search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    லக்னோ அணியில் நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர்
    X

    லக்னோ அணியில் நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர்

    • சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பஞ்சாப் அணிகளில் இடம் பிடித்திருந்தார்.
    • பஞ்சாப் அணிக்காக 2017 சீசனில் இரண்டு போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ளார்.

    லக்கோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியில் இங்கிலாந்தின் வேகப்பந்து வீச்சு ஆல்-ரவுண்டரான டேவிட் வில்லே இடம் பிடித்திருந்தார். ஐபிஎல் தொடரின் தொடக்க போட்டிகளை அவர் தவறவிட வாய்ப்பு இருந்ததாக கருதப்பட்டது. இந்த நிலையில் தனிப்பட்ட காரணமாக தொடர் முழுவதிலும் இருந்து விலகியுள்ளார்.

    அவருக்கு மாற்று வீரராக நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளரான மாட் ஹென்ரியை தேர்வு செய்துள்ளது. 32 வயதான மாட் ஹென்ரி இதற்கு முன்னதாக சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் ஆகிய அணிகளுக்காக விளையாடியுள்ளார். ஆனால் 2017 சீசனில் பஞ்சாப் அணிக்காக இரண்டு போட்டிகளில் களம் இறங்கியுள்ளார். ஒரேயொரு விக்கெட் வீழ்த்தியுள்ளார்.

    மாட் ஹென்ரி நியூசிலாந்து அணிக்காக 25 டெஸ்ட், 82 ஒரு நாள் மற்றும் 17 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். டெஸ்ட் போட்டியில் 95 விக்கெட்டுகளும், ஒருநாள் போட்டியில் 141 விக்கெட்டுகளும், டி20-யில் 20 விக்கெட்டுகளும் வீழ்த்தியுள்ளார்.

    ஒட்டுமொத்தமாக ஹென்ரி 131 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். 151 விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ளார்.

    டேவிட் வில்லே உடன் ஹாரி ப்ரூக் (டெல்லி கேப்பிட்டல்ஸ்), மார்க் வுட் (எல்.எஸ்.ஜி.), ஜேசன் ராய் (கொல்கல்த்தா நைட் ரைடர்ஸ்), கஸ் அட்கின்சன் (கொல்கத்தா நைட் ரைடர்ஸ்) ஆகியோர் ஐபிஎல் 2024 சீசனில் இருந்து விலகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் மாட் ஹென்ரியை அடிப்படை விலையான 1.25 கோடி ரூபாய்க்கு எடுத்துள்ளது.

    Next Story
    ×