search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Bopanna"

    • அமெரிக்காவில் மியாமி ஓபன் டென்னிஸ் போட்டிகள் நடந்து வருகிறது.
    • இந்தியாவின் ரோகன் போபண்ணா ஆஸ்திரேலியாவின் மேத்யூ எப்டன் இணை ஸ்பெயினின் மார்செல் கிரானோலர்ஸ் அர்ஜெண்டினாவின் ஹோராசியோ ஜெபலோஸ் இணையை எதிர்கொண்டது.

    மியாமி:

    அமெரிக்காவில் மியாமி ஓபன் டென்னிஸ் போட்டிகள் நடந்து வருகிறது. இந்த தொடரில் நேற்று நடைபெற்ற ஆண்கள் இரட்டையர் பிரிவின் அரையிறுதி ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் ரோகன் போபண்ணா ஆஸ்திரேலியாவின் மேத்யூ எப்டன் இணை ஸ்பெயினின் மார்செல் கிரானோலர்ஸ் அர்ஜெண்டினாவின் ஹோராசியோ ஜெபலோஸ் இணையை எதிர்கொண்டது.

    இந்த ஆட்டத்தில் ஆரம்பம் முதலே அபாரமாக செயல்பட்ட போபண்ணா இணை 6-1, 6-4 என்ற நேர் செட் கணக்கில் மார்செல் கிரானோலர்ஸ் - ஹோராசியோ ஜெபலோஸ் இணையை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

    • முதல் செட்டை போபண்ணா ஜோடி 3-6 என இழந்தது.
    • 2-வது செட் டை-பிரேக்கர் வரை சென்றது. இறுதியில் போபண்ணா ஜோடி அதை கைப்பற்றியது.

    மியாமி ஒபன் டென்னிஸ் தொடரில் இந்தியாவின் முன்னணி வீரர் ரோகன் போபண்ணா ஆஸ்திரேலியாவின் மேத்யூ எப்டன் இணைந்து விளையாடி வருகிறது.

    இந்த ஜோடி செம் வெர்பீக் (நெதர்லாந்து)- ஜான்-பாட்ரிக் ஸ்மித் (ஆஸ்திரேலியா)யை காலிறுதியில் எதிர்கொண்டது.

    முதல் இடத்தில் இருக்கும் போபண்ணா ஜோடிக்கு செம் வெர்பீக் (நெதர்லாந்து)- ஜான்-பாட்ரிக் ஸ்மித் (ஆஸ்திரேலியா) ஜோடி கடும் நெருக்கடி கொடுத்தது.

    முதல் செட்டை போபண்ணா ஜோடி 3-6 என அதிர்ச்சிகரமாக இழந்தது. 2-வது செட்டில் சுதாரித்துக் கொண்டு விளையாடியது. இருந்தபோதிலும் செம் வெர்பீக் (நெதர்லாந்து)- ஜான்-பாட்ரிக் ஸ்மித் (ஆஸ்திரேலியா) ஜோடி கடும் நெருக்கடி கொடுத்தனர். இதனால் டைபிரேக்கர் வரை சென்றது. இறுதியாக போபண்ணா ஜோடி 7(7)-6(4) என 2-வது செட்டை கைப்பற்றியது.

    3-வது செட்டில் போபண்ணா ஜோடி கை ஓங்கியது. அந்த செட்டை 10-7 எனக் கைப்பற்றி போபண்ணா ஜோடி 3-6, 7(7)-6(4), 10-7 என வெற்றி பெற்றது. இதன் மூலம் போபண்ணா- மேத்யூ எப்டன் ஜோடி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.

    காலிறுதிக்கு முந்தைய சுற்றில் போபண்ணா ஜோடி, மொனாக்கோவின் ஹுகோ நிஸ்- போலந்தின் ஜியேலின்ஸ்கி ஜோடியை எதிர்கொண்டது. இதில் நம்பர் ஒன் ஜோடியான போபண்ணா- எப்டன் ஜோடி 7-5, 7(7)-6(3) என வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

    ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு காலிறுதியில் தாமஸ் மகாச்- ஜேனிக் சின்னெர், அலேக்சாண்டர் ஸ்வெரேவ்- பேஃபியன் மரோஸ்சன், நிக்கோலஸ் ஜார்ரி- டேனில் மெட்வதேவ், அல்காரஸ் கார்பியா- டிமிட்ரோவ் பலப்பரீட்சை நடத்துகின்றனர்.

    • போபண்ணா ஜோடி முதல் செட்டை 7-5 எனக் கைப்பற்றியது.
    • 2-வது செட் டை பிரேக்கர் வரை சென்றது. இறுதியில் 7-6 எனக் கைப்பற்றியது.

    மியாமி ஓபன் டென்னிஸ் போட்டியின் ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் முன்னணி வீரரான ரோகன் போபண்ணா, ஆஸ்திரேலியாவின் மேத்யூ எப்டன் உடன் இணைந்து களம் இறங்கினார். இந்த ஜோடி மொனாக்கோவின் ஹுகோ நிஸ்- போலந்தின் ஜியேலின்ஸ்கி ஜோடியை எதிர்கொண்டது.

    இதில் நம்பர் ஒன் ஜோடியான போபண்ணா- எப்டன் ஜோடி 7-5, 76 (3) என வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறியது. இந்த வெற்றியை பெற போபண்ணா ஜோடிக்கு ஒரு மணி நேரம் 39 நிமிடங்கள் தேவைப்பட்டது.

    போபண்ணா ஜோடி காலிறுதியில் ஜான் பாட்ரிக் (ஆஸ்திரேலியா)- செம் வீர்பீக் (நெதர்லாந்து) ஜோடியை எதிர்கொள்கிறது.

    போபண்ணா ஜோடி இந்த போட்டியில் கடும் சவாலை எதிர்கொண்டது. முதல் செட்டில் 6-5 என முன்னிலையில் இருந்தபோது இரண்டு பிரேக் பாயின்ட்ஸ்களை சேவ் செய்ததன் மூலம் 7-5 என முதல் செட்டை கைப்பற்றியது.

    2-வது செட்டில் 6-6 என சமநிலை பெற்றதால் டை-பிரேக்கர் கடைபிடிக்கப்பட்டது. இதில் எதிர்ஜோடி டபுள் ஃபால்ட்-க்கு உட்பட்டதால் போபண்ணா ஜோடி முன்னிலை பெற்று 7-6(3) என கைப்பற்றியது.

    • ஏ.டி.பி. இறுதி சுற்று எனப்படும் ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி இத்தாலியின் துரின் நகரில் நடந்து வருகிறது.
    • லீக் சுற்று முடிவில் ‘ரெட்’ பிரிவில் நடப்பு சாம்பியன் ராஜீவ் ராம் - சாலிஸ்பரி (இங்கிலாந்து), போபண்ணா - மேத்யூ எப்டென் ஜோடிகள் அரைஇறுதிக்கு தகுதி பெற்றன.

    துரின்:

    தரவரிசையில் முதல் 8 இடம் வகிக்கும் வீரர்கள் மற்றும் ஜோடிகள் மட்டும் கலந்து கொள்ளும் ஏ.டி.பி. இறுதி சுற்று எனப்படும் ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி இத்தாலியின் துரின் நகரில் நடந்து வருகிறது. இதில் வீரர்கள் 'கிரீன்', 'ரெட்', என இரு பிரிவாக பிரிக்கப்பட்டு மோதினர்.

    இதன் ஒற்றையர் பிரிவில் நேற்று முன்தினம் இரவு நடந்த ஆட்டத்தில் இத்தாலி வீரர் யானிக் சின்னெர் 6-2, 5-7, 6-4 என்ற செட் கணக்கில் டென்மார்க் வீரர் ஹோல்ஜர் ருனேவை வீழ்த்தினார். லீக் சுற்று முடிவில் 'கிரீன்' பிரிவில் யானிக் சின்னெர் 3 வெற்றியுடன் முதலிடம் பிடித்தும், 'நம்பர் ஒன்' வீரர் செர்பியாவின் நோவக் ஜோகோவிச் 2 வெற்றி, ஒரு தோல்வியுடன் 2-வது இடமும் பெற்று அரைஇறுதிக்கு முன்னேறினர். சின்னெர் அரைஇறுதிக்கு முன்னேறிய முதல் இத்தாலி வீரர் என்ற பெருமையை தனதாக்கினார்.

    இரட்டையர் பிரிவில் (ரெட்) தங்களது கடைசி லீக் ஆட்டத்தில் ரோகன் போபண்ணா (இந்தியா)-மேத்யூ எப்டென் (ஆஸ்திரேலியா) ஜோடி 6-4, 7-6 (7-5) என்ற நேர்செட்டில் வெஸ்லி கோல்ஹோப் (நெதர்லாந்து)-நீல் ஸ்குப்ஸ்கி (இங்கிலாந்து) இணையை வீழ்த்தியது. லீக் சுற்று முடிவில் 'ரெட்' பிரிவில் நடப்பு சாம்பியன் ராஜீவ் ராம் - சாலிஸ்பரி (இங்கிலாந்து), போபண்ணா - மேத்யூ எப்டென் ஜோடிகள் அரைஇறுதிக்கு தகுதி பெற்றன.

    • கனடா ஓபன் டென்னிசில் ஆண்கள் இரட்டையர் பிரிவின் 3வது சுற்று போட்டி நடந்தது.
    • இதில் இந்தியாவின் ரோகன் போபண்ணா ஜோடி வென்று காலிறுதிக்கு முன்னேறியது.

    மாண்ட்ரியல்:

    கனடா ஓபன் டென்னிஸ் தொடர் மாண்ட்ரியல் நகரில் நடைபெற்று வருகிறது. இத்தொடர் ஆகஸ்ட் 13-ம் தேதி முடிவடைய உள்ளது.

    இதில் ஆண்கள் இரட்டையர் பிரிவின் 3-வது சுற்று போட்டியில் இந்தியாவின் ரோகன் போபண்ணா- ஆஸ்திரேலியாவின் மேத்யூ எப்டென் ஜோடி, அமெரிக்காவின் ஜேமி முர்ரே- நியூசிலாந்தின் மைக்கேல் வீனஸ் ஜோடியைச் சந்தித்தது.

    இதில் போபண்ணா ஜோடி 6-3, 6-3 என்ற கணக்கில் வென்று காலிறுதிக்கு முன்னேறியது.

    • நேற்று நடைபெற்ற இரட்டையர் காலிறுதியில் இந்தியாவின் போபண்ணா ஜோடி வென்றது.
    • 43 வயதான போபண்ணா விம்பிள்டனில் அரையிறுதியை எட்டுவது இது 3-வது முறையாகும்.

    லண்டன்:

    கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடந்து வருகிறது.

    இதில் நேற்று நடைபெற்ற இரட்டையர் காலிறுதியில் இந்தியாவின் ரோகன் போபண்ணா- ஆஸ்திரேலியாவின் மேத்யூ எப்டென் ஜோடி, நெதர்லாந்தின் கிரிக்ஸ்பூர்- பார்ட் ஸ்டீவன்ஸ் ஜோடியை சந்தித்தது.

    இதில் போபண்ணா ஜோடி 6-7 (3-7), 7-5, 6-2 என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதிக்கு முன்னேறியது.

    43 வயதான போபண்ணா விம்பிள்டனில் அரையிறுதியை எட்டுவது இது 3-வது முறை என்பது குறிப்பிடத்தக்கது.

    • போபண்ணா ஜோடி கத்தார் ஓபன் டென்னிஸ் சாம்பியன் கோப்பையை கைப்பற்றியது.
    • போபண்ணாவுக்கு மொத்தத்தில் இது 23-வது இரட்டையர் பட்டமாக அமைந்தது.

    தோகா:

    கத்தார் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி தோகாவில் நடந்தது. இதில் நேற்று ஆண்கள் இரட்டையர் பிரிவின் இறுதி ஆட்டத்தில் இந்தியாவின் ரோகன் போபண்ணா, ஆஸ்திரேலியாவின் மேத்யூ எப்டன் ஜோடி - கான்ஸ்டன் லெஸ்டினே (பிரான்ஸ்)- போடிக் வான் டி ஜான்ட்ஸ்கல்ப் (நெதர்லாந்து) இணையுடன் மோதியது.

    இதில் 6-7 (5-7), 6-4, 10-6 என்ற செட் கணக்கில் போராடி போபண்ணா ஜோடி சாம்பியன் கோப்பையை கைப்பற்றியது.

    இந்த ஆட்டம் 1 மணி 39 நிமிடங்கள் நீடித்தது. போபண்ணா- எப்டன் ஜோடியாக வென்ற முதல் ஏ.டி.பி. பட்டம் இதுவாகும். இவர்களுக்கு ரூ.60 லட்சம் பரிசாக கிடைத்தது.

    பெங்களூருவைச் சேர்ந்த 42 வயதான போபண்ணாவுக்கு மொத்தத்தில் இது 23-வது இரட்டையர் பட்டமாக அமைந்தது.

    ×