என் மலர்
கிரிக்கெட் (Cricket)

பாகிஸ்தானின் எதிர்காலம் பிரகாசமாக ஜொலிக்கிறது- மொஷின் நக்வி
- பாகிஸ்தானுக்கும் அதன் கிரிக்கெட் வாரியத்திற்கும் ஒரு பெருமையான தருணம்.
- நமது இளம் வீரர்கள் அற்புதமாக விளையாடினார்கள்
ஆசிய கோப்பை ரைசிங் ஸ்டார் டி20 போட்டி கத்தார் தலைநகர் தோஹாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதின. இதில் பாகிஸ்தான் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது.
இந்திய அணியை பாகிஸ்தான் வீழ்த்திய நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் மொஷின் நக்வி தனது எக்ஸ் பக்கத்தில் இந்த இளம் பாகிஸ்தான் அணியை பாராட்டி பதிவிட்டுள்ளார். இது வைரலாகி வருகிறது.
மொஷின் நக்வி தனது எக்ஸ் பக்கத்தில், பாகிஸ்தானுக்கும் அதன் கிரிக்கெட் வாரியத்திற்கும் இன்று என்ன ஒரு பெருமையான தருணம்! எங்கள் பாகிஸ்தான் அணி 13.2 ஓவர்களில் இலக்கை துரத்தி, இந்தியா ஏ அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது.
இது தோஹாவில் நடந்த ஆசிய கோப்பை ரைசிங் ஸ்டார்ஸ் போட்டியில் ஆதிக்கம் செலுத்தும் அச்சமற்ற மற்றும் மறக்க முடியாத செயல்திறன். நமது இளம் வீரர்கள் அற்புதமாக விளையாடினார்கள். பாகிஸ்தானின் எதிர்காலம் பிரகாசமாக ஜொலிக்கிறது. தேசத்திற்கு வாழ்த்துகள்! என்று பதிவிட்டுள்ளார்.






