search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    ஐபிஎல் கிரிக்கெட்டில் மேக்ஸ்வெல் 16 முறை டக்: முதல் இடம் யார் தெரியுமா?
    X

    ஐபிஎல் கிரிக்கெட்டில் மேக்ஸ்வெல் 16 முறை டக்: முதல் இடம் யார் தெரியுமா?

    • மயங்க் அகர்வால் பந்தில் மேக்ஸ்வெல் டக்அவுட் ஆனார்.
    • ஐபிஎல் கிரிக்கெட்டில் அதிகமுறை டக்அவுட் ஆன பேட்ஸ்மேன் பட்டியலில் 2-வது இடம் பிடித்துள்ளார்.

    ஐபிஎல் கிரிக்கெட்டில் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் ஆர்சிபி (ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு)- லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

    இதில் முதலில் விளையாடிய லக்னோ அணி 181 ரன்கள் குவித்தது. பின்னர் 182 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆர்சிபி அணி களம் இறங்கியது. ஆனால் லக்னோ அணியின் வேகப்பந்து வீச்சாளர் மயங்க் யாதவ் அபாரமாக பந்து வீச ஆர்.சி.பி. அணி முக்கிய விக்கெட்டுகளை சாய்த்தார். மேக்ஸ்வெல் மற்றும் கேமரூன் க்ரீனை வீழ்த்தி அசத்தினார். அந்த அணியால் 153 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது.

    இதனால் ஆர்.சி.பி. 28 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. மேலும் தனது சொந்த மைதானத்தில் அந்த அணியின் இரண்டாவது தோல்வி இதுவாகும்.

    அந்த அணியின் அதிரடி வீரரான மேக்ஸ்வெல் தான் சந்தித்த 2-வது பந்திலேயே ரன்ஏதும் எடுக்காமல் டக்அவுட் ஆனார். ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் இதுவரை மேக்ஸ்வெல் 16 முறை டக்அவுட் ஆகியுள்ளார். மேலும் அதிக முறை டக்அவுட்டாகிய வீரர்கள் பட்டியலில் இரண்டாவது இடம் பிடித்துள்ளார்.

    முன்னதாக ரோகித் சர்மா மற்றும் தினேஷ் கார்த்திக் ஆகியோர் தலா 17 முறை டக்அவுட் ஆகி ஐபிஎல் கிரிக்கெட்டில் அதிக முறை டக்அவுட் ஆனவர்கள் என்ற மோசமான சாதனையை படைத்துள்ளனர். மந்தீப் சிங், பியூஸ் சாவ்லா மற்றம் சுனில் நரைன் ஆகியோர் 15 முறை டக்அவுட்டாகி மூணாவது இடத்தில் உள்ளனர்.

    Next Story
    ×