search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "DCvCSK"

    • குறிப்பிட்ட நேரத்திற்குள் ஓவரை முடிக்காததால் அபராதம்.
    • கடைசி இரண்டு ஓவரின்போது 4 வீரர்கள்தான் பவுண்டரி லைனில் பீல்டிங் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.

    விசாகப்பட்டினத்தில் நேற்று நடைபெற்ற போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ்- டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதின. முதலில் விளையாடிய டெல்லி கேப்பிட்டல்ஸ் 191 ரன்கள் குவித்தது. பின்னர் 192 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் சிஎஸ்கே களம் இறங்கியது. ஆனால் 7 ரன்னுக்குள் 2 விக்கெட்டுகளை இழந்த சிஎஸ்கே அணியால் 171 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது. இதனால் டெல்லி கேப்பிட்டல்ஸ் 20 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இந்த போட்டியில் குறிப்பிட்ட நேரத்திற்குள் டெல்ல கேப்பிட்டல்ஸ் அணி பந்து வீசவில்லை எனத் தெரியவந்தது. இதனால் அணியின் கேப்டனான ரிஷப் பண்ட்-க்கு ஐபில் 12 லட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது.

    இதுவரை மூன்று போட்டிகளில் விளையாடியுள்ள டெல்லி முதன்முறையாக குறிப்பிட்ட நேரத்திற்குள் பந்து வீசவில்லை. இதனால் கடைசி 2 ஓவரின்போது பவுண்டரில் எல்லையில் நான்கு வீரர்கள் மட்டுமே பீல்டிங் செய்ய அனுமதிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • சிஎஸ்கே 20 ரன்னில் தோல்வியடைந்தது.
    • டோனி கடைசி ஓவரில் இரண்டு சிக்ஸ், இரண்டு பவுண்டரியுடன் 20 ரன் விளாசினார்.

    டெல்லி கேப்பிட்டல்ஸ்- சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி நேற்று விசாகப்பட்டினத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

    கடந்த இரண்டு போட்டிகளில் பேட்டிங் செய்யாத எம்எஸ் டோனி இந்த போட்டியில் களம் இறங்கினார். அவர் களத்திற்கு வரும்போது 23 பந்தில் 70 ரன்கள் தேவைப்பட்டது, முதல் பந்தை பவுண்டரி விரட்டி அசத்தினார்.

    எம்எஸ் டோனி களம் இறங்கியதும் ரசிகரக்ள் டோனி டோனி என கோஷமிட்டனர். விசாகப்பட்டினம் டெல்லியின் ஹோம் கிரவுண்ட் ஆகும். ஆனால் நேற்று கேலரியில் எங்கு பார்த்தாலும் மஞ்சளாக காட்சியளித்தது. அந்த அளவிற்கு சிஎஸ்கே ரசிகர்களால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்தது.

    வெற்றியோ... தோல்வியோ... டோனி டோனி என கோஷம் எழுப்பினர். அதற்கு ஏற்ப டோனியும் சிக்ஸ், பவுண்டரி விளாசினார். கடைசி ஓவரை நோர்ஜே வீசினார். இந்த ஓவரில் இரண்டு சிக்ஸ், இரண்டு பவுண்டரியுடன் 20 ரன்கள் விளாசினார்.

    மொத்தம் 16 பந்தில் 4 பவுண்டரி, 3 சிக்சருடன் எம்எஸ் டோனி 37 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். ஸ்டிரைக் ரேட் 231.25 ஆகும்.

    சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோல்வியடைந்த நிலையிலும் மைதானத்தில் இருந்த சிஎஸ்கே ரசிகர்கள் ஆரவாரம் எழுப்பினர். இதனால் வெற்றி பெற்ற அணி எது என்ற குழப்பம் கூட டெல்லி கேப்பிட்டல்ஸ் ரசிகர்களுக்கு ஏற்பட்டிருக்கலாம்.

    போட்டியில் சிஎஸ்கே வெற்றி பெற்றதோ இல்லையோ... அதைப் பற்றி எங்களுக்கு கவலை இல்லை. நாங்கள் டோனி ஆட்டத்தை பார்க்க வந்தோம். என்ஜாய் செய்தோம் என ரசிகர்கள் ஆரவாரம் எழுப்பினர். அதற்கு ஏற்பட டோனியின் ஆட்டமும் அமைந்தது.

    • சென்னை சூப்பர் கிங்ஸ் முதல் 3 ஓவரில் 2 விக்கெட்டுகளை இழந்து ஏழு ரன்கள் மட்டுமே எடுத்தது.
    • டெல்லியை 191 ரன்னுக்குள் கட்டுப்படுத்தியது நல்ல முயற்சிதான்.

    டெல்லி கேப்பிட்டல்ஸ்- சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் நேற்று விசாகப்பட்டினத்தில் நடைபெற்றது. முதலில் விளையாடிய டெல்லி 191 ரன்கள் குவித்தது. பின்னர் 192 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் 171 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது. இதனால் டெல்லி கேப்பிட்டல்ஸ் 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    போட்டியில் தோல்வியடைந்தது குறித்து சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் கூறியதாவது:-

    பவர்பிளே ஓவர்களுக்குப் பிறகு பந்து வீச்சாளர்கள் நல்ல நிலைக்கு திரும்பியது மகிழ்ச்சி அளித்தது. 191 ரன்னுக்குள் கட்டுப்படுத்தியது நல்ல முயற்சிதான். முதல் இன்னிங்ஸ் போது ஆடுகளம் பேட்டிங்கிற்கு சாதகமாக இருந்தது. 2-வது இன்னிங்சில் எக்ஸ்ட்ரா சீம் மூவ்மென்ட் இருந்தது. ரச்சின் ரவீந்திரா 12 பந்தில் 2 ரன் என்பது மிகப்பெரிய வித்தியாசம் என நினைக்கிறேன். முதல் மூன்று ஓவர்கள் எங்களுக்கு சரியாக அமையவில்லை. இதுதான் போட்டியின் தோல்விக்கான வித்தியாசம். பாதி நேரத்தில் ஆட்டத்தை தங்கள் பக்கம் திருப்பினோம்.

    எக்ஸ்ட்ரா சீம் மூவ்மென்ட்-ஐ நாங்கள் எங்களுக்கு சாதமாக மாற்றிக் கொள்ள முடியவில்லை. ரன்ரேட்டை குறைக்க மிகப்பெரிய ஓவராக அமையாமல் போனது. தீபக் சாஹர் முதல் மூன்று ஓவர்கள் வீசினார். நாங்கள் முதல் நான்கு ஓவர்களை நன்றாக வீசினார். ஆனால் பவர்பிளேயின் கடைசி இரண்டு ஓவர்களில் அதிக ரன்கள் கொடுத்துவிட்டோம். நாங்கள் ஒன்றிரண்டு பவுண்டரிகளை நிறுத்தியிருந்தால் அது மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கும்.

    இவ்வாறு ருதுராஜ் கெய்க்வாட் தெரிவித்தார்.

    டெல்லி அணி கேப்டன் ரிஷப் பண்ட் கூறியதாவது:-

    பந்து வீச்சாளர்கள் இன்று சிறப்பான தங்களது பணியை செய்து முடித்தார்கள். நாங்கள் தவறில் இருந்து பாடம் கற்றுக் கொண்டோம். கடந்த இரண்டு வாரங்களாக பிரித்வி ஷா கடுமையான வகையில் பயிற்சி மேற்கொண்டார். இந்த நேரத்தில் அவருக்கு வாய்ப்பு கொடுத்து சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என்று நினைத்தோம்.

    இது போட்டி எவ்வாறு செல்கிறது. அதைச் சார்ந்ததாக இருக்கும். முகேஷ் குமார் டெத் ஓவர்களில் சிறப்பாக பந்து வீச முடியும் என்றால், அது சிறப்பாக இருக்கும். ஒரு கிரிக்கெட்டராக நான் என்னுடைய 100 சதவீத முயற்சியை வெளிப்படுத்துகிறேன்.

    கடந்த ஒன்றரை ஆண்டுகளாக விளையாடாத காரணத்தால், கொஞ்சம் நேரம் எடுத்து கொள்கிறது. எது நடந்தாலும், மீண்டும் களத்திற்கு வருவது முக்கியம் என்ற தன்னம்பிக்கை எப்போதும் இருந்தது.

    இவ்வாறு ரிஷப் பண்ட் தெரிவித்துள்ளார்.

    சென்னை சூப்பர் கிங்ஸ் முதல் 3 ஓவரில் 2 விக்கெட்டுகளை இழந்து ஏழு ரன்கள் மட்டுமே எடுத்தது.

    ×