என் மலர்
கிரிக்கெட் (Cricket)
- களத்திற்கு செல்லும் வரை காதில் ஹெட்போனை போட்டுக் கொள்ளுங்கள்.
- கோப்பையை வெல்வதற்கு குறிப்பிட்ட தருணத்தில் அணியாக வெற்றி பெற முயற்சிக்க வேண்டும். அதை நாங்கள் செய்தோம்.
ஐசிசி 2025 மகளிர் உலகக் கோப்பை வரும் செப்டம்பர் 30-ம் தேதி இந்தியாவில் கோலாகலமாக துவங்க உள்ளது. வரலாற்றில் ஒரு முறை கூட இந்திய மகளிர் கிரிக்கெட் அணி உலகக் கோப்பையை வென்றதில்லை.
இம்முறை 2011 போல இந்திய மகளிர் சொந்த மண்ணில் உலகக் கோப்பையை வென்று நீண்ட நாள் கனவை நிஜமாக்கும் வாய்ப்பை பெற்றுள்ளது.
அந்த நிலையில் நேற்று மும்பையில் 2025 மகளிர் உலகக் கோப்பையை அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் 2011 உலகக் கோப்பையில் தான் வெளிப்புற சத்தங்களை காதில் வாங்காமல் உலகக் கோப்பையை வென்று காட்ட வேண்டும் என்று சச்சின் மற்றும் பயிற்சியாளர் கேரி கிர்ஸ்டன் சொன்னதாக யுவராஜ் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
அதுவரை எந்த அணியும் சொந்த மண்ணில் உலகக் கோப்பையை வென்றதில்லை. நாங்கள் 28 வருடங்களாக உலகக் கோப்பையை வெல்லவில்லை. அப்படிப்பட்ட சூழ்நிலையில் இங்கிலாந்துக்கு எதிரான போட்டியை சமன் செய்த நாங்கள் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக வெற்றி பெறும் நிலையிலிருந்து தோற்றோம். அப்போது நாங்கள் ஏராளமான விமர்சனங்களையும் சந்தித்தோம்.
அப்போது எங்களிடம் வந்த சச்சின் மற்றும் கேரி, இங்கிருந்து நாம் கோப்பையை வெல்வதற்கான விஷயங்களை செய்ய வேண்டும். அதற்காக யாரும் தொலைக்காட்சியைப் பார்க்கக்கூடாது. செய்தித்தாளை படிக்கக் கூடாது என்று சொன்னார்கள்.
களத்திற்கு செல்லும் வரை காதில் ஹெட்போனை போட்டுக் கொள்ளுங்கள். களத்தில் கவனத்தைச் செலுத்துங்கள். சத்தங்களை நிறுத்தி கோப்பையை வெல்ல முயற்சியுங்கள் என்றும் சச்சின், கேரி சொன்னார்கள். கோப்பையை வெல்வதற்கு குறிப்பிட்ட தருணத்தில் அணியாக வெற்றி பெற முயற்சிக்க வேண்டும். அதை நாங்கள் செய்தோம். அது வேலையும் செய்தது.
என்று யுவராஜ் சிங் கூறினார்.
- ஆஸ்திரேலிய அணி 17.4 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 165 ரன்கள் எடுத்தது.
- இதனால் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது.
டார்வின்:
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்ற முதல் போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 2-வது போட்டி அதே டார்வின் மைதானத்தில் இன்று நடக்கிறது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் மிட்செல் மார்ஷ் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணிக்கு தொடக்கம் சரியாக அமையவில்லை. மார்க்ரம் 18 ரன்களிலும், ரிக்கல்டன் 14 ரன்களிலும், பிரிட்டோரியஸ் 10 ரன்களிலும் ஆட்டமிழந்து ஏமாற்றினர். இந்த இக்கட்டான சூழலில் களமிறங்கிய ப்ரீவிஸ் ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடினார். ஆஸ்திரேலிய பந்துவீச்சை வெளுத்து வாங்கிய அவர் சதமடித்து அசத்தினார்.
அவருக்கு சிறிது ஒத்துழைப்பு கொடுத்த ஸ்டப்ஸ் 31 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனால் தென் ஆப்பிரிக்க அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 218 ரன்கள் குவித்துள்ளது. ஆஸ்திரேலியா தரப்பில் மேக்ஸ்வெல் மற்றும் துவார்ஷியூஸ் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
இதனையடுத்து 219 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை நோக்கி ஆஸ்திரேலியா களமிறங்கியது. தொடக்க வீரரான டிராவிஸ் ஹெட் 5 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த கீரின் 9 ரன்னில் வெளியேறினார்.
இதனை தொடர்ந்து மார்ஷ் 22 ரன்னில் அவுட் ஆனார். தொடர்ந்து அதிரடியாக விளையாடிய டிம் டேவிட் அரை சதம் கடந்தார். அவர் 24 பந்தில் 50 எடுத்து ஆட்டமிழந்தார்.
அடுத்து வந்த வீரர்கள் சொற்ப ரன்னில் வெளியேறினார். இதனால் ஆஸ்திரேலிய அணி 17.4 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 165 ரன்கள் எடுத்தது. இதன்மூலம் தென் ஆப்பிரிக்கா அணி 53 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதனால் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது. இரு அணிகளுக்கு இடையேயான கடைசி டி20 போட்டி வருகிற 16-ந் தேதி தொடங்குகிறது.
- டெவால்டு பிரேவிஸ் 41 பந்தில் சதம் விளாசி அசத்தினார்.
- மிக இளைய வயதில் சதம் விளாசிய தென் ஆப்பிரிக்கா பேட்டர் என்ற வரலாற்று சாதனையை ப்ரெவிஸ் (22 வயது) படைத்துள்ளார்.
தென்ஆப்பிரிக்கா- ஆஸ்திரேலியா இடையிலான 2ஆவது டி20 கிரிக்கெட் போட்டி டார்வினில் நடைபெற்று வருகிறது. முதலில் களம் இறங்கிய தென்ஆப்பிரிக்கா 218 ரன்கள் குவித்தது. 4-வது வீரராக களம் இறங்கிய டெவால்டு ப்ரீவிஸ் அதிரடியாக விளையாடினார். இதனால் டி20 அவர் தனது முதல் சதத்தை (41 பந்தில்) பதிவு செய்து அசத்தினார். அவர் 56 பந்தில் 125 ரன்கள் விளாசி அவுட் ஆனார்.
இதன்மூலம் மிக இளைய வயதில் சதம் விளாசிய தென் ஆப்பிரிக்கா பேட்டர் என்ற வரலாற்று சாதனையை ப்ரீவிஸ் (22 வயது) படைத்துள்ளார்.
மேலும் டி20 போட்டியில் தென்னாப்பிரிக்காவுக்காக 2-வது வேகமான சதத்தை ப்ரீவிஸ் அடித்தார். இதற்குமுன் 2017-ம் ஆண்டில் டேவிட் மில்லரின் 35 பந்துகளில் சதம் அடித்திருந்தார்.
இதனை தவிர்த்து தென் ஆப்பிரிக்கா அணி வீரர்களில் தனிநபரில் அதிக ரன்கள் எடுத்த டூபிளிசிஸ் சாதனையையும் ப்ரெவிஸ் முறியடித்துள்ளார். டூபிளசிஸ் 119 ரன்கள் எடுத்ததே சாதனையாக இருந்த நிலையில் ப்ரெவிஸ் 125 ரன்கள் குவித்து வரலாறு படைத்தார்.
- இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சுப்மன் கில் 4 சதங்கள் உள்பட அதிக ரன்கள் குவித்தார்.
- இங்கிலாந்தின் சோபியா டன்க்லி ஜூலை மாத சிறந்த வீராங்கனைக்கான விருதை வென்றுள்ளார்.
துபாய்:
ஒவ்வொரு மாதமும் சிறந்த வீரர் மற்றும் வீராங்கனையை தேர்வு செய்து ஐசிசி கவுரவித்து வருகிறது. அதன்படி ஜூலை மாத சிறந்த வீரர் மற்றும் வீராங்கனையை தேர்வு செய்ய தலா 3 வீரர் மற்றும் வீராங்கனைகள் கொண்ட பரிந்துரை பெயர் பட்டியலை ஐ.சி.சி. சமீபத்தில் அறிவித்தது.
இந்தப் பரிந்துரை பெயர் பட்டியலில் இந்திய டெஸ்ட் கேப்டன் சுப்மன் கில், தென் ஆப்பிரிக்காவின் வியான் முல்டர் மற்றும் இங்கிலாந்து டெஸ்ட் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் ஆகியோர் இடம்பெற்றனர்.
இந்நிலையில், இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் சுப்மன் கில் ஜூலை மாத சிறந்த வீரர் விருதை வென்றுள்ளார். இந்த விருதை கில் ஏற்கனவே 3 முறை வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
நடந்து முடிந்த இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சுப்மன் கில் 4 சதங்கள் உள்பட அதிக ரன்கள் குவித்ததால் இந்த விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இங்கிலாந்தின் சோபியா டன்க்லி ஜூலை மாத சிறந்த வீராங்கனைக்கான விருதை வென்றுள்ளார்.
- ஐபிஎல் மெகா ஏலத்தில் பிரேவிஸ் எந்த அணியாலும் ஏலம் எடுக்கப்படவில்லை.
- காயத்தால் விலகிய ஒரு வீரருக்கு மாற்று வீரராக சிஎஸ்கே அவரை ஒப்பந்தம் செய்தது.
தென்ஆப்பிரிக்கா- ஆஸ்திரேலியா இடையிலான 2ஆவது டி20 கிரிக்கெட் போட்டி டார்வினில் நடைபெற்று வருகிறது. முதலில் களம் இறங்கிய தென்ஆப்பிரிக்கா 218 ரன்கள் குவித்தது. 4ஆவது வீரராக களம் இறங்கிய டெவால்டு பிரேவிஸ் 56 பந்தில் 125 ரன்கள் விளாசினார். 41 பந்தில் சதம் விளாசினார்.
இந்த நிலையில் ஐபிஎல் மெகா ஏலத்தில் டெவால்டு பிரேவிஸை அணிகள் ஏலத்தில் எடுக்காதது குறித்து டி வில்லியர்ஸ் கருத்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக டி. வில்லியர்ஸ் கூறியதாவது:-
ஐபிஎல் மெகா ஏலத்தில் டெவால்டு பிரேவிஸை ஏலம் எடுக்க அணிகளுக்கு பொன்னான வாய்ப்புகள் இருந்தன. ஆனால் மோசமான வகையில் அவற்றை தவறவிட்டன. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மிகப்பெரிய அதிர்ஷ்டத்தை பெற்றுள்ளது.
இவ்வாறு டி வில்லியர்ஸ் தெரிவித்துள்ளார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம் பிடித்திருந்த குர்ஜாப்நீத் சிங் காயம் அடைந்தார். இதனால் 2.2 கோடி ரூபாய்க்கு மாற்று வீரராக சிஎஸ்கே ஒப்பந்தம் செய்தது. இதற்கு முன்னதாக 2022 முதல் 2024 வரை மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம் பிடித்திருந்தார். தற்போது தென்ஆப்பிரிக்கா அணியின் முன்னணி அதிரடி பேட்ஸ்மேனாக திகழ்ந்து வருகிறார்.
பிரேவிசை இன்னொரு டி வில்லியர்ஸ் என அழைக்கிறார்கள். இவரது ஆட்டம் டி வில்லியர்ஸ் ஆட்டத்தை ஞாபகப்படுத்துவபோன்று இருக்கும்.
- 17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் செப்டம்பர் 9-ந்தேதி தொடங்குகிறது.
- இந்த தொடர் இம்முறை டி20 வடிவில் நடத்தப்பட உள்ளது.
17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் செப்டம்பர் 9-ந்தேதி முதல் 28-ந்தேதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறுகிறது. இந்த தொடர் இம்முறை டி20 வடிவில் நடத்தப்பட உள்ளது. இந்த தொடரில் மொத்தம் 8 அணிகள் பங்கேற்கின்றன. அவை இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன.
'ஏ' பிரிவில் நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகம், ஓமன் அணிகளும், 'பி' பிரிவில் ஆப்கானிஸ்தான், வங்காளதேசம், இலங்கை, ஹாங்காங் அணிகளும் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோதும். லீக் சுற்று முடிவில் இரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர்4 சுற்றுக்கு முன்னேறும்.
இதில் இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தை செப்.10-ந் தேதி துபாயில் சந்திக்கிறது. இதைத்தொடர்ந்து பரம எதிரியான பாகிஸ்தானை செப்.14-ந் தேதி துபாயிலும், ஓமனை செப்டம்பர் 19 ஆம் தேதி அபுதாபியிலும் எதிர்கொள்கிறது. இறுதிப்போட்டி செப்.28-ந் தேதி துபாயில் அரங்கேறுகிறது.
அஜித் அகர்கர் தலைமையிலான தேர்வுக்குழு தேர்வு செய்யும் வீரர்கள் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கிறது. இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜெய்ஸ்வால், கே.எல்.ராகுல் ஆகியோர் 20 ஓவர் அணியில் இடம்பெற வாய்ப்பு இல்லை. இதேபோல சாய் சுதர்சனுக்கும் வாய்ப்பு குறைவு. அதே சமயம் டெஸ்ட் கேப்டனான சுப்மன் கில்லுக்கு டி20 அணியில் வாய்ப்பு கிடைக்கலாம் என்று கூறப்படுகிறது.
சூர்யகுமார் யாதவ் தலைமையிலான அணியில் அபிஷேக் சர்மா, சஞ்சு சாம்சன், திலக் வர்மா, ஹர்திக் பாண்ட்யா ஆகியோர் 20 ஓவர் போட்டியில் சிறப்பாக ஆடி வருகிறார்கள். முதல் 5 வரிசையில் இருக்கும் இவர்களை மாற்ற கிரிக்கெட் வாரியம் விரும்பவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. இதனால் கே.எல்.ராகுலுக்கு 20 ஓவர் அணியில் இடம் கிடைக்காது என்றே கருதப்படுகிறது. ஜெய்ஸ்வால் கடைசியாக கடந்த ஆண்டு ஜூலை மாதம் இலங்கைக்கு எதிரான 20 ஓவர் போட்டி யில் ஆடினார். கே.எல்.ராகுல் கடைசியாக 2022-ம் ஆண்டு நவம்பரில் இங்கிலாந்துக்கு எதிரான 20 ஓவர் போட்டியில் ஆடினார். இந்த இருவரும் சமீபத்தில் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் தொடக்க வரிசையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள்.
இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீரரான ஜஸ்பிரித் பும்ரா ஆசிய கோப்பையில் ஆடமாட்டார் என்று முதலில் தகவல் வெளியானது. தற்போது அவர் இந்த போட்டியில் விளையாடலாம் என்று கூறப்படுகிறது. அவர் அணியில் தேர்வானால் துணை கேப்டன் பதவி வழங்கப்படும். தற்போது அக்ஷர் படேல் 20 ஓவர் அணிக்கு துணை கேப்டனாக உள்ளார்.
ஆசிய கோப்பை போட் டிக்கான இந்திய அணியில் இடம்பெறலாம் என்று எதிர் பார்க்கப்படும் வீரர்கள் விவரம்:-
சூர்யகுமார் யாதவ் (கேப் டன்), சுப்மன் கில், அபி ஷேக் சர்மா, சஞ்சு சாம்சன், திலக் வர்மா, ஷிவம் துபே, ஹர்திக் பாண்ட்யா, அக்ஷர் படேல், வாஷிங்டன் சுந்தர், வருண் சக்கரவர்த்தி, குல்தீப் யாதவ், அர்ஷ்தீப் சிங், ஜஸ்பிரீத் பும்ரா, ஹர்சித் ராணா அல்லது பிரசித் கிருஷ்ணா, ஜிதேஷ் சர்மா அல்லது துருவ் ஜூரல்.
இந்திய அணி கடைசி யாக கடந்த ஜனவரி மாதம் இங்கிலாந்துக்கு எதிரான 20 ஓவர் போட்டியில் ஆடியது. 5 போட்டிக்கொண்ட தொடரை இந்தியா 4-1 என்ற கணக்கில் கைப்பற்றி இருந்தது.
- யாஷ் தயாள் மீது இளம்பெண் அளித்த பாலியல் புகாரின் பேரில் அவர் மீது போக்சோ வழக்கு பதியப்பட்டுள்ளது.
- யாஷ் தயாளின் இடைக்கால ஜாமீன் மனுவை ராஜஸ்தான் உயர்நீதிமன்றம் நிராகரித்தது.
உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் யாஷ் தயாள். இவர் கடந்த 2024-ம் ஆண்டு முதல் ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக விளையாடி வருகிறார்.
ஆர்சிபி அணிக்காக விளையாடி வரும் யாஷ் தயாள் மீது இளம் பெண் அளித்த பாலியல் புகாரின் பேரில் அவர் மீது போக்சோ வழக்கு பதியப்பட்டுள்ளது.
இதனையடுத்து அவர் இந்த வழக்கு தொடர்பான விசாரணையையும் எதிர்கொண்டு வருகிறார். அதிலும், சில தினங்களுக்கு முன்னதாக யாஷ் தயாளின் இடைக்கால ஜாமீன் மனுவை ராஜஸ்தான் உயர்நீதிமன்றம் நிராகரித்ததுடன், வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 22-ம் தேதிக்கு ஒத்திவைத்தது. மேலும், இந்த வழக்கில் காவல் துறையின் நடவடிக்கைகளை நிறுத்தவும் நீதிமன்றம் மறுத்துவிட்டது.
உத்தரபிரதேச டி20 லீக் தொடரின் 3-வது சீசன் வரும் 17-ம் தேதி தொடங்க உள்ளது. இந்த தொடரில் பங்கேற்க வேகப்பந்து வீச்சாளரான யாஷ் தயாளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பாலியல் வன்கொடுமை வழக்கில் சிக்கியதன் காரணமாக அவருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. யாஷ் தயாளை ரூ.7 லட்சம் கொடுத்து கோரக்பூர் லயன்ஸ் ஏலத்தில் வாங்கியது குறிப்பிடத்தக்கது.
- ஐபிஎல் தொடர் 2008-ம் தொடங்கி நடைபெற்று வருகிறது.
- இந்தியன் ஸ்ட்ரீட் பிரீமியர் லீக் என்ற டென்னிஸ் பந்து T10 கிரிக்கெட் லீக்கில் நியூ டெல்லி அணியின் உரிமையாளராக சல்மான் கான் உள்ளார்.
ஐபிஎல் தொடர் 2008-ம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதுவரை 18 சீசன் நடந்து முடிந்துள்ளது. இதில் மும்பை, சென்னை அணிகள் தலா 5 முறை ஐபிஎல் கோப்பையை வென்றுள்ளது.அதற்கு அடுத்தப்படியாக கொல்கத்தா 3 முறை கோப்பை வென்றுள்ளது.
மற்ற அணிகளான ராஜஸ்தான் ராயல்ஸ், டெக்கான் ஜார்சர்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத், குஜாராத் டைட்டன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ஆகிய அணிகள் ஒரு முறையும் கோப்பையை கைப்பற்றி உள்ளது. அடுத்த சீசனுக்கான வீரர்கள் தக்கவைப்பு, விடுவிப்பு என பல விஷயங்கள் வெளியாகி வருகிறது.
இந்நிலையில் இந்தியன் ஸ்ட்ரீட் பிரீமியர் லீக் (ISPL) என்ற டென்னிஸ் பந்து T10 கிரிக்கெட் லீக்கில் நியூ டெல்லி அணியின் உரிமையாளராக சல்மான் கான் உள்ளார். இந்த நிகழ்ச்சியின் போது சல்மான் கானிடம் ஐபிஎல் அணிகளை வாங்கும் எண்ணம் உள்ளாதா என கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு சல்மான் கான் கூறியதாவது:-
ஐபிஎல் அணியை வாங்க எனக்கு இப்போது வயதாகிவிட்டது. 2008-ம் ஆண்டு ஐபிஎல் தொடக்கத்தில் அணியை வாங்குவதற்கு அழைப்பு வந்தது. ஆனால் அந்த நேரத்தில் நான் அதை ஏற்கவில்லை. எனக்கு எந்த வருத்தமும் இல்லை. நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன். என்று பதிலளித்தார்.
- 17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் செப்டம்பர் 9-ந்தேதி தொடங்குகிறது.
- இந்த தொடர் இம்முறை டி20 வடிவில் நடத்தப்பட உள்ளது.
17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் செப்டம்பர் 9-ந்தேதி முதல் 28-ந்தேதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறுகிறது. இந்த தொடர் இம்முறை டி20 வடிவில் நடத்தப்பட உள்ளது. இந்த தொடரில் மொத்தம் 8 அணிகள் பங்கேற்கின்றன. அவை இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன.
'ஏ' பிரிவில் நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகம், ஓமன் அணிகளும், 'பி' பிரிவில் ஆப்கானிஸ்தான், வங்காளதேசம், இலங்கை, ஹாங்காங் அணிகளும் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோதும். லீக் சுற்று முடிவில் இரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர்4 சுற்றுக்கு முன்னேறும்.
இதில் இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தை செப்.10-ந் தேதி துபாயில் சந்திக்கிறது. இதைத்தொடர்ந்து பரம எதிரியான பாகிஸ்தானை செப்.14-ந் தேதி துபாயிலும், ஓமனை செப்.19-ந் தேதி அபுதாபியிலும் எதிர்கொள்கிறது. இறுதிப்போட்டி செப்.28-ந் தேதி துபாயில் அரங்கேறுகிறது.
இந்நிலையில் இந்த தொடரில் இந்திய அணியில் ஹர்திக் பாண்ட்யா இடம் பெறுவாரா இல்லை என்பது உடற்தகுதி மதிப்பீட்டை வைத்து தெரியவரும்.
31 வயதான ஹர்திக் பாண்ட்யா, ஆகஸ்ட் 11 மற்றும் 12 ஆகிய தேதிகளில் பெங்களூருவில் உள்ள பிசிசிஐயின் சிறப்பு மையத்தில் (COE) இரண்டு நாள் உடற்தகுதி மதிப்பீட்டை மேற்கொள்வார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த மதிப்பீட்டின் முடிவு, ஆசிய போட்டியில் பாண்ட்யா பங்கேற்க அனுமதிக்கப்படுகிறாரா இல்லையா என்பதை தீர்மானிக்கும்.
- விராட் கோலி ஒருநாள் போட்டியில் 14,181 ரன்னும் ரோகித் சர்மா 11,168 ரன்னும் எடுத்துள்ளனர்.
- இருவரது கிரிக்கெட் வாழ்க்கையும் கிட்டத்தட்ட முடியும் தருவாயில் உள்ளது.
புதுடெல்லி:
இந்திய அணியின் மூத்த வீரர்களான ரோகித் சர்மா, விராட் கோலி கடந்த ஆண்டு 20 ஓவர் உலக கோப்பை வெற்றிக்குப் பிறகு, சர்வதேச 20 ஓவர் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றனர்.
இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கு முன்பாக, யாரும் எதிர்பாராத விதமாக இருவரும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தனர். 20 ஓவர் மற்றும் டெஸ்ட்களில் ஓய்வுபெற்ற போதிலும் இருவரும் இந்திய அணிக்காக தொடர்ந்து ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ளனர்.
இந்திய அணி அடுத்து ஆசிய கோப்பை 20 ஓவர் போட்டியிலும், அதை தொடர்ந்து வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 2 டெஸ்ட் போட்டியிலும் ஆடுகிறது. இதன் பிறகுதான் இந்தியாவுக்கு ஒருநாள் போட்டி இருக்கிறது. ஆஸ்திரேலியாவுடன் அக்டோபர் 19-ந்தேதி முதல் 25-ந்தேதி வரை (பொ்த், அடிலெய்டு, சிட்னி) 3 ஒருநாள் போட்டியில் ஆடுகிறது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் ரோகித் சர்மாவும், விராட் கோலியும் இடம் பெறுவார்கள்.
இந்த நிலையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொட ருக்குமுன்பு ரோகித்சர்மாவும், விராட்கோலியும் இந்தியா 'ஏ' அணியில் விளையாட வேண்டும் என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ) விருப்பம் தெரிவித்துள்ளது.
இந்தியா 'ஏ'-ஆஸ்திரேலியா 'ஏ' அணிகள் இடையேயான 3 போட்டிகள் செப்டம்பர் 30, அக்டோபர் 3 மற்றும் 5-ந்தேதிகளில் கான்பூரில் நடக்கிறது. இதில் இருவரும் ஆட வேண்டும் என்று பி.சி.சி.ஐ. வலியுறுத்தி உள்ளது. இதே போல் விஜய் ஹசாரே போட்டியில் விளையாடலாம் என கூறப்படுகிறது.
விராட் கோலி ஒருநாள் போட்டியில் 14,181 ரன்னும் (51 சதம், 74 அரை சதம்), ரோகித்சர்மா 11,168 ரன்னும் (32 சதம், 58 அரை சதம்) எடுத்துள்ளனர். இருவரது கிரிக்கெட் வாழ்க்கையும் கிட்டத்தட்ட முடியும் தருவாயில் உள்ளது.
- செப்டம்பர் 9-ந்தேதி தொடங்கும் ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் விளையாட உள்ளனர்.
- ஆசிய கோப்பையை வெல்வதற்கு இந்தியாவுக்கே வாய்ப்பு அதிகம் என்பது எனது கருத்து.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி கொல்கத்தாவில் நேற்று பேட்டி அளித்தார். அப்போது அவரிடம், 'டெஸ்ட் மற்றும் 20 ஓவர் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று விட்ட இந்திய வீரர்கள் விராட் கோலி, ரோகித் சர்மா ஆகியோருக்கு அக்டோபர் மாதம் ஆஸ்திரேலியாவில் நடக்கும் 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரே கடைசி சர்வதேச போட்டியாக இருக்கக்கூடும்' என தகவல்கள் வெளியாகி உள்ளதே என்று கேட்ட போது, 'அது பற்றி எனக்கு தெரியாது. அதனால் அது குறித்து கருத்து தெரிவிக்கமாட்டேன். யார் சிறப்பாக செயல்படுகிறார்களோ அவர்கள் விளையாடுவார்கள். கோலியும், ரோகித்தும் நன்றாக ஆடி ரன்குவிக்கும் பட்சத்தில், அவர்கள் தொடர்ந்து விளையாட வேண்டும். விராட் கோலியின் ஒரு நாள் போட்டி சாதனை தனித்துவமானது. ரோகித் சர்மாவும் வெள்ளை நிற பந்து கிரிக்கெட்டில் நிறைய சாதித்து இருக்கிறார்' என்றார்.
மேலும் கங்குலி கூறுகையில், 'ஐ.பி.எல். முடிந்த உடனே இந்திய அணியினர் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்டில் விளையாடினார்கள். இப்போது சில வாரங்கள் ஓய்வு கிடைத்திருக்கிறது. அடுத்ததாக செப்டம்பர் 9-ந்தேதி தொடங்கும் ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் விளையாட உள்ளனர்.
இந்தியா மிகவும் பலம் வாய்ந்த அணி. சிவப்புநிற பந்து கிரிக்கெட்டில் வலுவாக இருக்கிறது என்றால், வெள்ளை நிற பந்து போட்டியில் அதை விட வலுவாக திகழ்கிறது. எனவே ஆசிய கோப்பையை வெல்வதற்கு இந்தியாவுக்கே வாய்ப்பு அதிகம் என்பது எனது கருத்து. அதுவும் துபாய் போன்ற ஆடுகளத்தில் இந்தியாவை வீழ்த்துவது கடினம்' என்றார்.
பெங்கால் கிரிக்கெட் சங்க நிர்வாகத்தில் மீண்டும் அடியெடுத்து வைப்பது குறித்து கேட்ட போது, 'உறுப்பினர்கள் விரும்பினால் பெங்கால் கிரிக்கெட் சங்க தலைவர் பதவிக்கு வேட்பு மனு தாக்கல் செய்வேன்' என்றார்.
- டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் பவுலிங் தேர்வு செய்தது.
- முதலில் ஆடிய பாகிஸ்தான் 37 ஓவரில் 171 ரன்கள் எடுத்தது.
டிரினிடாட்:
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. 3 போட்டி கொண்ட டி20 தொடரை பாகிஸ்தான் 2-1 என கைப்பற்றியது. முதல் ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் வென்றது.
இந்நிலையில், பாகிஸ்தான்-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதிய 2வது ஒருநாள் போட்டி டிரினிடாடில் நடைபெற்றது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் பவுலிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் விளையாடிய பாகிஸ்தான் 37 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 171 ரன்கள் எடுத்தது. ஹசன் நவாஸ் 36 ரன்னும், ஹுசைன் தலாத் 31 ரன்னும் எடுத்தனர். மழை காரணமாக ஆட்டம் பாதிப்பு அடைந்தது.
வெஸ்ட் இண்டீசின் ஜெய்டன் சீலஸ் 3 விக்கெட் கைப்பற்றினார்.
இதையடுத்து, டக்வொர்த் லீவிஸ் முறைப்படி 35 ஓவரில் 181 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் களமிறஙகியது.
முன்னணி வீரர்கள் விரைவில் அவுட்டாகினர். ஒரு கட்டத்தில் 5 விக்கெட் இழப்புக்கு 107 ரன்கள் எடுத்து தத்தளித்தது.
6-வது விக்கெட்டுக்கு ரோஸ்டன் சேஸ், ஜஸ்டின் கிரீவ்ஸ் ஜோடி இணைந்து அணியை பொறுப்புடன் ஆடி வெற்றிக்கு அழைத்துச் சென்றது. ரோஸ்டன் சேஸ் 49 ரன்னும், ஜஸ்டின் கிரீவ்ஸ் 26 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
இறுதியில், வெஸ்ட் இண்டீஸ் அணி 33.2 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 184 ரன் எடுத்து, 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் 3 போட்டி கொண்ட தொடரில் இரு அணிகளும் 1-1 என சமனிலை வகிக்கிறது. ஆட்ட நாயகன் விருது ரோஸ்டன் சேசுக்கு வழங்கப்பட்டது.






