என் மலர்
விளையாட்டு
- இந்த டெஸ்டின் மூலம் கிடைக்கும் புள்ளி இரு அணிகளுக்கும் முக்கியமானதாகும்.
- இங்கிலாந்து அணியில் ஒரே ஒரு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
தர்மசாலா:
இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் 4 போட்டிகள் முடிவடைந்த நிலையில் 3-1 என்ற கணக்கில் இந்திய அணி தொடரை கைப்பற்றி உள்ளது. இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கும் இடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நாளை தர்மசாலாவில் தொடங்க உள்ளது.
இந்தியா ஏற்கனவே தொடரை கைப்பற்றி விட்டாலும், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கு இந்த டெஸ்டின் மூலம் கிடைக்கும் புள்ளி இரு அணிகளுக்கும் முக்கியமானதாகும். எனவே இந்த போட்டியில் வெற்றி பெற இரு அணிகளும் கடுமையாக போராடும் என்பதால் ரசிகர்கள் மத்தியில் இது எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில் இந்த போட்டிக்கான ஆடும் லெவனை இங்கிலாந்து அறிவித்துள்ளது. அதில் ஒரே ஒரு மாற்றமாக கடந்த போட்டியில் விளையாடிய ஒல்லி ராபின்சன் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக மார்க் வுட் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
ஜாக் கிராலி, பென் டக்கெட், ஒல்லி போப், ஜோ ரூட், ஜானி பேர்ஸ்டோவ், பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்), பென் போக்ஸ், டாம் ஹார்ட்லி, மார்க் வுட், ஜேம்ஸ் ஆண்டர்சன், சோயிப் பஷீர்.
- இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் கடைசி டெஸ்ட் போட்டி நாளை நடைபெறவுள்ளது.
- முதல் 4 டெஸ்ட் போட்டிகளின் முடிவில் இந்திய அணி 4-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி உள்ளது.
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இரு அணிகளுக்கும் இடையே நடைபெற்று முடிந்த 4 டெஸ்ட் போட்டிகளின் முடிவில் இந்திய அணி மூன்று வெற்றிகளைப் பதிவுசெய்ததுடன், டெஸ்ட் தொடரையும் கைப்பற்றி அசத்தியது.
இதனையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி தர்மசாலாவில் நாளை நடைபெறவுள்ளது. இப்போட்டிக்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகின்றனர்.
இந்நிலையில் இப்போட்டியில் பங்கேற்பதன் மூலம் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் தனது 100-வது டெஸ்ட் போட்டியில் விளையாடவுள்ளார். இதன்மூலம் இந்திய அணிக்காக 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய 14ஆவது வீரர் எனும் சாதனையை அஸ்வின் படைக்கவுள்ளார். மேலும் தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரர் ஒருவர் 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதும் இதுவே முதல் முறை என்பதும் குறிப்பிடத்தக்கது. இதேபோல இங்கிலாந்து அணி வீரர் ஜானி பேர்ஸ்டோவுக்கும் இந்த போட்டி 100-வது போட்டியாகும்.

இதன் மூலம் கிரிக்கெட் வரலாற்றில் எதிரணி வீரர்கள் 100-வது போட்டியில் விளையாடுவது இது 2-வது முறையாகும். இதற்கு முன் 2013-ம் ஆண்டு ஆஷஸ் தொடரில் இங்கிலாந்து வீரர் அலாஸ்டைர் குக் மற்றும் ஆஸ்திரேலிய வீரர் மைக்கேல் கிளார்க் விளையாடி இருந்தனர்.
- இந்தியன் வெல்ஸ் மாஸ்டர்ஸ் ஓபன் டென்னிஸ் தொடர் நடந்து வருகிறது.
- நேற்று நடந்த தகுதிச்சுற்றில் இந்திய வீரர் ஸ்மித் நாகல் தோல்வி அடைந்தார்.
புதுடெல்லி:
இந்தியன் வெல்ஸ் ஓபன் டென்னிஸ் தொடரின் தகுதிச்சுற்று போட்டிகள் நடந்து வருகின்றன. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர் ஸ்மித் நாகல், தென் கொரியாவின் ஹாங் சியோங் சானுடன் மோதினார்.
இதில் ஸ்மித் நாகல் முதல் செட்டை 6-2 என கைப்பற்றினார். இதனால் சுதாரித்துக் கொண்ட சியோங் சான் அடுத்த இரு செட்களை 6-2, 7-6 (7-4) என்ற செட்களில் ஸ்மித் நாகலை வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
- மத்திய பிரதேச அணிக்கு 320 ரன்களை விதர்பா அணி இலக்காக நிர்ணயித்தது.
- 2-வது இன்னிங்சில் மத்திய பிரதேசம் அணி 258 ரன்களில் ஆல் அவுட் ஆனது.
இந்தியாவில் நடைபெற்று வரும் ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரின் நடப்பாண்டு சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் நடைபெற்ற முதலாவது அரையிறுதிப்போட்டியில் விதர்பா மற்றும் மத்திய பிரதேச அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
இதில் டாஸ் வென்ற விதர்பா அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் விளையாடிய விதர்பா அணி கருண் நாயரின் அரைசதத்தின் மூலம் முதல் இன்னிங்ஸில் 170 ரன்களைச் சேர்த்து ஆல் அவுட்டானது. மத்திய பிரதேச அணி தரப்பில் அவேஷ் கான் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
இதையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய மத்திய பிரதேச அணி 252 ரன்களில் ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக ஹிமன்ஷு மந்த்ரி சதமடித்து அசத்தினார். இதன்மூலம் மத்திய பிரதேச அணி முதல் இன்னிங்ஸில் 82 ரன்கள் முன்னிலைப் பெற்றது.
அதன்பின் இரண்டாவது இன்னிங்சைத் தொடர்ந்த விதர்பா அணி யாஷ் ரத்தோட் (141), அக்ஷய் வாத்கர்(77) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தின் மூலம் 402 ரன்களைச் சேர்த்து அசத்தியதுடன், மத்திய பிரதேச அணிக்கு 320 ரன்களை இலக்காக நிர்ணயித்தது.
அதன்பின் கடின இலக்கை நோக்கி விளையாடிய மத்திய பிரதேச அணிக்கு யாஷ் துபே - ஹர்ஷ் கௌலி ஜோடி அபாரமான தொடக்கத்தைக் கொடுத்தனர். இந்த ஜோடி 100 ரன்களை பார்ட்னர்ஷிப் அமைத்து கொடுத்தனர். துபே 94 ரனகளிலும் ஹர்ஷ் கௌலி 67 ரன்களிலும் விக்கெட்டை இழந்தனர். அதன்பின் களமிறங்கிய வீரர்கள் அனைவரும் அடுத்தடுத்து வந்த வேகத்தில் பெவிலியனுக்கு திரும்பினர்.
இதனால் அந்த அணி இரண்டாவது இன்னிங்சில் 258 ரன்கள் மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. விதர்பா தரப்பில் யாஷ் தாக்கூர், அக்ஷய் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
இதன்மூலம் விதர்பா அணி 62 ரன்கள் வித்தியாசத்தில் மத்திய பிரதேச அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்ததுடன், ரஞ்சி கோப்பை தொடரின் இறுதிப்போட்டிக்கும் முன்னேறியுள்ளது.
இறுதிபோட்டியில் மும்பை - விதர்பா அணிகள் வருகிற 10-ந் தேதி தொடங்குகிறது.
- ஜெய்ஸ்வால் அதிரடியாக விளையாடுவதை இங்கிலாந்திடம் இருந்து கற்றுக் கொண்டதாக இங்கிலாந்து வீரர் பென் டக்கெட் தெரிவித்து இருந்தார்.
- இந்த கருத்து இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பதிலடி கொடுத்துள்ளார்.
பென்ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. 5 போட்டிக் கொண்ட தொடரில் 4 போட்டிகள் முடிவில் இந்தியா 3-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. முதல் போட்டியில் இங்கிலாந்தும், அடுத்து நடந்த 3 போட்டிகளிலும் இந்தியாவும் வெற்றி பெற்றன. இதனை தொடர்ந்து இரு அணிகளுக்கும் இடையேயான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நாளை தரம்சாலாவில் நடக்க உள்ளது.
இந்நிலையில் ஜெய்ஸ்வால் அதிரடியாக விளையாடுவதை இங்கிலாந்திடம் இருந்து கற்றுக் கொண்டதாக இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர் பென் டக்கெட் தெரிவித்து இருந்தார். இந்த கருத்து இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பதிலடி கொடுத்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது:-
இங்கிலாந்து (2021) கடந்து முறை விளையாடியதை விட இந்த முறை சிறப்பாக விளையாடி உள்ளது. பேஸ்பால் என்றால் என்னவென்று எனக்கு இன்னும் தெரியவில்லை. எங்கள் அணியில் ரிஷப் பண்ட் என்று ஒருவர் இருந்தார். அவர் விளையாடியதை பென் டக்கெட் பார்த்ததில்லை போல.
இவ்வாறு ரோகித் கூறினார்.
- சிஎஸ்கே அணியின் கேப்டன் மகேந்திர சிங் டோனி நேற்று சென்னை வந்தடைந்தார்.
- முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோதவுள்ளன.
இந்தியன் பிரீமியர் லீக் 2024 தொடர் இம்மாதம் 22-ம் தேதி துவங்க இருக்கிறது. இந்த சீசனின் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோதவுள்ளன.
இதற்காக சென்னை அணி வீரர்கள் சேப்பாக்கம் மைதானத்தில் பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். இதையடுத்து அணியின் கேப்டன் மகேந்திர சிங் டோனி நேற்று சென்னை வந்தடைந்தார்.
இந்நிலையில் லியோ படத்தில் உள்ள ஒரு மாஸ் நிறைந்த காட்சியை வைத்து டோனிக்கு புது வீடியோவை சிஎஸ்கே நிர்வாகம் உருவாக்கியுள்ளது. இந்த வீடியோவுக்கு அந்த படத்தில் உள்ள சிங்கம் பாடலை பின்னணியாக தயார் செய்துள்ளது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
இந்த வீடியோவுக்கு ரசிகர் ஒருவர் வீடியோவில் கூஸ்பம்ஸ் இல்ல.. கூஸ்பம்ஸ் தான் வீடியோவே என பதிவிட்டிருந்தார்.
- இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் இடையேயான போட்டி ஜூன் 9-ம் தேதி நியூயார்க் நகரில் நடைபெற இருக்கிறது.
- இரு அணிகள் மோதும் மைதானம் உருவாகும் வீடியோவை ஐசிசி வெளியீட்டுள்ளது.
புதுடெல்லி:
டி20 உலகக் கோப்பை 2024 கிரிக்கெட் தொடர் ஜூன் 1-ம் தேதி துவங்க இருக்கிறது. இந்த தொடரின் போட்டிகள் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் ஆகிய நாடுகளில் நடத்தப்படுகிறது. இந்த தொடரில் அதிகம் எதிர்பார்க்கப்படும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் இடையேயான போட்டி ஜூன் 9-ம் தேதி நியூயார்க் நகரில் நடைபெற இருக்கிறது.
இந்நிலையில் நியூயார்க்கில் இரு அணிகளுக்கு இடையேயான போட்டி நடைபெறும் மைதானம் உருவாகும் வீடியோவை ஐசிசி வெளியீட்டுள்ளது. நியூயார்க்கில் உள்ள நாசாவ் கவுண்டி சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியத்தின் கட்டுமான பணிகள் ஒரு மாதம் நிறைவடைந்ததையடுத்து இந்த வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.
இந்த மைதானம் 34,000 பார்வையாளர்களைக் கொண்டதாக உருவாக்கப்படுகிறது. 12,500 ரசிகர்கள் இருக்கும் வகையில் ஸ்டேடியத்தின் ஈஸ்ட் ஸ்டாண்ட், கடந்த ஒரு மாதமாக வடிவமைக்கப்பட்டு வருகிறது. கிரேன்களுடன் இந்த கட்டுமான பணி நடைபெறும் வீடியோவை பார்க்க சுவாரஸ்மாக உள்ளது. இந்த வீடியோ ரசிகர்களை அதிகமாக கவர்ந்துள்ளது.
நாசாவ் கவுண்டி சர்வதேச கிரிக்கெட் மைதான அட்டவணை:
ஜூன் 3: இலங்கை vs தென்னாப்பிரிக்கா
ஜூன் 5: இந்தியா vs அயர்லாந்து
ஜூன் 7: நெதர்லாந்து vs தென் ஆப்பிரிக்கா
ஜூன் 9: இந்தியா vs பாகிஸ்தான்
ஜூன் 10: தென்னாப்பிரிக்கா vs பங்களாதேஷ்
ஜூன் 11: பாகிஸ்தான் vs கனடா
ஜூன் 12: அமெரிக்கா vs இந்தியா
2024 உலகக் கோப்பை டி20 கிரிக்கெட் தொடரில் இந்திய அணி க்ரூப் ஏ-வில் இடம்பெற்றுள்ளது. இந்தியாவுடன் பாகிஸ்தான், அமெரிக்கா, கனடா மற்றும் அயர்லாந்து அணிகளும் இடம்பெற்றுள்ளன.
க்ரூப் சுற்றில் இந்திய அணி ஜூன் 5-ம் தேதி அயர்லாந்து அணியையும், ஜூன் 9-ம் தேதி பாகிஸ்தான் அணியையும், ஜூன் 12-ம் தேதி அமெரிக்காவுடனும், ஜூன் 15-ம் தேதி கனடாவையும் எதிர்கொள்ள இருக்கிறது.
டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரின் அரையிறுதி போட்டி ஜூன் 26-ம் மற்றும் 27-ம் தேதிகளில் நடைபெற இருக்கிறது. பார்படோஸ்-இல் ஜூன் 29-ம் தேதி இறுதிப்போட்டி நடைபெற இருக்கிறது.
- திறமையான இளம் வீரர்கள் நிறைய பேர் வாய்ப்புக்காக காத்திருக்கிறார்கள்.
- அவர்களுக்கு வழிவிடும் வகையில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து விடைபெறுகிறேன்.
புதுடெல்லி:
இந்திய கிரிக்கெட் அணியில் இருந்து ஓரங்கட்டப்பட்ட 34 வயதான இடக்கை சுழற்பந்து வீச்சாளர் ஷபாஸ் நதீம் சர்வதேச கிரிக்கெட் மற்றும் முதல்தர போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக நேற்று அறிவித்தார். இது குறித்து ஜார்கண்டை சேர்ந்த நதீம் கூறுகையில், 'இனி இந்திய அணியில் இடம் கிடைக்கப்போவதில்லை என்பதை உணர்ந்துள்ளேன். தேர்வாளர்களின் அணிக்கான திட்டத்தில் நான் இல்லை. திறமையான இளம் வீரர்கள் நிறைய பேர் வாய்ப்புக்காக காத்திருக்கிறார்கள். அவர்களுக்கு வழிவிடும் வகையில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து விடைபெறுகிறேன். உலகம் முழுவதும் 20 ஓவர் லீக் போட்டிகளில் விளையாட திட்டமிட்டுள்ளேன்.' என்றார்.

ஷபாஸ் நதீம் இந்திய அணிக்காக 2 டெஸ்டில் ஆடி 8 விக்கெட் எடுத்துள்ளார். முதல்தர கிரிக்கெட்டில் 140 ஆட்டங்களில் 542 விக்கெட்டுகளை கைப்பற்றி இருக்கிறார். ஐ.பி.எல். கிரிக்கெட்டில் டெல்லி, ஐதராபாத் அணிக்காக விளையாடி 48 விக்கெட் வீழ்த்தியுள்ளார்.
'லிஸ்ட் ஏ' வகை கிரிக்கெட்டில் (உள்ளூர் மற்றும் சர்வதேச ஒரு நாள் போட்டியை சேர்த்து) ஒரு இன்னிங்சில் 10 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்து 8 விக்கெட்டுகளை அள்ளிய உலகச் சாதனை அவரது வசம் உள்ளது. 2018-ம் ஆண்டு விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட்டில் ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் ஜார்கண்ட் அணிக்காக களம் இறங்கி இந்த சாதனையை படைத்திருந்தார்.
- 33-வது ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் ஜூலை, ஆகஸ்டு மாதம் நடக்கிறது.
- இந்த போட்டியில் அரைஇறுதிக்கு முன்னேறுபவர்கள் பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெறுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
பஸ்டோ அர்சிஜியோ:
33-வது ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் ஜூலை, ஆகஸ்டு மாதம் நடக்கிறது. இந்த போட்டிக்கான முதலாவது உலக ஒலிம்பிக் குத்துச்சண்டை தகுதி சுற்று இத்தாலியில் நடந்து வருகிறது. இதில் ஆண்களுக்கான 80 கிலோ எடைப்பிரிவின் முதல் சுற்றில் தேசிய சாம்பியன் லக்ஷயா சாஹர், 2021-ம் ஆண்டு ஆசிய சாம்பியன்ஷிப்பில் வெள்ளிப்பதக்கம் வென்ற ஈரான் வீரர் கெஷ்லாஜி மெய்சாமை சந்தித்தார்.
இதன் முதல் ரவுண்டில் 2-3 என்ற கணக்கில் பின்தங்கிய இந்திய வீரர் லக்ஷயா சாஹர் அடுத்த ரவுண்டில் 3-2 என்ற கனக்கில் பதிலடி கொடுத்து சமநிலையை எட்டினார். 3-வது மற்றும் கடைசி ரவுண்டில் 20 வினாடிகள் மீதமிருக்கையில் மெய்சாம் பலமாக குத்துவிட்டு லக்ஷயா சாஹரை நாக்-அவுட் செய்து 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.
ஏற்கனவே இந்திய வீரர்கள் தீபக் போரியா (51 கிலோ), நரேந்தர் பெர்வால் (92 கிலோவுக்கு மேல்), வீராங்கனை ஜாஸ்மின் லம்போரியா (60 கிலோ) ஆகியோர் முதல் சுற்றிலேயே தோல்வி கண்டு நடையை கட்டி இருந்தனர். ஷிவதபா உள்பட 5 இந்தியர்கள் இன்னும் களத்தில் உள்ளனர். இந்த போட்டியில் அரைஇறுதிக்கு முன்னேறுபவர்கள் பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெறுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
- தென்ஆப்பிரிக்கா அணிக்காக கடந்த 16 ஆண்டுகள் விளையாடியுள்ளார் இஸ்மாயில்.
- இதற்கு முன்னதாக 129 கி.மீட்டர் வேகத்தில் பந்து வீசியுள்ளார்.
பெண்கள் பிரீமியர் லீக் டி20 தொடர் இந்தியாவின் பெங்களூரு, டெல்லி நகரங்களில் நடைபெற்று வருகிறது. பெங்களூருவில் உள்ள போட்டிகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில், நேற்று முதல் டெல்லியில் நடைபெற்று வருகிறது.
நேற்றைய போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ்- மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இந்த போட்டியின்போது மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம் பிடித்துள்ள தென்ஆப்பிரிக்கா அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான ஷப்னிம் இஸ்மாயில் ஆட்டத்தின் 3-வது ஓவரை வீசினார். இந்த ஓவரின 2-வது பந்தை மேக் லேனிங் வீராங்கனைக்கு எதிராக 132.1 கி.மீட்டர் வேகத்தில் வீசினார்.
இதன்மூலம் பெண்கள் கிரிக்கெட்டில் அதிவேகமாக பந்து வீசிய வீராங்கனை என்ற சாதனையைப் படைத்துள்ளார். இதற்கு முன்னதாக எந்த வீராங்கனையும் 130 கி.மீட்டர் வேகத்தை தாண்டியது கிடையாது.
இதற்கு முன்னதாக 2016-ல் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிராக 128 கி.மீட்டர் வேகத்தில் வீசியதே சாதனையாக இருந்தது. தற்போது அவர் சாதனையை அவரே முறியடித்துள்ளார். மேலும் 2022 உலகக் கோப்பை தொடரில் இரண்டு முறை 127 கி.மீட்டர் வேகத்தில் வீசியுள்ளார்.
தென்ஆப்பிரிக்கா அணிக்காக கடந்த 16 ஆண்டுகள் விளையாடிய 34 வயதான இஸ்மாயில் 127 ஒருநாள் மற்றும் 113 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். ஒரேயொரு டெஸ்ட் போட்டியில் மட்டும் களம் இறங்கியுள்ளார்.
நேற்று நடைபெற்ற போட்டியில் முதலில் விளையாடிய டெல்லி கேப்பிட்டல்ஸ் 192 ரன்கள் குவித்தது. பின்னர் கடின இலக்குடன் களம் இறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணியால் 163 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது. இதனால் 29 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
- தர்மசாலாவில் இந்தியாவுக்கு எதிரான இங்கிலாந்தின் ஐந்தாவது ஆட்டம் பேர்ஸ்டோவின் 100 வது டெஸ்ட் போட்டி ஆகும்.
- என்னுடைய 100வது டெஸ்ட் கேப்-ஐ எனது தாய்க்கு சமர்ப்பிக்க விரும்புகிறேன். வலிமைக்கு ஒரு உருவம் இருந்தால் அது அவர்தான்.
இந்தியாவுக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் மார்ச் 7 ஆம் தேதி தொடங்கவுள்ளது. தர்மசாலாவில் இந்தியாவுக்கு எதிரான இங்கிலாந்தின் ஐந்தாவது ஆட்டம் இங்கிலாந்து அணி வீரர் ஜானி பேர்ஸ்டோவின் 100 வது டெஸ்ட் போட்டி ஆகும்.
இந்நிலையில், ஜானி பேர்ஸ்டோ தனது 100 வது டெஸ்ட் போட்டியில் விளையாடுவது குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.
போட்டிக்கு முந்தைய செய்தியாளர் சந்திப்பில் பேசிய பேர்ஸ்டோ,"100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவது என்பது மிகவும் பெரிய விஷயம். என்னுடைய 100வது டெஸ்ட் கேப்-ஐ எனது தாய்க்கு சமர்ப்பிக்க விரும்புகிறேன். வலிமைக்கு ஒரு உருவம் இருந்தால் அது அவர்தான். எனது தந்தை இறக்கும்போது 10 வயதுக்குட்பட்ட 2 குழந்தைகளை வைத்துக்கொண்டு 3 இடங்களில் பணிபுரிந்து எங்களை வளர்த்தார். அவர் இரண்டு முறை புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார். அப்போதும் எனது அம்மா வலிமையாக இருந்தார் என்று தெரிவித்துள்ளார்.
தரம்சாலா டெஸ்ட் போட்டி இந்தியாவின் ரவிச்சந்திரன் அஷ்வினுக்கும் 100வது டெஸ்ட் போட்டி என்பது குறிப்பிடத்தக்கது. 5 டெஸ்ட் கொண்ட இரு நாடுகளுக்கு இடையிலான இந்த டெஸ்ட் தொடரை இந்தியா ஏற்கனவே 3-1 என்ற கணக்கில் கைப்பற்றிவிட்டது
- இது தொடர்பான படங்கள் சென்னை சூப்பர் கிங்ஸ்-ன் X பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது.
- இந்தியன் பிரீமியர் லீக் 2024 தொடர் இம்மாதம் 22-ம் தேதி துவங்க இருக்கிறது.
ஐபிஎல் தொடரில் விளையாடுவதற்காக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் எம்.எஸ்.டோனி சென்னை வந்தடைந்தார்.
இது தொடர்பான படங்கள் சென்னை சூப்பர் கிங்ஸ்-ன் X பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது.
ThalaiVanakkam! ??#DenComing pic.twitter.com/YYsyEXPAJY
— Chennai Super Kings (@ChennaiIPL) March 5, 2024
இந்தியன் பிரீமியர் லீக் 2024 தொடர் இம்மாதம் 22-ம் தேதி துவங்க இருக்கிறது. இந்த சீசனின் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோதவுள்ளன.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு மகேந்திர சிங் டோனி கேப்டனாக களமிறங்குவார் என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
#WATCH | Tamil Nadu: Former Indian Cricket Team Captain MS Dhoni arrives at Chennai Airport. pic.twitter.com/ueWLVnNH0f
— ANI (@ANI) March 5, 2024இந்த நிலையில், துவங்க இருக்கும் 2024 ஐ.பி.எல். தொடரில் புதிய ரோலை ஏற்க இருப்பதாக மகேந்திர சிங் டோனி தெரிவித்து இருக்கிறார். மேலும் புதிய பொறுப்பை ஏற்பதில் சுவாரஸ்யமாக இருப்பதாகவும் தெரிவித்து இருக்கிறார்.






