என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Roston Chase"

    • டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் பவுலிங் தேர்வு செய்தது.
    • முதலில் ஆடிய பாகிஸ்தான் 37 ஓவரில் 171 ரன்கள் எடுத்தது.

    டிரினிடாட்:

    பாகிஸ்தான் கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. 3 போட்டி கொண்ட டி20 தொடரை பாகிஸ்தான் 2-1 என கைப்பற்றியது. முதல் ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் வென்றது.

    இந்நிலையில், பாகிஸ்தான்-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதிய 2வது ஒருநாள் போட்டி டிரினிடாடில் நடைபெற்றது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் பவுலிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் விளையாடிய பாகிஸ்தான் 37 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 171 ரன்கள் எடுத்தது. ஹசன் நவாஸ் 36 ரன்னும், ஹுசைன் தலாத் 31 ரன்னும் எடுத்தனர். மழை காரணமாக ஆட்டம் பாதிப்பு அடைந்தது.

    வெஸ்ட் இண்டீசின் ஜெய்டன் சீலஸ் 3 விக்கெட் கைப்பற்றினார்.

    இதையடுத்து, டக்வொர்த் லீவிஸ் முறைப்படி 35 ஓவரில் 181 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் களமிறஙகியது.

    முன்னணி வீரர்கள் விரைவில் அவுட்டாகினர். ஒரு கட்டத்தில் 5 விக்கெட் இழப்புக்கு 107 ரன்கள் எடுத்து தத்தளித்தது.

    6-வது விக்கெட்டுக்கு ரோஸ்டன் சேஸ், ஜஸ்டின் கிரீவ்ஸ் ஜோடி இணைந்து அணியை பொறுப்புடன் ஆடி வெற்றிக்கு அழைத்துச் சென்றது. ரோஸ்டன் சேஸ் 49 ரன்னும், ஜஸ்டின் கிரீவ்ஸ் 26 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

    இறுதியில், வெஸ்ட் இண்டீஸ் அணி 33.2 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 184 ரன் எடுத்து, 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் 3 போட்டி கொண்ட தொடரில் இரு அணிகளும் 1-1 என சமனிலை வகிக்கிறது. ஆட்ட நாயகன் விருது ரோஸ்டன் சேசுக்கு வழங்கப்பட்டது.

    • முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியாவை 180 ரன்னில் சுருட்டியது வெஸ்ட் இண்டீஸ்.
    • நடுவரின் தவறான முடிவில் வெஸ்ட் இண்டீஸ் 190 ரன்னில் ஆல்அவுட் ஆக வேண்டிய நிலை ஏற்பட்டதாக ஆதங்கம்.

    வெஸ்ட் இண்டீஸ்- ஆஸ்திரேலியா இடையிலான முதல் டெஸ்ட் போட்டி பிரிட்ஜ்டவுனில நடைபெற்றது. இந்த போட்டியில் ஆஸ்திரேலியா 159 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா 180 ரன்னில் சுருண்டது. வெஸ்ட் இண்டீஸ் முதல் இன்னிங்சில் 190 ரன்கள் மட்டுமே அடித்தது. அந்த அணி ஒரு கட்டத்தில் 72 ரன்களுக்குள் 5 விக்கெட்டுகளை இழந்தது. 6ஆவது விக்கெட்டுக்கு கேப்டன் சேஸ் உடன் ஷாய் ஹோப் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி சிறப்பாக விளையாடியது.

    சேஸ் 44 ரன்கள் எடுத்திருக்கும்போது, கம்மின்ஸ் பந்தில் எல்பிடபிள்யூ ஆனார். ஹோப் வெப்ஸ்டர் வீசிய பந்தில் விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். இதனால் வெஸ்ட் இண்டீஸ் 190 ரன்னில் சுருண்டது.

    இந்த இரண்டு விக்கெட்டும் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. எல்பிடபிள்யூக்கு சேஸ் ரிவ்யூ கேட்டார். அல்ட்ராஎட்ஜ் தொழில்நுட்பத்தில் பந்து லேசாக உரசியதற்கான விசிபில் ஸ்பைக் ஏற்படும். இருந்தபோதிலும் 3ஆவது நடுவர் விக்கெட்டு கொடுத்துவிடுவார்.

    சேஸ் கேட்சை விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரி பிடிக்கும்போது, பந்து தரையில் படுவது நன்றாக தெரியும். அப்படி இருந்தும் 3ஆவது நடுவர் விக்கெட் கொடுத்து விடுவார்கள்.

    இந்த நிலையில்தான் மைதானத்தில் வீரர்கள் தவறு செய்தால், விதிமுறைகளை மீறினால் அபராதம் விதிக்கப்படுகிறது. அதேபோல் மைதானம் சமமான நிலையில் இருக்க நடுவர்கள் தவறு செய்தாலும், அவர்களுக்கும் அபராதம் விதிக்க வேண்டும் என வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ரோஸ்டன் சேஸ் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

    • வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் அணியின் கேப்டனாக ரோஸ்டன் சேஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
    • இதுநாள்வரை 49 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 5 சதங்கள் மற்றும் 11 அரைசதங்களுடன் 2265 ரன்கள் எடுத்துள்ளார்.

    வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியம் தங்களுடைய அணியில் பல மாற்றங்களைச் செய்து வருகிறது. அதன்படி வெஸ்ட் இண்டீஸ் டி20 அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த ரோவ்மன் பவல் அதிரடியாக நீக்கப்பட்டதுடன், ஷாய் ஹோப் புதிய டி20 கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

    இந்நிலையில் வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் அணியின் புதிய கேப்டனாக ஆல் ரவுண்டர் ரோஸ்டன் சேஸ் நியமிக்கப்பட்டுள்ளார். முன்னதாக இந்த ஆண்டு மார்ச் மாதம் கேப்டன் பதவியில் இருந்து கிரெய்க் பிராத்வைட் விலகியதை அடுத்து ரோஸ்டன் சேஸ் தற்போது வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். 

    தற்சமயம் 33 வயதான ரோஸ்டன் சேஸ் கடந்த 2023-ம் ஆண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய நிலையில் அதன்பின் தற்போது வரை அவர் எந்த டெஸ்ட் போட்டிக்கும் வெஸ்ட் இண்டீஸ் அணியில் சேர்க்கப்படவில்லை. இப்படியான சூழ்நிலையில் அவர் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

    வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் அணிக்காக கடந்த 2016-ம் ஆண்டு அறிமுகமான இவர் இதுவரை 49 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 5 சதங்கள் மற்றும் 11 அரைசதங்களுடன் 2265 ரன்களையும், பந்துவீச்சில் 4 முறை ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தியதுடன் 85 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்டில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் கைல் மேயர்ஸ், ஜேசன் ஹோல்டர் ஜோடி 7வது விக்கெட்டுக்கு 63 ரன்கள் சேர்த்தது.
    கல்லெ:

    இலங்கை மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் கல்லெயில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட் செய்த இலங்கை அணி முதல் இன்னிங்சில் 386 ரன்னில் அவுட்டானது. கேப்டன் கருணரத்னே 147 ரன்னும், டி சில்வா 61 ரன்னும், நிசங்கா 56 ரன்னிலும் வெளியேறினர். 

    வெஸ்ட் இண்டீஸ் சார்பில் ரோஸ்டன் சேஸ் 5 விக்கெட்டும், வாரிகன் 3 விக்கெட்டும், காப்ரியல் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, வெஸ்ட் இண்டீஸ் அணி களமிறங்கியது. இரண்டாம் நாள் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 6 விக்கெட் இழப்புக்கு 113 ரன்கள் எடுத்து திணறி வருகிறது. தொடக்க ஆட்டக்காரரும், கேப்டனுமான பிராத்வெயிட் 41 ரன் எடுத்து வெளியேறினார். கைல் மேயர்ஸ் 22 ரன்னும், ஜேசன் ஹோல்டர் ஒரு ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

    இந்நிலையில், மூன்றாம் நாள் நேற்று நடைபெற்றது. கைல் மேயர்ஸ் 45 ரன்னிலும், ஜேசன் ஹோல்டர் 36 ரன்னிலும் அவுட்டாகினர். 
    கடைசி கட்டத்தில் கார்ன்வால் 39 ரன்னில் வெளியேறினார். அப்போது வெஸ்ட் இண்டீஸ் அணி 9 விக்கெட்டுக்கு 224 ரன்கள் எடுத்திருந்த நிலையில், ஆட்டத்தில் மழை குறுக்கிட்டது. தொடர்ந்து மழை பெய்ததால் மீதமுள்ள ஆட்டம் கைவிடப்பட்டது.

    இலங்கை அணி சார்பில் மெண்டிஸ் 3 விக்கெட், ஜெயவிக்ரமா 3 விக்கெட் வீழ்த்தினர்.

    வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டெஸ்டின் முதல் இன்னிங்சில் கருணரத்னே சதத்தால் இலங்கை அணி 386 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
    கல்லெ:

    வெஸ்ட் இண்டீஸ் அணி  இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது.

    இரு அணிகளுக்கு முதல் டெஸ்ட் கல்லெயில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட் செய்த இலங்கை அணி முதல் நாள் முடிவில் 3 விக்கெட்டுக்கு 267 ரன்கள் எடுத்திருந்தது. கருணரத்னே 132 ரன்னும், டி சில்வா 56 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர். நிசங்கா அரை சதமடித்து 56 ரன்னில் வெளியேறினார். 

    இந்நிலையில், இரண்டாம் நாள் ஆட்டம் நேற்று நடைபெற்றது. டி சில்வா 61 ரன்னில் வெளியேறினார். அவரைத் தொடர்ந்து கருணரத்னே 147 ரன்னில் அவுட்டானார். அடுத்து இறங்கிய சண்டிமால் 45 ரன்னில் ஆட்டமிழந்தார். இறுதியில், இலங்கை அணி 133.5 ஓவரில் 386 ரன்னில் ஆல் அவுட்டானது.

    வெஸ்ட் இண்டீஸ் சார்பில் ரோஸ்டன் சேஸ் 5 விக்கெட்டும், வாரிகன் 3 விக்கெட்டும், காப்ரியல் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, வெஸ்ட் இண்டீஸ் அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரரும், கேப்டனுமான பிராத்வெயிட் 41 ரன் எடுத்து வெளியேறினார். அடுத்து வந்த வீரர்கள் நிலைத்து நிற்கவில்லை.

    எனவே, இரண்டாம் நாள் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 6 விக்கெட் இழப்புக்கு 113 ரன்கள் எடுத்து திணறி வருகிறது. கைல் மேயர்ஸ் 22 ரன்னும், ஜேசன் ஹோல்டர் ஒரு ரன்னுடனும் அவுட்டாகாமல் உள்ளனர்.

    இலங்கை அணி சார்பில் மெண்டிஸ் 3 விக்கெட், ஜெயவிக்ரமா 2 விக்கெட் வீழ்த்தினர்.

    ×