கு பயிற்சியில் என்ன கற்றுக்கொடுக்கப்படுகிறது என்பது எனக்குத் தெரியும். இதில் வீரர்களைக் குறை சொல்ல முடியாது, தற்கால கிரிக்கெட்டின் போக்கே இதுதான். கிரிக்கெட்டில் இப்போது நிலைத்து நின்று ஆடுவதற்கோ, சுழற்பந்தை எதிர்கொள்ளும் கலைக்கோ முக்கியத்துவம் இல்லை.
இப்போதைய கிரிக்கெட் பணத்தை சுற்றித் தான் இருக்கிறது. ஆனால், அதைப்பற்றி யாரும் பேச மாட்டார்கள். ஆனால், நான் பேசுவேன், ஏனென்றால் அதுதான் உண்மை. வீரர்களுக்கு அவர்களால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு பணம் சம்பாதிக்க சக்தி கிடைக்க வேண்டும் என்று நான் வேண்டிக் கொள்கிறேன்.
என்று கெவின் பீட்டர்சன் கூறினார்.
- இந்தியா ஏ அணிக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் ஏ அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
- இந்த போட்டியில் ஒரு கேட்ச் சர்ச்சையானது.
தோஹா:
தோஹாவில் ஆசிய கோப்பை ரைசிங் ஸ்டார்ஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற போட்டியில் இந்தியா 'ஏ' அணி, பாகிஸ்தான் ஏ அணியும் மோதின.
இதில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா ஏ அணி 137 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து களமிறங்கிய பாகிஸ்தான் இலக்கை வெறும் 13.2 ஓவர்களில் விரட்டி பிடித்து வெற்றி பெற்றது.
முன்னதாக பாகிஸ்தான் பேட்டிங் செய்த போது சர்ச்சைக்குரிய கேட்ச் சம்பவம் அரங்கேறியது. இது தற்போது சமூக வலைதளங்களில் பேசும் பொருளாக உருவெடுத்துள்ளது.
பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர் மாஸ் சதகத் அடித்த பந்தை பவுண்டரி லைன் அருகே பீல்டிங் செய்துகொண்டிருந்த நேஹல் வதேரா மற்றும் நமன் தீர் ஆகியோர் இணைந்து ஒரு அற்புதமான கேட்சைப் பிடித்தனர்.
பந்து சிக்ஸருக்குச் செல்வதைத் தடுத்த நேஹல் வதேரா, பவுண்டரி லைனுக்கு வெளியே செல்வதற்கு முன்பு பந்தை மேலே தூக்கி எறிந்தார். பவுண்டரி லைனுக்குள் இருந்த மற்றொரு வீரரான நமன் தீர், அந்தப் பந்தைப் பிடித்தார்.
இந்திய வீரர்கள் விக்கெட் விழுந்துவிட்டதாகக் கொண்டாடத் தொடங்கினர். பேட்ஸ்மேன் சதகத்தும் பெவிலியனை நோக்கி நடக்க ஆரம்பித்தார். ஆனால், மூன்றாவது நடுவர் ரீப்ளேக்களை நீண்ட நேரம் ஆய்வு செய்து, இறுதியில் 'நாட் அவுட்' என்று அறிவித்தது,
நடுவரின் இந்த முடிவால் குழப்பமும், விரக்தியும் அடைந்த இந்திய கேப்டன் ஜித்தேஷ் சர்மா மற்றும் வீரர்கள், நடுவரிடம் சென்று, "ஏன் அவுட் இல்லை?" என்று கேள்வி எழுப்பி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
ஐசிசி-யின் விதி 19.5.2-இன்படி, ஒரு பீல்டர் பவுண்டரி லைனுக்கு வெளியே இருந்து காற்றில் பறந்தபடி பந்தைத் தொடலாம். ஆனால், காற்றில் பறந்து பந்தைத் தொட்ட பிறகு, அவர் மீண்டும் தரையைத் தொடுவதற்கு முன்பு பந்து கையில் இருந்து விடுபட்டிருக்க வேண்டும். பந்தைப் பிடித்த பிறகு, பீல்டர் பவுண்டரி லைனுக்கு வெளியே தரையைத் தொட்டால், அது சிக்சராக அறிவிக்கப்படும்.
இந்தச் சம்பவத்தில், நேஹல் வதேரா பந்தை முதல்முறை தொட்ட பிறகு, அதை நமன் திர் பக்கம் தூக்கி எறிந்துவிட்டார். அதன் பிறகு, அவர் பவுண்டரி லைனுக்கு வெளியே தரையைத் தொட்டாலும், பந்து அவரது கட்டுப்பாட்டில் இல்லை. எனவே, பந்து இன்னும் ஆட்டத்தில் இருந்ததாகவே கருதப்படும். நமன் தீர் பிடித்த கேட்ச் முற்றிலும் சரியானதும், விதிகளுக்கு உட்பட்டதுமாகும்.
ஒருவேளை பந்தை வீசிய வதேரா பவுண்டரி லைன்க்கு உள்ளேயே இருந்ததால் இது நாட் அவுட் கொடுக்கப்பட்டதாகவும் கிரிக்கெட் வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.
- வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து வெற்றி பெற்றது.
- முதல் போட்டியில் மிட்செல் ஆட்டநாயகன் விருது வென்றார்.
வெலிங்டன்:
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஆடி வருகிறது. இதில் இவ்விரு அணிகள் இடையிலான முதல் போட்டி நேற்று முடிவடைந்தது.
அந்த போட்டியில் டேரில் மிச்செலின் அபார சதத்தின் உதவியுடன் நியூசிலாந்து அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 2-வது போட்டி 19-ம் தேதி நடைபெற உள்ளது.
இந்நிலையில் இந்த 2-வது போட்டியிலிருந்து நியூசிலாந்து முன்னணி வீரரான டேரில் மிச்செல் விலகியுள்ளார். முதல் போட்டியின்போது தொடை பகுதியில் ஏற்பட்ட காயத்திற்கு ஸ்கேன் செய்ய உள்ளதால் அவர் 2-வது போட்டியில் இருந்து விலகியுள்ளார். முதல் போட்டியில் இவர் ஆட்ட நாயகன் விருது வென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் இந்தியா தோல்வி அடைந்தனர்.
- முதல் டெஸ்ட் போட்டியின் போது சுப்மன் கில்லுக்கு கழுத்தில் காயம் ஏற்பட்டது.
தென் ஆப்பிரிக்கா அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் டெஸ்ட் தொடர் கடந்த 14-ந் தேதி நடைபெற்றது. இதில் இந்திய அணி படுதோல்வி அடைந்தது. இதன் மூலம் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என்ற கணக்கில் தென் ஆப்பிரிக்கா முன்னிலை வகிக்கிறது.
இதனையடுத்து 2-வது டெஸ்ட் போட்டி வருகிற 22-ந் தேதி கவுதாத்தியில் நடைபெற உள்ளது. இந்நிலையில் இந்த டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் இடம் பெறுவது சந்தேகம் என தகவல் வெளியாகி உள்ளது.
முதல் டெஸ்ட் போட்டியின் போது சுப்மன் கில்லுக்கு கழுத்தில் காயம் ஏற்பட்டது. இதனையடுத்து அவர் காயம் காரணமாக அந்த போட்டியில் இருந்து வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது
- யார் வெளியில் இருக்கிறார்கள் என்பது விசயம் இல்லை.
- எங்களால் இன்னும் வெற்றிக்கான வழியை கண்டுபிடிக்க முடியும்.
இந்தியா- தென்ஆப்பிரிக்கா இடையிலான முதல் டெஸ்ட் போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்றது. காயம் காரணமாக தென்ஆப்பிரிக்கா வேகப்பந்து வீச்சாளர் ரபாடா கடைசி நேரத்தில் அணியில் இருந்து விலகினார். என்றாலும் யான்சன் வேகப்பந்து வீச்சில் அசத்தினார். ரபாடாவுக்கு பதிலா களம் இறங்கிய போஸ்ச் 2ஆவது இன்னிங்சில் பவுமா உடன் பார்ட்னர்ஷிப் அமைத்தார். சுழற்பந்து வீச்சாளர் ஹார்மர் இரண்டு இன்னிங்சிலும் தலா 4 விக்கெட்டுகள் வீழ்த்த தென்ஆப்பிரிக்கா 30 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்திய மண்ணில் 15 வருடங்களுக்கு மேல் தென்ஆப்பிரிக்கா அணி வெற்றி பெற்றுள்ளது. இந்த நிலையில் யார் வெளியே இருக்கிறார்கள் என்பது முக்கியமான விசயம் அல்ல எனத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ரபாடா கூறியதாவது:-
யார் வெளியில் இருக்கிறார்கள் என்பது விசயம் இல்லை. எங்களால் இன்னும் வெற்றிக்கான வழியை கண்டுபிடிக்க முடியும். கேப்டன் பவுமா எங்களுக்கு முக்கியமானவர். ஆனால், அவர் எல்லா போட்டிகளிலும் விளையாடுவதில்லை. நான் கொல்கத்தா போட்டியில் விளையாடவில்லை.
பாகிஸ்தானுக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட தொடரில் பவுமா விளையாடவில்லை. அதில் தென்ஆப்பிரிக்கா 1-1 என தொடரை சமன் செய்தது. யார் மைதானத்தில் இருந்து வெளியேறினால் அது பெரிய விசயம் அல்ல. உள்ளே உள்ள மற்ற வீரர்களால் பணியை சிறப்பாக செய்ய முடியும் என நாங்கள் நம்புகிறோம்.
இவ்வாறு ரபாடா தெரிவித்தார்.






