search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    16 வருசமா இதை தான் செய்றாங்க.. ஆர்சிபி-யின் தவறை சுட்டிக்காட்டிய அம்பதி ராயுடு
    X

    16 வருசமா இதை தான் செய்றாங்க.. ஆர்சிபி-யின் தவறை சுட்டிக்காட்டிய அம்பதி ராயுடு

    • ஆர்.சி.பி அணி அழுத்தத்தில் இருக்கும்போது அந்த அணியின் பெரிய பேட்ஸ்மேன்கள் யாரும் சிறப்பாக விளையாடுவதைப் பார்க்க முடியாது.
    • அணியில் உள்ள எல்லா இளம் வீரர்களும் கீழே வந்து விளையாடுகிறார்கள்.

    ஐபிஎல் தொடரின் 15-வது லீக் போட்டியில் லக்னோ - பெங்களூரு அணிகள் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணி 182 ரன்கள் குவித்தது. இதனையடுத்து களமிறங்கிய பெங்களூரு அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

    இதுவரை நான்கு போட்டிகளில் விளையாடியுள்ள பெங்களூரு அணி ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்று, மூன்று போட்டிகளில் தோல்வி அடைந்து, தற்போது புள்ளிப் பட்டியலில் ஒன்பதாவது இடத்தில் நீடிக்கிறது.

    இந்நிலையில் ஒருமுறை கூட ஐபிஎல் கோப்பையை வெல்லாத ஆர்.சி.பி அணி குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரரும் சிஎஸ்கே அணியின் முன்னாள் வீரருமான அம்பத்தி ராயுடு கருத்து தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    ஆர்.சி.பி அணி அழுத்தத்தில் இருக்கும்போது அந்த அணியின் பெரிய பேட்ஸ்மேன்கள் யாரும் சிறப்பாக விளையாடுவதைப் பார்க்க முடியாது. அணியில் உள்ள எல்லா இளம் வீரர்களும் கீழே வந்து விளையாடுகிறார்கள். அணியில் உள்ள பெரிய வீரர்கள் எல்லோரும் மேலே ஆட்டம் தொடங்கும் முன்னரே அவுட்டாகி சென்று விடுகிறார்கள்.

    இப்படியிருந்தால் அந்த அணி வெற்றி பெறாது. அதுமட்டுமின்றி ஆர்.சி.பி அணிக்குக் கடைசி கட்டம்வரை அழுத்தத்தில் விளையாடக் கூடிய வீரர்களாக யார் இருக்கிறார்கள் என்று பார்த்தால், இளம் வீரரான அனுஜ் ராவத் பிறகு தினேஷ் கார்த்திக். ஆனால் அந்த அணியில் இருக்கும் பெரிய பேட்ஸ்மேன்கள்தான் இந்த அழுத்தத்தை எடுத்துக் கொள்ள வேண்டும்.

    ஆனால் அவர்கள் எங்கே இருந்தார்கள்? அவர்கள் எல்லோரும் ஆட்டம் இழந்து டிரெஸ்ஸிங் ரூமில் இருந்தார்கள். இது இன்று மட்டும் நடக்கவில்லை. பதினாறு ஆண்டுகளாக ஆர்.சி.பி அணியின் கதை இதுதான்.

    இவ்வாறு ராயுடு கூறினார்.

    Next Story
    ×