என் மலர்
விளையாட்டு
- முஸ்தஃபிசுர் ரஹ்மான் 3 ஆட்டங்களில் ஆடி 7 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.
- அதிக விக்கெட் எடுத்தவர்கள் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளார்.
சென்னை:
நடப்பு ஐபிஎல் தொடரில் இதுவரை 15 லீக் ஆட்டங்கள் நடைபெற்றுள்ளன. இதன் முடிவில் ராஜஸ்தான் (6 புள்ளி), கொல்கத்தா (4 புள்ளி), சென்னை (4 புள்ளி), லக்னோ (4 புள்ளி), குஜராத் (4 புள்ளி), அணிகள் புள்ளிப்பட்டியலில் முதல் 5 இடங்களில் உள்ளன.
இந்த தொடரில் ருதுராஜ் தலைமையிலான சென்னை அணி 3 ஆட்டங்களில் ஆடி 2 வெற்றி பெற்றுள்ளது. சென்னை அணி தனது அடுத்த ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியை வரும் 5-ம் தேதி ஐதராபாத்தில் சந்திக்கிறது.
இந்நிலையில் ஐதராபாத்துக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை அணியின் வேகப்பந்து வீச்சாளர் முஸ்தாபிசுர் ரஹ்மான் ஆட மாட்டார் என தகவல் வெளியாகி உள்ளது. வரும் ஜூன் மாதம் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடைபெறும் டி20 உலகக்கோப்பை தொடருக்காக முஸ்தஃபிசுர் ரஹ்மான் தனது அமெரிக்க விசாவைப் பரிசீலிப்பதற்காக வங்காளதேசம் சென்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
விசா மீதான பரிசீலனை முடிவுற்ற பின் அவர் வரும் 7-ம் தேதி அல்லது 8-ம் தேதிகளில் இந்தியா திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒருவேளை அவர் 8-ம் தேதி இந்தியா திரும்புவதாக இருந்தால் அவர் அன்று நடைபெறும் கொல்கத்தாவுக்கு எதிரான ஆட்டத்தையும் தவற விட வாய்ப்பு உள்ளது.
நடப்பு ஐ.பி.எல் தொடரில் முஸ்தஃபிசுர் ரஹ்மான் 3 ஆட்டங்களில் ஆடி 7 விக்கெட்டுகளை கைப்பற்றி அதிக விக்கெட் எடுத்தவர்கள் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- மும்பை இந்தியன்ஸ் தான் விளையாடிய 3 போட்டிகளிலும் தோல்வியடைந்து புள்ளிபட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.
- அணியின் ஆலோசனை கூட்டத்திற்கு தாமதமாக வந்ததால் நிர்வாகம் இவர்களுக்கு இந்த விநோதமான தண்டனையை வழங்கியுள்ளது.
மும்பை:
நடப்பு ஐபிஎல் தொடரில் ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் தான் விளையாடிய 3 போட்டிகளிலும் தோல்வியடைந்து புள்ளிபட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. இதனையடுத்து மும்பை அணி தனது 4-வது போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியுடன் மோத உள்ளது.
இந்நிலையில் மும்பை அணியில் இஷான் கிஷன் உள்ளிட்ட 4 வீரர்கள் மும்பை இந்தியன்ஸ் லோகோவுடன் கூடிய வேடிக்கையான சூப்பர் மேன் உடையணிந்து விமானத்தில் பயணித்தனர். இந்த வீடியோ இணையத்தில் வைரலானது.
இதற்கான காரணம் என்னவெனில், அணியின் ஆலோசனை கூட்டத்திற்கு தாமதமாக வந்ததால் நிர்வாகம் இவர்களுக்கு இந்த விநோதமான தண்டனையை வழங்கியுள்ளது. ஆலோசனை கூட்டங்களுக்கு தாமதமாக வரும் வீரர்கள், அவர்கள் அடுத்த முறை பயணம் மேற்கொள்ளும்போது சூப்பர் மேன் உடை அணிந்து வர வேண்டும் என மும்பை அணி நிர்வாகம் விநோதமான தண்டனையை அறிமுகப்படுத்தி உள்ளது.
தொடர் தோல்விகளால் நெருக்கடியான சூழலில் இருக்கும் மும்பை அணி, இதுபோன்ற ஜாலியான தண்டனைகளால் அணிக்குள் உற்சாகம் ஏற்படும் என கருதுகிறது.
- வங்காளதேசத்திற்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் இலங்கை கைப்பற்றியது.
- இதனால் டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் இலங்கை அணி இரண்டு இடம் முன்னேறியது.
துபாய்:
வங்காளதேசத்திற்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 என இலங்கை அணி முழுமையாக கைப்பற்றி அசத்தியது. இந்தத் தொடர் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கு உட்பட்ட தொடர்.
இந்நிலையில், இந்த தொடர் நிறைவடைந்ததும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலை ஐ.சி.சி இன்று வெளியிட்டது.
புதிய பட்டியலின் படி 6-வது இடத்தில் இருந்த இலங்கை வங்காளதேசத்திற்கு எதிரான டெஸ்ட் தொடரை வென்றதன் மூலம் 50 சதவீதத்துடன் 4-வது இடத்திற்கு முன்னேறி உள்ளது.
இலங்கைக்கு எதிராக தோல்வி கண்ட வங்காளதேசம் தென் ஆப்பிரிக்காவுடன் சேர்ந்து 7-வது இடத்தைப் பகிர்ந்து கொண்டுள்ளது.
68.51 சதவீதத்துடன் இந்தியா முதலிடத்திலும், 62.50 சதவீதத்துடன் ஆஸ்திரேலியா 2வது இடத்திலும், 50 சதவீதத்துடன் நியூசிலாந்து 3வது இடத்திலும் உள்ளது.
36.66 சதவீதத்துடன் பாகிஸ்தான் 5வது இடத்திலும், 33.33 சதவீதத்துடன் வெஸ்ட் இண்டீஸ் 6வது இடத்திலும் உள்ளது.
- வங்காளதேசம் 2வது இன்னிங்சில் 318 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
- இதன்மூலம் 192 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அபார வெற்றி பெற்றது.
சட்டோகிராம்:
வங்காளதேசம், இலங்கை இடையிலான 2-வது டெஸ்ட் சட்டோகிராமில் நடந்தது. டாஸ் வென்ற இலங்கை பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய இலங்கை அணி முதல் இன்னிங்சில் 531 ரன்கள் குவித்து ஆல் அவுட் ஆனது. குசால் மெண்டிஸ் 93 ரன்னும், கமிந்து மெண்டிஸ் 92 ரன்னும் எடுத்தனர்.
வங்காளதேசம் சார்பில் ஷகிப் அல் ஹசன் 3 விக்கெட்டும், ஹசன் மெஹ்மூத் 2 விக்கெட்டும் கைப்பற்றினர்.
தொடர்ந்து, முதல் இன்னிங்ஸ் ஆடிய வங்காளதேசம் 178 ரன்களில் ஆல் அவுட் ஆனது. ஜாகீர் ஹசன் 54 ரன்கள் அடித்தார்.
இலங்கை சார்பில் அசிதா பெர்னண்டோ 4 விக்கெட்டும், விஷ்வா பெர்னாண்டோ, லஹிரு குமாரா, பிரபாத் ஜெயசூர்யா தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
இதையடுத்து, 353 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய இலங்கை 157 ரன்கள் எடுத்தபோது டிக்ளேர் செய்தது. மேத்யூஸ் 56 ரன்கள் எடுத்தார்.
தொடர்ந்து, 511 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்காளதேச அணி தனது 2-வது இன்னிங்சில் களமிறங்கியது.
அந்த அணியின் மொமினுல் ஹக் அரை சதம் விளாசி அவுட் ஆனார். லிட்டன் தாஸ் 38 ரன்னும், ஷகிப் அல் ஹசன் 36 ரன்னும் எடுத்தனர்.
ஒருபுறம் விக்கெட்கள் வீழ்ந்தாலும் மெஹிதி ஹசன் மிராஸ் பொறுப்பாக ஆடி அரை சதம் கடந்தார். கடைசி வரை ஆட்டமிழக்காமல் 81 ரன்கள் எடுத்துள்ளார்.
இறுதியில், வங்காளதேசம் 2வது இன்னிங்சில் 318 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் 192 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை வெற்றி பெற்றதுடன் தொடரை 2-0 என கைப்பற்றியது.
இலங்கை சார்பில் லஹிரு குமாரா 4 விக்கெட்டும், கமிந்து மெண்டிஸ் 3 விக்கெட்டும், ஜெயசூர்யா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகன் விருதை கமிந்து மெண்டிஸ் பெற்றார்.
- சென்னை சேப்பாக்கத்தில் இரண்டு போட்டிகள் நடைபெற்றுள்ளன.
- வருகிற 8-ந்தேதி சென்னை- கொல்கத்தா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா இந்தியாவில் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சேப்பாக்கம் மைதானத்தை ஹோம் மைதானமாக கொண்டு விளையாடி வருகிறது.
சிஎஸ்கே விளையாடும் போட்டிகளை காண ரசிகர்கள் கடும் ஆவலாக இருந்து வருகிறார்கள். ஆனால் டிக்கெட் கிடைக்காமல் போட்டியை நேரில் கண்டு ரசிக்க முடியாமல் தவிக்கின்றனர். இதனால் ரசிகர்களுக்கு இலவசமாக டிக்கெட் வழங்க உள்ளூர் ஹைப்பர் லோக்கல் செயலியான மின்மினி முன்வந்துள்ளது.
அதன்படி வருகிற 8-ந்தேதி சென்னை சூப்பர் கிங்ஸ்- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டியை காண ரசிகர்களுக்கு டிக்கெட் வழங்க மின்மினி செயலி (Minmini app) போட்டி ஒன்றை (Contest) நடத்துகிறது.
ரசிகர்கள் இந்த போட்டியில் (Contest) பங்கேற்று டிக்கெட்டை வென்று சிஎஸ்கே-கேகேஆர் போட்டியை இலவசமாக பார்த்து ரசிக்கலாம்.
மேலும் விவரங்களுக்கு https://app.viralsweep.com/sweeps/full/d0f106-155915?framed=1 இந்த லிங்கை கிளிக் செய்து ரசிகர்கள் போட்டியில் (Contest) பங்கேற்று டிக்கெட்டுகளை வெல்லலாம்.
- அபா அணிக்கு எதிராக ரொனால்டோ ஹாட்ரிக் கோல் அடித்தார்.
- இந்த சீசனில் 29 கோல்கள் அடித்துள்ளார்.
கால்பந்து போட்டியின் முன்னணி வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ தலைசிறந்த வீரராக திகழ்ந்து வருகிறார். ஐந்து முறை பலோன்-டி'ஆர் விருதை வென்றுள்ள அவர், தற்போது சவுதி ப்ரோ லீக்கில் அல்-நசர் அணிக்காக விளையாடி வருகிறார்.
நேற்று அல்-நசர் அபா அணியை எதிர்கொண்டது. இந்த போட்டியில் ரொனால்டோ ஹாட்ரிக் கோல் அடித்தார். மேலும் இரண்டு கோல் அடிப்பதற்கு உதவி புரிந்தார். இதனால் அல்-நசர் 8-0 என வெற்றி பெற்றது.
சனிக்கிழமை நடைபெற்ற போட்டியில் அல்-தாய் அணிக்கு எதிராக ஏற்கனவே ஹாட்ரிக் அடித்திருந்தார். இந்த போட்டியில் அல்-நசர் அணி 5-1 என வெற்றி பெற்றிருந்தது. ரொனால்டோ இந்த சீசனில் மொத்தம் 29 கோல் அடித்துள்ளார்.
இந்த சீசனில் அல்-நசர் புள்ளிகள் பட்டியலில் 2-வது இடம் வகிக்கிறது. அல்-ஹிலால் முதல் இடம் பிடித்துள்ளது. இன்னும் 8 போட்டிகள் மீதமுள்ளன. அந்த அணியின் அலேக்சாண்டர் மிட்ரோவிக் 22 கோல்கள் உடன் 2-வது இடத்தில் உள்ளார்.
- லக்னோ அணி 181 ரன்கள் குவித்தது.
- ஆர்சிபி 153 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை சந்தித்தது.
பெங்களூருவில் நேற்று நடைபெற்ற லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்கெதிரான ஆட்டத்தில் ஆர்சிபி அணி 28 ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. ஹோம் மைதானத்தில் ஆர்சிபி-க்கு இது 2-வது தோல்வியாகும். இதுவரை 4 போட்டிகளில் விளையாடி 3-ல் தோல்வியை சந்தித்துள்ளது.
இந்த போட்டிக்குப்பின் ஆர்சிபி அணி கேப்டன் டு பிளிஸ்சிஸ் கூறியதாவது:-
இரண்டு கேட்ச்களை தவற விட்டது, அதற்கான விலை (தோல்வி) எங்களுக்கு கிடைத்துவிட்டது. இரண்டும் தலை சிறந்த வீரர்கள், டி காக் 25-30 ரன்கள் இருக்கும்போது அவுட்டில் இருந்து தப்பித்தார். பூரன் 2 ரன்னில் தப்பினார். இதனால் கூடுதலாக 60-65 ரன்கள் கொடுக்க வேண்டியதாயிற்று. ஐபிஎல் கிரிக்கெட்டில் இதுபோன்ற தவறுகளுக்கு நீங்கள் விலை கொடுக்க வேண்டியிருக்கும்.
மயங்க் யாதவ் தற்போது அணியில் அறிமுகம் ஆகியுள்ளார். நாங்கள் இதற்கு முன்னதாக அவரது பந்து வீச்சை எதிர்கொண்டது இல்லை. இதுபோன்ற வேகப்பந்துகள் வீசப்படும்போது அதை பழக்கப்படுத்திக் கொள்ள கொஞ்சம் நேரம் தேவை. ஆனால் கன்ட்ரோல் லெந்த் மற்றும் துல்லியம் ஆகியவற்றில் அவருடைய திறமை ஈர்க்க வைக்கிறது.
பவர் பிளேயில் பந்து வீச்சு சிறப்பாக அமையவில்லை என்பதால் மேக்ஸ்வெல் பந்து வீச அழைக்கப்பட்டார். அவர் கட்டுப்படுத்தினார். டெத் ஓவர் சற்று மகிழ்ச்சி அளித்தது. இரண்டு பேட்ஸ்மேன்கள் சிறப்பாக பேட்டிங் செய்து பார்ட்னர்ஷிப் அமைப்பது அவசியம். அது எங்களுக்கு கிடைக்காமல் போனது.
படிதர்-ராவத் ஜோடியின் 36 ரன்கள் லக்னோ அணிக்கு அச்சுறுத்தல் கொடுக்க முடியவில்லை. மஹிபால் லோம்ரோர் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் ஆட்டமிழந்ததும் எங்களுடைய சிறிய நம்பிக்கையும் தகர்ந்தது. மூன்று வடிவிலான துறையிலும் லக்னோ சிறப்பாக செயல்பட்டது.
இவ்வாறு டு பிளிஸ்சிஸ் தெரிவித்தார்.
- மயங்க் அகர்வால் பந்தில் மேக்ஸ்வெல் டக்அவுட் ஆனார்.
- ஐபிஎல் கிரிக்கெட்டில் அதிகமுறை டக்அவுட் ஆன பேட்ஸ்மேன் பட்டியலில் 2-வது இடம் பிடித்துள்ளார்.
ஐபிஎல் கிரிக்கெட்டில் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் ஆர்சிபி (ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு)- லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
இதில் முதலில் விளையாடிய லக்னோ அணி 181 ரன்கள் குவித்தது. பின்னர் 182 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆர்சிபி அணி களம் இறங்கியது. ஆனால் லக்னோ அணியின் வேகப்பந்து வீச்சாளர் மயங்க் யாதவ் அபாரமாக பந்து வீச ஆர்.சி.பி. அணி முக்கிய விக்கெட்டுகளை சாய்த்தார். மேக்ஸ்வெல் மற்றும் கேமரூன் க்ரீனை வீழ்த்தி அசத்தினார். அந்த அணியால் 153 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது.
இதனால் ஆர்.சி.பி. 28 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. மேலும் தனது சொந்த மைதானத்தில் அந்த அணியின் இரண்டாவது தோல்வி இதுவாகும்.
அந்த அணியின் அதிரடி வீரரான மேக்ஸ்வெல் தான் சந்தித்த 2-வது பந்திலேயே ரன்ஏதும் எடுக்காமல் டக்அவுட் ஆனார். ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் இதுவரை மேக்ஸ்வெல் 16 முறை டக்அவுட் ஆகியுள்ளார். மேலும் அதிக முறை டக்அவுட்டாகிய வீரர்கள் பட்டியலில் இரண்டாவது இடம் பிடித்துள்ளார்.
முன்னதாக ரோகித் சர்மா மற்றும் தினேஷ் கார்த்திக் ஆகியோர் தலா 17 முறை டக்அவுட் ஆகி ஐபிஎல் கிரிக்கெட்டில் அதிக முறை டக்அவுட் ஆனவர்கள் என்ற மோசமான சாதனையை படைத்துள்ளனர். மந்தீப் சிங், பியூஸ் சாவ்லா மற்றம் சுனில் நரைன் ஆகியோர் 15 முறை டக்அவுட்டாகி மூணாவது இடத்தில் உள்ளனர்.
- இது ஆர்சிபி அணிக்கு 3-வது தோல்வியாகும்.
- லக்னோ அணி தரப்பில் மயங்க் யாதவ் 3 விக்கெட்டுகளை அள்ளினார்.
பெங்களூரு:
ஐ.பி.எல். தொடரின் 15-வது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும் மோதியது. இதில் டாஸ் வென்ற பெங்களூரு அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.
அதன்படி களமிறங்கிய லக்னோ அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 181 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக டிகாக் 81 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஆர்சிபி அணி தரப்பில் மேக்ஸ்வெல் 2 விக்கெட்டும் சிராஜ், ரீஸ் டோப்லி 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதனையடுத்து ஆர்சிபி அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக விராட் கோலி - டுபிளிசிஸ் களமிறங்கினர். சிறப்பாக ஆடிய விராட் கோலி 22 ரன்னில் ஆட்டமிழந்தார்.
மறுமுனையில் ஆடிய டுபிளிசிஸ் 1 ரன்னுக்கு ஆசைபட்டு தனது விக்கெட்டை ரன் அவுட் முறையில் இழந்தார். அடுத்து வந்த மேக்ஸ்வெல் டக் அவுட்டில் வெளியேறினார். அடுத்து வந்த க்ரீன் 9 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த வீரர்கள் சொற்ப ரன்னில் பெவிலியன் திரும்பினர். அதிரடியாக விளையாடி லோம்ரோர் ஆர்சிபி வெற்றிக்காக போராடினார். அவர் 13 பந்தில் 33 ரன்கள் எடுத்து அவுட் ஆக ஆர்சிபி தோல்வி உறுதியானது.
இறுதியில் ஆர்சிபி அணி 19.4 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 153 ரன்கள் சேர்த்தது. இதனால் லக்னோ அணி ௨௮ ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. லக்னோ அணி தரப்பில் மயங்க் யாதவ் 3 விக்கெட்டுகளை அள்ளினார். இது ஆர்சிபி அணிக்கு 3-வது தோல்வியாகும். இது லக்னோ அணிக்கு 2-வது வெற்றி ஆகும்.
- சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஒரு ஓவரில் 6 சிக்சர் மற்றும் அதிவேகமாக அரை சதமடித்த வீரர் ஆகிய இரட்டை உலக சாதனைகளை யுவராஜ் சிங் படைத்தார்.
- எனது சொந்த சுயசரிதை படத்தில் நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் மற்றும் திரைக்கதை எழுத்தாளராக என்னை அறிமுகம் செய்ய முடிவு எடுத்துள்ளேன்.
பஞ்சாப்பை சேர்ந்த முன்னாள் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் சர்வதேச கிரிக்கெட்டில் இந்தியாவுக்காக நிறைய வெற்றிகளை பெற்றுக் கொடுத்த பெருமைக்குரியவர். 2000 ஐசிசி ஜூனியர் உலகக்கோப்பையில் தொடர் நாயகன் விருது வென்ற அவர் இந்தியா கோப்பையை வெல்ல உதவினார். அதன் காரணமாக கங்குலி தலைமையிலான இந்திய அணியில் அறிமுகமான அவர் குறுகிய காலத்திலேயே வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் நிரந்தர இடத்தை பிடிக்கும் அளவுக்கு அசத்தினார்.
அதைத் தொடர்ந்து தென்னாபிரிக்காவில் நடைபெற்ற 2007 டி20 உலகக் கோப்பையில் இங்கிலாந்தின் ஸ்டுவர்ட் பிராட்க்கு எதிராக ஒரே ஓவரில் 6 சிக்சர் அடித்து அசத்தினார். அதே போட்டியில் 12 பந்துகளில் 50 ரன்கள் தொட்ட அவர் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஒரு ஓவரில் 6 சிக்சர் மற்றும் அதிவேகமாக அரை சதமடித்த வீரர் ஆகிய இரட்டை உலக சாதனைகளை படைத்தார்.
இதனை தொடர்ந்து 2011 உலகக் கோப்பையில் 362 ரன்களையும் 15 விக்கெட்டுகளையும் எடுத்த அவர் 28 வருடங்கள் கழித்து இந்தியா சாம்பியன் பட்டம் வெல்ல முக்கிய பங்காற்றி தொடர் நாயகன் விருது வென்றார். அத்தொடரில் தமக்கு புற்றுநோய் இருந்தும் அதை பொருட்படுத்தாமல் நாட்டுக்காக அவர் விளையாடி வெற்றியை பெற்றுக் கொடுத்த விதம் ஒவ்வொரு இந்திய ரசிகனாலும் எப்போதும் மறக்க முடியாது. அதைத் தொடர்ந்து 2019-ல் ஓய்வு பெற்ற அவர் அவ்வப்போது வர்ணனையாளராக செயல்பட்டு வருகிறார்.
இந்நிலையில் தம்முடைய வாழ்க்கை வரலாற்றை சுயசரிதை திரைப்படமாக எடுக்க உள்ளதாக யுவராஜ் சிங் அறிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
என் பகுதியில் நான். எனது சொந்த சுயசரிதை படத்தில் நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் மற்றும் திரைக்கதை எழுத்தாளராக என்னை அறிமுகம் செய்ய முடிவு எடுத்துள்ளேன். அதற்காக வாழ்த்துங்கள் நண்பர்களே. இன்னும் ஓரிரு வருடத்தில் பெரிய திரையில் இறுதி முடிவை பார்ப்பீர்கள் என்று நம்புகிறேன். அப்டேட்டுகளுக்காக காத்திருங்கள்.
என்று யுவராஜ் கூறியுள்ளார்.
- லக்னோ அணியில் டிகாக் 81 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
- ஆர்சிபி அணி தரப்பில் மேக்ஸ்வெல் 2 விக்கெட்டும் சிராஜ், ரீஸ் டாப்லீ, தயாள் 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.
பெங்களூரு:
17-வது ஐ.பி.எல். சீசனின் இன்றைய 15-வது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும் மோதுகிறது. இதில் டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.
அதன்படி லக்னோ அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கேஎல் ராகுல்- டிகாக் களமிறங்கினர். கேஎல் ராகுல் 20 ரன்னிலும் அடுத்து வந்த படிக்கல் 6 ரன்னில் ஆட்டமிழந்தார். இதனையடுத்து டிகாக் - ஸ்டோய்னிஸ் அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தனர்.
தொடர்ந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய டிகாக் அரைசதம் விளாசினார். 15 பந்துகள் சந்தித்த மார்கஸ் ஸ்டோனிஸ் 24 ரன்களில் அவுட் ஆனார். அடுத்த சிறிது நேரத்தில் டிகாக் 81 ரன்னில் ஆட்டமிழந்தார். இதனையடுத்து கடைசி நேரத்தில் பூரன் அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்தார். குறிப்பாக டாப்லீ ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸ் அடித்து அசத்தினார்.
இறுதியில் லக்னோ அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 181 ரன்கள் குவித்தது. ஆர்சிபி அணி தரப்பில் மேக்ஸ்வெல் 2 விக்கெட்டும் சிராஜ், ரீஸ் டாப்லீ, தயாள் ஆகியோர் 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.
- மயங்க் யாதவ் விளையாடிய முதல் ஐபிஎல் போட்டியிலேயே அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார்.
- வேகப்பந்து வீச்சாளரான அவர் 155.8 கி.மீ வேகத்தில் பந்து வீசி அசத்தியுள்ளார்.
பெங்களூரு:
17-வது ஐ.பி.எல். சீசனின் இன்றைய 15-வது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும் மோதுகிறது. இதில் டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.
அதன்படி லக்னோ அணி பேட்டிங் செய்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் இந்த போட்டியில் லக்னோ அணி வீரர் மயங்க் யாதவ் மற்றும் விராட் கோலி மோதுவதை பார்க்க ஆவலாக உள்ளதாக இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் ஸ்டூவர்ட் பிராட் கூறியுள்ளார்.
மயங்க் யாதவ் விளையாடிய முதல் ஐபிஎல் போட்டியிலேயே அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். வேகப்பந்து வீச்சாளரான அவர் 155.8 கி.மீ வேகத்தில் பந்து வீசி அசத்தியுள்ளார். பந்து வீச்சில் அசத்தி வரும் மயங்க் அகர்வாலும் பேட்டிங்கில் கிங்காக இருக்கும் விராட் கோலியும் மோதுவதை பார்க்க ரசிகர்களும் ஆவலாக இருப்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.






