search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "DCvKKR"

    • டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி பந்து வீச்சாளர்கள் 17 வைடுகள் வீசினார்.
    • குறிப்பிட்ட நேரத்திற்குள் பந்து வீச முடியாததால், கடைசி 2 ஓவரில் 4 வீரர்கள் பவுண்டரி லைனில் நிற்க முடிந்தது.

    விசாகப்பட்டினத்தில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கெதிராக டெல்லி 106 ரன் வித்தியாசத்தில் படுதோல்வியடைந்தது. 20 ஓவர் முழுவதும் விளையாட முடியாமல் 17.2 ஓவரில் 166 ரன்னில் ஆல்அவுட் ஆனது.

    இந்த தோல்வி குறித்து அந்த அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் "மோசமான நாட்களாக அமைவதில் இந்த நாளும் ஒன்று. பந்து வீச்சாளர்கள் இன்னும் சிறப்பாக வகையில் செயல்பட்டிருக்க வேண்டும்" எனத் தெரிவித்திருந்தார்.

    ஆனால் அந்த அணியின் தலைமை பயிற்சியாளரான ரிக்கி பாண்டிங் அணியில் பல விசயங்களை ஏற்றுக் கொள்ள முடியாது எனத் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக ரிக்கி பாண்டிங் கூறியதாவது:-

    தற்போதைய நிலையில் மதிப்பீடுவது மிகவும் கடினம். போட்டியின் முதல் பாதிலேயே நான் மிகவும் சங்கடத்திற்கு உள்ளானேன். நாங்கள் ஏராளமான ரன்கள் வாரி வழங்கி விட்டோம். நாங்கள் 17 ஓவர்கள் வீசியதால் இரண்டு மணி நேரம் எடுத்துக் கொண்டது. இதனால் கடைசி இரண்டு ஓவர்களில் பவுண்டரி லைனில் நான்கு வீரர்களுடன் பீல்டிங் செய்ய வேண்டியிருந்தது.

    இந்த போட்டியில் ஏராளமான விசயங்கள் நடைபெற்றன. அவைகள் ஏற்றுக் கொள்ள முடியாதது. பல விசயங்கள் குறித்து பேச இருக்கிறோம். போட்டியில் முன்னோக்கி செல்ல அவற்றை உடனடியாக சரி செய்து கொள்ள வேண்டும். வெளிப்படையான ஆலோசனைகள் வீரர்கள் அறையில் நடப்பது உறுதி.

    இவ்வாறு ரிக்கி பாண்டிங் தெரிவித்தார்.

    • கொல்கத்தாவின் நெட் ரன்ரேட் 2.518 ஆக உள்ளது.
    • ராஜஸ்தான் ராயல்ஸ் 1.249 ரன் ரேட் வைத்துள்ளது.

    ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் நேற்று டெல்லி கேப்பிட்டல்ஸ்- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் விசாகப்பட்டினம் மைதானத்தில் நடைபெற்றது.

    முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 272 ரன்கள் குவித்தது. பின்னர் 273 என்ற கடுமையான இலக்கை நோக்கி பேட்டிங் செய்த டெல்லி அணி 166 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. இதனால் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 106 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    இந்த வெற்றியின் மூலம் தொடர்ந்து மூன்று போட்டிகளில் வெற்றி பெற்று புள்ளிகள் பட்டியலில் முதல் இடம் வகிக்கிறது கொல்கத்தா நைட் ரைடர்ஸ். அதுவும் நெட் ரன் ரேட் 2.518 என்ற அசுர பலத்துடன் முதலிடத்தில் வகிக்கிறது.

    அதேபோல் ஹாட்ரிக் வெற்றி பெற்றுள்ள ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 1.249 ரன் ரேட் உடன் இரண்டாம் இடம் வகிக்கிறது.

    சென்னை சூப்பர் கிங்ஸ் மூன்று போட்டிகளில் இரண்டில் வெற்றி பெற்று 0.976 ரன் ரேட் உடன் 3-வது இடத்தையும் லக்னோ மூன்ற போட்டியில் இரண்டில் வெற்றி பெற்று 0.483 ரன் ரேட் உடன் 4-வது இடத்தையும் குஜராத் டைட்டன்ஸ் மூன்று போட்டியில் இரண்டில் வெற்றி பெற்று மைனஸ் 0.738 ரன் ரேட் உடன் ஐந்தாவது இடத்தையும் பிடித்துள்ளன.

    சன்ரைசர்ஸ் ஐதராபாத், பஞ்சாப் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் தலா ஒரு வெற்றிகள் மூலம் முறையே ஆறு முதல் ஒன்பதாவது இடத்தை பிடித்துள்ளன. மும்பை இந்தியன்ஸ் 3 போட்டிகளில் தோல்வி அடைந்து கடைசி இடத்தை வகிக்கிறது.

    • முதலில் ஆடிய கொல்கத்தா 127 ரன்கள் எடுத்தது.
    • ஜேசன் ராய் அதிகபட்சமாக 43 ரன்கள் சேர்த்தார்.

    புதுடெல்லி:

    தலைநகர் டெல்லியில் இன்று இரவு நடைபெற்ற 28-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. மழை காரணமாக டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டது. டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, கொல்கத்தா அணி முதலில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் ஜேசன் ராய் நிதானமாக ஆடினார். அவர் 43 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    மற்ற வீரர்கள் விரைவில் வெளியேறினர். யாரும் நிலைத்து நிற்கவில்லை. கடைசி கட்டத்தில் ஆண்ட்ரு ரசல் 38 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார்.

    இறுதியில், கொல்கத்தா அணி 20 ஓவரில் 127 ரன்கள் எடுத்தது. இதையடுத்து, 128 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி அணி களமிறங்குகிறது.

    ×