என் மலர்tooltip icon

    விளையாட்டு

    • மெஹிதி ஹசன் மிராஸ் 44 ரன்னிலும் தைஜுல் இஸ்லாம் 10 ரன்னிலும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
    • இலங்கை அணி தரப்பில் லஹிரு குமாரா, ஜெயசூர்யா, மெண்டீஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

    சட்டோகிராம்:

    வங்காளதேசம், இலங்கை இடையிலான 2-வது டெஸ்ட் சட்டோகிராமில் நடந்து வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி, முதலில் ஆடிய இலங்கை அணி முதல் இன்னிங்சில் 531 ரன்கள் குவித்து ஆல் அவுட் ஆனது.

    அந்த அணியில் அதிகபட்சமாக குசால் மெண்டிஸ் 93 ரன்னும், கமிந்து மெண்டிஸ் 92 ரன்னும் எடுத்தனர். வங்காளதேசம் தரப்பில் ஷகிப் அல் ஹசன் 3 விக்கெட்டும், ஹசன் மெஹ்மூத் 2 விக்கெட்டும் கைப்பற்றினர்.

    இதையடுத்து, முதல் இன்னிங்சை விளையாடிய வங்காளதேச அணி இலங்கையின் அபார பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் 178 ரன்களில் ஆல் அவுட் ஆனது. அந்த அணியில் அதிகபட்சமாக சகீர் ஹசன் 54 ரன்கள் அடித்தார். இலங்கை தரப்பில் அதிகபட்சமாக அசிதா பெர்னண்டோ 4 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார்.

    பின்னர் 353 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய இலங்கை நேற்றைய 3-ம் நாள் ஆட்ட நேர முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 102 ரன்கள் எடுத்து 455 ரன்கள் முன்னிலை பெற்றிருந்தது. மேத்யூஸ் 39 ரன்களுடனும், பிரபாத் ஜெயசூர்யா 3 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

    இந்நிலையில் இன்று 4-ம் நாள் ஆட்டம் நடந்தது. இதில் தொடர்ந்து பேட்டிங் ஆடிய இலங்கை அணி தனது 2-வது இன்னிங்சில் 40 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 157 ரன்கள் எடுத்திருந்த போது டிக்ளேர் செய்தது. இதன் மூலம் இலங்கை அணி 510 ரன்கள் முன்னிலை பெற்றது. இலங்கை அணி தரப்பில் மேத்யூஸ் 56 ரன்கள் எடுத்தார்.

    இதையடுத்து 511 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்காளதேச அணி தனது 2-வது இன்னிங்சை தொடங்கியது. வங்காளதேசம் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக மஹ்முதுல் ஹசன் ஜாய், ஜாகிர் ஹசன் ஆகியோர் களம் இறங்கினர். 24 ரன்னில் மஹ்முதுல் ஹசன் ஜாய்-ம் 19 ரன்னில் ஜாகிர் ஹசனும் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த கேப்டன் நஜ்முல் 20 ரன்னில் வெளியேறினார்.

    இதனையடுத்து மொமினுல் ஹக்- ஷகிப் அல் ஹசன் ஜோடி சேர்ந்து சிறப்பாக ஆடினர். தொடர்ந்து சிறப்பாக ஆடிய மொமினுல் ஹக் அரை சதம் விளாசினார். அரை சதம் விளாசிய கையோடு அவர் அவுட் ஆனார். இவர் அவுட் ஆன சிறிது நேரத்தில் ஷகிப் அல் ஹசன் 36 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த லிண்டன் தாஸ் 38 ரன்னிலும் ஷஹாதத் ஹொசைன் திபு 15 ரன்னிலும் வெளியேறினார்.

    இதனையடுத்து மெஹிதி ஹசன் மிராஸ்- தைஜுல் இஸ்லாம் ஜோடி சேர்ந்து நிதானமாக ஆடினர். இதனால் 4-ம் நாள் முடிவில் வங்களாதேசம் அணி 7 விக்கெட்டுகளை இழந்து 268 ரன்கள் எடுத்திருந்தது. மெஹிதி ஹசன் மிராஸ் 44 ரன்னிலும் தைஜுல் இஸ்லாம் 10 ரன்னிலும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

    இலங்கை அணி தரப்பில் லஹிரு குமாரா, ஜெயசூர்யா, மெண்டீஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

    • டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.
    • ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 3 போட்டிகளில் விளையாடி ஒன்றில் வெற்றி 2-ல் தோல்வி என புள்ளிபட்டியலில் 9-வது இடத்தில் உள்ளது.

    பெங்களூரு:

    17-வது ஐ.பி.எல். சீசனின் இன்றைய 15-வது லீக் ஆட்டத்தில் பாப் டு பிளிஸ்சிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும் பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் மோதுகிறது.

    இதில் டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.

    ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 3 போட்டிகளில் விளையாடி ஒன்றில் வெற்றி 2-ல் தோல்வி என புள்ளிபட்டியலில் 9-வது இடத்தில் உள்ளது. லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி 2 போட்டிகளில் விளையாடி 1 தோல்வி 1 வெற்றியுடன் 6-வது இடத்தில் உள்ளது.

    • மும்பை அணி பீல்டிங் செய்து கொண்டிருந்த போது பாண்ட்யாவுக்கு எதிராக ரசிகர்கள் சத்தமிட்டு ஆரவாரம் செய்தனர்.
    • நடப்பு ஐ.பி.எல் தொடரில் வெற்றிக்கணக்கை தொடங்காத ஒரே அணியாகவும் மும்பை உள்ளது.

    மும்பை:

    நடப்பு ஐ.பி.எல். தொடரில் நேற்று நடைபெற்ற 14-வது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. இதில் முதலில் பேட்டிங் ஆடிய மும்பை 20 ஓவர்களில் 125 ரன்கள் மட்டுமே எடுத்தது. மும்பை தரப்பில் அதிகபட்சமாக பாண்ட்யா 34 ரன்கள் எடுத்தார். ராஜஸ்தான் தரப்பில் பவுல்ட், சஹால் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

    இதையடுத்து 126 ரன் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் ஆடிய ராஜஸ்தான் 15.3 ஓவர்களில் 4 விக்கெட்டை மட்டும் இழந்து 127 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ராஜஸ்தான் தரப்பில் அதிகபட்சமாக ரியான் பராக் 54 ரன்கள் எடுத்தார்.

    நடப்பு ஐ.பி.எல் தொடரில் மும்பை சந்தித்த 3-வது தோல்வி இதுவாகும். அந்த அணி இதுவரை ஆடிய அனைத்து ஆட்டங்களிலும் தோல்வி கண்டுள்ளது. நடப்பு ஐ.பி.எல் தொடரில் வெற்றிக்கணக்கை தொடங்காத ஒரே அணியாகவும் மும்பை உள்ளது.

    இந்நிலையில் நேற்றையை ஆட்டத்தில் மும்பை அணி பீல்டிங் செய்து கொண்டிருந்த போது பாண்ட்யாவுக்கு எதிராக ரசிகர்கள் சத்தமிட்டு ஆரவாரம் செய்தனர். அப்போது பீல்டிங்கில் நின்றிருந்த ரோகித் சர்மா, ரசிகர்களை பார்த்து ஹர்திக் பாண்ட்யாவிற்கு எதிராக சத்தமிடாதீர்கள் என கையசைத்து கோரிக்கை வைத்தார்.

    ரசிகர்கள் அமைதியாகும் வரை தொடர்ந்து இரண்டு, மூன்று முறை கையசைத்து கோரிக்கை வைத்து ரோகித் சர்மா செய்த செயல்தான் ரசிகர்களின் இதயங்களை தொட்டுள்ளது. ரசிகர்கள் அமைதியாகும் வரை தொடர்ந்து கோரிக்கை வைத்த ரோகித் சர்மாவின் செயலை ரசிகர்கள் மட்டுமின்றி, பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றனர். தற்போது இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

    மும்பை அணிக்காக 5 ஐ.பி.எல் கோப்பைகளை வென்று கொடுத்த ரோகித்திடம் இருந்து கேப்டன்ஷிப் பதவியை பறித்து பாண்ட்யாவிடம் கொடுத்தது ரசிகர்களிடையே மிகுந்த அதிருப்தியை ஏற்படுத்தியது. இதன் காரணமாக மும்பை அணி விளையாடும் போட்டிகளில் பாண்ட்யாவுக்கு எதிராக ரசிகர்கள் கூச்சலிட்டு வருகின்றனர்.

    மும்பை அணி விளையாடிய முதல் 2 போட்டிகளில் பாண்ட்யாவுக்கு எதிராக ரசிகர்கள் கூச்சலிட்டது குறிப்பிடத்தக்கது.

    • எனது பந்து வீச்சு திறனை மீண்டும் மேம்படுத்துவதில் கவனம் செலுத்துகிறேன்.
    • இதனால் ஐபிஎல் மற்றும் உலகக் கோப்பை தொடர்களை தியாகம் செய்கிறேன்.

    2024 டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் அமெரிக்கா மற்றும் கரீபியனில் நடைபெற இருக்கிறது. இந்த தொடர் ஜூன் 1-ந் தேதி தொடங்குகிறது.

    இந்நிலையில் டி20 உலக கோப்பை தொடரில் இங்கிலாந்து அணியின் ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் பங்கேற்கப்போவதில்லை என தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:

    நான் கடினமாக உழைத்து வருகிறேன். மேலும் எனது பந்து வீச்சு திறனை மீண்டும் மேம்படுத்துவதில் கவனம் செலுத்துகிறேன். இதனால் ஐபிஎல் மற்றும் உலகக் கோப்பை தொடர்களை தியாகம் செய்கிறேன்.

    சமீபத்திய இந்திய டெஸ்ட் சுற்றுப்பயணம், எனது முழங்கால் அறுவை சிகிச்சைக்குப் பிறகு பந்துவீச்சில் நான் எவ்வளவு பின்தங்கியிருந்தேன் என்பதை எடுத்துக்காட்டியது.

    கவுண்டி சாம்பியன்ஷிப்பில் டர்ஹாமிற்காக விளையாடுவதற்கு ஆவலுடன் காத்திருக்கிறேன். ஜோஸ் [பட்லர்], மோட்டி [மேத்யூ மோட்] மற்றும் அனைத்து அணியினருக்கும் எங்கள் பட்டத்தைத் தக்கவைத்துக் கொள்வதற்கு எனது வாழ்த்துகள்.

    என தெரிவித்துள்ளார்.

    • ராம நவமியால் ஐபிஎல் தொடரின் 2 போட்டிகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
    • பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

    ஐபிஎல் தொடரின் 17-வது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 14 லீக் போட்டிகள் முடிவில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதல் இடத்தில் உள்ளது. அதற்கு அடுத்த இடங்கள் முறையே கொல்கத்தா, சென்னை, குஜாராத் ஆகிய அணிகள் உள்ளன.

    இந்த நிலையில் ராம நவமியால் ஐபிஎல் தொடரின் 2 போட்டிகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. அந்த வகையில் ராமர் நவமியை முன்னிட்டு, ஏப்ரல் 17-ம் தேதி கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெறவிருந்த கொல்கத்தா- ராஜஸ்தான் ஆகிய அணிகளுக்கு இடையேயான போட்டி ஏப்ரல் 16-ந் தேதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    இதேபோல ஏப்ரல் 16-ந் தேதியன்று நடைபெறவிருந்த குஜராத்- டெல்லி ஆகிய அணிகளுக்கு இடையேயான போட்டி ஏப்ரல் 17-ந் தேதி நடைபெறும் என ஐபிஎல் நிர்வாகம் அறிவித்துள்ளது.

    • போல்ட் முதல் ஓவரிலேயே இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
    • 20 ரன்னுக்குள் 4 விக்கெட்டுகளை இழந்தது மும்பை அணிக்கு பின்னடைவாக அமைந்தது.

    இந்தியன்ஸ்- ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த மும்பை அணியால் 125 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.

    அந்த அணிக்கு தொடக்கத்தில் மிகப்பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. போல்ட் வீசிய முதல் ஓவரில் ரோகித் சர்மா, நமன் திர் ரன் ஏதும் எடுக்காமல் தாங்கள் சந்தித்த முதல் பந்திலேயே ஆட்டம் இழந்தனர். அந்த அணி 20 ரன் எடுப்பதற்குள் 4 விக்கெட்டுகளை இழந்தது. அதிலிருந்து மீண்டு வர முடியவில்லை. இதனால் 125 ரன்கள் மட்டுமே எடுத்தது.

    பின்னர் 126 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் 15.3 ஓவரிலேயே 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து இலக்கை எட்டியது. அந்த அணியின் ரியான் பராக் சிறப்பாக விளையாடி 39 பந்தில் 54 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    இதனால் மும்பை இந்தியன்ஸ் அணி தான் விளையாடிய முதல் மூன்று போட்டிகளிலும் தோல்வியை சந்தித்துள்ளது. மேலும் சொந்த மைதானத்தில் தோல்வியை தழுவியுள்ளது.

    இந்த தொடரில் இதுவரை நடைபெற்றுள்ள போட்டிகளில் ஆர்சிவி-க்கு அடுத்தப்படியாக சொந்த மைதானத்தில் தோல்வியை சந்தித்த அணியாக மும்பை திகழ்கிறது.

    இந்த நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா கூறியதாவது-

    ஆமாம்... இன்றைய இரவு மிகவும் கடினமானது. நாங்கள் தொடங்க விரும்பியது போல் எங்களுக்கு தொடக்கம் அமையவில்லை. நான் அடித்து விளையாட விரும்பினேன். 150 முதல் 160 ரன்கள் வரை நாங்கள் எடுத்திருந்தால் அது ஒரு நல்ல நிலையாக இருந்திருக்கும்.

    ஆனால் என்னுடைய விக்கெட் அவர்களை மீண்டும் நல்ல நிலைக்கு கொண்டு சேர்த்துவிட்டது. நான் இன்னும் கொஞ்சம் அதிகமாக முயற்சி எடுத்து இருக்க வேண்டும். நாங்கள் இதுபோன்று ஆடுகளத்தை எதிர்பார்க்கவில்லை ஆடுகளம் எப்போதும் ஒரு பேட்ஸ்மேனுக்கே சாதகமாக இருக்கும் என கூற முடியாது. இந்த ஆடுகளம் பந்து வீச்சாளர்களுக்கு நல்ல வகையில் அமைந்தது.

    எல்லா விஷயங்களையும் சரியாக செய்யக்கூடியது பற்றியது இது. சில நேரங்களில் அதற்கான முடிவுகள் கிடைக்கும். சில நேரங்களில் கிடைக்காமல் இருக்கும். ஒரு அணியாக இன்னும் சிறப்பாக செயல்பட முடியும் என நாங்கள் நம்புகிறோம். ஆனால் இன்னும் கொஞ்சம் அதிகமான வகையில் சிறப்பாக விளையாடுதல் மற்றும் அதிகமான தைரியத்தை வெளிப்படுத்துவது எங்களுக்கு அவசியம்.

    இவ்வாறு ஹர்திக் பாண்ட்யா தெரிவித்தார்.

    வெற்றி குறித்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் சஞ்சு சாம்சன் கூறியதாவது:-

    டாஸ் போட்டியை மாற்றக்கூடியதாக அமைந்தது என்று நான் நினைக்கிறேன். அனுபவம் வாயந்த போல்ட், பர்கர் எங்களுக்கு உதவினார்கள். போல்ட் 10 முதல் 15 வருடங்கள் விளையாடி கொண்டிருக்கிறார். புதுப்பந்தில் என்ன எதிர்பார்க்கிறோம் என்பது அவருக்கும் தெரியும்.

    நாங்கள் 4 அல்லது 5 விக்கெட் விழும் என எதிர்பார்க்கவில்லை. ஆனால், எங்கள் பந்து வீச்சாளர்கள் அதைச் செய்வார்கள் என்பது எங்களுக்கு தெரிந்தது. எங்கள் அணியில் தனிப்பட்ட திறமையான வீரர்கள் உள்ளனர் என்பதை எங்களுக்குத் தெரியும். ஆனால் நாங்கள் தனித்து நிற்கும் இடத்தில் ஒவ்வொருவரும் தங்கள் பங்கை உணர்ந்து, அதைச் செய்து முன்னேறுகிறார்கள்.

    ஆவேஷ் கான் மற்றும் சாஹல் நாங்கள் பவர்பிளேயில் சிறப்பாக செயல்பட்டோம் என்பதை உணர்ந்தார்கள். விக்கெட்டை எதிர்பார்க்காமல் எதிரணிக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் பந்து வீசினார்கள். சாஹல் இந்த ஐபிஎல் தொடரில் தீயாக பந்து வீசுகிறார் என்று நினைக்கிறேன். கடந்த 2-3 வருடங்களாக எங்களுக்கு சிறப்பான வகையில் விளையாடி வருகிறார்.

    இவ்வாறு சஞ்சு சாம்சன் தெரிவித்துள்ளார்.

    • மும்பை இந்தியன்ஸ் 3 போட்டிகளிலும் தோல்வியடைந்து கடைசி இடம்.
    • ஆர்சிபி ஒரு வெற்றியுடன் ரன்ரேட் அடிப்படையில் 9-வது இடம்.

    ஐபிஎல் 2024 சீசன் கடந்த மாதம் 22-ம் தேதி தொடங்கியது. 10 அணிகளில் (லக்னோ, கொல்கத்தா) ஏறக்குறைய அனைத்து அணிகளும் மூன்று போட்டிகளில் விளையாடியுள்ளன.

    நேற்றைய மும்பை இந்தியன்ஸ்- ராஜஸ்தான் ராயல்ஸ் போட்டி வரை, ராஜஸ்தான் ராயல்ஸ் விளையாடிய 3 போட்டிகளிலும் வெற்றி பெற்று புள்ளிகள் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது.

    கொல்கத்தா நைட் ரைடர்ஸ் தான் விளையாடிய இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்று இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது.

    சென்னை சூப்பர் கிங்ஸ் மூன்றில் இரண்டு போட்டியில் வெற்றி பெற்று மூன்றாவது இடத்தையும், குஜராத் மூன்றில் இரண்டில் வெற்றி பெற்று (ரன்ரேட்) 4-வது இடத்தையும், சன்ரைசர்ஸ் ஐதராபாத் மூன்றில் ஒரு வெற்றி பெற்று ஐந்தாவது இடத்தையும் பிடித்துள்ளன.

    லக்னோ 2 போட்டியில் ஒன்றில் வெற்றி பெற்று ஆறாவது இடத்தையும் (ரன்ரோட்), டெல்லி கேப்பிட்டல்ஸ் மூன்றில் ஒரு வெற்றி மூலம் 7-வது இடத்தையும், பஞ்சாப் எட்டாவது இடத்தையும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு 9 இடத்தையும், மூன்று போட்டிகளிலும் தோல்வியடைந்து மும்பை இந்தியன்ஸ் கடைசி இடத்தையும் பிடித்துள்ளன்.

    இன்றைய போட்டியில் ஆர்.சி.பி.- லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் பலபட்ச நடிகையின் நடத்துகின்றன. இதில் ஆர்சிபி வெற்றி பெற்றால் ஐந்தாவது இடத்திற்கு முன்னேற வாய்ப்புள்ளது. லக்னோ வெற்றி பெற்றால் 2-வது அல்லது 3-வது இடத்திற்கு முன்னேறும்.

    • ராஜஸ்தான் அணி 15.3 ஓவர்களில் 127 ரன்கள் எடுத்து 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
    • மும்பை தரப்பில் ஆகாஷ் மத்வால் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

    ஐபிஎல் தொடரின் 14-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ்- ராஜஸ்தான் ராய்ல்ஸ் அணி மோதுகிறது. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் ஆடிய மும்பை அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து மும்பை அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 118 ரன்கள் எடுத்தது. ராஜஸ்தான் தரப்பில் சாஹல், டிரெண்ட் போல்ட் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

    இதனையடுத்து களமிறங்கிய ராஜஸ்தான் அணி முதல் 3 விக்கெட்டுகளை உடனே இழந்தாலும் மிடில் ஆர்டரில் களமிறங்கிய பராக் பொறுப்புடன் ஆடிய அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றார். அதிரடியாக விளையாடிய பராக் அரை சதம் விளாசினார்.

    இறுதியில் ராஜஸ்தான் அணி 15.3 ஓவர்களில் 127 ரன்கள் எடுத்து 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மும்பை தரப்பில் ஆகாஷ் மத்வால் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

    • இன்றைய ஆட்டத்தில் மும்பை -ராஜஸ்தான் அணிகள் மோதியது.
    • மும்பை அணி பீல்டிங் செய்த போது மைதானத்துக்குள் ரசிகர் ஒருவர் நுழைந்தார்.

    மும்பை:

    ஐபிஎல் தொடரின் 14-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ்- ராஜஸ்தான் ராய்ல்ஸ் அணி மோதுகிறது. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் விளையாடிய மும்பை அணி, ராஜஸ்தான் அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் 125 ரன்களில் சுருண்டது. ராஜஸ்தான் தரப்பில் டிரெண்ட் போல்ட், சாஹல் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

    இதனையடுத்து ராஜஸ்தான் அணி களமிறங்கியது. தொடர்ந்து விளையாடி கொண்டிருந்த போது ஒரு ரசிகர் மைதானத்துக்குள் நுழைந்து ரோகித் சர்மாவை நோக்கி சென்றார். அப்போது பீல்டிங் சரி செய்து கொண்டிருந்த ரோகித் இதனை சற்றும் எதிர்பாராதால் திடுக்கிட்டார்.

    அதன்பிறகு ரோகித் சர்மாவை கட்டியணைத்து ரசிகர் தனது அன்பை வெளிப்படுத்தினார். பின்னர் கீப்பர் நின்ற இஷான் கிஷனை கட்டியணைத்து சென்றார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    ரோகித் சர்மா பயந்ததை ரசிகர்கள் கிண்டல் செய்து வருகின்றனர்.

    • இன்றைய ஆட்டத்தில் மும்பை -ராஜஸ்தான் அணிகள் மோதியது.
    • சொந்த மண்ணிலேயே மும்பை அணி கேப்டன் ஒருவருக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்படுவது இதுவே முதல்முறையாகும்.

    மும்பை:

    மும்பை அணி 6-வது ஐபிஎல் கோப்பையை வெல்ல வேண்டும் என்று இந்த சீசனுக்கு முன்பாக பல்வேறு நடவடிக்கையை மேற்கொண்டது.

    அந்த வகையில் குஜராத் அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த ஹர்திக் பாண்டியாவை மீண்டும் அணிக்குள் கொண்டு வந்தது. அதுமட்டுமல்லாமல் ரோகித் சர்மாவை கேப்டன்சியில் இருந்து நீக்கிவிட்டு, புதிய கேப்டனாக ஹர்திக் பாண்டியாவை நியமனம் செய்தது. இதற்கு மும்பை அணி ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    மும்பை அணி விளையாடிய முதல் போட்டியில் சொந்த மண்ணான அகமதாபாத்தில் ரசிகர்கள் ஹர்திக் பாண்டியாவுக்கு எதிராக கோஷம் எழுப்பிய நிலையில், ஐதராபாத் மண்ணிலும் ரசிகர்களின் எதிர்ப்பை எதிர்கொண்டார். இதனால் சொந்த மண்ணில் என்ன நடக்கும் என்ற கேள்வி எழுந்தது.

    இதனால் வான்கடே மைதானத்தில் நடக்கவுள்ள ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் ஹர்திக் பாண்டியாவுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினால், ரசிகர்கள் மைதானத்தில் இருந்து வெளியேற்றப்படுவார் என்று மறைமுக எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

    இந்த நிலையில் இன்றைய ஆட்டத்தில் மும்பை -ராஜஸ்தான் அணிகள் மோதியது. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அப்போது ஹர்திக் பாண்டியா களமிறங்கும் போதே ரோகித் சர்மா ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவிக்க தொடங்கினார்கள்.

    அப்போது வர்ணனையாளராக செயல்பட்ட சஞ்சய் மஞ்ச்ரேக்கர், ரசிகர்களை ஓழுங்காக நடந்து கொள்ளுங்கள் என கண்டித்தார்.

    முதல் முறையாக சொந்த மண்ணிலேயே மும்பை அணி கேப்டன் ஒருவருக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்படுவது இதுவே முதல்முறையாகும். இதற்கு முன் கேகேஆர் அணியில் இருந்து கங்குலி நீக்கப்பட்ட போது, கேகேஆர் அணி நிர்வாகத்திற்கு கொல்கத்தா அணி ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. 

    • மும்பை அணியில் 3 வீரர்கள் டக் அவுட் ஆகினர்.
    • ராஜஸ்தான் தரப்பில் சாஹல், டிரெண்ட் போல்ட் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

    ஐபிஎல் தொடரின் 14-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ்- ராஜஸ்தான் ராய்ல்ஸ் அணி மோதுகிறது. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி மும்பை அணியின் தொடக்க ஆட்டகாரர்களாக ரோகித்- இஷான் கிஷன் களமிறங்கினர். ட்ரெண்ட் போல்ட்டின் அசத்தலான பந்து வீச்சால் முதல் ஓவரிலேயே 2 விக்கெட்டுகளை இழந்தது. ரோகித், நமன் டக் அவுட் ஆகினார். போல்ட் வீசிய 2-வது ஓவரில் ப்ராவிஸ் (0) முதல் பந்திலேயே ஆட்டமிழந்தார்.

    இஷான் 1 ரன் எடுத்தார். ஓவரின் 5-வது பந்தையும் தனது முதல் பந்தையும் சந்தித்த ரோகித் டக் அவுட் ஆனார். அடுத்த வந்த நமனும் 0 ரன்னில் அவுட் ஆனார்.

    முதல் ஓவரில் 2 விக்கெட்டுகளை வீழ்த்திய போல்ட், அவர் வீசிய 2-வது ஓவரில் ப்ரீவிஸ் விக்கெட்டை வீழ்த்தினார். ஒரு சிக்ஸ் 2 பவுண்டரிகளை விளாசிய இஷான் கிஷன் 16 ரன்களில் வெளியேறினார்.

    இதனால் மும்பை அணி 20 ரன்களில் 4 விக்கெட்டுகளை இழந்து திணறியது. இதனையடுத்து கேப்டன் பாண்ட்யாவுடன் திலக் வர்மா ஜோடி சேர்ந்து அணியின் ஸ்கோரை உயர்த்தினார்.

    சிறப்பாக ஆடிய பாண்ட்யா 34 ரன்களில் வெளியேறினார். அடுத்து வந்த சாவ்லா 3 ரன்னில் ஆட்டமிழந்தார். பொறுப்புடன் ஆடிய திலக் 32 ரன்னிலும் டிம் டேவிட் 17 ரன்களிலும் அவுட் ஆகினர்.

    இதனால் 20 ஓவர் முடிவில் மும்பை அணி 9 விக்கெட்டுகளை இழந்து 125 ரன்கள் எடுத்தது. ராஜஸ்தான் தரப்பில் சாஹல், டிரெண்ட் போல்ட் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

    • மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக முதல் ஓவரில் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
    • பவர் பிளேயில் மொத்தம் 3 விக்கெட்டுகளை போல்ட் வீழ்த்தினார்.

    ஐபிஎல் தொடரின் 14-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ்- ராஜஸ்தான் ராய்ல்ஸ் அணி மோதுகிறது. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி மும்பை அணியின் தொடக்க ஆட்டகாரர்களாக ரோகித்- இஷான் கிஷன் களமிறங்கினர். ராஜஸ்தான் அணி சார்பாக முதல் ஓவரை ட்ரெண்ட் போல்ட் வீசினார். 4-வது பந்தில் இஷான் 1 ரன் எடுத்தார். ஓவரின் 5-வது பந்தையும் தனது முதல் பந்தையும் சந்தித்த ரோகித் டக் அவுட் ஆனார். அடுத்த வந்த நமனும் 0 ரன்னில் அவுட் ஆனார்.

    முதல் ஓவரில் 2 விக்கெட்டுகளை வீழ்த்திய போல்ட் அவர் வீசிய 2-வது ஓவரில் ப்ரீவிஸ் விக்கெட்டை வீழ்த்தினார். ஆக மொத்தம் பவர் பிளேயில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன் மூலம் முதல் ஓவரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் என்ற சாதனையை போல்ட் படைத்துள்ளார்.

    போல்ட் 80 போட்டிகளில் 25 விக்கெட்டுகளை வீத்தியுள்ளார். 2-வது இடத்தில் புவனேஸ்வர் குமார் உள்ளார். இவர் 116 போட்டிகளில் 25 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

    ×