என் மலர்
கிரிக்கெட் (Cricket)

ஆஷஸ் தொடரை கைப்பற்றுவது யார்? முன்னாள் வீரர்கள் கொடுத்த பதில் வைரல்
- ஆஸ்திரேலியா- இங்கிலாந்து அணிகள் மோதும் ஆஷஸ் தொடர் வருகிற 21-ந் தேதி தொடங்க உள்ளது.
- இந்த தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெறுகிறது.
ஆஸ்திரேலியா- இங்கிலாந்து அணிகள் மோதும் மிகவும் பிரபலமான ஆஷஸ் தொடர் வருகிற 21-ந் தேதி தொடங்க உள்ளது. இந்த தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெறுகிறது.
இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி பெர்த் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெறுவதால் ஆஸ்திரேலியா இந்த தொடரை வெல்ல அதிக வாய்ப்புள்ளது.
இந்த நிலையில் இந்த தொடர் குறித்து கருத்துக்கள் சமூக வலைதளங்களில் பேசும் பொருளாக வலம் வர தொடங்கி உள்ளது. அந்த வகையில் இந்த தொடரில் யார் தொடரை கைப்பற்றுவார்கள் என கேள்வி எழுந்துள்ளது. அதற்கு பல்வேறு அணிகளின் முன்னாள் வீரர்கள் பதில் அளித்து வருகின்றனர்.
அந்த வகையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் தினேஷ் கார்த்திக் ஆஸ்திரேலியா 3-2 என்ற கணக்கில் தொடரில் வெற்றி பெறும் என கூறியுள்ளார்.
ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் ஆஸ்திரேலியா 4-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றும் என தெரிவித்துள்ளார். மேலும் மற்ற முன்னாள் ஆஸ்திரேலியா வீரர்களான மெக்ராத், ஆஸ்திரேலியா (5-0) வெற்றி பெறும். கிளார்க் ஆஸ்திரேலியா (3-1) வெற்றி பெறும்.
இதே போல முன்னாள் இங்கிலாந்து வீரர்களான குக், இங்கிலாந்து (3-1) என வெற்றி பெறும் என கூறியுள்ளார். மேலும் ஸ்வான் (இங்கிலாந்து 3-2), டி லாயிட் (இங்கிலாந்து 5-0), ஓ'கீஃப் (இங்கிலாந்து 3-0) என வெற்றி பெறும் என கருத்து தெரிவித்துள்ளனர்.
ஆனால் வாகன் மட்டும் இந்த தொடர் டிராவில் முடிவடையும் என தெரிவித்துள்ளார்.






