என் மலர்tooltip icon

    விளையாட்டு

    • ஐபிஎல் ஏலத்தில் இது பெயர் கொண்ட மற்றொரு வீரரை ஏலம் எடுக்க இருந்ததாக பஞ்சாப் அணி தெரிவித்தது.
    • பின்னர் அடிப்படை விலையான 20 லட்சம் ரூபாய்க்கு அணியில் இணைத்துக் கொண்டது.

    குஜராத்தில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியை வீழ்த்தி பஞ்சாப் அணி த்ரில் வெற்றி பெற்றது. முதலில் விளையாடிய குஜராத் அனி 199 ரன்கள் குவித்தது. பின்னர் 200 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் பஞ்சாப் அணி களம் இறங்கியது.

    அந்த அணி ஒரு கட்டத்தில் 9 ஓவர் முடிவில் 73 ரன்கள்தான் எடுத்திருந்தது. இதனால் பஞ்சாப் அணி தோல்வியடைந்து விடும் என எல்லோரும் நினைத்தனர். அப்போது களமிறங்கிய ஷஷாங்க் சிங் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இவர் 23 பந்தில் அரைசதம் விளாசியதுடன் அணியை வெற்றி நோக்கி அழைத்துச் சென்றார்.

    இவரது ஆட்டத்தால் பஞ்சாப் அணி 19.5 ஓவரில் இலக்கை எட்டி த்ரில் வெற்றி பெற்றது. 61 ரன்கள் அடித்து ஆட்டமிழக்காமல் இருந்த ஷஷாங்க் சிங் ஆட்டநாயகன் விருது பெற்றார். இந்த சீசனில் மிகப்பெரிய சேஸிங் இதுவாகும்.

    ஐபிஎல் ஏலத்தின்போது நாங்கள் இதே பெயரை கொண்ட மற்றொரு வீரரை ஏலம் எடுக்க இருந்தோம். ஆனால் இந்த ஷஷாங்க் சிங்கை அடிப்படை விலையான இருபது லட்ச ரூபாய்க்கு எடுத்து விட்டோம் என ப்ரீத்தி ஜிந்தா ஏலம் விடுபவரிடம் தெரிவித்தார். ஆனால் ஒரு வீரர் எடுக்கப்பட்டதாக அறிவித்த பின்னர், அவரை திரும்ப பெற முடியாது என ஏலம் விடுபவர் தெரிவித்தார்.

    இதனால் ஷஷாங்க் சிங் பஞ்சாப் அணியில் தவறுதலாக எடுக்கப்பட்டு இடம் பிடித்தார். ஆனால் நேற்று கதாநாயகனாக மாறி அணிக்கு வெற்றி தேடிக்கொடுத்துள்ளார். இனிமேல் வரும் போட்டிகளில் ஆடும் லெவன் அணியில் இவர் பெயர் தவறாமல் இடம்பெறும் என எதிர்பார்க்கலாம்.

    • அதிரடியாக விளையாடிய ஷஷாங்க் சிங் அரை சதம் விளாசினார்.
    • குஜராத் தரப்பில் ரூர் அகமது 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

    ஐபிஎல் தொடரின் 17-வது லீக் போட்டியில் குஜராத்- பஞ்சாப் அணிகள் மோதியது. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி களமிறங்கிய குஜராத் அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 199 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக கில் கடைசி வரை அவுட் ஆகாமல் 89 ரன்கள் எடுத்திருந்தார். பஞ்சாப் அணி தரப்பில் ரபாடா 2 விக்கெட்டும் ஹர்ப்ரீத் ப்ரார், ஹர்சல் படேல் ஆகியோர் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதனையடுத்து பஞ்சாப் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக தவான் - பேர்ஸ்டோவ் களமிறங்கினர். தவான் 1 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த பிரப்சிம்ரன் சிங் மற்றும் பேர்ஸ்டோவ் பவர்பிளேயில் சிறப்பாக ரன்களை சேர்த்தனர்.

    பவர் பிளே முடிந்த முதல் ஓவரின் முதல் பந்தில் பேர்ஸ்டோவ் 22 ரன்னில் போல்ட் ஆனார். அடுத்து வந்த சாம் கரண் 5 ரன்னில் வெளியேறினார். அதனை தொடர்ந்து பிரப்சிம்ரன் சிங் 35 ரன்னிலும் ராசா 15 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

    இதனையடுத்து ஜிதேஷ் சர்மா- ஷஷாங்க் சிங் ஜோடி சேர்ந்து அணியின் வெற்றிக்காக போராடினார். இந்த ஜோடி 6-வது விக்கெட்டுக்கு 39 ரன்கள் குவித்தது. ரஷித்கான் ஓவரில் தொடர்ந்து 2 சிக்சர்களை விளாசிய ஜிதேஷ் சர்மா 16 ரன்னில் ஆட்டமிழந்தார். அதிரடியாக விளையாடிய ஷஷாங்க் சிங் அரை சதம் விளாசினார்.

    அடுத்து வந்த அசுதோஷ் சர்மா- ஷஷாங்க் சிங் ஜோடி பஞ்சாப் வெற்றிக்கு போராடினர். இறுதியில் 12 பந்துக்கு 25 ரன்கள் தேவை என்ற நிலைக்கு கொண்டு வந்தனர். 19-வது ஓவரில் இந்த ஜோடி 18 ரன்கள் எடுத்தது. இதனால் கடைசி ஓவரில் 7 ரன்கள் தேவைப்பட்டது. கடைசி ஓவரை தர்ஷன் நல்கண்டே வீசினார். முதல் பந்தில் அசுதோஷ் சர்மா கேட்ச் ஆனார். அடுத்த பந்தை அகல பந்தாக வீசினார். 3-வது பந்தில் ஹர்ப்ரீத் 1 ரன் எடுத்தார்.

    இதனால் கடைசி 3 பந்துக்கு 5 ரன்கள் தேவைப்பட்டது. அந்த பந்தை ஷஷாங்க் சிங் பவுண்டரி அடித்து ஸ்கோரை சமன் செய்தார். அடுத்த பந்தில் பஞ்சாப் வெற்றி பெற்றது.

    இறுதியில் பஞ்சாப் அணி 19.5 ஓவரில் 7 விக்கெட்டுகளை இழந்து 200 ரன்கள் எடுத்தது. குஜராத் தரப்பில் ரூர் அகமது 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

    • நீங்கள் களத்தில் கூடுதலாக 20 பந்துகளை எதிர்கொண்டு, உங்களது சதத்தை பதிவுசெய்திருக்க வேண்டும்.
    • நீங்கள் ஆட்டமிழக்காமல் விளையாடி அடுத்த போட்டிக்கான பயிற்சியையும் இப்போட்டியில் எடுத்திருக்கலாம்.

    ஐபிஎல் தொடரின் 17-வது சீசன் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் நடைபெற்ற 16ஆவது லீக் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

    இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கேகேஆர் 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 272 ரன்களைச் சேர்த்து. ஐபிஎல் தொடர் வரலாற்றில் அதிகபட்ச ரன்களை குவித்த இரண்டாவது அணி எனும் சாதனையை படைத்தது.

    இதையடுத்து விளையாடிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியில் ரிஷப் பண்ட் மற்றும் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் ஆகியோர் அரைசதம் கடந்த நிலையிலும், மற்ற பேட்டர்கள் சொதப்பியதன் காரணமாக அந்த அணியால் 20 ஓவர்கள் முடிவில் 166 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன்மூலம் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 106 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லியை வீழ்த்தி நடப்பு சீசனில் தங்களது ஹாட்ரிக் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது.

    இந்நிலையில் இப்போட்டியில் ரிஷப் பண்ட் அதிரடியாக விளையாடி ஆட்டம் இழந்ததற்கு பதிலாக சதமடித்திருக்கலாம் என்று முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக் விமர்சித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் பேசியதாவது:-

    கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ரிஷப் ஆட்டம் சிறப்பாக இருந்தது. இத்தொடரில் அவர் விளையாடிய முதல் இரண்டு போட்டிகளில் பெரிதளவில் சோபிக்கவில்லை என்றாலும், அடுத்தடுத்த போட்டிகளில் அரைசதம் கடந்து அசத்தியுள்ளார்.

    இருப்பினும் நேற்றைய போட்டியில் அவர் அதிரடியாக விளையாடி தனது விக்கெட்டை பரிசளித்துவிட்டதாகவே நான் பார்க்கிறேன். ஏனெனில் எதிரணி நிர்ணயித்த இமாலய இலக்கை நோக்கி விளையாடும் நீங்கள், வெற்றிபெற முடியாது என தெரிந்தும் ஏன் உங்களது விக்கெட்டை இழந்தீர்கள் என்பது புரியவில்லை. ஏனெனில் நீங்கள் களத்தில் கூடுதலாக 20 பந்துகளை எதிர்கொண்டு, உங்களது சதத்தை பதிவுசெய்திருக்க வேண்டும்.

    ஏனெனில் இப்போட்டியில் நீங்கள் முடிந்தவரை விக்கெட்டை இழக்காமல் சதமடித்திருந்தால் உங்களது ரன் ரேட்டிற்கு அது மிகப்பெரும் உதவியாக அமைந்திருக்கும். அதேபோல் நீங்கள் ஆட்டமிழக்காமல் விளையாடி அடுத்த போட்டிக்கான பயிற்சியையும் இப்போட்டியில் எடுத்திருக்கலாம். அப்படி நீங்கள் செய்திருந்தால் அடுத்த போட்டியில் நீங்கள் வலைப்பயிற்சியை தவிர்த்து விட்டு நேரடியாக களமிறங்கி இருக்கலாம்.

    இவ்வாறு சேவாக் கூறினார்.

    • மொராக்கோவில் கிராண்ட் பிரிக்ஸ் ஹசன் டென்னிஸ் தொடர் நடந்து வருகிறது.
    • ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் யூகி பாம்ப்ரி ஜோடி அரையிறுதிக்கு முன்னேறியது.

    ரபாட்:

    வட ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள மொராக்கோவில் கிராண்ட் பிரிக்ஸ் ஹசன் டென்னிஸ் தொடர் நடந்து வருகிறது.

    இதில் ஆண்கள் இரட்டையர் பிரிவில் இன்று நடந்த காலிறுதி போட்டியில் இந்தியாவின் யூகி பாம்ப்ரி, பிரான்சின் அல்போனோ ஒலிவெட்டி ஜோடி, பிரேசிலின் ரபேல் மேட்டீஸ், கொலம்பியாவின் நிகோலஸ் ஜோடியுடன் மோதியது.

    இதில் யூகி பாம்ப்ரி ஜோடி 7-6 (7-5) என முதல் செட்டை கைப்பற்றியது. 2-வது செட்டை 6-7 (1-7) என இழந்தது.

    வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3வது செட்டில் யூகி பாம்ப்ரி ஜோடி 10-7 என போராடி வென்று அரையிறுதிக்கு முன்னேறியது.

    • குஜராத் அணியின் கேப்டன் சுப்மன் கில் 89 ரன்களுடன் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
    • பஞ்சாப் அணி தரப்பில் ரபாடா 2 விக்கெட்டும் ஹர்ப்ரீத் ப்ரார், ஹர்சல் படேல் ஆகியோர் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    ஐபிஎல் தொடரின் 17-வது லீக் போட்டியில் குஜராத்- பஞ்சாப் அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி குஜராத் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக சுப்மன் கில்- சகா களமிறங்கினர். இதில் சகா 11 ரன்னில் வெளியேறினார். இதனையடுது கில்லுடன் வில்லியம்சன் ஜோடி சேர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். நிதானமாக விளையாடிய வில்லியம்சன் 26 ரன்னில் அவுட் ஆனார்.

    அடுத்து வந்த தமிழக வீரர் சுதர்சன் தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடினார். அவர் 19 பந்தில் 33 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பொறுப்புடன் விளையாடிய சுப்மன் கில் அரை சதம் அடித்து அசத்தினார். அவர் கடைசி வரை அவுட் ஆகாமல் 89 ரன்கள் எடுத்திருந்தார். 

    இறுதியில் குஜராத் அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 199 ரன்கள் குவித்தது. பஞ்சாப் அணி தரப்பில் ரபாடா 2 விக்கெட்டும் ஹர்ப்ரீத் ப்ரார், ஹர்சல் படேல் ஆகியோர் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    • விராட் கோலி ஆர்.சி.பி அணிக்காக ஒரு நல்ல தொடக்கத்தை கொடுப்பார் என்று நான் நம்புகிறேன்.
    • தொடக்க சில ஓவர்களில் டு பிளஸ்சிஸ் அதிரடியாக விளையாடி ரிஸ்க் எடுக்க வேண்டும்.

    பெங்களூரு:

    ஐ.பி.எல். தொடரின் 17-வது சீசன் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இந்த சீசனில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு தடுமாற்றத்துடன் தொடங்கி உள்ளது. இதுவரை விளையாடிய 4 போட்டிகளில் 3 தோல்வி, ஒரு வெற்றியுடன் புள்ளி பட்டியலில் 8-வது இடத்தில் உள்ளது.

    குறிப்பாக இந்த சீசனில் பெரும்பாலான அணிகள் தங்களுடைய சொந்த மண்ணில் தொடர்ச்சியாக வெற்றி கண்டு வருகிறது. ஆனால் ஆர்.சி.பி. சொந்த மண்ணில் விளையாடிய கொல்கத்தா மற்றும் லக்னோவுக்கு எதிராக தோல்வியை பதிவு செய்துள்ளது.

    இதில் நேற்று முன்தினம் நடைபெற்ற லக்னோவுக்கு எதிரான போட்டியில் 182 ரன்களை இலக்காக கொண்டு சேசிங் செய்த பெங்களூருவுக்கு விராட் கோலி, கேப்டன் டு பிளிஸ்சிஸ், கேமரூன் க்ரீன், கிளன் மேக்ஸ்வெல் போன்ற நட்சத்திர வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றத்தை கொடுத்தனர். இதனால் பெங்களூரு அந்த போட்டியில் 28 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

    இந்த நிலையில் ஆர்.சி.பி. அணியின் முன்னாள் வீரரான ஏபி டிவில்லியர்ஸ், தொடர் தோல்விகளால் துவண்டு போயுள்ள பெங்களூரு அணி வெற்றி பெற அறிவுரை வழங்கி இருக்கிறார்.

    இது குறித்து அவர் கூறியிருப்பதாவது:-

    விராட் கோலி ஆர்.சி.பி அணிக்காக ஒரு நல்ல தொடக்கத்தை கொடுப்பார் என்று நான் நம்புகிறேன். அந்த அணி நடு ஓவர்களில் கொஞ்சம் தடுமாறி வருகிறது. இதனால் முதல் ஆறு ஓவர்களை விராட் கோலி வெற்றிகரமாக கடந்து நடு ஓவர்களிலும் அவர் விளையாட வேண்டும். அதுதான் தற்போது ஆர்சிபி அணிக்கு மிகவும் முக்கியம்.

    இதனால் தொடக்க சில ஓவர்களில் டு பிளஸ்சிஸ் அதிரடியாக விளையாடி ரிஸ்க் எடுக்க வேண்டும். அதன் பிறகு விராட் கோலி தம்மால் முடிந்தவரை ஆறாவது ஓவரிலிருந்து 15 வது ஓவர் வரை களத்தில் நின்று ரன் சேர்க்க வேண்டும். இவ்வாறு செய்தால் ஆர்.சி.பி அணியின் மற்ற வீரர்களும் அதிரடியாக விளையாடி ரன்களை சேர்ப்பார்கள். இப்படி நடந்தால் ஆர்.சி.பி. அணி வேற லெவலாக மாறிவிடும்.

    ஆர்சிபி அணிக்கு இது மோசமான தொடக்கம் கிடையாது. அதேசமயம் நல்ல தொடக்கமும் இல்லை. தற்போது அவர்கள் நன்றாக விளையாடி அடுத்தடுத்து இரண்டு வெற்றிகளை பெற வேண்டும். என்னைக் கேட்டால் ஆர்.சி.பி அணி சின்னசாமி மைதானத்தில் விளையாடுவதை விட வேறு மைதானத்தில் விளையாடும்போது தான் அவர்களுக்கு வெற்றி மற்றும் அதிர்ஷ்டமும் கிடைக்கின்றது. இதனால் ஆர்.சி.பி. அடுத்தடுத்து தற்போது வெளி ஊர்களில் விளையாட உள்ளதால் நிச்சயம் வெற்றி கிடைக்கும் என நம்புகிறேன்

    இவ்வாறு ஏபிடி கூறினார்.

    • குஜராத் அணி 3 போட்டிகளில் விளையாடி 2-ல் வெற்றியும் 1-ல் தோல்வி அடைந்துள்ளது.
    • பஞ்சாப் அணி 3 போட்டிகளில் விளையாடி 2-ல் தோல்வியும் 1-ல் வெற்றி பெற்றுள்ளது.

    ஐபிஎல் தொடரின் இன்றைய 17-வது லீக் போட்டியில் பஞ்சாப்- குஜராத் அணிகள் மோதுகிறது. இந்த போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேயத்தில் நடைபெறுகிறது.

    இதில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

    குஜராத் அணி 3 போட்டிகளில் விளையாடி 2-ல் வெற்றியும் 1-ல் தோல்வி அடைந்துள்ளது. பஞ்சாப் அணி 3 போட்டிகளில் விளையாடி 2-ல் தோல்வியும் 1-ல் வெற்றி பெற்றுள்ளது.

    • இந்த சீசனுடன் மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்து ரோகித் சர்மா விலகவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
    • பாண்ட்யாவின் கேப்டன்சி ரோகித் சர்மாவுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது.

    ஐபிஎல் தொடரின் 17-வது சீசன் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இந்த சீசனில் அதிகமாக பேசப்படும் விஷயமாக மும்பை இந்தியன்ஸ் உள்ளது. இதுவரை மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக இருந்த ரோகித்தை நீக்கி பாண்ட்யாவை நியமித்தது ரசிகர்களிடையே கோபத்தை ஏற்படுத்தியது.

    இதனால் மும்பை இந்தியன்ஸ் விளையாடும் மைதானங்களில் பாண்ட்யாவுக்கு எதிராகவும் ரோகித் சர்மாவுக்கு ஆதரவாகவும் ரசிகர்கள் கோஷமிட்டு வந்தனர். பாண்ட்யா தலைமையில் விளையாடிய முதல் 3 போட்டிகளிலும் மும்பை அணி தோல்வியை தழுவியது.

    இதற்கு பாண்ட்யாவின் கேப்டன்சி தான் காரணம் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் குற்றம்சாட்டி வந்தனர். முதல் போட்டியில் ரோகித் சர்மாவை ஹர்திக் பீல்டிங் நிற்க கூறியது சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. அதற்கு ரசிகர்களிடம் இருந்து எதிர்ப்பு அதிகமாகியது. இந்த போட்டியில் பாண்ட்யா மீது ரோகித் கோபத்துடன் பேசுவார் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியது.

    இந்நிலையில் இந்த சீசனுடன் மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்து ரோகித் சர்மா விலகவுள்ளதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பாண்ட்யாவின் கேப்டன்சி ரோகித் சர்மாவுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது. மேலும் போட்டியில் ஹர்திக் மற்றும் ரோகித் சர்மாவின் முடிவில் முரன்பாடு ஏற்படுவது அணிக்கு பின்னடைவாக உள்ளது. இது போட்டியில் மட்டுமல்லாமல் ஓய்வு அறையிலும் தொடர்கிறது. இதனால் மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்து ரோகித் விலக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    • இந்த தொடரில் மும்பை இந்தியன்ஸ் ஆடிய 3 போட்டிகளிலும் சூர்யகுமார் யாதவ் விளையாடவில்லை.
    • அவர் உடல் தகுதியுடன் உள்ளார் என என்சிஏ அறிக்கை வெளியிட்டுள்ளது.

    திருப்பதி:

    ஐபிஎல் 2024 கிரிக்கெட் தொடர் இந்தியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை நடந்து முடிந்த லீக் போட்டிகள் முடிவில் கொல்கத்தா முதல் இடத்திலும் ராஜஸ்தான் 2-வது இடத்திலும் உள்ளது. அதேபோல் கடைசி 2 இடங்களில் ஆர்சிபி, மும்பை அணிகள் உள்ளன.

    இந்த தொடரில் மும்பை இந்தியன்ஸ் ஆடிய 3 போட்டிகளிலும் சூர்யகுமார் யாதவ் விளையாடவில்லை. அவர் 3-வது போட்டியில் விளையாடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் உடல் நலம் சரியாகவில்லை என என்சிஏ நிராகரித்தது.

    இந்நிலையில் நேற்று அவர் உடல் தகுதியுடன் உள்ளார் என என்சிஏ அறிக்கை வெளியிட்டுள்ளது. இதனால் அவர் இனி வரும் ஆட்டங்களில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடுவார் என தெரிவிக்கப்பட்டது. மேலும் சூர்யகுமார் நாளை மும்பை இந்தியன்ஸ் அணியுடன் இணையவுள்ளார்.

    வரும் 7-ந் தேதி டெல்லி அணியுடனான போட்டியில் விளையாடுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மும்பை இந்தியன்ஸ் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

    • சென்னை சூப்பர் கிங்ஸ்-ஐதராபாத் அணிகளுக்கு இடையேயான போட்டி நாளை நடைபெற உள்ளது.
    • அம்பத்தி ராயுடு சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்களை அவரது வீட்டிற்கு விருந்துக்கு அழைத்தார்.

    திருப்பதி:

    ஐ.பி.எல்.கிரிக்கெட் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ்-ஐதராபாத் அணிகளுக்கு இடையேயான போட்டி நாளை நடைபெற உள்ளது. இதற்காக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் ஐதராபாத் புறப்பட்டு சென்றனர்.

    சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடி தற்போது ஓய்வு பெற்றுள்ள கிரிக்கெட் வீரர் அம்பத்தி ராயுடு சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்களை அவரது வீட்டிற்கு விருந்துக்கு அழைத்தார்.

    ரவீந்திர ஜடேஜா, தீபக்சாகர், சிவம் துபே, மற்றும் முகேஷ் சவுத்ரி உள்ளிட்ட சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள் அழைப்பினை ஏற்று ஐதராபாத்தில் உள்ள அம்பத்தி ராயுடு வீட்டுக்கு சென்றனர்.

    அப்போது அம்பத்தி ராயுடுவும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சீருடை அணிந்திருந்தார்.

    அவர் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்களுக்கு பிரியாணி விருந்து வைத்தார். வீரர்கள் பாரம்பரிய ஐதராபாத் பிரியாணியை ருசித்து சாப்பிட்டனர்.

    பின்னர் அவர்கள் ஒன்றாக புகைப்படம் எடுத்துக்கொண்டனர். அம்பத்தி ராயுடு ஓய்வில் இருந்தாலும் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்களுடன் தொடர்ந்து தொடர்பில் உள்ளார்.

    அவர் ஒவ்வொரு முறையும் ஐபிஎல் போட்டியின் போது ஐதராபாத் வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்களுக்கு பிரியாணி விருந்து அளித்து வருகிறார். வீரர்கள் ஒன்றாக எடுத்துக்கொண்ட படங்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

    அம்பத்தி ராயுடு வீட்டில் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்களுக்கு பிரியாணி விருந்து அளித்த காட்சி.

    • மொராக்கோவில் கிராண்ட் பிரிக்ஸ் ஹசன் டென்னிஸ் தொடர் நடந்து வருகிறது.
    • ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் யூகி பாம்ப்ரி ஜோடி காலிறுதிக்கு முன்னேறியது.

    ரபாட்:

    வட ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள மொராக்கோவில் கிராண்ட் பிரிக்ஸ் ஹசன் டென்னிஸ் தொடர் நடந்து வருகிறது.

    இதில் ஆண்கள் இரட்டையர் பிரிவில் இன்று நடந்த போட்டியில் இந்தியாவின் யூகி பாம்ப்ரி, பிரான்சின் அல்போனோ ஒலிவெட்டி ஜோடி, கிரீசின் சிட்சிபாஸ், நெதர்லாந்தின் ஸ்டீவன்ஸ் ஜோடியுடன் மோதியது.

    இதில் யூகி பாம்ப்ரி ஜோடி 6-3, 6-4 என எளிதில் கைப்பற்றி காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

    • டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி பந்து வீச்சாளர்கள் 17 வைடுகள் வீசினார்.
    • குறிப்பிட்ட நேரத்திற்குள் பந்து வீச முடியாததால், கடைசி 2 ஓவரில் 4 வீரர்கள் பவுண்டரி லைனில் நிற்க முடிந்தது.

    விசாகப்பட்டினத்தில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கெதிராக டெல்லி 106 ரன் வித்தியாசத்தில் படுதோல்வியடைந்தது. 20 ஓவர் முழுவதும் விளையாட முடியாமல் 17.2 ஓவரில் 166 ரன்னில் ஆல்அவுட் ஆனது.

    இந்த தோல்வி குறித்து அந்த அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் "மோசமான நாட்களாக அமைவதில் இந்த நாளும் ஒன்று. பந்து வீச்சாளர்கள் இன்னும் சிறப்பாக வகையில் செயல்பட்டிருக்க வேண்டும்" எனத் தெரிவித்திருந்தார்.

    ஆனால் அந்த அணியின் தலைமை பயிற்சியாளரான ரிக்கி பாண்டிங் அணியில் பல விசயங்களை ஏற்றுக் கொள்ள முடியாது எனத் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக ரிக்கி பாண்டிங் கூறியதாவது:-

    தற்போதைய நிலையில் மதிப்பீடுவது மிகவும் கடினம். போட்டியின் முதல் பாதிலேயே நான் மிகவும் சங்கடத்திற்கு உள்ளானேன். நாங்கள் ஏராளமான ரன்கள் வாரி வழங்கி விட்டோம். நாங்கள் 17 ஓவர்கள் வீசியதால் இரண்டு மணி நேரம் எடுத்துக் கொண்டது. இதனால் கடைசி இரண்டு ஓவர்களில் பவுண்டரி லைனில் நான்கு வீரர்களுடன் பீல்டிங் செய்ய வேண்டியிருந்தது.

    இந்த போட்டியில் ஏராளமான விசயங்கள் நடைபெற்றன. அவைகள் ஏற்றுக் கொள்ள முடியாதது. பல விசயங்கள் குறித்து பேச இருக்கிறோம். போட்டியில் முன்னோக்கி செல்ல அவற்றை உடனடியாக சரி செய்து கொள்ள வேண்டும். வெளிப்படையான ஆலோசனைகள் வீரர்கள் அறையில் நடப்பது உறுதி.

    இவ்வாறு ரிக்கி பாண்டிங் தெரிவித்தார்.

    ×