என் மலர்
விளையாட்டு
- ஐ.பி.எல். டி20 தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.
- சென்னை சூப்பர் கிங்ஸ் பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் சம பலத்துடன் திகழ்கிறது.
விசாகப்பட்டினம்:
17-வது ஐ.பி.எல். டி20 கிரிக்கெட் போட்டி கடந்த 22-ம் தேதி சென்னையில் தொடங்கியது. இந்தியாவின் பல்வேறு நகரங்களில் இந்த போட்டி தொடர் நடைபெற்று வருகிறது.
இதில் பங்கேற்றுள்ள 10 அணிகளும் உள்ளூர், வெளியூர் என தலா 14 ஆட்டங்களில் மோதவேண்டும். லீக் முடிவில் புள்ளிகள் அடிப்படையில் முதல் 4 இடங்களைப் பிடிக்கும் அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறும்.
நடப்பு சாம்பியனும், ஐ.பி.எல். கோப்பையை 5 முறை வென்ற அணியுமான சென்னை சூப்பர் கிங்ஸ் சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த தொடக்க ஆட்டத்தில் பெங்களூரு அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் எளிதில் வென்றது . கடந்த 26-ம் தேதி சென்னையில் நடைபெற்ற 2-வது போட்டி யில் குஜராத்தை 63 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 3-வது ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்சை நாளை (31-ம் தேதி) எதிர்கொள்கிறது. இந்த போட்டி ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இரவு 7.30 மணிக்கு நடக்கிறது.
டெல்லி அணியையும் வீழ்த்தி ஹாட்ரிக் வெற்றி பெறும் ஆர்வத்தில் சி.எஸ்.கே. உள்ளது. முதல் 2 ஆட்டங்களிலும் உள்ளூரில் ஆடிய அந்த அணி தற்போது வெளி ஆடுகளத்தில் போட்டியைச் சந்திக்கிறது.
சென்னை சூப்பர் கிங்ஸ் பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் சம பலத்துடன் திகழ்கிறது. பேட்டிங்கில் ஷிவம் துபே, ரச்சின் ரவீந்திரா, கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோரும், பந்து வீச்சில் முஸ்டாபிசுர் ரகுமான், தீபக் சாஹர் ஆகியோரும் நல்ல நிலையில் உள்ளனர்.
புதுமுக வீரர் சமீர் ரிஸ்வி மீது அதிக எதிர்பார்ப்பு இருக்கிறது. அவரை முன்னதாகவே களம் இறக்கி வாய்ப்பு அளிக்கலாம்.
ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் முதல் போட்டியில் பஞ்சாப்பிடமும் (4 விக்கெட்), 2-வது ஆட்டத்தில் ராஜஸ்தானிடமும் (12 ரன்) தோற்றது.
முதல் வெற்றியைப் பெறும் வேட்கையில் அந்த அணி இருக்கிறது. முதல் 2 போட்டியிலும் டெல்லி அதிரடியாக ஆடவில்லை. அந்த அணியின் உள்ளூர் மைதானமாக விசாகப்பட்டினம் உள்ளது.
இரு அணிகளும் ஐ.பி.எல். சீசன்களில் இதுவரை 29 முறை மோதியுள்ளன. இதில் சி.எஸ். கே. 19-ல், டெல்லி 10-ல் வெற்றி பெற்றுள்ளன.
முன்னதாக நாளை மாலை 3.30 மணிக்கு அகமதாபாத்தில் நடைபெறும் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதுகின்றன. இரு அணிகளுமே 2-வது வெற்றிக்காக காத்திருக்கின்றன.
- மியாமி ஓபன் டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது.
- இன்று நடந்த அரையிறுதியில் டிமிட்ரோவ் வெற்றி பெற்றார்.
வாஷிங்டன்:
மியாமி ஓபன் டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது.
இன்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவு 2-வது அரையிறுதியில் பல்கேரியாவின் கிரிகோர் டிமிட்ரோவ், ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வரேவுடன் மோதினார்.
இதில் டிமிட்ரோவ் 6-4 என முதல் செட்டை கைப்பற்றினார். 2வது செட்டை ஸ்வரேவ் போராடி 7-6 (7-4) என வென்றார். வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3-வது செட்டை டிமிட்ரோவ் 6-4 என கைப்பற்றி அசத்தினார். இதன்மூலம் முன்னணி வீரரான ஸ்வரேவ் அதிர்ச்சி தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார்.
- பெங்களூருவில் நேற்று நடந்த ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் வெற்றி பெற்றது.
- இதன்மூலம் உள்ளூர் அணியின் வெற்றிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.
பெங்களூரு:
ஐ.பி.எல். போட்டியில் பெங்களூருவில் நேற்று நடந்த ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்சிடம் தோற்றது. இதன்மூலம் உள்ளூர் அணியின் வெற்றிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. கொல்கத்தா 2-வது வெற்றியை பெற்றது. பெங்களூரு அணி 2-வது தோல்வியை தழுவியது.
பெங்களூரு அணி தொடக்க வீரரும், உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவருமான விராட் கோலி நேற்றும் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 59 பந்துகளில் 4 பவுண்டரி, 4 சிக்சருடன் 83 ரன் எடுத்தார். பஞ்சாப்புக்கு எதிரான ஆட்டத்திலும் அவர் அரை சதம் எடுத்திருந்தார். சென்னைக்கு எதிராக மட்டுமே 21 ரன்னில் வெளியேறினார்.
இந்நிலையில், நேற்றைய ஆட்டத்தில் 4 சிக்சர்கள் அடித்தன் மூலம் விராட் கோலி ஐ.பி.எல். போட்டியில் அதிக சிக்சர்கள் அடித்த வீரர்களில் 4-வது இடத்தை பிடித்தார். அவர் டோனியை முந்தினார்.
விராட் கோலி 232 இன்னிங்சில் 241 சிக்சர்கள் அடித்துள்ளார். டோனி 218 இன்னிங்சில் 239 சிக்சர்கள் அடித்துள்ளார்.
கிறிஸ் கெய்ல் 357 சிக்சர்களுடன் முதல் இடத்திலும், ரோகித் சர்மா 261 சிக்சர்களுடன் 2-வது இடத்திலும், டிவில்லியர்ஸ் 251 சிக்சர்களுடன் 3-வது இடத்திலும் உள்ளனர். விராட் கோலி, டோனி 4-வது மற்றும் 5-வது இடங்களில் உள்ளனர்.
- மியாமி ஓபன் டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது.
- இன்று நடந்த அரையிறுதியில் மெத்வதேவ் தோல்வி அடைந்தார்.
வாஷிங்டன்:
மியாமி ஓபன் டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இன்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதி சுற்றில் ரஷியாவின் டேனில் மெத்வதேவ், இத்தாலியின் ஜானிக் சின்னருடன் மோதினார்.
இதில் சின்னர் 6-1, 6-2 என்ற நேர் செட்களில் எளிதில் கைப்பற்றி இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார். இதன்மூலம் முன்னணி வீரரான மெத்வதேவ் அதிர்ச்சி தோல்வி அடைந்து வெளியேறினார்.
- இந்த சம்பவம் இணையத்தில் பேசுபொருளாக மாறி இருக்கிறது.
- சுனில் கவாஸ்கர் டைமிங்கில் கொடுத்த ரியாக்ஷன் வைரல்.
ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் இடையிலான போட்டியின் போது விராட் கோலி மற்றும் கவுதம் கம்பீர் கட்டியணைத்து கொண்ட சம்பவம் மைதானத்தில் மயான அமைதியை ஏற்படுத்தியது. மேலும் இந்த சம்பவம் இணையத்தில் பேசுபொருளாக மாறி இருக்கிறது.
போட்டியின் போது களத்திற்கு வந்த கம்பீர் கோலியை கட்டியணைத்தார். இது தொடர்பான வீடியோவை தனியார் நிறுவனம் மீண்டும் ஒளிபரப்பியது. அப்போது வீடியோவை பார்த்த சுனில் கவாஸ்கர் டைமிங்கில் கொடுத்த ரியாக்ஷன் வைரலாகி வருகிறது.
இந்த வீடியோவை பார்த்த ரவி சாஸ்திரி, "கோலி, கம்பீர் கட்டியணைத்துக் கொண்டது கே.கே.ஆர். அணிக்கு ஃபேர்பிளே (Fairplay) விருது கிடைக்க உதவியாக இருக்கும்," என்று தெரிவித்தார். இதை கேட்ட சுனில் கவாஸ்கர், "ஃபேர்பிளே மட்டுமல்ல ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்," என்று தெரிவித்தார்.
விராட் கோலி மற்றும் கவுதம் கம்பீர் கட்டியணைத்துக் கொண்ட வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
- ரசல், ஹர்ஷித் ரானா தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
- பெங்களூரு அணியின் வைஷாக் 1 விக்கெட் வீழ்த்தினார்.
ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரின் 10 ஆவது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன. பெங்களூருவில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி பேட்டிங் ஆடிய பெங்களூரு அணிக்கு விராட் கோலி நல்ல துவக்கம் கொடுத்தார். இவருடன் துவக்க வீரராக களமிறங்கிய கேப்டன் பாப் டு பிளெசிஸ் 8 ரன்களில் ஆட்டமிழந்தார். போட்டி முடிவில் பெங்களூரு அணி 6 விக்கெட்டுகளை இழந்து 182 ரன்களை குவித்தது.

இதைத் தொடர்ந்து 183 ரன்களை துரத்திய கொல்கத்தா அணிக்கு, பில் சால்ட் மற்றும் சுனில் நரைன் சிறப்பான துவக்கத்தை கொடுத்தனர். இருவரும் முறையே 30 மற்றும் 47 ரன்களை குவித்து ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த வெங்கடேஷ் அய்யர் மற்றும் ஸ்ரேயஸ் அய்யர் சிறப்பாக ஆடி ரன்களை குவித்தனர். அதிரடியாக ஆடிய வெங்கடேஷ் அய்யர் 30 பந்துகளில் அரைசதம் அடித்து ஆட்டமிழந்தார்.
ஸ்ரேயஸ் அய்யர் 24 பந்துகளில் 39 ரன்களை குவிக்க கொல்கத்தா அணி 16.5 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 186 ரன்களை குவித்து எளிதாக வெற்றி பெற்றது. பெங்களூரு சார்பில் வைசாக், யாஷ் தயால் மற்றும் மயான்க் டாகர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
இதன் மூலம் கொல்கத்தா அணி விளையாடிய இரு போட்டிகளிலும் தோல்வி இன்றி வெற்றி பெற்றுள்ளது. பெங்களூரு அணி இதுவரை விளையாடிய மூன்று போட்டிகளில் ஒரு வெற்றி, இரு தோல்விகளை பெற்றிருக்கிறது.
- விராட் கோலி சிறப்பாக ஆடி 83 ரன்களை குவித்தார்.
- ரசல், ஹர்ஷித் ரானா தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரின் 10 ஆவது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன. பெங்களூருவில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி பேட்டிங் ஆடிய பெங்களூரு அணிக்கு விராட் கோலி நல்ல துவக்கம் கொடுத்தார். இவருடன் துவக்க வீரராக களமிறங்கிய கேப்டன் பாப் டு பிளெசிஸ் 8 ரன்களில் ஆட்டமிழந்தார். இவரை தொடர்ந்து களமிறங்கிய கேமரூன் கிரீன் 21 பந்துகளில் 33 ரன்களை விளாசினார். இதில் நான்கு பவுண்டரிகளும், இரண்டு சிக்சர்களும் அடங்கும்.
பிறகு வந்த கிளென் மேக்ஸ்வெல் 19 பந்துகளில் 28 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார். போட்டி முடிவில் பெங்களூரு அணி 6 விக்கெட்டுகளை இழந்து 182 ரன்களை குவித்தது. பெங்களூரு அணியின் விராட் கோலி 83 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.
கொல்கத்தா அணி சார்பில் ரசல் மற்றும் ஹர்ஷித் ரானா தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். சுனில் நரைன் ஒரு விக்கெட் வீழ்த்தினார்.
- டாஸ் வென்ற கொல்கத்தா முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.
- பெங்களூரு அணியின் விராட் கோலி அதிரடியாக ஆடி அரை சதம் கடந்தார்.
பெங்களூரு:
ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரின் 10-வது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன.
பெங்களூருவில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, ஆர்.சி.பி. அணி முதலில் பேட்டிங் செய்தது. டூ பிளசிஸ் 8 ரன்னில் அவுட்டானார். அடுத்து இறங்கிய கேமரூன் விராட் கோலியுடன் ஜோடி சேர்ந்தார். இருவரும் அதிரடியாக ஆட, அணியின் ரன் வேகமும் அதிகரித்தது.
2வது விக்கெட்டுக்கு 65 ரன்கள் சேர்த்த நிலையில், கேமரூன் 33 ரன்னில் வெளியேறினார். பொறுப்புடன் ஆடிய விராட் கோலி அரை சதம் கடந்து அசத்தினார்.
- இன்றைய போட்டி பெங்களூருவில் நடைபெறுகிறது.
- பெங்களூரு அணி ஒரு போட்டியில் தோல்வி அடைந்துள்ளது.
ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரின் 10 ஆவது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன. பெங்களூருவில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
இந்த தொடரில் கொல்கத்தா அணி விளையாடிய ஒரு போட்டியில் வெற்றி பெற்றுள்ளது. பெங்களூரு அணி இரண்டு போட்டிகளில் ஒரு வெற்றி, ஒரு தோல்வி பெற்றுள்ளது. அதன்படி இன்றைய போட்டியில் வெற்றி பெறும் முனைப்பில் பெங்களூரு அணி களமிறங்குகிறது.
கொல்கத்தா அணி தொடர் வெற்றியை பெறும் நோக்கில் களம் காண்கிறது.
- இரு அணிகளும் பலமுறை களம் கண்டுள்ளன.
- கவுதம் கம்பீரின் வீடியோவை பகிர்ந்து இருக்கிறது.
ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரின் இன்றைய போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன. ஐ.பி.எல். தொடரில் நடைபெற்ற முதல் போட்டியில் இந்த இரு அணிகளும் மோதின. அதில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வெற்றி பெற்றது. இதன் பிறகு, இரு அணிகளும் பலமுறை களம் கண்டுள்ளன.
அந்த வகையில், இன்று நடைபெறும் போட்டிக்கு முன்பு ஐ.பி.எல். போட்டிகளை தொலைகாட்சியில் ஒளிபரப்பும் தனியார் சேனல் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் அக்கவுண்டில் கவுதம் கம்பீரின் வீடியோ ஒன்றை பகிர்ந்து இருக்கிறது. அந்த வீடியோவில் ஆர்.சி.பி. குறித்து கவுதம் கம்பீர் தெரிவித்த கருத்துக்கள் இடம்பெற்றுள்ளன.

"ஒவ்வொரு முறையும் நான் வீழ்த்த விரும்பும் ஒரே அணி, கனவிலும் நான் கட்டாயம் ஜெயிக்க விரும்பும் அணி என்றால் அது ஆர்.சி.பி. தான். அதிகளவு முக்கிய வீரர்கள் அடங்கிய இரண்டாவது அணி, அதிக பகட்டு கொண்ட அணி- க்ரிஸ் கெயில், விராட் கோலி, ஏ.பி. டி வில்லியர்ஸ் போன்ற வீரர்களை கொண்ட அணி."
"உண்மையில் எதையும் வென்றிடாத அணி, எனினும் எல்லாவற்றிலும் வெற்றி பெற்றதாக நினைக்கும் அணி. அத்தகைய மனநிலை. அதை மட்டும்தான் என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. கொல்கத்தா அணி இதுவரை பெற்ற மூன்று தரமான வெற்றிகள் அனைத்தும் ஆர்.சி.பி. அணிக்கு எதிராகவே அமைந்துள்ளது. எனது கிரிக்கெட் வாழ்க்கையில் நான் செய்ய விரும்பும் ஒரே விஷயம் களத்திற்கு சென்று ஆர்.சி.பி.யை வீழ்த்த வேண்டும் என்பது மட்டும் தான்," என கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.
- இங்கிலாந்தில் நடைபெறும் இங்கிலீஷ் பிரீமியர் லீக் தொடரில் மொத்தம் 20 அணிகள் பங்கேற்கும்.
- லீக் போட்டிகளில் முடிவில் அதிக புள்ளிகள் பெறும் அணி சாம்பியன் பட்டத்தை வெல்லும்.
லண்டன்:
இங்கிலாந்தில் உள்ள முன்னணி கால்பந்து கிளப் அணிகளுக்கு இடையில் ஆண்டுதோறும் ஆகஸ்ட் மாதம் முதல் மே மாதம் வரை நடைபெறும் தொடர் இங்கிலீஷ் பிரீமியர் லீக் தொடர் ஆகும். இதில் 20 அணிகள் பங்கேற்கும்.
ஒவ்வொரு அணிகளும் மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோதவேண்டும். ஒரு ஆட்டம் சொந்த மைதானத்திலும், மற்றொரு ஆட்டம் எதிரணியின் சொந்த மைதானத்திலும் நடக்கும். லீக் போட்டிகளில் முடிவில் அதிக புள்ளிகள் பெறும் அணி சாம்பியன் பட்டத்தை வெல்லும்.
இந்நிலையில், மான்செஸ்டர் சிட்டி மற்றும் அர்செனல் அணிகள் மோதும் போட்டி வரும் ஞாயிற்றுக்கிழமை இரவு 9 மணிக்கு நடைபெற உள்ளது. இந்தப் போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சான்ல் ஒளிபரப்புகிறது.
ரசிகர்களால் எதிர்பார்க்கப்படும் இந்தப் போட்டி நாளை மறுதினம் நடைபெறுகிறது. இத தவற விட்டுடாதீங்க என விளம்பர பலகைகளும் வைக்கப்பட்டுள்ளன. இதுதொடர்பாக ரசிகர்கள் பலர் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வருகின்றனர்.
- காயத்திலிருந்து குணமடைந்து பயிற்சி மேற்கொண்டு வரும் அவர் ஏற்கனவே 2 போட்டிகளை தவறவிட்டார்.
- அந்த 2 போட்டியிலும் மும்பை அணி தோல்வியை தழுவியுள்ளது.
மும்பை:
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரும், டி20 தரவரிசையில் நம்பர் 1 பேட்ஸ்மேனுமான சூர்யகுமார் யாதவ் ஐ.பி.எல். தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம்பெற்றுள்ளார்.
காயத்திலிருந்து குணமடைந்து பயிற்சி மேற்கொண்டு வரும் அவர் ஏற்கனவே 2 போட்டிகளை தவறவிட்டார். அந்த 2 போட்டியிலும் மும்பை அணி தோல்வியை தழுவியுள்ளது. இதனால் மும்பை ரசிகர்கள் அவர் எப்போது களத்திற்கு திரும்புவார் என்று ஏக்கத்துடன் காத்திருக்கின்றனர். இந்நிலையில் சூர்யகுமார் யாதவ் குறித்த தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.
சூர்யகுமார் யாதவ் சமீபத்தில் குடலிறக்க அறுவை சிகிச்சை செய்து கொண்டார். அவர் தற்போது பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் பயிற்சி மேற்கொண்டு வருகிறார். அவர் போட்டிக்கான முழு உடல் தகுதியை எட்டாததால் மேலும் சில ஐ.பி.எல். ஆட்டங்களை தவறவிட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.






