என் மலர்tooltip icon

    விளையாட்டு

    • நிக்கோலஸ் பூரன் லக்னோ அணியின் கேப்டனாக செயல்படுகிறார்.
    • பெயர் மூன்றாவது வீரராக குறிப்பிடப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

    ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரின் 11 ஆவது போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. லக்னோவில் நடைபெற்ற இந்த போட்டியில் கே.எல். ராகுல் கேப்டன்சி செய்யாதது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இவருக்கு பதிலாக இந்த போட்டியில் நிக்கோலஸ் பூரன் லக்னோ அணியின் கேப்டனாக செயல்படுகிறார்.

    இந்த போட்டியில் விளையாடும் கே.எல். ராகுல் இம்பேக்ட் வீரராக களமிறங்கினார். அணி வீரர்கள் படிவத்தில் இவரது பெயர் மூன்றாவது வீரராக குறிப்பிடப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. இந்த போட்டியில் கே.எல். ராகுல் ஏன் கேப்டனாக செயல்படவில்லை என்ற காரணத்தை நிக்கோலஸ் பூரன் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து பேசிய அவர், "கே.எல். ராகுல் காயமுற்று அணிக்கு திரும்பியுள்ளார். நீண்ட தொடர் என்பதால் நாங்கள் அவருக்கு சற்று ஓய்வை அளிக்க விரும்புகிறோம். ஆனால் இன்றைய போட்டியில் அவர் இம்பேக்ட் வீரராக களமிறங்குவார். அனைவரும் கிடைக்கும் வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக் கொண்டு சிறப்பாக செயல்பட வேண்டும்," என்று தெரிவித்தார்.

    • பஞ்சாப் அணி ஒரு வெற்றி, ஒரு தோல்வி பெற்றுள்ளது.
    • லக்னோ அணி முதல் போட்டியில் தோல்வி அடைந்தது.

    ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரின் 11 ஆவது லீக் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி பேட்டிங் தேர்வு செய்தது.

    முன்னதாக இந்த சீசனில் இதுவரை இரண்டு போட்டிகளில் விளையாடி உள்ள பஞ்சாப் கிங்ஸ் அணி ஒரு வெற்றி, ஒரு தோல்வியை பெற்றுள்ளது. அந்த வகையில், இந்த போட்டியின் மூலம் வெற்றி பாதைக்கு திரும்பும் முனைப்பில் களம் காண்கிறது.

    இதுவரை ஒரே போட்டியில் விளையாடிய லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி தோல்வியை தழுவி இருக்கிறது. அந்த வகையில், இன்றைய போட்டியில் வெற்றி பெறும் முனைப்பில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் களமிறங்குகிறது. 

    • திமுத் கருணாரத்னே 86 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
    • குசால் மெண்டிஸ் 93 ரன்னில் ஆட்டமிழந்து சதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார்.

    வங்காளதேசம்- இலங்கை இடையிலான 2-வது டெஸ்ட் இன்று சட்டோகிராமில் தொடங்கியது. டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங் தேர்வு செய்தது.

    நிஷான் மதுஷ்கா- திமுத் கருணாரத்னே ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 96 ரன்கள் குவித்தது. அரைசதம் அடித்த மதுஷ்கா 57 ரன்னில் வெளியேறினார்.

    அடுத்து 2-வது விக்கெட்டுக்கு கருணாரத்னே உடன் குசால் மெண்டிஸ் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடியும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இருவரும் அரைசதத்தை சதமாக மாற்றுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் திமுத் கருணாரத்னே 86 ரன்னிலும், குசால் மெண்டிஸ் 93 ரன்னிலும் ஆட்டமிழந்து சதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டனர்.

    அடுத்து வந்த மேத்யூஸ் 23 ரன்னில் வெளியேறினார். 5-வது விக்கெட்டுக்கு தினேஷ் சண்டிமல் உடன் தனஞ்ஜெயா டி செல்வா ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி முதல்நாள் ஆட்டம் முடியும் வரை மேலும் விக்கெட் இழக்காமல் பார்த்துக் கொண்டனர்.

    இலங்கை அணி முதல்நாள் ஆட்ட முடிவில் 90 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 314 ரன்கள் குவித்துள்ளது. சண்டிமல் 34 ரன்களுடனும், தனஞ்ஜெயா டி சில்வா 15 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். வங்காளதேசத்தின் அறிமுக வீரர் ஹசன் மெஹ்மூத் 2 விக்கெட் கைப்பற்றினார்.

    • ஹாரி ப்ரூக் (டெல்லி கேப்பிட்டல்ஸ்), மார்க் வுட் (எல்.எஸ்.ஜி.), ஜேசன் ராய் (கொல்கல்த்தா நைட் ரைடர்ஸ்),
    • அட்கின்சன் (கொல்கத்தா நைட் ரைடர்ஸ்), டேவிட் வில்லே (எல்.எஸ்.ஜி.) ஆகியோர் விலகியுள்ளனர்.

    ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதில் ஆஸ்திரேலியா, தென்ஆப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ், நியூசிலாந்து இங்கிலாந்து, வங்காளதேசம் உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த வீரர்கள் விளையாடி வருகின்றனர்.

    ஐபிஎல் 2024 சீசனுக்கான ஏலத்தில் எடுக்கப்படும் வீரரகள் காயம் காரணமாக சில நேரங்களில் விளையாட முடியாமல் போகலாம். சில வீரர்கள் தனிப்பட்ட காரணத்திற்கான ஐபிஎல் தொடரை புறக்கணிக்கலாம். சிலர் சர்வதேச போட்டியில் விளையாட இருப்பதால் வொர்க்லோடு காரணமாக ஐபிஎல் தொடரை தவிர்ப்பது உண்டு.

    ஆனால் இந்த சீசனில் இங்கிலாந்தைச் சேர்ந்த அதிகமான வீரர்கள் விலகியுள்ளனர். ஹாரி ப்ரூக் (டெல்லி கேப்பிட்டல்ஸ்), மார்க் வுட் (எல்.எஸ்.ஜி.), ஜேசன் ராய் (கொல்கல்த்தா நைட் ரைடர்ஸ்), கஸ் அட்கின்சன் (கொல்கத்தா நைட் ரைடர்ஸ்) ஆகியோர் ஐபிஎல் 2024 சீசனில் இருந்து ஏற்கனவே விலகியிருந்தனர்.

    ஜேசன் ராய், ஹாரி ப்ரூக் ஆகியோர் தனிப்பட்ட காரணத்திற்காக விலகுவாக அறிவித்திருந்தனர். மார்க் வுட் மற்றும் அட்கின்சன் ஆகியோரை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் விளையாட வேண்டும் என அறிவுறுத்தியிருந்தது. இந்த நிலையில்தான் தற்போது லக்னோ அணியில் இருந்து டேவிட் வில்லே தனிப்பட்ட காரணத்திற்காக விலகுவதாக அறிவித்துள்ளார்.

    பட்லர், பிலிப் சால்ட், சாம் கர்ரன், பேர்ஸ்டோ உள்ளிட்ட முன்னணி வீரர்கள் இடம் பிடித்துள்ளனர்.

    • ஜூன் 1-ந்தேதி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் தொடங்குகிறது.
    • மே 1-ந்தேதிக்குள் வீரர்கள் பட்டியலை ஐசிசி-யிடம் வழங்கப்பட வேண்டும்.

    டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வருகிற ஜூன் 1-ந்தேதி முதல் ஜூன் 29-ந்தேதி வரை வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெற இருக்கிறது.

    மே 1-ந்தேதிக்குள் இதில் விளையாட தகுதிப் பெற்றுள்ள அணிகள் 15 பேர் கொண்ட வீரர்கள் பட்டியலை ஐசிசி-க்கு அனுப்ப வேண்டும். இருந்தபோதிலும் மே 25-ந்தேதி வரை அணியில் மாற்றம் தேவை என்றால் மாற்றிக் கொள்ளலாம்.

    இந்த நிலையில் ஏப்ரல் கடைசி வாரத்தில் இந்திய அணி அறிவிக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. மே 26-ந்தேதி வரை ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் நடைபெற இருக்கிறது. ஆனால், லீக் ஆட்டம் மே 19-ந்தேதியுடன் முடிவடைகிறது.

    பிளேஆஃப் சுற்றுக்கு இடம்பெறாத அணிகளில் இடம் பிடித்துள்ள வீரர்கள் தேர்வு செய்யப்பட்டால் அவர்களை முன்னதாகவே அனுப்பு பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. பிளேஆஃப் சுற்றுகளில் விளையாடும் அணிகளில் இடம் பிடித்திருந்தால் அவர்கள் ஐபிஎல் முடிந்த உடன் செல்வார்கள்.

    ஐசிசியின் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் விளையாடுவதற்கும் இவ்வாறுதான் வீரர்கள் சென்றார்கள். தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடும் இளம் வீரர்கள் தேர்வாக வாய்ப்புள்ளது. தேர்வாளர்கள் பெரும்பாலான போட்டிகளை நேரில் சென்று பார்வையிட்டு வருகிறார்கள். சிறப்பான ஆட்டம் மற்றும் உடற்தகுதி போன்ற பல்வேறு தகுதிகள் தேர்வில் அடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியின் கேப்டனாக ரோகித் சர்மா செயல்படுவார் என பிசிசிஐ ஏற்கனவே அறிவித்துள்ளது. ஆனால் விராட் கோலி இடம் பெறுவாரா? என்பது இன்னும் கேள்விக்குறியாக உள்ளது.

    • முதல் ஒன்பது போட்டிகளிலும் சொந்த மைதானத்தில் விளையாடிய அணிகளே வெற்றி பெற்றன.
    • ஆர்சிபி இந்த சீசனில் முதன்முறையாக நேற்று சொந்த மைதானத்தில் தோல்வியை சந்தித்துள்ளது.

    ஐபிஎல் 2024 சீசன் கடந்த 22-ந்தேதி தொடங்கியது. முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ்- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. சென்னையில் நடந்த இந்த போட்டியில் சிஎஸ்கே 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    ஐபிஎல் தொடரில் விளையாடும் 10 அணிகளும் ஒரு குறிப்பிட்ட மைதானத்தை தங்களது சொந்த மைதானமாக கொண்டு விளையாடி வருகிறது.

    சென்னை அணிக்கு சேப்பாக்கம், ஆர்சிபி அணிக்கு பெங்களூரு சின்னசாமி, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு ஈடன் கார்டன், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு ஜெய்ப்பூர் மைதானம், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு ஐதராபாத் ராஜிவ் காந்தி சர்வதேச கிரிக்கெட் மைதானம்,

    எல்எஸ்ஜி-க்கு லக்னோ வாஜ்பாய் மைதானம், குஜராத் அணிக்கு அகமதாபாத் மைதானம், டெல்லிக்கு விசாகப்பட்டினம், மும்பைக்கு வான்கடே, பஞ்சாப் அணிக்கு முல்லன்புர் மைதானம் சொந்த மைதானங்களாகும்.

    சிஎஸ்கே- ஆர்சிபி போட்டியை தொடர்ந்து ராஜஸ்தான் ராயல்ஸ்- டெல்லி கேப்பிட்டல்ஸ் வரையிலான 9 போட்டிகளில் சொந்த மைதானங்களில் விளையாடிய அணிகளே வெற்றி பெற்றன. இதனால் "ஹோம் டீம் வின்" டிரெண்ட் நீடித்து வந்தது.

    இந்த நிலையில்தான் நேற்று ஆர்சிபி- கேகேஆர் இடையிலான ஆட்டம் ஆர்சிபி அணிக்கு சொந்தமான மைதானத்தில் நடைபெற்றது. இதில் வெளியில் இருந்து வந்த கேகேஆர் அணி அசத்தல் வெற்றி பெற்றது.

    இதன்மூலம் ஹோம் டீம் வின் டிரெண்ட்-க்கு கேகேஆர் முற்றுப்புள்ளி வைத்து வெளியில் இருந்து வந்த அணி (Away Team) வெற்றி என்ன டிரெண்ட்-ஐ தொடங்கி வைத்துள்ளது.

    • சுனில் நரைன் 22 பந்தில் 47 ரன்கள் விளாசினார்.
    • வெங்கடேஷ் அய்யர் 30 பந்தில் அரைசதம் அடித்து ஆட்டமிழந்தார்.

    ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி நேற்று சின்னசாமி மைதானத்தில் நடைபெற்றது. இதில் முதலில் விளையாடிய ஆர்சிபி 6 விக்கெட் இழப்பிற்கு 182 ரன்கள் எடுத்தது. பின்னர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 19 பந்துகள் மீதம் வைத்து சேஸிங் செய்தது.

    சுனில் நரைன் 22 பந்தில் 47 ரன்களும், வெங்கடேஷ் அய்யர் 30 பந்தில் அரைசதமும் அடித்தனர். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் வீரர்களால் அதிரடியாக விளையாடும்போது, விராட் கோலியால் ஏன் ஆடமுடியவில்லை. அவர் 59 பந்துகளை சந்தித்து 83 ரன்கள் அடித்துள்ளார் என விமர்சனம் எழுந்தது.

    இந்த நிலையில் 30 பந்தில் அரைசதம் விளாசி ஆட்டமிழந்த வெங்கடேஷ் அய்யர் கூறியதாவது:-

    முதல் இன்னிங்ஸ் போது ஆடுகளத்தில் இரட்டிப்பு வேகம், டபுள் பவுன்ஸ் இருந்தது. இதனால் முதல் இன்னிங்சில் பவுண்டரி அடிப்பது கடினமாக இருந்திருக்கும். ஆடுகளம் 2-வது இன்னிங்சில் பேட்டிங் செய்ய சாதகமாக இருந்தது.

    எனக்கு முதுகுப் பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளது. அது எப்படி இருக்கிறது என்று பார்க்க வேண்டும். ஸ்கேன் பரிசோதனைக்குப் பின் தெரியவரும். 2-வது இன்னிங்ஸ் போது பந்து பேட்டிற்கு சிறந்த முறையில் வந்தது. சுனில் நரைனுக்கு நன்றி சொல்லியாக வேண்டும். அவர் விரைவாக ரன்கள் சேர்த்து எங்கள் மீதான நெருக்கடியை குறைத்தார். அதன்பின் வழக்கமான முறையில் நாங்கள் போட்டியை முடித்தோம்.

    விஜயகுமார் வைசாக் பந்தை எதிர்கொள்ள கடினமாக இருந்தது. ஆனால், வேகப்பந்து வீச்சாளர்கள் பந்து வேகமாக வீசினால், அவைகள் எளிதான சிக்கசருக்கு பறந்து விடும். நாங்கள் பந்து வீசும்போது கூட இது நிகழ்ந்தது" என்றார்.

    பிலிப் சால்ட் 20 பந்தில் 30 ரன்கள் அடிக்க கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 6.3 ஓவரில் 86 ரன்கள் குவித்தது. ஷ்ரேயாஸ் அய்யர் 24 பந்தில் 39 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    • 50 ஓவர் உலகக் கோப்பை தொடருக்குப்பின் பாபர் அசாம் கேப்டன் பதவியை ராஜினாமா செய்தார்.
    • அணியின் எதிர்காலம் குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு ஆலோசனை நடத்தவில்லை என ஷாஹீன் அப்ரிடி அதிருப்தி.

    பாகிஸ்தான் அணியின் டி20 அணி கேப்டனாக இருப்பவர் ஷாஹீன் அப்ரிடி. பாகிஸ்தான் அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான திகழ்ந்து வருகிறார். கடந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற 50 ஓவர் உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தான் ஜொலிக்காததைத் தொடர்ந்து பாபர் அசாம் கேப்டன் பதவியை ராஜினாமா செய்தார்.

    இதனால் ஷாஹீன் அப்ரிடி பாகிஸ்தான் டி20 அணி கேப்டனாக நியமிக்கப்பட்டார். இவரது தலைமையில் நியூசிலாந்து அணிக்கெதிராக பாகிஸ்தான் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. இதில் பாகிஸ்தான் 1-4 எனத் தோல்வியடைந்தது.

    விரைவில டி20 உலகக் கோப்பை தொடர் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெற இருக்கிறது. டி20 உலகக் கோப்பை, டி20 அணியின் எதிர்கால திட்டம், பயிற்சியாளர் நியமனம் குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு மற்றும் பாகிஸ்தான கிரிக்கெட் போர்டு தலைவர் மோசின் நக்வி ஷாஹீன் அப்ரிடியிடம் கலந்து ஆலோசனை நடத்தவில்லை. இது ஷாஹீன் அப்ரிடிக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

    இதற்கிடையே பாபர் அசாம் உடன் ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது. இதில் ஷாஹீன் அப்ரிடி கலந்து கொள்ளவில்லை. கேப்டனாக தொடரை வைக்க விருப்பம் இல்லை என்றால் தன்னை நீக்கி விட்டு, அதற்கான காரணத்தை வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும் என ஷாஹீன் அப்ரிடி எதிர்பார்க்கிறார்.

    மேலும் அவருக்கு நெருக்கமான சிலர் கேப்டன் பதவியை ராஜினாமா செய்துவிட்டு பாகிஸ்தான கிரிக்கெட் போர்டு தொடர்பான குழப்பத்தில் இருந்து விலகி இருக்க வலியுறுத்தியுள்ளனர். இதனால் ஷாஹீன் அப்ரிடி கேப்டன் பதவியை ராஜினாமா செய்யலாம் எனத் தெரிகிறது.

    தற்போது ஷாஹீன் அப்ரிடி காகுலில் உள்ள பயிற்சி முகாமில் உள்ளார். இவர் சீனியர் வீரர்களான பாபர் அசாம், முகமது ரிஸ்வான், சதாப் கான், பஹர் சமான் ஆகியோரிடம் கேப்டன் பதவி விவகாரம் குறித்து ஆலோசனை நடத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன்பின் தனது முடிவை அறிவிக்கலாம்.

    பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் லாகூர் அணியை இரண்டு முறை சாம்பியன் பட்டம் வாங்கும் அளவிற்கு வழிநடத்தி சென்றார். ஆனால், சமீபத்தில் முடிவடைந்த தொடரில் கடைசி இடம் பிடித்தது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • நேற்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின
    • பெங்களூருவில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது

    ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரின் 10 ஆவது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. பெங்களூருவில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் பேட்டிங் ஆடிய பெங்களூரு அணி அணி 6 விக்கெட்டுகளை இழந்து 182 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக விராட் கோலி 83 ரன்கள் அடித்தார்.

    இதைத் தொடர்ந்து 183 ரன்களை துரத்திய கொல்கத்தா அணி 16.5 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 186 ரன்களை குவித்து எளிதாக வெற்றி பெற்றது.

    இதன் மூலம் கொல்கத்தா அணி விளையாடிய இரு போட்டிகளிலும் தோல்வி இன்றி வெற்றி பெற்றுள்ளது. பெங்களூரு அணி இதுவரை விளையாடிய மூன்று போட்டிகளில் ஒரு வெற்றி, இரு தோல்விகளை பெற்றிருக்கிறது.

    இந்நிலையில் போட்டி முடிந்த பிறகு, கொல்கத்தா அணியின் வீரர் ரிங்கு சிங்குக்கு விராட் கோலி பேட் பரிசளித்தார். 

    • சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பஞ்சாப் அணிகளில் இடம் பிடித்திருந்தார்.
    • பஞ்சாப் அணிக்காக 2017 சீசனில் இரண்டு போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ளார்.

    லக்கோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியில் இங்கிலாந்தின் வேகப்பந்து வீச்சு ஆல்-ரவுண்டரான டேவிட் வில்லே இடம் பிடித்திருந்தார். ஐபிஎல் தொடரின் தொடக்க போட்டிகளை அவர் தவறவிட வாய்ப்பு இருந்ததாக கருதப்பட்டது. இந்த நிலையில் தனிப்பட்ட காரணமாக தொடர் முழுவதிலும் இருந்து விலகியுள்ளார்.

    அவருக்கு மாற்று வீரராக நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளரான மாட் ஹென்ரியை தேர்வு செய்துள்ளது. 32 வயதான மாட் ஹென்ரி இதற்கு முன்னதாக சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் ஆகிய அணிகளுக்காக விளையாடியுள்ளார். ஆனால் 2017 சீசனில் பஞ்சாப் அணிக்காக இரண்டு போட்டிகளில் களம் இறங்கியுள்ளார். ஒரேயொரு விக்கெட் வீழ்த்தியுள்ளார்.

    மாட் ஹென்ரி நியூசிலாந்து அணிக்காக 25 டெஸ்ட், 82 ஒரு நாள் மற்றும் 17 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். டெஸ்ட் போட்டியில் 95 விக்கெட்டுகளும், ஒருநாள் போட்டியில் 141 விக்கெட்டுகளும், டி20-யில் 20 விக்கெட்டுகளும் வீழ்த்தியுள்ளார்.

    ஒட்டுமொத்தமாக ஹென்ரி 131 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். 151 விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ளார்.

    டேவிட் வில்லே உடன் ஹாரி ப்ரூக் (டெல்லி கேப்பிட்டல்ஸ்), மார்க் வுட் (எல்.எஸ்.ஜி.), ஜேசன் ராய் (கொல்கல்த்தா நைட் ரைடர்ஸ்), கஸ் அட்கின்சன் (கொல்கத்தா நைட் ரைடர்ஸ்) ஆகியோர் ஐபிஎல் 2024 சீசனில் இருந்து விலகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் மாட் ஹென்ரியை அடிப்படை விலையான 1.25 கோடி ரூபாய்க்கு எடுத்துள்ளது.

    • ஸ்பெயினில் சர்வதேச பாட்மின்டன் தொடர் நடைபெற்று வருகிறது.
    • இதில் இந்தியாவின் பி.வி.சிந்து காலிறுதியில் தோல்வி அடைந்தார்.

    மாட்ரிட்:

    ஸ்பெயினில் சர்வதேச பாட்மின்டன் தொடர் நடைபெற்று வருகிறது.

    இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதி சுற்றில் இந்தியாவின் பி.வி.சிந்து, தாய்லாந்தின் சுபனிட கதேதோங்கை சந்தித்தார்.

    முதல் செட்டை 26-24 என போராடி கைப்பற்றிய பி.வி.சிந்து, அடுத்த இரு செட்களை 17-21, 20-22 என இழந்து, காலிறுதியில் தோல்வி அடைந்தார்.

    • ஐ.பி.எல். டி20 தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.
    • சென்னை சூப்பர் கிங்ஸ் பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் சம பலத்துடன் திகழ்கிறது.

    விசாகப்பட்டினம்:

    17-வது ஐ.பி.எல். டி20 கிரிக்கெட் போட்டி கடந்த 22-ம் தேதி சென்னையில் தொடங்கியது. இந்தியாவின் பல்வேறு நகரங்களில் இந்த போட்டி தொடர் நடைபெற்று வருகிறது.

    இதில் பங்கேற்றுள்ள 10 அணிகளும் உள்ளூர், வெளியூர் என தலா 14 ஆட்டங்களில் மோதவேண்டும். லீக் முடிவில் புள்ளிகள் அடிப்படையில் முதல் 4 இடங்களைப் பிடிக்கும் அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறும்.

    நடப்பு சாம்பியனும், ஐ.பி.எல். கோப்பையை 5 முறை வென்ற அணியுமான சென்னை சூப்பர் கிங்ஸ் சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த தொடக்க ஆட்டத்தில் பெங்களூரு அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் எளிதில் வென்றது . கடந்த 26-ம் தேதி சென்னையில் நடைபெற்ற 2-வது போட்டி யில் குஜராத்தை 63 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

    ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 3-வது ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்சை நாளை (31-ம் தேதி) எதிர்கொள்கிறது. இந்த போட்டி ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இரவு 7.30 மணிக்கு நடக்கிறது.

    டெல்லி அணியையும் வீழ்த்தி ஹாட்ரிக் வெற்றி பெறும் ஆர்வத்தில் சி.எஸ்.கே. உள்ளது. முதல் 2 ஆட்டங்களிலும் உள்ளூரில் ஆடிய அந்த அணி தற்போது வெளி ஆடுகளத்தில் போட்டியைச் சந்திக்கிறது.

    சென்னை சூப்பர் கிங்ஸ் பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் சம பலத்துடன் திகழ்கிறது. பேட்டிங்கில் ஷிவம் துபே, ரச்சின் ரவீந்திரா, கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோரும், பந்து வீச்சில் முஸ்டாபிசுர் ரகுமான், தீபக் சாஹர் ஆகியோரும் நல்ல நிலையில் உள்ளனர்.

    புதுமுக வீரர் சமீர் ரிஸ்வி மீது அதிக எதிர்பார்ப்பு இருக்கிறது. அவரை முன்னதாகவே களம் இறக்கி வாய்ப்பு அளிக்கலாம்.

    ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் முதல் போட்டியில் பஞ்சாப்பிடமும் (4 விக்கெட்), 2-வது ஆட்டத்தில் ராஜஸ்தானிடமும் (12 ரன்) தோற்றது.

    முதல் வெற்றியைப் பெறும் வேட்கையில் அந்த அணி இருக்கிறது. முதல் 2 போட்டியிலும் டெல்லி அதிரடியாக ஆடவில்லை. அந்த அணியின் உள்ளூர் மைதானமாக விசாகப்பட்டினம் உள்ளது.

    இரு அணிகளும் ஐ.பி.எல். சீசன்களில் இதுவரை 29 முறை மோதியுள்ளன. இதில் சி.எஸ். கே. 19-ல், டெல்லி 10-ல் வெற்றி பெற்றுள்ளன.

    முன்னதாக நாளை மாலை 3.30 மணிக்கு அகமதாபாத்தில் நடைபெறும் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதுகின்றன. இரு அணிகளுமே 2-வது வெற்றிக்காக காத்திருக்கின்றன.

    ×