என் மலர்
விளையாட்டு
- காயத்திலிருந்து குணமடைந்து பயிற்சி மேற்கொண்டு வரும் அவர் ஏற்கனவே 2 போட்டிகளை தவறவிட்டார்.
- அந்த 2 போட்டியிலும் மும்பை அணி தோல்வியை தழுவியுள்ளது.
மும்பை:
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரும், டி20 தரவரிசையில் நம்பர் 1 பேட்ஸ்மேனுமான சூர்யகுமார் யாதவ் ஐ.பி.எல். தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம்பெற்றுள்ளார்.
காயத்திலிருந்து குணமடைந்து பயிற்சி மேற்கொண்டு வரும் அவர் ஏற்கனவே 2 போட்டிகளை தவறவிட்டார். அந்த 2 போட்டியிலும் மும்பை அணி தோல்வியை தழுவியுள்ளது. இதனால் மும்பை ரசிகர்கள் அவர் எப்போது களத்திற்கு திரும்புவார் என்று ஏக்கத்துடன் காத்திருக்கின்றனர். இந்நிலையில் சூர்யகுமார் யாதவ் குறித்த தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.
சூர்யகுமார் யாதவ் சமீபத்தில் குடலிறக்க அறுவை சிகிச்சை செய்து கொண்டார். அவர் தற்போது பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் பயிற்சி மேற்கொண்டு வருகிறார். அவர் போட்டிக்கான முழு உடல் தகுதியை எட்டாததால் மேலும் சில ஐ.பி.எல். ஆட்டங்களை தவறவிட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
- ஜோஸ் பட்லர், ட்ரெண்ட் போல்ட், சிம்raன் ஹெட்மயர் ஆகிய 3 வெளிநாட்டு வீரர்களை மட்டுமே ராஜஸ்தான் தங்களுடைய பிளேயிங் லெவனில் தேர்ந்தெடுத்தது.
- சிம்ரன் ஹெட்மயருக்கு பதிலாக தென் ஆப்பிரிக்காவின் நன்ரே பர்கரை இம்பேக்ட் வீரராக ராஜஸ்தான் பயன்படுத்தியது.
ஐபிஎல் தொடரின் 9-வது லீக் போட்டியில் டெல்லி- ராஜஸ்தான் அணிகள் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் 185 ரன்கள் குவித்தது. அதனை தொடர்ந்து விளையாடிய டெல்லி அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுகளை இழந்து 173 ரன்கள் எடுத்தது. இதனால் ராஜஸ்தான் அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
முன்னதாக இந்த போட்டியில் ஜோஸ் பட்லர், ட்ரெண்ட் போல்ட், சிம்ரோன் ஹெட்மயர் ஆகிய 3 வெளிநாட்டு வீரர்களை மட்டுமே ராஜஸ்தான் தங்களுடைய பிளேயிங் லெவனில் தேர்ந்தெடுத்தது. அதைத் தொடர்ந்து பேட்டிங் இன்னிங்ஸ் முடித்ததும் வெஸ்ட் இண்டீஸின் சிம்ரன் ஹெட்மயருக்கு பதிலாக தென் ஆப்பிரிக்காவின் நன்ரே பர்கரை இம்பேக்ட் வீரராக ராஜஸ்தான் பயன்படுத்தியது.
ஆனால் முதல் ஓவரின் 5-வது பந்தில் முடிவில் களத்தில் இருந்த இந்திய வீரர் சுபம் துபேவுக்கு பதிலாக வெஸ்ட் இண்டீஸ் வீரர் ரோவ்மன் போவலை சப்ஸ்டிடியூட் வீரராக ஃபீல்டிங் செய்ய வருமாறு ராஜஸ்தான் கேப்டன் சஞ்சு சாம்சன் அழைத்தார். அதனால் அதிருப்தியடைந்த டெல்லி அணியின் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் இது குறித்து 4-வது நடுவரிடம் கேள்வி எழுப்பினார்.
குறிப்பாக பிளேயிங் லெவனில் 3 வெளிநாட்டு வீரர்கள் மட்டுமே தேர்வு செய்யப்பட்ட நிலையில் இப்போது மட்டும் எப்படி 4 வெளிநாட்டு வீரர்கள் ஃபீல்டிங் செய்ய முடியும்? என்று பாண்டிங் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளிப்பதற்காக 4-வது அம்பையர் வேகமாக ஓடி வந்தார். அவரிடம் டெல்லி அணியின் இயக்குனர் சௌரவ் கங்குலியும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அதற்கு சஞ்சு சாம்சன் விதிமுறைக்கு உட்பட்டு தான் ரோவ்மன் போவலை ஃபீல்டிங் செய்ய வைத்தார் என்பதை அவர்களிடம் 4-வது நடுவர் விதிமுறை தாளை காண்பித்து விளக்கினார்.
அதாவது 1.2.6 விதிமுறைப்படி பிளேயிங் லெவனில் நான்குக்கும் குறைவான வெளிநாட்டு வீரர்கள் தேர்வு செய்யப்பட்டிருக்கும் பட்சத்தில் வேறொரு வெளிநாட்டு வீரர் மற்றொரு எந்த வீரருக்கு பதிலாகவும் சப்ஸ்டியூட் வீரராக செயல்பட முடியும். எனவே அந்த விதிமுறைப்படி ராஜஸ்தான் அணி எந்த தவறும் செய்யவில்லை என்று 4-வது நடுவர் விளக்கி விளக்கம் கொடுத்ததால் பாண்டிங் மற்றும் கங்குலி ஆகியோர் அமைதியானார்கள்.
- அரை இறுதியில் எலெனா ரைபகினா (கஜகிஸ்தான்) அசரென்கா (பெலாரஸ்) மோதினர்.
- மற்றொரு அரை இறுதியில் டேனியல் காலின்ஸ் (அமெரிக்கா)-அலெக் சாண்ட்ரோவா (ரஷியா) மோதினர்.
மியாமி:
மியாமி ஓபன் டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவு அரை இறுதியில் எலெனா ரைபகினா (கஜகிஸ்தான்) அசரென்கா (பெலாரஸ்) மோதினர்.
இதில் ரைபகினா 6-4, 0-6, 7-6 (7-2) என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றார். மற்றொரு அரை இறுதியில் டேனியல் காலின்ஸ் (அமெரிக்கா)-அலெக் சாண்ட்ரோவா (ரஷியா) மோதினர்.
இதில் காலின்ஸ் 6-3, 6-2 என்ற நேர் செட் கணக்கில் வென்று இறுதிப் போட்டிக்கு முன்னேறினர். 31-ந் தேதி நடைபெறும் இறுதிப் போட்டியில் ரைபகினா-காலின்ஸ் பலப்பரீட்சை நடத்து கிறார்கள்.
நாளை நடக்கும் ஆண்கள் ஒற்றையர் பிரிவு அரை இறுதி ஆட்டங்களில் மெட்வதேவ் (ரஷியா)-ஜானிக் சினெர் (இத்தாலி) , ஸ்வெரேவ் (ஜெர்மனி)-டிமிட்ரோவ் (பல்கேரியா) மோதுகிறார்கள்.
- நார்ஜேவை கடைசி கட்டத்தில் பந்து வீச வைக்க விரும்பினோம். ஆனால் அது எங்களுக்கு நன்றாக அமையவில்லை.
- இந்த தோல்வி நிச்சயமாக ஏமாற்றம் அளிக்கிறது.
ஜெய்ப்பூர்:
17-வது ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நேற்று ஜெய்ப்பூரில் நடந்த ஆட்டத்தில் டெல்லியை 12 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் தோற்கடித்தது.
முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 185 ரன்கள் எடுத்தது. ரியான் பராக் 45 பந்தில் 85 ரன்கள் எடுத்தார்.
பின்னர் விளையாடிய டெல்லி அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 173 ரன்களே எடுத்தது. கடைசி ஓவரில் வெற்றிக்கு 17 ரன்கள் தேவைப்பட்டது. அந்த ஓவரை வீசிய ஆவேஷ்கான் 4 ரன்கள் மட்டுமே விட்டு கொடுத்தார்.
ராஜஸ்தான் அணி 2-வது வெற்றியை பெற்றது. டெல்லி அணி 2-வது தோல்வியை சந்தித்தது.
தோல்வி குறித்து டெல்லி அணி கேப்டன் ரிஷப் பண்ட் கூறியதாவது:-
இந்த தோல்வி நிச்சயமாக ஏமாற்றம் அளிக்கிறது. 16 ஓவர்கள் வரை பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டனர். ஆனால் கடைசி கட்டத்தில் நிறைய ரன்களை விட்டு கொடுத்து விட்டோம். ராஜஸ்தான் பேட்ஸ்மேன்கள் சிறப்பாக செயல்பட்டனர்.
அடுத்த போட்டியில் நாங்கள் சிறப்பாக செயல்படுவோம் என்று நம்புகிறேன். பேட்டிங்கில் வார்னர்-மிட்செல் மார்ஷ் நல்ல அடித்தளம் அமைத்து கொடுத்தனர். ஆனால் அதை பயன்படுத்தி கொள்ள தவறி விட்டோம்.
நார்ஜேவை கடைசி கட்டத்தில் பந்து வீச வைக்க விரும்பினோம். ஆனால் அது எங்களுக்கு நன்றாக அமையவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
நார்ஜே வீசிய கடைசி ஓவரில் ரியான்பராக் 2 சிக்சர், 3 பவுண்டரி உள்பட 25 ரன்கள் எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- போபண்ணா ஜோடி இறுதிப் போட்டியில் இவான் டோடிக் (குரோசியா)- ஆஸ்டின் கிராஜிசெக் (அமெரிக்கா) ஜோடியை எதிர்கொள்கிறது.
- 14-வது ஏடிபி மாஸ்டர்ஸ் 1000 இறுதிப் போட்டியாகும்.
மியாமி ஓபனில் முதல்நிலை ஜோடியான இந்தியாவின் ரோகன் போபண்ணா- ஆஸ்திரேலியாவின் எப்டன் ஜோடி, மார்சன் கிரானோலர்ஸ் (ஸ்பெயின்)- ஹொராசியோ ஜெபலாஸ் (அர்ஜென்டியா) ஜோடியை எதிர்கொண்டது. இதில் போபண்ணா ஜோடி 6-1, 6-4 என நேர்செட் கணக்கில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.
துபாய் சாம்பியன்ஷிப் காலிறுதியில் தோல்வி, இந்தியன் வெல்ஸ் மாஸ்டர்ஸ் தொடரில் ரவுண்ட் ஆஃப் 32-ல் வெளியேற்றம் ஆகியவை காரணமாக இரட்டையர் பிரிவில் போபண்ணா 2-வது இடத்திற்கு பின்தங்கினார். தற்போது மியாமி ஓபனில் அரையிறுதிக்கு முன்னேறியதன் மூலம் வரும் திங்கட்கிழமை வெளியிடப்படும் தரவரிசையில் நம்பர் ஒன் இடத்தை பிடிப்பார். ஆஸ்திரேலிய ஓபனில் பதக்கம் வென்றதன் மூலம் நம்பர் ஒன் இடத்தை பிடித்தார். மேலும், தரவரிசையில் நம்பர் ஒன் இடத்தை பிடித்த வயதான வீரர் என்ற பெருமையையும் பெற்றார்.
போபண்ணா ஜோடி இறுதிப் போட்டியில் இவான் டோடிக் (குரோசியா)- ஆஸ்டின் கிராஜிசெக் (அமெரிக்கா) ஜோடியை எதிர்கொள்கிறது. போபண்ணாவின் 14-வது ஏடிபி மாஸ்டர்ஸ் 1000 இறுதிப் போட்டியாகும். மேலும், மியாமி தொடரில் முதன்முறையாக இறுதிப் போட்டியில் விளையாட இருக்கிறார். ஏடிபி தொடர் அளவிலான 63-வது இறுதிப் போட்டி இதுவாகும். இரட்டையர் பிரிவில் 25 சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.
போபண்ணா- எப்டன் ஜோடி ஏடிபி மாஸ்டர்ஸ் 1000 தொடரின் இறுதிப் போட்டியில் ஐந்தாவது முறையாக களம் காண்கிறது. லியாண்டர் பயேஸ்க்குப் பிறகு அனைத்து வகையிலான 9 ஏடிபி மாஸ்டர்ஸ் (9) தொடரிலும் இறுதிப் போட்டிக்கு நுழைந்த 2-வது இந்திய வீரர் என்ற சாதனைப் படைத்துள்ளார்.
- குல்தீப் யாதவ் ஓவரில் பட்லர் எல்பிடபிள்யூ ஆவார்.
- இதற்கு களநடுவர் அவுட் இல்லை என தெரிவித்து விடுவார்.
ஐபிஎல் தொடரின் 9-வது லீக் போட்டியில் ராஜஸ்தான் மற்றும் கேப்பிட்டல்ஸ் டெல்லி அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் ஆடிய ராஜஸ்தான் அணி ரியான் பராக்கின் அதிரடியால் 185 ரன்கள் குவித்தது.
இதனையடுத்து விளையாடிய டெல்லி அணி 5 விக்கெட்டுகளை இழந்து 173 ரன்கள் எடுத்தது. இதனால் ராஜஸ்தான் அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம் புள்ளிபட்டியலில் 2-வது இடத்தை ராஜஸ்தான் அணி பிடித்துள்ளது.
முன்னதாக இந்த போட்டியின் போது குல்தீப் யாதவ் ஓவரில் பட்லர் எல்பிடபிள்யூ ஆவார். அதற்கு களநடுவர் அவுட் இல்லை என தெரிவிப்பார். இதனை பார்த்த கேப்டன் ரிஷப் யோசித்துக் கொண்டே வருவார். பந்து வீசிய குல்தீப் யாதவ் வேகமாக ரிஷப் பண்டை நோக்கி வந்து ரிவ்யூ எடுங்கள் என கூறியது மட்டுமல்லாமல் அவரது கையை பிடித்து ரிவ்யூ சைகையை காட்டுவார்.
உடனே ரிஷப் பண்ட் சிரித்துக் கொண்டே ரிவ்யூ எடுப்பார். பந்து வீச்சாளர் கேப்டனிடம் சென்று ரீவ்யூ எடுங்கள் என்று சொல்வது இயல்பு. ஆனால் குல்தீப் யாரும் செய்யாத வகையில் இப்படி ஒரு ரிவ்யூவை எடுத்தது சிரிப்பலையை ஏற்படுத்தியது.
சந்தேகத்துடன் 3-வது நடுவரிடன் சென்றது. இறுதியில் அது 3-வது நடுவரால் அவுட் என வந்தது. இதனால் ரிஷப் பண்ட் மகிழ்ச்சியடைந்தார். இந்த தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இதற்கு ரசிகர்கள் கேப்டனை கட்டாயப்படுத்தி ரிவ்யூ எடுக்க வைக்குராங்க என்றும் சிலர் ஐபிஎல் வரலாற்றில் இப்படி ரிவ்யூ-வை நான் பார்த்ததில்லை எனவும் காமெடியாக கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
- என்னைப் பற்றி என்னுடைய கருத்து என்ன என்பது எனக்கு தெரியும்.
- எனது அம்மா இன்று என்னை நினைத்து பெருமைப்படுவார்.
ஜெய்ப்பூர்:
17-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் 9-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் நேற்று மோதின.
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் 20 ஓவர்கள் முடிவில் 185 ரன்கள் குவித்தது. ராஜஸ்தான் தரப்பில் அதிகபட்சமாக ரியான் பராக் 84 ரன்கள் குவித்தார். பின்னர் சேசிங் செய்த டெல்லி முடித்தளவுக்கு போராடியும் 20 ஓவரில் 173 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை சந்தித்தது. இந்த போட்டியின் ஆட்டநாயகனாக ராஜஸ்தான் வீரர் ரியான் பராக் தேர்வு செய்யப்பட்டார்.
இந்நிலையில் ரஞ்சிக் கோப்பை போன்ற சமீபத்திய உள்ளூர் தொடரில் விளையாடி பெரிய ரன்கள் அடித்ததுதான் பார்முக்கு வர உதவியதாக ரியான் பராக் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
அம்மா இங்கே இருக்கிறார். அவர் 3 - 4 வருடங்களாக என்னுடைய தடுமாற்றங்களை பார்த்தவர். இன்று அவர் என்னை நினைத்து பெருமைப்படுவார். என்னைப் பற்றி என்னுடைய கருத்து என்ன என்பது எனக்கு தெரியும். அது நான் 0 ரன்கள் எடுக்கிறேனா இல்லையா என்பதை தாண்டி எப்போதும் மாறாது.
இந்த வருடம் எனக்கு உள்ளூர் தொடர் அபாரமானதாக அமைந்தது. அது தற்போது உதவுகிறது. சில நேரங்களில் டாப் 4 இடங்களில் விளையாடும் பேட்ஸ்மேன்களில் ஒருவர் 20 ஓவர்களும் விளையாட வேண்டும். பிட்ச்சில் பந்து மெதுவாக நின்று வந்தது. கடந்த போட்டியில் சஞ்சு பையா அப்படி விளையாடினார். நான் கடினமாக வேலை செய்தேன். அதற்காக மகிழ்ச்சியடைகிறேன்.
என்று கூறினார்.
- பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி தொடக்க லீக் ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்சிடம் வீழ்ந்தது.
- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தனது முதலாவது லீக் ஆட்டத்தில் 4 ரன் வித்தியாசத்தில் ஐதராபாத் சன் ரைசர்சை சாய்த்தது.
பெங்களூரு:
ஐ.பி.எல். தொடரின் 17-வது சீசன் கடந்த 22-ம் தேதி தொடங்கி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இன்று இரவு 7.30 மணியளவில் பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் நடைபெற உள்ள போட்டியில் பாப் டு பிளிஸ்சிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்த உள்ளன.
பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி தொடக்க லீக் ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்சிடம் வீழ்ந்தது. அடுத்து உள்ளூரில் நடந்த ஆட்டத்தில் பஞ்சாப் கிங்சை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி முதல் வெற்றியை ருசித்தது. அந்த ஆட்டத்தில் 177 ரன் இலக்கை பெங்களூரு அணி எட்டுவதற்கு விராட் கோலியின் அசத்தலான அரைசதம் அடித்தளமாக அமைந்தது என்றால், தினேஷ் கார்த்திக், மஹிபால் லோம்ரோர் ஆகியோரின் அதிரடி வெற்றிக்கு வித்திட்டது.
மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களான கேமரூன் கிரீன், ரஜத் படிதார், மேக்ஸ்வெல் ஆகியோர் ஜொலித்தால் அந்த அணியின் பேட்டிங் மேலும் வலுப்பெறும். பந்து வீச்சில் முகமது சிராஜ், யாஷ் தயாள், அல்ஜாரி ஜோசப், ஆல்-ரவுண்டர்கள் கேமரூன் கிரீன், மேக்ஸ்வெல் ஆகியோர் நம்பிக்கை அளிக்கிறார்கள்.
2 முறை சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தனது முதலாவது லீக் ஆட்டத்தில் 4 ரன் வித்தியாசத்தில் ஐதராபாத் சன் ரைசர்சை சாய்த்தது. கடைசி ஓவரில் ஐதராபாத் அணியின் வெற்றிக்கு 13 ரன் தேவையாக இருந்த நிலையில் அந்த ஓவரை வீசிய ஹர்ஷித் ராணா 2 விக்கெட்டை வீழ்த்தியதுடன் 8 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து அணியின் வெற்றியை உறுதி செய்தார்.
பேட்டிங்கில் பில் சால்ட், வெங்கடேஷ் அய்யர், ஸ்ரேயாஸ் அய்யர், நிதிஷ் ராணா, ஆந்த்ரே ரஸ்செல் , ரிங்கு சிங், பந்து வீச்சில் சுனில் நரின், மிட்செல் ஸ்டார்க், வருண் சக்ரவர்த்தி, ஹர்ஷித் ராணா ஆகியோர் மிரட்டக்கூடியவர்கள். மொத்தத்தில் 2-வது வெற்றியை வசப்படுத்த இரு அணிகளும் வரிந்துகட்டும் என்பதால் சுவாரஸ்யத்துக்கு பஞ்சம் இருக்காது. 2-வது வெற்றியை பெறப்போகும் அணி எது? என்பது ரசிகர்கள் மத்தியில் ஆர்வத்தை ஏற்படுத்தி உள்ளது.
- ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இடம்பெற்றிருந்த பிரசித் கிருஷ்ணா காயம் காரணமாக ஐபிஎல் தொடரில் இருந்து விலகியுள்ளார்.
- கொல்கத்தா அணியில் இடம்பெற்றிருந்த முஜீப் உர் ரஹ்மானும் காயம் காரணமாக விலகியுள்ளார்.
ஜெய்ப்பூர்:
17-வது ஐ.பி.எல். தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை 9 லீக் போட்டிகள் முடிவடைந்த நிலையில் புள்ளி பட்டியலில் சென்னை சூப்பர் கிங்ஸ் முதல் இடத்தில் உள்ளது. ராஜஸ்தான் அணி 2-வது இடத்தில் உள்ளது.
இந்நிலையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இடம்பெற்றிருந்த இந்திய வேகப்பந்து வீச்சாளரான பிரசித் கிருஷ்ணா தொடை பகுதியில் அறுவை சிகிச்சை மேற்கொண்டதால் நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து விலகியுள்ளார். அவருக்கு மாற்று வீரராக தென் ஆப்பிரிக்க சுழற்பந்து வீச்சாளரான கேஷவ் மகராஜ் சேர்க்கப்பட்டுள்ளார்.

ராஜஸ்தான் அணி ஏற்கனவே பலம் வாய்ந்த அணியாக இருந்து வரும் நிலையில் கேஷவ் மகராஜ் இணைந்துள்ள மேலும்
இதேபோல கொல்கத்தா அணியில் இடம்பெற்றிருந்த முஜீப் உர் ரஹ்மானும் காயம் காரணமாக விலகியுள்ளார். அவருக்கு பதிலாக அல்லா கசன்ஃபரை கொல்கத்தா அணி நியமித்துள்ளது.

- அமெரிக்காவில் மியாமி ஓபன் டென்னிஸ் போட்டிகள் நடந்து வருகிறது.
- இந்தியாவின் ரோகன் போபண்ணா ஆஸ்திரேலியாவின் மேத்யூ எப்டன் இணை ஸ்பெயினின் மார்செல் கிரானோலர்ஸ் அர்ஜெண்டினாவின் ஹோராசியோ ஜெபலோஸ் இணையை எதிர்கொண்டது.
மியாமி:
அமெரிக்காவில் மியாமி ஓபன் டென்னிஸ் போட்டிகள் நடந்து வருகிறது. இந்த தொடரில் நேற்று நடைபெற்ற ஆண்கள் இரட்டையர் பிரிவின் அரையிறுதி ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் ரோகன் போபண்ணா ஆஸ்திரேலியாவின் மேத்யூ எப்டன் இணை ஸ்பெயினின் மார்செல் கிரானோலர்ஸ் அர்ஜெண்டினாவின் ஹோராசியோ ஜெபலோஸ் இணையை எதிர்கொண்டது.
இந்த ஆட்டத்தில் ஆரம்பம் முதலே அபாரமாக செயல்பட்ட போபண்ணா இணை 6-1, 6-4 என்ற நேர் செட் கணக்கில் மார்செல் கிரானோலர்ஸ் - ஹோராசியோ ஜெபலோஸ் இணையை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
- ஸ்பெயின் மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் போட்டி மாட்ரிட்டில் நடந்து வருகிறது.
- பெண்கள் ஒற்றையர் 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் பி.வி. சிந்து சீனத் தைபேயின் ஹூவாங் யூ சன்னை எதிர் கொண்டார்.
மாட்ரிட்:
ஸ்பெயின் மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் போட்டி மாட்ரிட்டில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் பி.வி. சிந்து 21-14, 21-12 என்ற நேர் செட்டில் சீனத் தைபேயின் ஹூவாங் யூ சன்னை தோற்கடித்து கால்இறுதிக்கு முன்னேறினார். இந்த ஆட்டம் 36 நிமிடம் நடந்தது. சிந்து அடுத்து தாய்லாந்தின் சுபனிதா கேத்தோங்குடன் மோத உள்ளார். இந்த ஆட்டம் இன்று மாலை 5.30 மணிக்கு தொடங்குகிறது.
ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் எம்.ஆர்.அர்ஜூன்- துருவ் கபிலா ஜோடி 21-17, 21-19 என்ற நேர் செட்டில் ஸ்காட்லாந்தின் கிறிஸ்டோபர் கிரிம்லி- மேத்யூ கிரிம்லி இணையை வீழ்த்தி கால்இறுதியை எட்டியது.
- டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச்சு தேர்வு.
- டேவிட் வார்னர் சிறப்பான துவக்கம் கொடுத்தார்.
ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரின் 9 ஆவது லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதுகின்றன. ஜெய்பூரில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. ராஜஸ்தான் அணியின் துவக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 7 பந்துகளில் 5 ரன்களை குவித்து பெவிலியன் திரும்பினார். இவருடன் களமிறங்கிய ஜாஸ் பட்லர் 16 பந்துகளில் 11 ரன்களில் ஆட்டமிழந்தார். இவரைத் தொடர்ந்து வந்த கேப்டன் சஞ்சு சாம்சன் 15 ரன்களில் தனது விக்கெட்டை பறிக் கொடுத்தார்.

போட்டி முடிவில் ராஜஸ்தான் அணி 5 விக்கெட்டுகளை இழந்து 185 ரன்களை குவித்துள்ளது. ராஜஸ்தான் அணிக்கு ரியான் பராக் 45 பந்துகளில் 84 ரன்களை குவித்தார். ஹெட்மயர் 7 பந்துகளில் 14 ரன்களை குவித்து ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.
டெல்லி அணி சார்பில் கலீல் அகமது, அக்சர் பட்டேல் மற்றும் குல்தீப் யாதவ் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். முகேஷ் குமார் மற்றும் அன்ரிச் நார்ட்ஜே தலா விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இதைத் தொடர்ந்து 186 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி அணி களமிறங்கியது. டெல்லி அணிக்கு டேவிட் வார்னர் சிறப்பான துவக்கம் கொடுத்தார். இவர் 34 பந்துகளில் 49 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார். இவருடன் களமிறங்கிய மிட்செல் மார்ஷ் 12 பந்துகளில் 23 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ரிக்கி புய் ரன் ஏதும் எடுக்காமல் ஏமாற்றினார்.

பிறகு களமிறங்கிய கேப்டன் ரிஷப் பண்ட் 28 ரன்களை குவித்தார். இம்பாக்ட் பிளேயராக களமிறங்கிய அபிஷேக் பொரெல் 9 ரன்களில் ஆட்டமிழக்க அக்சர் பட்டேல் களத்துக்கு வந்தார். ட்ரிஸ்டன் டப்ஸ்-உடன் பொறுப்பாக ஆடிய அக்சர் பட்டேல் 15 ரன்களை குவித்தார்.
போட்டி முடிவில் டெல்லி அணி 5 விக்கெட்டுகளை இழந்து 173 ரன்களை குவித்தது. இதன் மூலம் ராஜஸ்தான் அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.ராஜஸ்தான் சார்பில் நான்ட்ரி பர்கர் 2 விக்கெட்டுகளையும், சாஹல் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். ஆவேஷ் கான் ஒரு விக்கெட் எடுத்தார்.
இந்த சீசனில் ராஜஸ்தான் அணி விளையாடிய இரு போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.






