என் மலர்tooltip icon

    விளையாட்டு

    • ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியில் ரோகித் முதல் பந்தில் ஆட்டமிழந்தார்.
    • மேக்ஸ்வெல், பியூஸ் சாவ்லா 15 முறை டக் அவுட் ஆகி உள்ளனர்.

    ஐபிஎல் தொடரின் 14-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ்- ராஜஸ்தான் ராய்ல்ஸ் அணி மோதுகிறது. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி மும்பை அணியின் தொடக்க ஆட்டகாரர்களாக ரோகித்- இஷான் கிஷன் களமிறங்கினர். ஒரு ரன்கள் எடுப்பதற்குள் அந்த அணி இரண்டு விக்கெட்டுகளை பறிகொடுத்தது. இதில் ரோகித் டக் அவுட்டில் வெளியேறினார்.

    இதன் மூலம் ஐபிஎல் தொடரில் அதிக முறை டக் அவுட் ஆன வீரர்களில் தினேஷ் கார்த்திக் உடன் ரோகித் சர்மா இணைந்துள்ளார். இவர்கள் இருவரும் 17 முறை டக் அவுட் ஆகி முதல் இடத்தில் உள்ளார். இவர்களுக்கு அடுத்தப்படியாக மேக்ஸ்வெல், பியூஸ் சாவ்லா (15 முறை) உள்ளனர்.

    • 5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி முதல் இரு ஆட்டங்களில் தோல்வியை தழுவியுள்ளது.
    • ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தனது முதல் இரு ஆட்டங்களில் வெற்றி பெற்றுள்ளது.

    10 அணிகள் பங்கேற்றுள்ள 17-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் இன்று நடைபெற உள்ள 14-வது லீக் ஆட்டத்தில் ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராய்ல்ஸ் அணியும் மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் பலப்பரீட்சை நடத்த உள்ளன.

    இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. 5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி முதல் இரு ஆட்டங்களில் குஜராத் மற்றும் ஐதராபாத்திடம் தோற்று புள்ளிபட்டியலில் கடைசி இடத்தில் இருக்கிறது.

    ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தனது முதல் இரு ஆட்டங்களில் முறையே லக்னோ, டெல்லி அணிகளை தோற்கடித்து இந்த சீசனை சூப்பராக தொடங்கி இருக்கிறது. 

    • ஐபிஎல் வரலாற்றில் ஒரு ஓவரில் அதிகமுறை 20 ரன்கள் குவித்த முதல் வீரர் என்ற சாதனையை டோனி படைத்துள்ளார்.
    • டி20 கிரிக்கெட்டில் 7000 ரன்களை கடந்த ஆசியாவின் முதல் விக்கெட் கீப்பர் பேட்டர் என்ற பெருமையை டோனி பெற்றுள்ளார்.

    விசாகப்பட்டினம்:

    ஐ.பி.எல் தொடரின் 13-வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் - டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதின.

    இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் ஆடிய டெல்லி அணி 20 ஒவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 191 ரன்கள் எடுத்தது. டெல்லி தரப்பில் வார்னர் 52 ரன், பண்ட் 51 ரன் எடுத்தனர்.

    இதையடுத்து 192 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டை இழந்து 171 ரன் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் 20 ரன் வித்தியாசத்தில் டெல்லி அணி வெற்றி பெற்றது.

    இந்த போட்டியில் சென்னை அணியின் வெற்றிக்காக இறுதிக்கட்டத்தில் போராடிய டோனி அதிரடியாக ஆடி 16 பந்தில் 37 ரன் எடுத்தார். இதில் 4 பவுண்டரி மற்றும் 3 சிக்சர்கள் அடங்கும்.

    இதன்மூலம் டோனி பல சாதனைகளை படைத்துள்ளார். முதலாவதாக ஐபிஎல் வரலாற்றில் ஒரு ஓவரில் அதிகமுறை 20 ரன்கள் குவித்த முதல் வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். டோனி 9 முறையும் ரோகித் 8 முறையும் ரிஷப் பண்ட் 6 முறையும் அடித்துள்ளனர்.

    மேலும் டி20 கிரிக்கெட்டில் 7000 ரன்களை கடந்த ஆசியாவின் முதல் விக்கெட் கீப்பர் பேட்டர் என்ற பெருமையை டோனி பெற்றுள்ளார். ஐபிஎல் தொடரில் 5000 ரன்களை கடந்த முதல் விக்கெட் கீப்பர் என்ற சாதனையையும் அவர் படைத்துள்ளார்.

    இதை தவிர ஐபிஎல் தொடரில் 19 மற்றும் 20-வது ஓவர்களில் 100 சிக்சர்கள் விளாசிய முதல் விரர் என்ற சாதனையை இவர் படைத்துள்ளார். 57 சிக்சர்களுடன் பொல்லார்ட் 2-வது இடத்தில் உள்ளார்.

    • அவர் தற்போது இடது குதிகால் பகுதியில் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
    • டி20 உலகக்கோப்பை தொடரை கருத்தில் கொண்டு அவர் நடப்பு ஐ.பி.எல் தொடரில் இருந்து விலக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    கொழும்பு:

    ஐ.பி.எல் தொடரின் 17-வது சீசன் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இதுவரை நடந்துள்ள லீக் ஆட்டங்களின் முடிவில் புள்ளிப்பட்டியலில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், குஜராத் டைட்டன்ஸ் அணிகள் முதல் 4 இடங்களில் உள்ளன.

    இந்நிலையில் நடப்பு ஐ.பி.எல் தொடரில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியில் இடம்பெற்றிருந்த இலங்கையை சேர்ந்த முன்னணி சுழற்பந்து வீச்சாளரான வனிந்து ஹசரங்கா தொடரில் இருந்து முழுமையாக விலக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    வங்காளதேசத்திற்கு எதிரான தொடரில் ஆடி வந்த அவர் தற்போது இடது குதிகால் பகுதியில் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. எனவே எதிர்வரும் டி20 உலகக்கோப்பை தொடரை கருத்தில் கொண்டு அவர் நடப்பு ஐ.பி.எல் தொடரில் இருந்து விலக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    • முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி 20 ஓவர் முடிவில் 191 ரன்கள் எடுத்தது.
    • டெல்லி அணி 20 ரன்கள் எடுத்து முதல் வெற்றியை பதிவு செய்தது.

    ஐபிஎல் தொடரின் 13-வது லீக் போட்டியில் சென்னை மற்றும் டெல்லி அணிகள் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி 20 ஓவர் முடிவில் 191 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து களமிறங்கிய சென்னை அணி 171 ரன்கள் எடுத்தது. இதனால் டெல்லி அணி 20 ரன்கள் எடுத்து முதல் வெற்றியை பதிவு செய்தது.

    இந்நிலையில் இந்த போட்டியில் அதிரடியாக பேட்டிங் செய்த டோனிக்கு எலக்ட்ரிக் ஸ்டிரைக்கர் ஆஃப் தி மேட்ச் என்ற ஸ்பெஷல் விருது வழங்கப்பட்டது. அதைப் பார்த்த அவருடைய மனைவி சாக்ஷி, தோல்வியை சந்தித்த சோகம் கொஞ்சமாவது முகத்தில் தெரியுதா பாருங்க என்ற வகையில் இன்ஸ்டாகிராமில் கலாய்த்துள்ளார்.

    இது பற்றி இன்ஸ்டாகிராமில் சாக்ஷி கூறியதாவது:-

    ஹேய் மஹி. நாம் போட்டியில் தோல்வியை சந்தித்தோம் என்பதை உணர முடியவில்லை என்று சிரிக்கும் ஸ்மைலியை போட்டு கலாய்த்துள்ளார். அத்துடன் வெற்றி பெற்ற ரிஷப் பண்ட்க்கு அவர் தெரிவித்துள்ள வாழ்த்து பின்வருமாறு, அனைத்துக்கும் முதலாக ரிஷப் பண்ட்டுக்கு வரவேற்பு கொடுப்போம் என்று கூறியுள்ளார்.

    • நேற்றைய போட்டியில் டோனி 16 பந்தில் 37 ரன் எடுத்தார்.
    • ஆட்டத்தின் கடைசி ஓவரில் டோனி 4,6,0,4,0,6 என 20 ரன்கள் விளாசினார்.

    சென்னை:

    சென்னை சூப்பர் கிங்ஸ் விளையாடிய முதல் 2 ஆட்டத்தில் டோனி களம் இறங்கவில்லை. இதனால் ரசிகர்கள் பெரிதும் ஏமாற்றம் அடைந்தனர்.

    ஆனால் விசாகப்பட்டினத்தில் சி.எஸ்.கே. மோதிய நேற்றைய 3-வது போட்டியில் டோனி களம் இறங்கி தனது அதிரடியான ஆட்டம் மூலம் ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். சி.எஸ்.கே. தோற்றாலும் டோனியின் அபாரமான ஆட்டத்தால் ரசிகர்கள் மகிழ்ச்சி வெள்ளத்தில் திளைத்தனர்.

    23 பந்தில் 72 ரன் தேவை என்ற கடினமான நிலையில் இருந்த போதுதான் டோனி 8-வது வீரராக களம் வந்தார். முகேஷ்குமார் ஓவரில் தான் சந்தித்த முதல் பந்திலேயே அவர் பவுண்டரி அடித்தார். அடுத்த பந்தில் கேட்சில் இருந்து தப்பினார். அதற்கு அடுத்த ஓவரில் கலீல் அகமதுவின் கடைசி பந்தில் டோனி சிக்சர் அடித்தார். ஆட்டத்தின் கடைசி ஓவரில் அவர் 4,6,0,4,0,6 என 20 ரன்கள் விளாசினார். அவர் 16 பந்தில் 37 ரன் எடுத்தார். இதில் 4 பவுண்டரியும், 3 சிக்சரும் அடங்கும்.

    3 சிக்சர்கள் மூலம் டோனி ஐ.பி.எல். போட்டியில் அதிக சிக்சர்கள் அடித்த வீரர்களில் 4-வது இடத்தில் இருந்த கோலியை முந்தினார். டோனி 242 சிக்சர்களுடன் 4-வது இடத்திலும், கோலி 241 சிக்சர்களுடன் 5-வது இடத்திலும் உள்ளனர். கடந்த சில தினங்களுக்கு முன்புதான் டோனியை கோலி முந்தினார். தற்போது அவரை டோனி பின்னுக்கு தள்ளியுள்ளார். கோலியோ முதல் வரிசையில் ஆடுகிறார். ஆனால் டோனி களத்தில் இறங்கும் வாய்ப்பு அரிதாகவே இருக்கிறது.

    கிறிஸ் கெய்ல் (357 சிக்சர்), ரோகித் சர்மா (261), டிவில்லியர்ஸ் (251) ஆகியோர் முறையே முதல் 3 இடங்களில் உள்ளனர்.

    • குறிப்பிட்ட நேரத்திற்குள் ஓவரை முடிக்காததால் அபராதம்.
    • கடைசி இரண்டு ஓவரின்போது 4 வீரர்கள்தான் பவுண்டரி லைனில் பீல்டிங் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.

    விசாகப்பட்டினத்தில் நேற்று நடைபெற்ற போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ்- டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதின. முதலில் விளையாடிய டெல்லி கேப்பிட்டல்ஸ் 191 ரன்கள் குவித்தது. பின்னர் 192 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் சிஎஸ்கே களம் இறங்கியது. ஆனால் 7 ரன்னுக்குள் 2 விக்கெட்டுகளை இழந்த சிஎஸ்கே அணியால் 171 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது. இதனால் டெல்லி கேப்பிட்டல்ஸ் 20 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இந்த போட்டியில் குறிப்பிட்ட நேரத்திற்குள் டெல்ல கேப்பிட்டல்ஸ் அணி பந்து வீசவில்லை எனத் தெரியவந்தது. இதனால் அணியின் கேப்டனான ரிஷப் பண்ட்-க்கு ஐபில் 12 லட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது.

    இதுவரை மூன்று போட்டிகளில் விளையாடியுள்ள டெல்லி முதன்முறையாக குறிப்பிட்ட நேரத்திற்குள் பந்து வீசவில்லை. இதனால் கடைசி 2 ஓவரின்போது பவுண்டரில் எல்லையில் நான்கு வீரர்கள் மட்டுமே பீல்டிங் செய்ய அனுமதிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • சிஎஸ்கே 20 ரன்னில் தோல்வியடைந்தது.
    • டோனி கடைசி ஓவரில் இரண்டு சிக்ஸ், இரண்டு பவுண்டரியுடன் 20 ரன் விளாசினார்.

    டெல்லி கேப்பிட்டல்ஸ்- சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி நேற்று விசாகப்பட்டினத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

    கடந்த இரண்டு போட்டிகளில் பேட்டிங் செய்யாத எம்எஸ் டோனி இந்த போட்டியில் களம் இறங்கினார். அவர் களத்திற்கு வரும்போது 23 பந்தில் 70 ரன்கள் தேவைப்பட்டது, முதல் பந்தை பவுண்டரி விரட்டி அசத்தினார்.

    எம்எஸ் டோனி களம் இறங்கியதும் ரசிகரக்ள் டோனி டோனி என கோஷமிட்டனர். விசாகப்பட்டினம் டெல்லியின் ஹோம் கிரவுண்ட் ஆகும். ஆனால் நேற்று கேலரியில் எங்கு பார்த்தாலும் மஞ்சளாக காட்சியளித்தது. அந்த அளவிற்கு சிஎஸ்கே ரசிகர்களால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்தது.

    வெற்றியோ... தோல்வியோ... டோனி டோனி என கோஷம் எழுப்பினர். அதற்கு ஏற்ப டோனியும் சிக்ஸ், பவுண்டரி விளாசினார். கடைசி ஓவரை நோர்ஜே வீசினார். இந்த ஓவரில் இரண்டு சிக்ஸ், இரண்டு பவுண்டரியுடன் 20 ரன்கள் விளாசினார்.

    மொத்தம் 16 பந்தில் 4 பவுண்டரி, 3 சிக்சருடன் எம்எஸ் டோனி 37 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். ஸ்டிரைக் ரேட் 231.25 ஆகும்.

    சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோல்வியடைந்த நிலையிலும் மைதானத்தில் இருந்த சிஎஸ்கே ரசிகர்கள் ஆரவாரம் எழுப்பினர். இதனால் வெற்றி பெற்ற அணி எது என்ற குழப்பம் கூட டெல்லி கேப்பிட்டல்ஸ் ரசிகர்களுக்கு ஏற்பட்டிருக்கலாம்.

    போட்டியில் சிஎஸ்கே வெற்றி பெற்றதோ இல்லையோ... அதைப் பற்றி எங்களுக்கு கவலை இல்லை. நாங்கள் டோனி ஆட்டத்தை பார்க்க வந்தோம். என்ஜாய் செய்தோம் என ரசிகர்கள் ஆரவாரம் எழுப்பினர். அதற்கு ஏற்பட டோனியின் ஆட்டமும் அமைந்தது.

    • சென்னை சூப்பர் கிங்ஸ் முதல் 3 ஓவரில் 2 விக்கெட்டுகளை இழந்து ஏழு ரன்கள் மட்டுமே எடுத்தது.
    • டெல்லியை 191 ரன்னுக்குள் கட்டுப்படுத்தியது நல்ல முயற்சிதான்.

    டெல்லி கேப்பிட்டல்ஸ்- சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் நேற்று விசாகப்பட்டினத்தில் நடைபெற்றது. முதலில் விளையாடிய டெல்லி 191 ரன்கள் குவித்தது. பின்னர் 192 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் 171 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது. இதனால் டெல்லி கேப்பிட்டல்ஸ் 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    போட்டியில் தோல்வியடைந்தது குறித்து சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் கூறியதாவது:-

    பவர்பிளே ஓவர்களுக்குப் பிறகு பந்து வீச்சாளர்கள் நல்ல நிலைக்கு திரும்பியது மகிழ்ச்சி அளித்தது. 191 ரன்னுக்குள் கட்டுப்படுத்தியது நல்ல முயற்சிதான். முதல் இன்னிங்ஸ் போது ஆடுகளம் பேட்டிங்கிற்கு சாதகமாக இருந்தது. 2-வது இன்னிங்சில் எக்ஸ்ட்ரா சீம் மூவ்மென்ட் இருந்தது. ரச்சின் ரவீந்திரா 12 பந்தில் 2 ரன் என்பது மிகப்பெரிய வித்தியாசம் என நினைக்கிறேன். முதல் மூன்று ஓவர்கள் எங்களுக்கு சரியாக அமையவில்லை. இதுதான் போட்டியின் தோல்விக்கான வித்தியாசம். பாதி நேரத்தில் ஆட்டத்தை தங்கள் பக்கம் திருப்பினோம்.

    எக்ஸ்ட்ரா சீம் மூவ்மென்ட்-ஐ நாங்கள் எங்களுக்கு சாதமாக மாற்றிக் கொள்ள முடியவில்லை. ரன்ரேட்டை குறைக்க மிகப்பெரிய ஓவராக அமையாமல் போனது. தீபக் சாஹர் முதல் மூன்று ஓவர்கள் வீசினார். நாங்கள் முதல் நான்கு ஓவர்களை நன்றாக வீசினார். ஆனால் பவர்பிளேயின் கடைசி இரண்டு ஓவர்களில் அதிக ரன்கள் கொடுத்துவிட்டோம். நாங்கள் ஒன்றிரண்டு பவுண்டரிகளை நிறுத்தியிருந்தால் அது மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கும்.

    இவ்வாறு ருதுராஜ் கெய்க்வாட் தெரிவித்தார்.

    டெல்லி அணி கேப்டன் ரிஷப் பண்ட் கூறியதாவது:-

    பந்து வீச்சாளர்கள் இன்று சிறப்பான தங்களது பணியை செய்து முடித்தார்கள். நாங்கள் தவறில் இருந்து பாடம் கற்றுக் கொண்டோம். கடந்த இரண்டு வாரங்களாக பிரித்வி ஷா கடுமையான வகையில் பயிற்சி மேற்கொண்டார். இந்த நேரத்தில் அவருக்கு வாய்ப்பு கொடுத்து சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என்று நினைத்தோம்.

    இது போட்டி எவ்வாறு செல்கிறது. அதைச் சார்ந்ததாக இருக்கும். முகேஷ் குமார் டெத் ஓவர்களில் சிறப்பாக பந்து வீச முடியும் என்றால், அது சிறப்பாக இருக்கும். ஒரு கிரிக்கெட்டராக நான் என்னுடைய 100 சதவீத முயற்சியை வெளிப்படுத்துகிறேன்.

    கடந்த ஒன்றரை ஆண்டுகளாக விளையாடாத காரணத்தால், கொஞ்சம் நேரம் எடுத்து கொள்கிறது. எது நடந்தாலும், மீண்டும் களத்திற்கு வருவது முக்கியம் என்ற தன்னம்பிக்கை எப்போதும் இருந்தது.

    இவ்வாறு ரிஷப் பண்ட் தெரிவித்துள்ளார்.

    சென்னை சூப்பர் கிங்ஸ் முதல் 3 ஓவரில் 2 விக்கெட்டுகளை இழந்து ஏழு ரன்கள் மட்டுமே எடுத்தது.

    • சென்னை அணியின் ரஹானே 45 ரன்களை குவித்தார்.
    • முகேஷ் குமார் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

    ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரில் இன்று (மார்ச் 31) நடைபெற்ற இரண்டாவது போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி பேட்டிங் தேர்வு செய்தது.

    டெல்லி அணிக்கு பிருத்வி ஷா மற்றும் டேவிட் வார்னர் ஜோடி சிறப்பான துவக்கம் கொடுத்தது. இருவரும் முறையே 43 மற்றும் 52 ரன்களை குவித்தனர். அடுத்த வந்த கேப்டன் ரிஷப் பண்ட் சிறப்பாக ஆடி ரன்களை குவித்து வந்தார். இவருடன் ஆடிய மிட்செல் மார்ஷ் 18 ரன்களிலும், ஸ்டப்ஸ் ரன் ஏதும் எடுக்காமலும் ஆட்டமிழந்தனர்.

    கேப்டன் ரிஷப் பண்ட் 51 ரன்களில் ஆட்டமிழக்க டெல்லி அணி 5 விக்கெட்டுகளை இழந்தது. போட்டி முடிவில் டெல்லி அணி 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 191 ரன்களை குவித்தது. இதையடுத்து 192 ரன்களை இலக்காக துரத்திய சென்னை அணிக்கு துவக்கமே அதிர்ச்சி காத்திருந்தது.

     


    சென்னை அணியின் துவக்க வீரர்கள் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட், ரச்சின் ரவீந்திரா முறையே 1 மற்றும் 2 ரன்களில் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த ரஹானே மற்றும் டேரில் மிட்செல் ஜோடி பொறுப்பாக ஆடி ரன்களை சேர்த்தது. இருவரும் முறையே 45 மற்றும் 34 ரன்களை குவித்து ஆட்டமிழந்தனர்.

    பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஷிவம் தூபே 18 ரன்களில் ஆட்டமிழந்தார். சமீர் ரிஸ்வி முதல் பந்திலேயே பெவிலியன் திரும்பினார். பிறகு ரவீந்திர ஜடேஜாவுடன் ஜோடி சேர்ந்த எம்.எஸ். டோனி முதல் பந்திலேயே பவுண்டரி விளாசினார். இந்த ஜோடி அதிரடி ரன் குவிப்பில் ஈடுபட்டது.

     


    போட்டி முடிவில் சென்னை அணி 6 விக்கெட் இழப்புக்கு 171 ரன்களை குவித்தது. எம்.எஸ். டோனி 37 ரன்களுடனும், ஜடேஜா 21 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இந்த போட்டியில் சென்னை அணியை வீழ்த்திய டெல்லி அணி முதல் வெற்றியை ருசித்தது.

    • டெல்லி அணியின் பிரித்வி ஷா விக்கெட்டை டோனி கேட்ச் பிடித்து அசத்தினார்.
    • விக்கெட் கீப்பராக 300 விக்கெட் வீழ்த்திய முதல் வீரர் என்ற சாதனையை டோனி படைத்தார்.

    விசாகப்பட்டினம்:

    சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக 5 கோப்பைகளை வென்றுள்ள மகேந்திர சிங் தோனி, 17 சீசனில் விக்கெட் கீப்பராகவும் செயல்பட்டுள்ளார்.

    இந்நிலையில், டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் பிரித்வி ஷா விக்கெட்டை கேட்ச் பிடித்து அசத்தினார் டோனி. இதன்மூலம், டி20 கிரிக்கெட்டில் ஸ்டம்பிங் மற்றும் கேட்ச் மூலம் விக்கெட் கீப்பராக 300 விக்கெட் வீழ்த்திய முதல் வீரர் என்ற சாதனையை டோனி படைத்துள்ளார். இதுவரை 213 கேட்சுகளும், 87 ஸ்டம்பிங்கும் செய்துள்ளார்.

    இந்தப் பட்டியலில் பாகிஸ்தான் வீரர் கம்ரான் அக்மல் மற்றும் தினேஷ் கார்த்திக் இருவரும் 274 விக்கெட்டுகளுடன் 2-வது இடத்திலும், 270 விக்கெட்டுகளுடன் டி காக் 3-வது இடத்திலும் உள்ளனர்.

    • சென்னை அணி தோல்வியை சந்திக்காமல் உள்ளது.
    • டெல்லி அணி முதல் வெற்றியை பெறும் முனைப்பில் உள்ளது.

    ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரில் இன்று (மார்ச் 31) நடைபெற்ற இரண்டாவது போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி பேட்டிங் தேர்வு செய்தது.

    டெல்லி அணிக்கு பிருத்வி ஷா மற்றும் டேவிட் வார்னர் ஜோடி சிறப்பான துவக்கம் கொடுத்தது. இருவரும் முறையே 43 மற்றும் 52 ரன்களை குவித்தனர். அடுத்த வந்த கேப்டன் ரிஷப் பண்ட் சிறப்பாக ஆடி ரன்களை குவித்து வந்தார். இவருடன் ஆடிய மிட்செல் மார்ஷ் 18 ரன்களிலும், ஸ்டப்ஸ் ரன் ஏதும் எடுக்காமலும் ஆட்டமிழந்தனர். 




     


    கேப்டன் ரிஷப் பண்ட் 51 ரன்களில் ஆட்டமிழக்க டெல்லி அணி 5 விக்கெட்டுகளை இழந்தது. போட்டி முடிவில் டெல்லி அணி 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 191 ரன்களை குவித்தது. டெல்லி அணியில் அக்சர் பட்டேல், அபிஷேக் பொரெல் முறையே 7 மற்றும் 9 ரன்களுடன் களத்தில் இருந்தனர்.

    சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சார்பில் சிறப்பாக பந்துவீசிய பதிரானா 3 விக்கெட்டுகளையும், ஜடேஜா, முஸ்தஃபிசுர் ரகுமான் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். 

    ×