என் மலர்tooltip icon

    விளையாட்டு

    • கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 272 ரன்கள் குவித்தது.
    • டெல்லி அணி 17.2 ஓவரிலேயே ஆல்அவுட் ஆனது.

    கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 106 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி தோல்வியை சந்தித்தது.

    இந்த தோல்வி குறித்து டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் கூறியதாவது:-

    பந்து வீச்சில் அனைத்து இடங்களின் நாங்கள் இன்னும் சற்று கூடுதலாக சிறப்பான பங்களிப்பை கொடுத்திருக்க வேண்டும். இன்றைய பந்துவீச்சு எங்களுக்கு சரியாக அமையவில்லை. மோசமாக அமையும் நாட்களில் இதுவும் ஒன்று என நான் உணர்கிறேன்.

    பேட்டிங்கில் இலக்கு மிகப்பெரியது என்பதால் கடினமானதை நோக்கி செல்ல வேண்டி இருக்கும் என நாங்கள் பேசினோம். அந்த வகையில் நாங்கள் பேட்டிங்கை அணுகினோம். சேஸிங் செய்யாமல் இருப்பதை விட ஆல் அவுட் ஆவது சிறந்தது என நாங்கள் இந்த போட்டியை அணுகினோம்.

    விசாகப்பட்டினம் மைதானத்தில் சத்தம் கொஞ்சம் அதிகமாக இருந்தது. நாங்கள் டைமரை (ரிவியூ கேட்பதற்கான வினாடிகள்) ஸ்கிரீனில் பார்க்க முடியவில்லை. ஸ்கிரீனில் சில பிரச்சனைகள் இருந்தது.

    சில விஷயங்களை நாங்கள் கட்டுப்படுத்த முடிந்தது. சில விஷயங்களை கட்டுப்படுத்த முடியவில்லை. ஒரு அணியாகவும், தனிநபராகவும் அடுத்த பேட்டிக்கு சிறந்த முறையில் வலிமையாக திரும்ப வேண்டியததை பிரபதிபலிக்கம் நேரம் இது.

    நான் ஒவ்வொரு நாளையும் அனுபவித்து விளையாடுகிறேன். கிரிக்கெட்டில் ஏற்றம் இறக்கம் இருக்கும். ஆனால் தனிப்பட்ட நபராக உங்கள் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டியது அவசியம்.

    இவ்வாறு ரிஷப் பண்ட் தெரிவித்தார்.

    கொல்கத்தா நைட் ரைடர்ஸ் முதலில் பேட்டிங் செய்து 272 ரன்கள் குவித்தது. பின்னர் கடினமான இலக்கை நோக்கி சென்ற டெல்லி அணி 17.2 ஓவரில் 166 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது.

    • கொல்கத்தாவின் நெட் ரன்ரேட் 2.518 ஆக உள்ளது.
    • ராஜஸ்தான் ராயல்ஸ் 1.249 ரன் ரேட் வைத்துள்ளது.

    ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் நேற்று டெல்லி கேப்பிட்டல்ஸ்- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் விசாகப்பட்டினம் மைதானத்தில் நடைபெற்றது.

    முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 272 ரன்கள் குவித்தது. பின்னர் 273 என்ற கடுமையான இலக்கை நோக்கி பேட்டிங் செய்த டெல்லி அணி 166 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. இதனால் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 106 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    இந்த வெற்றியின் மூலம் தொடர்ந்து மூன்று போட்டிகளில் வெற்றி பெற்று புள்ளிகள் பட்டியலில் முதல் இடம் வகிக்கிறது கொல்கத்தா நைட் ரைடர்ஸ். அதுவும் நெட் ரன் ரேட் 2.518 என்ற அசுர பலத்துடன் முதலிடத்தில் வகிக்கிறது.

    அதேபோல் ஹாட்ரிக் வெற்றி பெற்றுள்ள ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 1.249 ரன் ரேட் உடன் இரண்டாம் இடம் வகிக்கிறது.

    சென்னை சூப்பர் கிங்ஸ் மூன்று போட்டிகளில் இரண்டில் வெற்றி பெற்று 0.976 ரன் ரேட் உடன் 3-வது இடத்தையும் லக்னோ மூன்ற போட்டியில் இரண்டில் வெற்றி பெற்று 0.483 ரன் ரேட் உடன் 4-வது இடத்தையும் குஜராத் டைட்டன்ஸ் மூன்று போட்டியில் இரண்டில் வெற்றி பெற்று மைனஸ் 0.738 ரன் ரேட் உடன் ஐந்தாவது இடத்தையும் பிடித்துள்ளன.

    சன்ரைசர்ஸ் ஐதராபாத், பஞ்சாப் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் தலா ஒரு வெற்றிகள் மூலம் முறையே ஆறு முதல் ஒன்பதாவது இடத்தை பிடித்துள்ளன. மும்பை இந்தியன்ஸ் 3 போட்டிகளில் தோல்வி அடைந்து கடைசி இடத்தை வகிக்கிறது.

    • டெல்லி தரப்பில் பண்ட் 55 ரன்களும் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 54 ரன்னில் வெளியேறினர்.
    • கொல்கத்தா அணி தரப்பில் வருண் சக்கரவர்த்தி 3 விக்கெட்டும் ஸ்டார்க், வைபவ் அரோரா தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

    ஐபிஎல் தொடரின் 16-வது லீக் போட்டியில் கொல்கத்தா- டெல்லி அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் ஆடிய கொல்கத்தா அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 272 ரன்கள் எடுத்தது.

    கொல்கத்தா அணியில் அதிகபட்சமாக நரேன் 85 ரன்களும் ரகுவன்ஷி 54 ரன்களும் விளாசினார். இறுதியில் வந்த ரஸல் 46 ரன்களும் ரிங்கு சிங் 26 ரன்களும் எடுத்தனர். டெல்லி அணி தரப்பில் நோர்க்கியா 3 விக்கெட்டும் இஷாந்த் சர்மா 2 விக்கெட்டும் வீழ்தினர்.

    இதனையடுத்து களமிறங்கிய டெல்லி அணிக்கு தொடக்கமே சோகமாக அமைந்தது. பிரித்வி ஷா 10, மிட்செல் மார்ஷ் 0, அபிஷேக் போரல் 0, டேவிட் வார்னர் 18 என அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிக்கொடுத்தனர். இதனால் டெல்லி அணி 33 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து திணறியது.

    இதனையடுத்து கேப்டன் ரிஷப் பண்ட் - டிரிஸ்டன் ஸ்டப்ஸ் ஜோடி சேர்ந்து அதிரடியாக விளையாடினார். சிறப்பாக ஆடிய இருவரும் அரைசதம் அடித்து நம்பிக்கை அளித்தனர். இந்த நிலையில் சக்கவர்த்தி வீசிய ஓவரில் இருவரும் ஆட்டமிழந்தனர். பண்ட் 55 ரன்களும் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 54 ரன்னில் வெளியேறினர்.

    அதனை தொடர்ந்து வந்த வீரர்கள் சொற்ப ரன்னில் வெளியேறினர். இதனால் கொல்கத்தா அணி 106 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கொல்கத்தா அணி தரப்பில் வருண் சக்கரவர்த்தி 3 விக்கெட்டும் ஸ்டார்க், வைபவ் அரோரா தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

    • ஹர்திக் பாண்ட்யா அழுத்தத்தில் இருக்கிறார்.
    • ஐபிஎல் அணிகளின் உரிமையாளர்கள் குறித்து எனக்கு தெரிந்த வரை அவர்கள் இது போன்ற முடிவுகளை எடுக்க தயங்க மாட்டார்கள்.

    மும்பை:

    ரோகித் சர்மாவை கேப்டன் பதவியில் இருந்து நீக்கியதை மும்பை இந்தியன்ஸ் அணியின் ரசிகர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. அதனால் மும்பை இந்தியன்ஸ் விளையாடும் மைதானங்களில் ஹர்திக் பாண்ட்யாவுக்கு எதிராக கோஷங்களை எழுப்பி வருகின்றனர்.

    நடப்பு ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி தனது முதல் மூன்று போட்டிகளிலும் தோல்வி அடைந்துள்ளது.

    இந்நிலையில் தோல்விகளாலும், ரசிகர்களின் எதிர்ப்பாலும் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா அழுத்தத்தை சந்தித்துள்ளார் என இந்திய அணியின் முன்னாள் வீரர் மனோஜ் திவாரி கூறியுள்ளார்.

    இது குறித்து மனோஜ் திவாரி கூறியதாவது:-

    ஹர்திக் பாண்ட்யா அழுத்தத்தில் இருக்கிறார் என்பது சில விஷயங்கள் மூலம் தெரிகிறது. அவர் ரசிகர்களின் எதிர்ப்பால் அழுத்தத்தை உணர்கிறார். நான் பெரிய விஷயம் ஒன்றை சொல்லப் போகிறேன். இந்த ஆறு நாள் இடைவெளியில் ஹர்திக் பாண்ட்யாவிடம் இருந்து கேப்டன்சியை பறித்து ரோகித் சர்மாவை கேப்டனாக்க வாய்ப்பு உள்ளது.

    இந்த மாற்றம் நடக்க வாய்ப்புள்ளது. இந்த ஐபிஎல் அணிகளின் உரிமையாளர்கள் குறித்து எனக்கு தெரிந்த வரை அவர்கள் இது போன்ற முடிவுகளை எடுக்க தயங்க மாட்டார்கள். அவர்கள் தான் ரோகித் சர்மா கேப்டன் பதவியை பறித்து இந்த சிக்கலை துவங்கி வைத்தார்கள்.

    உங்களுக்கு ஐந்து கோப்பை வென்று கொடுத்த கேப்டனை மாற்றினீர்கள். தற்போது புதிய கேப்டன் ஒரு போட்டியில் கூட வெற்றி பெற்றுத் தரவில்லை. அவரது கேப்டன்சியும் சரியில்லை. நிறைய தவறுகள் நடக்கின்றன.

    இவ்வாறு திவாரி கூறினார்.

    • நெல்லை, திண்டுக்கல், கோவை, சேலம், சென்னை ஆகிய நகரங்களில் போட்டி நடைபெற உள்ளது.
    • ஆகஸ்ட் 4ம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இறுதி போட்டி.

    நடப்பாண்டின் டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடருக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

    அதன்படி, வரும் ஜூலை 5ம் தேதி முதல் ஆகஸ்ட் 4ம் தேதி வரை டிஎன்பிஎல் நடைபெறுகிறது.

    நெல்லை, திண்டுக்கல், கோவை, சேலம், சென்னை ஆகிய நகரங்களில் போட்டி நடைபெற உள்ளது.

    சேலத்தில் நடைபெறும் முதல் போட்டியில் லைக்கா கோவை கிங்ஸ் மற்றும் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிகள் மோதுகிறது.

    ஆகஸ்ட் 4ம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இறுதி போட்டி நடைபெறுகிறது.

    • நரைன் 85 ரன்னிலும் ரகுவன்ஷி 54 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.
    • டெல்லி தரப்பில் நோர்க்கியா 3 விக்கெட்டுகளையும் இஷான் சர்மா 2 விக்கெட்டையும் வீழ்த்தினர்.

    ஐபிஎல் தொடரின் 16-வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா மற்றும் டெல்லி அணிகள் மோதிவருகிறது. இதில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி கொல்கத்தா அணியின் தொடக்க வீரர்களாக சால்ட்- சுனில் நரைன் களமிறங்கினர். சால்ட் 20 ரன்னில் ஆட்டமிழந்தார். இதனையடுத்து நரைனுடன் இளம் வீரர் ரகுவன்ஷி ஜோடி சேர்ந்து டெல்லி அணியின் பந்து வீச்சை சரமாரியாக விளாசினர்.

    அதிரடியாக விளையாடிய இருவரும் அரை சதம் விளாசினர். இந்த ஜோடி 2-வது விக்கெட்டுக்கு 100 ரன்கள் சேர்த்தது. நரைன் 85 ரன்னிலும் ரகுவன்ஷி 54 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த ஸ்ரேயாஸ் அய்யர் 18 ரன்னில் அவுட் ஆனார். இதனையடுத்து வந்த ரஸல் (41) - ரிங்கு சிங் (26) அவர்களது பங்குக்கு அதிரடியை காட்டினார்.

    இதனால் கொல்கத்தா அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 272 ரன்கள் குவித்தது. டெல்லி தரப்பில் நோர்க்கியா 3 விக்கெட்டுகளையும் மிட்செல் மார்ஷ் 1 விக்கெட்டையும் வீழ்த்தினார்.

    • மொராக்கோவில் கிராண்ட் பிரிக்ஸ் ஹசன் டென்னிஸ் தொடர் நடந்து வருகிறது.
    • ஆண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் இந்தியாவின் சுமித் நாகல் தோல்வி அடைந்தார்.

    ரபாட்:

    வட ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள மொராக்கோவில் கிராண்ட் பிரிக்ஸ் ஹசன் டென்னிஸ் தொடர் நடந்து வருகிறது.

    இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் இந்தியாவின் சுமித் நாகல், இத்தாலியின் லாரன்சோ சொனேகோவுடன் மோதினார்.

    முதல் செட்டை சுமித் நாகல் 6-1 என எளிதில் கைப்பற்றினார். இதில் சுதாரித்துக் கொண்ட சொனேகா அடுத்த இரு செட்களை 6-3, 6-4 என கைப்பற்றி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

    • மயங்க் யாதவ் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் பார்டர் - கவாஸ்கர் கோப்பையில் விளையாட வேண்டும்.
    • 4 ஓவர் வீசுவதற்கும் 20 ஓவர் வீசுவதற்கும் வித்தியாசம் இருக்கிறது.

    நடப்பு ஐ.பி.எல். தொடரில் இளம் இந்திய வேகப்பந்து வீச்சாளரான மயங்க் யாதவ் சிறப்பாக பந்து வீசி ரசிகர்களையும் முன்னாள் வீரர்களையும் வியப்பில் ஆழ்த்தி வருகிறார். லக்னோ அணிக்காக இந்த வருடம் அறிமுகமான இளம் வேகப்பந்து வீச்சாளரான மயங்க் யாதவ் இதுவரை விளையாடிய 2 போட்டிகளிலும் ஆட்டநாயகன் விருது வென்று அணியின் வெற்றியில் முக்கிய பங்காற்றியுள்ளார்.

    155 கிலோமீட்டர் வேகத்தில் பந்து வீசும் இவருடைய திறனை பல முன்னாள் வீரர்கள் பாராட்டி வருகின்றனர். இந்தியா தன்னுடைய வேகப்பந்து வீச்சாளரை கண்டுபிடித்து விட்டதாக அவரை பிரட் லீ, டேல் ஸ்டெயின் போன்ற வெளிநாட்டு ஜாம்பவான் வீரர்கள் பாராட்டி வருகின்றனர்.

    இந்நிலையில் இந்தியாவுக்காக எதிரான ஆஸ்திரேலிய மண்ணில் நடைபெற உள்ள 2024 - 25 பார்டர் – கவாஸ்கர் கோப்பையில் மயங்க் யாதவை எதிர்கொள்ள காத்திருப்பதாக ஸ்டீவ் சுமித் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    மயங்க் யாதவ் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் பார்டர் - கவாஸ்கர் கோப்பையில் விளையாட வேண்டும். அவரை எதிர்கொள்வதற்காக நான் காத்திருக்கிறேன். 4 ஓவர் வீசுவதற்கும் 20 ஓவர் வீசுவதற்கும் வித்தியாசம் இருக்கிறது.

    நான் இதுவரை பார்த்ததில் மயங்க் யாதவின் வளர்ச்சி சிறப்பாக உள்ளது. ஏனெனில் அவர் நல்ல ஏரியாக்களில் பந்தை வீசுகிறார். அவரைப் போன்ற இளம் வீரர்கள் ஷார்ட் லைனில் நல்ல வேகத்தில் வீசுகின்றனர். எனவே அவர்கள் இன்னும் கொஞ்சம் தெளிந்தால் நீண்ட தூரம் பயணம் செல்ல முடியும்.

    மணிக்கு 155 கிலோமீட்டர் வேகத்தில் வரும் பந்துகளுக்கு எதிராக நீங்கள் உண்மையில் ரிஸ்க் எடுக்க வேண்டும். அதை எதிர்கொள்வது எளிதான காரியம் அல்ல. பெரும்பாலான வீரர்கள் தங்களுடைய அறிமுகப் போட்டியில் அசத்திய பின் அப்படியே பின்தங்கி விடுவார்கள். ஆனால் இவர் அங்கிருந்து மீண்டும் வந்து கிளன் மேக்ஸ்வெல் போன்ற சிறந்த டி20 பேட்ஸ்மேனை அவுட்டாக்கினார்.

    மேலும் கேமரூன் கிரீன், ரஜத் படிதார் போன்ற வேகத்தை திறம்பட எதிர்கொள்ளும் வீரர்களையும் அவர் அவுட்டாக்கினார்.

    இவ்வாறு ஸ்மித் கூறினார்.

    • மும்பை அணி இந்த தொடரில் இன்னும் தங்களது முதல் வெற்றியை பதிவு செய்யாமல் இருக்கிறது.
    • மும்பை அணி புள்ளிபட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.

    ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை நடந்து முடிந்த 15 லீக் போட்டிகள் முடிவில் ராஜஸ்தான் முதல் இடத்திலும் கொல்கத்தா 2-வது இடத்திலும் உள்ளன. கடைசி இரண்டு இடங்களில் ஆர்சிபி மற்றும் மும்பை அணிகள் உள்ளது.

    மும்பை அணி இந்த தொடரில் இன்னும் தங்களது முதல் வெற்றியை பதிவு செய்யாமல் இருக்கிறது. ஹர்திக் பாண்ட்யா தலைமையில் முதல் முறையாக மும்பை இந்தியன்ஸ் அணி களமிறங்கி தோல்வியை மட்டும் சந்தித்துள்ளது ரசிகர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

    இந்த தொடரில் மும்பை அணிக்கு பேட்டிங் ஆர்டர் சிறப்பாக அமையவில்லை. மிடில் ஆர்டரில் மும்பை அணி தடுமாறி வருகிறது.

    இந்நிலையில் காயம் காரணமாக ஐபிஎல் தொடரில் பங்கேற்காத மும்பை இந்தியன்ஸ் அணியின் அதிரடி ஆட்டகாரர் சூர்யகுமார் யாதவ் அடுத்த போட்டியில் இருந்து களமிறங்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    தேசிய கிரிக்கெட் அகாடமியின் உடல் தகுதிக்கான சோதனையில் தேர்ச்சி பெறாமல் இருந்து வந்தார். இந்த நிலையில் அவர் உடல் தகுதியுடன் உள்ளதாக தேசிய கிரிக்கெட் அகாடமி தெரிவித்துள்ளது. இதனால் அவர் டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • வரும் 8ம் தேதி சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை- கொல்கத்தா அணிகள் மோதுகின்றன.
    • டிக்கெட் விலை குறைந்தபட்சம் ரூ.1700 முதல் அதிகபட்சம் ரூ.6000 வரை நிர்ணயம்.

    ஐ.பி.எல். தொடரின் 17-ஆவது சீசன் கடந்த மார்ச் மாதம் 22-ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில், வரும் 8ம் தேதி சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை- கொல்கத்தா அணிகள் மோதுகின்றன.

    இந்த போட்டிக்கான டிக்கெட் வரும் 5ம் தேதி விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி, காலை 9.30 மணிக்கு பேடிஎம் மற்றும் www.insider.in தளத்தில் ஆன்லைனில் நடைபெறும் என சென்னை அணி நிர்வாகம் அறிவித்துள்ளது.

    டிக்கெட் விலை குறைந்தபட்சம் ரூ.1700 முதல் அதிகபட்சம் ரூ.6000 வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடும் போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை முழுவதும் ஆன்லைன் மூலம் மட்டுமே நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    • கொல்கத்தா அணி 2 போட்டிகளில் விளையாடி 2 போட்டிகளிலும் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் 2-வது இடத்தில் உள்ளது.
    • டெல்லி அணி 3 போட்டிகளில் விளையாடி 1 வெற்றி 2 தோல்வியுடன் 7-வது இடத்தில் உள்ளது.

    விசாகப்பட்டினம்:

    ஐபிஎல் தொடரின் இன்று நடைபெறும் 16-வது லீக் ஆட்டத்தில் ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும், ஸ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதுகின்றன. இந்த போட்டி விசாகப்பட்டினத்தில் நடைபெறுகிறது.

    இதில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

    கொல்கத்தா அணி 2 போட்டிகளில் விளையாடி 2 போட்டிகளிலும் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் 2-வது இடத்தில் உள்ளது. டெல்லி அணி 3 போட்டிகளில் விளையாடி 1 வெற்றி 2 தோல்வியுடன் 7-வது இடத்தில் உள்ளது.

    • ஆர்.சி.பி அணி அழுத்தத்தில் இருக்கும்போது அந்த அணியின் பெரிய பேட்ஸ்மேன்கள் யாரும் சிறப்பாக விளையாடுவதைப் பார்க்க முடியாது.
    • அணியில் உள்ள எல்லா இளம் வீரர்களும் கீழே வந்து விளையாடுகிறார்கள்.

    ஐபிஎல் தொடரின் 15-வது லீக் போட்டியில் லக்னோ - பெங்களூரு அணிகள் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணி 182 ரன்கள் குவித்தது. இதனையடுத்து களமிறங்கிய பெங்களூரு அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

    இதுவரை நான்கு போட்டிகளில் விளையாடியுள்ள பெங்களூரு அணி ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்று, மூன்று போட்டிகளில் தோல்வி அடைந்து, தற்போது புள்ளிப் பட்டியலில் ஒன்பதாவது இடத்தில் நீடிக்கிறது.

    இந்நிலையில் ஒருமுறை கூட ஐபிஎல் கோப்பையை வெல்லாத ஆர்.சி.பி அணி குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரரும் சிஎஸ்கே அணியின் முன்னாள் வீரருமான அம்பத்தி ராயுடு கருத்து தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    ஆர்.சி.பி அணி அழுத்தத்தில் இருக்கும்போது அந்த அணியின் பெரிய பேட்ஸ்மேன்கள் யாரும் சிறப்பாக விளையாடுவதைப் பார்க்க முடியாது. அணியில் உள்ள எல்லா இளம் வீரர்களும் கீழே வந்து விளையாடுகிறார்கள். அணியில் உள்ள பெரிய வீரர்கள் எல்லோரும் மேலே ஆட்டம் தொடங்கும் முன்னரே அவுட்டாகி சென்று விடுகிறார்கள்.

    இப்படியிருந்தால் அந்த அணி வெற்றி பெறாது. அதுமட்டுமின்றி ஆர்.சி.பி அணிக்குக் கடைசி கட்டம்வரை அழுத்தத்தில் விளையாடக் கூடிய வீரர்களாக யார் இருக்கிறார்கள் என்று பார்த்தால், இளம் வீரரான அனுஜ் ராவத் பிறகு தினேஷ் கார்த்திக். ஆனால் அந்த அணியில் இருக்கும் பெரிய பேட்ஸ்மேன்கள்தான் இந்த அழுத்தத்தை எடுத்துக் கொள்ள வேண்டும்.

    ஆனால் அவர்கள் எங்கே இருந்தார்கள்? அவர்கள் எல்லோரும் ஆட்டம் இழந்து டிரெஸ்ஸிங் ரூமில் இருந்தார்கள். இது இன்று மட்டும் நடக்கவில்லை. பதினாறு ஆண்டுகளாக ஆர்.சி.பி அணியின் கதை இதுதான்.

    இவ்வாறு ராயுடு கூறினார்.

    ×