என் மலர்tooltip icon

    விளையாட்டு

    • எம்.எஸ் டோனி என்ற பெயர்தான் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் இன்ஸ்டாகிராமில் அதிக பேர் பின்தொடர்பவதற்கு காரணம்
    • சென்னைக்கு அடுத்தபடியாக 13.5 மில்லியன் பின் தொடர்பவர்களுடன் பெங்களூரு அணி இரண்டாவது இடத்தில் உள்ளது

    சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அவர்களுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 15 மில்லியன் பின் தொடர்பவர்களை பெற்ற முதல் அணி என்ற சாதனையை படைத்துள்ளது.

    சென்னைக்கு அடுத்தபடியாக 13.5 மில்லியன் பின் தொடர்பவர்களுடன் ஆர்.சி.பி அணி இரண்டாவது இடத்திலும், 13.2 மில்லியன் பின் தொடர்பவர்களுடன் மும்பை இந்தியன்ஸ் அணி மூன்றாவது இடத்திலும் உள்ளது.

    எம்.எஸ் டோனி என்ற பெயர்தான் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் இன்ஸ்டாகிராமில் அதிக பேர் பின்தொடர்பவதற்கு காரணம் என்றால் மிகையாகாது. இந்திய முழுவதும் சென்னை அணிக்கு ரசிகர்கள் இருப்பதற்கும் அவர்தான் காரணம். இதுவரை 5 ஐபிஎல் கோப்பைகளை சென்னை அணி வென்றுள்ளது.

    இந்நிலையில், ஐபிஎல் 2024 தொடரில் சிஎஸ்கே கேப்டன் பதவியில் இருந்து தோனி விலகி, ருதுராஜ் கெய்க்வாட் இடம் கேப்டன் பொறுப்பை ஒப்படைத்தார். இந்த தொடரில் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையில் முதல் 2 போட்டிகளிலும் சென்னை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. 

    • சென்னை அணி தோல்வியை சந்திக்காமல் உள்ளது.
    • டெல்லி அணி முதல் வெற்றியை பெறும் முனைப்பில் உள்ளது.

    ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரில் இன்று (மார்ச் 31) இரண்டு போட்டிகள் நடைபெறுகின்றன. முதல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின. இந்த போட்டியில் குஜராத் அணி 7  விக்கெட்டுகள் வித்தியாசத்தில் எளிதாக வெற்றி பெற்றது.

    இரண்டாவது போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது. 2024 ஐ.பி.எல். சீசனில் இதுவரை சென்னை அணி ஆடிய இரு போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. டெல்லி அணி விளையாடிய இரு போட்டிகளிலும் தோல்வியை தழுவியுள்ளது.

    அந்த வகையில், வெற்றியை தொடரும் முனைப்பில் சென்னை அணியும், முதல் வெற்றியை பெறும் முனைப்பில் டெல்லி அணியும் களமிறங்குகின்றன. 

    • முதலில் ஆடிய ஐதராபாத் 162 ரன்கள் எடுத்தது.
    • அடுத்து ஆடிய குஜராத் 19.1 ஓவரில் வெற்றி இலக்கை எட்டியது.

    அகமதாபாத்:

    ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் அகமதாபாத்தில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின. டாஸ் வென்ற ஐதராபாத் பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய ஐதராபாத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 162 ரன்களை சேர்த்தது. அதிகபட்சமாக

    அபிஷேக் சர்மா மற்றும் அப்துல் சமது ஆகியோர் தலா 29 ரன்கள் எடுத்தனர்.

    குஜராத் சார்பில் மோகித் சர்மா 3 விக்கெட் வீழ்த்தினார்.

    இதையடுத்து, 163 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் குஜராத் அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் விரித்திமான் சகா 13 பந்தில் 25 ரன்கள் எடுத்தார். சுப்மன் கில் 28 பந்தில் 36 ரன்கள் குவித்தார். சாய் சுதர்சன் 45 ரன்னில் வெளியேறினார்.

    இறுதியில் குஜராத் அணி 19.1 ஓவரில் 168 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. மில்லர் 44 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.

    • இவர் 155.8 கிமீ வேகத்தில் வீசிய பந்து இந்த தொடரில் வீசப்பட்ட வேகமான பந்து என்ற சாதனையை படைத்தது
    • லக்னோ அணியில் அறிமுகமான தனது முதல் போட்டியிலேயே மயங்க் யாதவ் ஆட்டநாயகன் விருதை வென்றார்

    ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரின் 11 ஆவது லீக் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி பேட்டிங் தேர்வு செய்தது.

    பேட்டிங்கை துவங்கிய லக்னோ அணி 8 விக்கெட்டுகளை இழந்து 199 ரன்களை குவித்தது. 200 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் கிங்ஸ் அணி 5 விக்கெட்டுகளை இழந்து 178 ரன்களை மட்டுமே அடித்து தோல்வியை தழுவியது.

    இதன் மூலம் லக்னோ அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. லக்னோ அணி சார்பில் சிறப்பாக பந்துவீசிய மயங்க் யாதவ் மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றினார். மோசின் கான் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

    குறிப்பாக இவர் 155.8 கிமீ வேகத்தில் வீசிய பந்து இந்த தொடரில் வீசப்பட்ட வேகமான பந்து என்ற சாதனையை படைத்தது. தொடர்ச்சியாக 150 கிமீ வேகத்தில் அவர் பந்துவீசி பஞ்சாப் பேட்ஸ்மேன்களை திணறடித்தார். அதனால் தான் லக்னோ அணியில் அறிமுகமான தனது முதல் போட்டியிலேயே மயங்க் யாதவ் ஆட்டநாயகன் விருதை வென்றார்.

    அதன் பின்னர் பேசிய அவர், தென்னாப்பிரிக்காவின் ஜாம்பவான் வீரர் டேல் ஸ்டைன் தான் தம்முடைய ரோல் மாடல் என்று கூறினார் . மேலும் காயத்தை சந்தித்திருக்காமல் போயிருந்தால் கடந்த வருடமே ஐபிஎல் தொடரில் அறிமுகமாகி விளையாடியிருப்பேன் என்று தெரிவித்தார்.

    இந்நிலையில், மயங்க் யாதவை தென்னாப்பிரிக்க முன்னாள் வீரர் டேல் ஸ்டைன் பாராட்டியுள்ளார். இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், "மணிக்கு 155.8 கி.மீ வேகம். மயங்க் யாதவ், நீங்கள் எங்கே ஒளிந்திருந்தீர்கள் என்று வியப்புடன் பாராட்டியுள்ளார்.

    மேலும் மயங்க் யாதவ் பற்றி ஆஸ்திரேலியா முன்னாள் ஜாம்பவான் வேகப்பந்து வீச்சாளர் பிரட் லீ தன்னுடைய ட்விட்டரில் பாராட்டி பதிவிட்டுள்ளார். அதில், "இந்தியா தனது வேகப்பந்து வீச்சாளரை கண்டு பிடித்துள்ளது. மயங்க் யாதவ், மிரட்டலான வேகம். மிகவும் ஈர்க்கக் கூடியதாக இருக்கிறது" என்று பதிவிட்டுள்ளார்.

    • டாஸ் வென்று முதலில் ஆடிய ஐதராபாத் 162 ரன்கள் எடுத்தது.
    • அந்த அணியின் அபிஷேக் சர்மா மற்றும் அப்துல் சமது 29 ரன்கள் எடுத்தனர்.

    அகமதாபாத்:

    ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்று மதியம் 3.30 மணிக்கு அகமதாபாத்தில் நடைபெறும் லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற ஐதராபாத் அணி கேப்டன் பேட் கம்மின்ஸ் பேட்டிங் தேர்வு செய்தார்.

    அதன்படி, முதலில் ஆடிய ஐதராபாத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 162 ரன்களை சேர்த்தது.

    மயங்க் அகர்வால் 16 ரன்னும், டிராவிஸ் ஹெட் 19 ரன்னும், அபிஷேக் சர்மா 29 ரன்னும், மார்கிரம் 17 ரன்னும், கிளாசன் 24 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

    கடைசி கட்டத்தில் 6-வது விக்கெட்டுக்கு இணைந்த ஷபாஸ் அகமது, அப்துல் சமத் ஜோடி அதிரடியில் மிரட்டியது. இந்த ஜோடி 45 ரன்கள் சேர்த்த நிலையில் ஷபாஸ் அகமது 22 ரன்னில் அவுட்டானார்.

    குஜராத் அணி சார்பில் மோகித் சர்மா 3 விக்கெட் வீழ்த்தினார்.

    இதையடுத்து, 163 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் குஜராத் அணி களமிறங்குகிறது.

    • முதலில் ஆடிய இலங்கை அணி முதல் இன்னிங்சில் 531 ரன்கள் குவித்தது.
    • இலங்கை அணியில் தொடக்க வீரர்கள் உள்பட 6 பேர் அரை சதமடித்தனர்.

    சட்டோகிராம்:

    வங்காளதேசம், இலங்கை இடையிலான 2-வது டெஸ்ட் சட்டோகிராமில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற இலங்கை பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய இலங்கை அணி முதல் இன்னிங்சில் 531 ரன்கள் குவித்தது.

    அந்த அணியின் குசால் மெண்டிஸ் 93 ரன்னும், கமிந்து மெண்டிஸ் 92 ரன்னும், கருணரத்னே 86 ரன்னும், தனஞ்செய டி சில்வா 70 ரன்னும், சண்டிமால் 59 ரன்னும், நிஷான் மதுஷ்கா 57 ரன்னும் எடுத்தனர்.

    வங்காளதேசத்தின் ஷகிப் அல் ஹசன் 3 விக்கெட்டும், ஹசன் மெஹ்மூத் 2 விக்கெட்டும் கைப்பற்றினர்.

    இதையடுத்து, வங்காளதேசம் முதல் இன்னிங்சை விளையாடி வருகிறது.

    • அமெரிக்காவில் மியாமி ஓபன் டென்னிஸ் போட்டிகள் நடந்து வருகிறது.
    • ஆண்கள் இரட்டையர் பிரிவில் போபண்ணா ஜோடி சாம்பியன் பட்டம் வென்றது.

    மியாமி:

    அமெரிக்காவில் மியாமி ஓபன் டென்னிஸ் போட்டிகள் நடந்து வருகிறது. தற்போது இந்தத் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

    இதில் ஆண்கள் இரட்டையர் பிரிவின் இறுதிப்போட்டியில் இந்தியாவின் ரோகன் போபண்ணா, ஆஸ்திரேலியாவின் மேத்யூ எப்டன் ஜோடி, குரோஷியாவின் இவான் டோடிக், அமெரிக்காவின் ஆஸ்டின் கிராஜிசெக் ஜோடியுடன் மோதியது.

    இதில் முதல் 2 செட்டுகளை ஆளுக்கு ஒன்றாக கைப்பற்றிய நிலையில், 3-வது செட்டை போபண்ணா ஜோடி வென்றது.

    இந்தப் போட்டியில் போபண்ணா ஜோடி 6-7, 6-3, 10-6 என்ற செட் கணக்கில் கைப்பற்றி சாம்பியன் பட்டம் வென்றது.

    • விரைவில டி20 உலகக் கோப்பை தொடர் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெற இருக்கிறது
    • டி20 உலகக் கோப்பையில் குரூப் ஏ பிரிவில் பாகிஸ்தான் இடம்பெற்றுள்ளது

    இந்தியாவில் நடைபெற்ற 50 ஓவர் உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தான் ஜொலிக்காததைத் தொடர்ந்து பாபர் அசாம் கேப்டன் பதவியை ராஜினாமா செய்தார்.

    இதனால் ஷாஹீன் அப்ரிடி பாகிஸ்தான் டி20 அணி கேப்டனாக நியமிக்கப்பட்டார். இவரது தலைமையில் நியூசிலாந்து அணிக்கெதிராக பாகிஸ்தான் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. இதில் பாகிஸ்தான் 1-4 எனத் தோல்வியடைந்தது.

    விரைவில டி20 உலகக் கோப்பை தொடர் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெற இருக்கிறது. டி20 உலகக் கோப்பை, டி20 அணியின் எதிர்கால திட்டம், பயிற்சியாளர் நியமனம் குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு மற்றும் பாகிஸ்தான கிரிக்கெட் போர்டு தலைவர் மோசின் நக்வி ஷாஹீன் அப்ரிடியிடம் கலந்து ஆலோசனை நடத்தவில்லை. இது ஷாஹீன் அப்ரிடிக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

    இதற்கிடையே பாபர் அசாம் உடன் ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது. இதில் ஷாஹீன் அப்ரிடி கலந்து கொள்ளவில்லை. கேப்டனாக தொடரை வைக்க விருப்பம் இல்லை என்றால் தன்னை நீக்கி விட்டு, அதற்கான காரணத்தை வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும் என ஷாஹீன் அப்ரிடி எதிர்பார்க்கிறார்.

    மேலும் அவருக்கு நெருக்கமான சிலர் கேப்டன் பதவியை ராஜினாமா செய்துவிட்டு பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு தொடர்பான குழப்பத்தில் இருந்து விலகி இருக்க வலியுறுத்தியுள்ளனர். இதனால் ஷாஹீன் அப்ரிடி கேப்டன் பதவியை ராஜினாமா செய்யலாம் என சொல்லப்பட்டது.

    இந்நிலையில், ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளுக்கான பாகிஸ்தான் அணியின் புதிய கேப்டனாக பாபர் அசாம் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு தலைவர் மோசின் நக்வி தெரிவித்துள்ளார்.

    2022-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடந்த டி20 உலகக் கோப்பையில் பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணி இறுதிப் போட்டி வரை சென்றது. ஆதலால் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெறும் உலகக்கோப்பை போட்டியில் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணி சிறப்பாக விளையாடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    டி20 உலகக் கோப்பையில் குரூப் ஏ பிரிவில் பாகிஸ்தான் இடம்பெற்றுள்ளது. இந்த பிரிவில் இந்தியா, அயர்லாந்து, கனடா மற்றும் அமெரிக்கா ஆகிய அணிகளை பாகிஸ்தான் எதிர்கொள்கிறது.

    • மியாமி ஓபன் டென்னிஸ் இறுதிப் போட்டியில் எலீனா ரிபாகினா, டேனியல் காலின்ஸ் மோதினர்.
    • இந்தப் போட்டியில் ரிபாகினா அதிர்ச்சி தோல்வி அடைந்து வெளியேறினார்.

    மியாமி:

    மியாமி ஓபன் டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டி இன்று நடைபெற்றது.

    இதில் கஜகஸ்தான் வீராங்கனை எலீனா ரிபாகினா, அமெரிக்காவின் டேனியல் காலின்சுடன் மோதினார்.

    இதில் காலின்ஸ் 7-5, 6-3 என்ற நேர் செட் கணக்கில் வென்று சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார்.

    • இன்று மாலை 3.30 மணிக்கு நடைபெறும் லீக் ஆட்டத்தில் ஜிடி- ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணிகள் மோதல்.
    • விசாகப்பட்டினத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது.

    ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்று இரண்டு லீக் ஆட்டங்கள் நடைபெறுகிறது. அதன்படி இன்று மாலை 3.30 மணிக்கு அகமதாபாத்தில் நடைபெறும் லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்களான குஜராத் டைட்டன்ஸ்- ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணிகள் மோதுகின்றன.

    கம்மின்ஸ் தலைமையிலான ஐதராபாத் அணி தனது முதல் ஆட்டத்தில் 4 ரன் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்சிடம் வீழ்ந்தது. அடுத்த ஆட்டத்தில் 31 ரன் வித்தியாசத்தில் 5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்சை வீழ்த்தியது. மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் ஐதராபாத் 277 ரன்கள் குவித்து ஐ.பி.எல். வரலாற்றில் அதிக ரன் எடுத்த அணி என்ற மகத்தான சாதனையை படைத்து அனைவரையும் மலைக்க வைத்தது.

    குஜராத் அணி தன்னுடைய முதல் ஆட்டத்தில் 6 ரன் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்சை சாய்த்தது. 2-வது ஆட்டத்தில் 63 ரன் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்சிடம் பணிந்தது.

    இதை தொடர்ந்து, விசாகப்பட்டினத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்கும் 13-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்-டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதுகின்றன.

    நடப்பு சாம்பியன் சென்னை அணி தனது முதலாவது லீக் ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்சையும், 2-வது ஆட்டத்தில் 63 ரன் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்சையும் தோற்கடித்து வலுவான நிலையில் இருக்கிறது.

    டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி தனது தொடக்க ஆட்டத்தில் 4 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்சிடமும். அடுத்த ஆட்டத்தில் 12 ரன் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்சிடமும் அடுத்தடுத்து தோல்வியை தழுவியது.

    சென்னை அணி 'ஹாட்ரிக்' வெற்றியை ருசிக்கும் ஆவலுடன் தயாராகி உள்ளது.

    • பஞ்சாப் அணிக்கு அர்தீப் சிங் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
    • ஷிகர் தவான் அதிரடியாக ஆடி அரைசதம் கடந்தார்.

    ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரின் 11 ஆவது லீக் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி பேட்டிங் தேர்வு செய்தது.

    பேட்டிங்கை துவங்கிய லக்னோ அணிக்கு குவிண்டன் டி காக் சிறப்பான துவக்கத்தை கொடுத்தார். இவருடன் களமிறங்கிய கே.எல். ராகுல் 15 ரன்களில் ஆட்டமிழந்தார். டி கார் 38 பந்துகளில் 54 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய தேவ்தத் படிக்கல் 9 ரன்களிலும், மார்கஸ் ஸ்டாய்னிஸ் 19 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

    கேப்டன் நிக்கோலஸ் பூரன் 21 பந்துகளில் 42 ரன்களை குவித்தார். போட்டி முடிவில் லக்னோ அணி 8 விக்கெட்டுகளை இழந்து 199 ரன்களை குவித்தது. பஞ்சாப் அணி சார்பில் சாம் கர்ரன் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். அர்தீப் சிங் 2 விக்கெட்டுகளையும், ரபாடா மற்றும் ராகுல் சாஹர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

     

    200 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு ஷிகர் தவான் மற்றும் பேர்ஸ்டோ சிறப்பான துவக்கத்தை கொடுத்தது. பேர்ஸ்டோ 29 பந்துகளில் 42 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார். அடுத்த வந்த பிரப்சிம்ரன் சிங் 7 பந்துகளில் 19 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார்.

    போட்டி முடிவில் பஞ்சாப் அணி 5 விக்கெட்டுகளை இழந்து 178 ரன்களை குவித்து தோல்வியை தழுவியது. இதன் மூலம் லக்னோ அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. லக்னோ அணி சார்பில் சிறப்பாக பந்துவீசிய மயான்க் யாதவ் மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றினார். மோசின் கான் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

    • குவிண்டன் டி காக் சிறப்பாக ஆடி அரைசதம் கடந்தார்.
    • பஞ்சாப் அணிக்கு சாம் கர்ரன் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

    ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரின் 11 ஆவது லீக் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி பேட்டிங் தேர்வு செய்தது.

    பேட்டிங்கை துவங்கிய லக்னோ அணிக்கு குவிண்டன் டி காக் சிறப்பான துவக்கத்தை கொடுத்தார். இவருடன் களமிறங்கிய கே.எல். ராகுல் 15 ரன்களில் ஆட்டமிழந்தார். டி கார் 38 பந்துகளில் 54 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய தேவ்தத் படிக்கல் 9 ரன்களிலும், மார்கஸ் ஸ்டாய்னிஸ் 19 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். 

    கேப்டன் நிக்கோலஸ் பூரன் 21 பந்துகளில் 42 ரன்களை குவித்தார். போட்டி முடிவில் லக்னோ அணி 8 விக்கெட்டுகளை இழந்து 199 ரன்களை குவித்தது. கடைசியில் சிறப்பாக ஆடிய க்ரூனல் பாண்டியா 22 பந்துகளில் 43 ரன்களை குவித்தார்.

    பஞ்சாப் அணி சார்பில் சாம் கர்ரன் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். அர்தீப் சிங் 2 விக்கெட்டுகளையும், ரபாடா மற்றும் ராகுல் சாஹர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். 

    ×