search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி ஏப்ரல் கடைசி வாரத்தில் அறிவிக்கப்பட வாய்ப்பு
    X

    டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி ஏப்ரல் கடைசி வாரத்தில் அறிவிக்கப்பட வாய்ப்பு

    • ஜூன் 1-ந்தேதி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் தொடங்குகிறது.
    • மே 1-ந்தேதிக்குள் வீரர்கள் பட்டியலை ஐசிசி-யிடம் வழங்கப்பட வேண்டும்.

    டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வருகிற ஜூன் 1-ந்தேதி முதல் ஜூன் 29-ந்தேதி வரை வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெற இருக்கிறது.

    மே 1-ந்தேதிக்குள் இதில் விளையாட தகுதிப் பெற்றுள்ள அணிகள் 15 பேர் கொண்ட வீரர்கள் பட்டியலை ஐசிசி-க்கு அனுப்ப வேண்டும். இருந்தபோதிலும் மே 25-ந்தேதி வரை அணியில் மாற்றம் தேவை என்றால் மாற்றிக் கொள்ளலாம்.

    இந்த நிலையில் ஏப்ரல் கடைசி வாரத்தில் இந்திய அணி அறிவிக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. மே 26-ந்தேதி வரை ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் நடைபெற இருக்கிறது. ஆனால், லீக் ஆட்டம் மே 19-ந்தேதியுடன் முடிவடைகிறது.

    பிளேஆஃப் சுற்றுக்கு இடம்பெறாத அணிகளில் இடம் பிடித்துள்ள வீரர்கள் தேர்வு செய்யப்பட்டால் அவர்களை முன்னதாகவே அனுப்பு பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. பிளேஆஃப் சுற்றுகளில் விளையாடும் அணிகளில் இடம் பிடித்திருந்தால் அவர்கள் ஐபிஎல் முடிந்த உடன் செல்வார்கள்.

    ஐசிசியின் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் விளையாடுவதற்கும் இவ்வாறுதான் வீரர்கள் சென்றார்கள். தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடும் இளம் வீரர்கள் தேர்வாக வாய்ப்புள்ளது. தேர்வாளர்கள் பெரும்பாலான போட்டிகளை நேரில் சென்று பார்வையிட்டு வருகிறார்கள். சிறப்பான ஆட்டம் மற்றும் உடற்தகுதி போன்ற பல்வேறு தகுதிகள் தேர்வில் அடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியின் கேப்டனாக ரோகித் சர்மா செயல்படுவார் என பிசிசிஐ ஏற்கனவே அறிவித்துள்ளது. ஆனால் விராட் கோலி இடம் பெறுவாரா? என்பது இன்னும் கேள்விக்குறியாக உள்ளது.

    Next Story
    ×