என் மலர்tooltip icon

    விளையாட்டு

    • ரஞ்சி டிராபி தொடரின் 2-வது அரையிறுதியில் ஜம்மு- காஷ்மீர் மற்று பெங்கால் அணிகள் மோதின.
    • இந்த போட்டியில் ஜம்மு காஷ்மீர் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    ரஞ்சி டிராபி தொடரின் 2-வது அரையிறுதியில் ஜம்மு- காஷ்மீர் மற்று பெங்கால் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற ஜம்மு அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் விளையாடிய பெங்கால் அணி முதல் இன்னிங்சில் 328 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அந்த அணியில் அதிகபட்சமாக சுதிப் குமார் 146 ரன்கள் குவித்தார். ஜம்மு அணி தரப்பில் நபி தார் 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

    இதனை தொடர்ந்து முதல் இன்னிங்சில் விளையாடிய ஜம்மு அணி முதல் இன்னிங்சில் 302 ரன்களில் ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக அப்துல் சமத் 82 ரன்கள் விளாசினார். பெங்கால் தரப்பில் முகமது சமி 8 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

    26 ரன்கள் முன்னிலையில் 2-வது இன்னிங்சில் விளையாடிய பெங்கால் அணி 99 ரன்னில் சுருண்டது. ஜம்மு அணியில் நபி தார், சுனில் குமார் ஆகியோர் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதனால் 126 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்குடன் ஜம்மு அணி களமிறங்கியது.

    அந்த அணி 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 126 ரன்கள் எடுத்து 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.

    இதன் மூலம் ரஞ்சி டிராபி வரலாற்றில் முதல் முறையாக ஜம்மு காஷ்மீர் அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்று சாதனை படைத்துள்ளது. வரும் 24-ம் தேதி ஜம்மு காஷ்மீர் அணி இறுதிப் போட்டியில் கர்நாடகா அல்லது உத்தரகாண்டை எதிர்கொள்கிறது. 

    • 35-வது லீக் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் நமீபியா அணிகள் மோதுகிறது.
    • இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

    டி20 உலகக் கோப்பை 2026 தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரின் 35-வது லீக் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் நமீபியா அணிகள் மோதுகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

    இந்நிலையில் இந்த போட்டியில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் பாகிஸ்தான் அணி உள்ளது. ஏ குரூப்-ல் இந்தியா முதல் இடத்திலும் அமெரிக்கா 2-வது இடத்திலும் உள்ளது. 3-வது இடத்தில் பாகிஸ்தான் அணி உள்ளது.

    அமெரிக்கா அணி 4 போட்டிகளிலும் விளையாடி 2 தோல்வி, 2 வெற்றியுடன் உள்ளது. அதேபோல பாகிஸ்தானுக்கு இது கடைசி போட்டி வெற்றி பெற்றால் மட்டுமே அடுத்து சுற்றுக்கு தகுதி பெற முடியும் தோல்வியடைந்தால் ரன் ரேட் அடிப்படையில் அமெரிக்கா அடுத்த சுற்றுக்கு முன்னேறும். இந்த இக்கட்டான கட்டத்தில் பாகிஸ்தான் அணி விளையாடுகிறது

    • தென் ஆப்பிரிக்கா அணி 13.4 ஓவரில் 4 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 123 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
    • தென் ஆப்பிரிக்கா தரப்பில் அதிகபட்சமாக பிரேவிஸ் 36 ரன்கள் எடுத்தார்.

    டி20 உலகக் கோப்பை 2026 தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரின் 34-வது லீக் போட்டியில் தென் ஆப்பிரிக்கா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி முதலில் பந்துவீசியது.

    அதன்படி முதலில் விளையாடிய ஐக்கிய அரபு அமீரகம் அணி 6 விக்கெட் இழப்புக்கு 122 ரன்களை சேர்த்துள்ளது. ஐக்கிய அமீரகம் சார்பில் அலிஷன் அதிகபட்சமாக 38 பந்துகளில் 45 ரன்கள் (5 பவுண்டரிகள், 1சிக்சர்) அடித்தார். தென் ஆப்பிரிக்கா சார்பில் கார்பின் போஷ் 3 விக்கெட்டுகளையும், அன்ரிச் 2 விக்கெட்டுகளையும், ஜார்ஜ் லிண்டே தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.

    இதனை தொடர்ந்து தென் ஆப்பிரிக்கா அணியின் தொடக்க வீரர்களாக மார்க்ரம், டி காக் களமிறங்கினர். இதில் டி காக் 14 ரன்னிலும் மார்க்ரம் 28 ரன்களிலும் வெளியேறினர்.

    இதனையடுத்து ரிங்கல்டன் - பிரேவிஸ் ஜோடி சேர்ந்து அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தனர். இதில் ரிங்கல்டன் 30 ரன்னிலும் பிரேவிஸ் 36 ரன்னிலும் வெளியேறினர். இறுதியில் ஸ்டெப்ஸ் மற்றும் ஸ்மித் போட்டியை முடித்து வைத்தனர்.

    தென் ஆப்பிரிக்கா அணி 13.4 ஓவரில் 4 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 123 ரன்கள் எடுத்து 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    • இந்திய அணி 4-வது மற்றும் கடைசி லீக் ஆட்டத்தில் நெதர்லாந்தை இன்று எதிர்கொள்கிறது.
    • யுஸ்வேந்திர சாஹல் 80 ஆட்டத்தில் 96 விக்கெட் வீழ்த்தியுள்ளார்

    அகமதாபாத்:

    20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியா, இலங்கையில் நடைபெற்று வருகிறது. 20 நாடுகள் பங்கேற்றுள்ள இந்தப்போட்டி தொடரின் லீக் ஆட்டங்கள் நிறையும் தருவாயில் இருக்கிறது.

    நடப்பு சாம்பியனான சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி தான் மோதிய 3 ஆட்டங்களிலும் வெற்றி பெற்று 'சூப்பர் 8' சுற்றுக்கு தகுதி பெற்றது. அமெரிக்கா (29 ரன்), நமீபியா (93 ரன்), பாகிஸ்தான் (61 ரன்) ஆகிய அணிகளை வீழ்த்தி இருந்தது.

    இந்திய அணி 4-வது மற்றும் கடைசி லீக் ஆட்டத்தில் நெதர்லாந்தை இன்று எதிர்கொள்கிறது. அகமதாபாத்தில் இரவு 7 மணிக்கு இந்தப்போட்டி நடக்கிறது. நெதர்லாந்தையும் வீழ்த்தி 4-வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் உள்ளது. இந்த ஆட்டத்தில் ரன் குவிப்பில் இந்திய அணி புதிய சாதனை படைக்குமா? என்று ஆவலு டன் எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த ஆட்டத்தில் 2 விக்கெட் வீழ்த்தினால் குல்தீப் யாதவ் 20 ஓவரில் அதிக விக்கெட் கைப்பற்றிய இந்திய சுழற்பந்து வீரர் என்ற சாதனையை படைப்பார். யசுவேந்திர சாஹல் 80 ஆட்டத்தில் 96 விக்கெட் வீழ்த்தியுள்ளார். குல்தீப் யாதவ் 54 போட்டியில் 95 விக்கெட் கைப்பற்றியுள்ளார். உலகக் கோப்பை போட்டியில் குல்தீப் யாதவுக்கு முதல் 2 போட்டியில் வாய்ப்பு வழங்கப்படவில்லை.

    பாகிஸ்தானுக்கு எதிராக இடம்பெற்று ஒரு விக்கெட் எடுத்தார். இன்றைய ஆட்டத்தில் வாய்ப்பு வழங்கப்பட்டால் அவர் யசுவேந்திரா சாஹலை முந்துவதற்கு வாய்ப்பு உள்ளது.

    இந்திய வேகப்பந்து வீரர்களில் அர்ஷ்தீப் 121 விக்கெட்டுடன் முதல் இடத்திலும், பும்ரா 110 விக்கெட்டுடன் 2-வது இடத்திலும், ஹர்திக் பாண்ட்யா 109 விக்கெட்டுடன் 3-வது இடத்திலும் உள்ளனர். மற்ற சுழற்பந்து வீரர்களில் அக்ஷர் படேல் 92 விக்கெட்டும், ஓய்வு பெற்ற அஸ்வின் 72 விக்கெட்டும், வருண் சக்கரவர்த்தி 65 விக்கெட்டும் கைப்பற்றியுள்ளனர்.

    • டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி பந்துவீச்சு தேர்வு.
    • UAE சார்பில் அலிஷன் ஷரஃபு 45 ரன்களை அடித்தார்.

    டி20 உலகக் கோப்பை 2026 தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறுகிறது. இந்தத் தொடரின் 34வது லீக் போட்டியில் தென் ஆப்பிரிக்கா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் அணிகள் மோதின. டெல்லியில் நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி முதலில் பந்துவீசியது.

    பேட்டிங்கை தொடங்கிய ஐக்கிய அரபு அமீரகம் அணி தொடக்கம் முதலே ரன் குவிப்பில் தடுமாறியது. தொடக்க வீரர்களான ஆர்யன் ஷர்மா 17 பந்துகளில் 13 ரன்கள் (1 பவுண்டரி, 1 சிக்சர்) அடித்து அவுட் ஆனார். இவருடன் களமிறங்கிய கேப்டன் முகமது வசீம் 12 பந்துகளில் 22 ரன்கள் (4 பவுண்டரிகள்) அடித்து பெவிலியன் திரும்பினார்.

    இவர்களைத் தொடர்ந்து களமிறங்கிய அலிஷன் ஷரஃபு நிதானமாக ஆடி ரன் குவிப்பில் கவனம் செலுத்தினார். எனினும், அடுத்தடுத்து களமிறங்கிய ஷோயப் கான் மற்றும் சையது ஹைடர் தலா 6 ரன்களை அடித்து ஆட்டமிழந்தனர். போட்டி முடிவில் ஐக்கிய அரபு அமீரகம் அணி 6 விக்கெட் இழப்புக்கு 122 ரன்களை சேர்த்துள்ளது.

    ஐக்கிய அமீரகம் சார்பில் அலிஷன் அதிகபட்சமாக 38 பந்துகளில் 45 ரன்கள் (5 பவுண்டரிகள், 1சிக்சர்) அடித்தார். தென் ஆப்பிரிக்கா சார்பில் கார்பின் போஷ் 3 விக்கெட்டுகளையும், அன்ரிச் 2 விக்கெட்டுகளையும், ஜார்ஜ் லிண்டே தலா 1 விக்கெட் வீழ்த்தினர். 

    • சிறப்பாக பந்துவீசி எதிர் அணி வீரர்களை உஸ்மான் தாரிக் திணறிடித்து வருகிறார்.
    • உஸ்மான் தாரிக் பந்துவீசும் முறை இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது.

    டி20 உலகக் கோப்பையில் 3 போட்டிகளில் விளையாடியுள்ள பாகிஸ்தான் அணி 2 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. இந்தியாவுடனான போட்டியில் மட்டும் தோல்வியடைந்தது.

    பாகிஸ்தான் வீரர் உஸ்மான் தாரிக் பந்துவீசும் போது சில நொடிகள் நின்றுவிட்டு வீசுவது இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது. சிறப்பாக பந்துவீசி எதிர் அணி வீரர்களை உஸ்மான் தாரிக் திணறிடித்து வருகிறார்.

    இந்நிலையில், இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனியால்தான் மீண்டும் கிரிக்கெட்டுக்கு வந்தேன் என்று உஸ்மான் தாரிக் கூறியுள்ளார்.

    இதுகுறித்து பேசிய அவர், "எம்.எஸ்.தோனி திரைப்படம் பார்த்த பிறகுதான் மீண்டும் கிரிக்கெட்டிற்கு வந்தேன். அந்தப் படத்தைப் பார்த்த பிறகு, எங்கள் இருவரது கதைகளும் ஒரே மாதிரி இருப்பதாக எனக்குத் தோன்றியது. நான் ஒரு வேலையில் இருந்தேன், அவரும் ஒரு வேலையில் இருந்தார். வரலாறு படைத்த ஒருவர் இங்கே இருக்கிறார் என உணர்ந்தேன்.

    நானும் சாதாரண மனிதன்தான். அதே பாதையை நான் தொடரலாம், ஆனால் மற்றவர்களைப் போல நான் நிறைய கடின உழைப்பு செலுத்த வேண்டும். எம்.எஸ்.தோனியால்தான் மீண்டும் கிரிக்கெட்டுக்கு வந்தேன்" என்று தெரிவித்தார்.

    • அனைத்து வீரர்களும் போட்டியின்போது குறைந்தது ஒரு தகுதிச் சுற்றில் பங்கேற்க வேண்டும்.
    • 4 ரவுண்டுகள் முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் சாம்பியன் பட்டத்துக்கான சுற்றுக்கு முன்னேறும்.

    தமிழ்நாடு கோல்ப் கூட்டமைப்பு (டி.என்.ஜி.எப்) சார்பில் முதலாவது டேப்லெட்ஸ் இந்தியா- தமிழ்நாடு கோல்ப் பிரீமியர் லீக் (டி.பி.எல்) போட்டி வருகிற 25-ந் தேதி முதல் மார்ச் 25-ந் தேதி வரை சென்னை நந்தனத்தில் உள்ள காஸ்மோபாலிட்டன் கிளப் கோல்ப் மைதானத்தில் நடைபெறுகிறது.

    அம்ருத் வாரியர்ஸ் கோல்ப், ஓபி எக்ஸ்பிரஸ், மெட்ராஸ் ஈகிள்ஸ், பென்டகன் கோல்ப் அடிக்ட்ஸ், சென்னை ஹஸ்ட்லெர்ஸ் உள்பட 12 அணிகள் இந்த போட்டி தொடரில் பங்கேற்கின்றன.

    ஒவ்வொரு அணியிலும் 16 வீரர்கள் இடம் பெறுவார்கள். 2 பேர் நேரடியாக தேர்வு செய்யப்படுவார்கள். 14 வீரர்கள் ஏலம் முறையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். அனைத்து வீரர்களும் போட்டியின்போது குறைந்தது ஒரு தகுதிச் சுற்றில் பங்கேற்க வேண்டும்.

    4 ரவுண்டுகள் முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் சாம்பியன் பட்டத்துக்கான சுற்றுக்கு முன்னேறும்.

    சென்னையில் நடைபெற்ற தமிழ்நாடு கோல்ப் பிரீமியர் லீக் அறிமுக நிகழ்ச்சியில் டி.பி.எல். மற்றும் தமிழ்நாடு கோல்ப் பெடரேசன் தலைவர் கே.சி.

    ரகுநாதன், போட்டி இயக்குநர்கள் ராமசுப்பிரமணியன், ஏ. சந்திரசேகரன் கே.சுந்தர், பாபு தண்டபாணி மற்றும் அணி உரிமை யாளர்கள் கலந்து கொண்டனர்.

    • துபாய் சர்வதேச ஓபன் டென்னிஸ் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வருகிறது.
    • இதில் அமெரிக்காவின் கோகோ காப் 2வது சுற்றில் வெற்றி பெற்றார்.

    துபாய்:

    துபாய் சர்வதேச ஓபன் டென்னிஸ் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வருகிறது.

    பெண்கள் ஒற்றையர் பிரிவில் இரண்டாவது சுற்றுக்கு கஜகஸ்தானின் எலினா ரிபாகினா நேரடியாக தகுதி பெற்றார். அவர் ஆஸ்திரேலியாவின் கிம்பர்லி பைரெல் உடன் மோதினார்.

    இதில் சிறப்பாக ஆடிய ரிபாகினா 6-1, 6-2 என்ற செட் கணக்கில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

    மற்றொரு போட்டியில் அமெரிக்காவின் கோகோ காப் 6-4, 6-4 என்ற செட் கணக்கில் ரஷியாவின் கலின்ஸ்கயாவை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

    • இந்திய அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் நெதர்லாந்தை இன்று எதிர்கொள்கிறது.
    • பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

    அகமதாபாத்:

    டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் நடப்பு சாம்பியனான இந்திய அணி ஏ பிரிவில் இடம் பெற்றுள்ளது. பாகிஸ்தான், அமெரிக்கா, நமீபியா, நெதர்லாந்து ஆகிய அணிகளும் அந்தப் பிரிவில் உள்ளன.

    மும்பையில் அமெரிக்காவை 29 ரன் வித்தியாசத்திலும், டெல்லியில் நமீபியாவை 93 ரன் வித்தியாசத்திலும், கொழும்பில் பாகிஸ்தானை 61 ரன் வித்தியாசத்திலும் வீழ்த்தி ஹாட்ரிக் வெற்றியுடன் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியது.

    இந்நிலையில், இந்திய அணி 4-வது மற்றும் கடைசி லீக் ஆட்டத்தில் நெதர்லாந்தை இன்று எதிர் கொள்கிறது.

    அகமதாபாத்தில் இரவு 7 மணிக்கு இந்தப் போட்டி நடக்கிறது.நெதர்லாந்தை வீழ்த்தி 4-வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் இந்திய அணி இருக்கிறது.

    பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இந்தப் போட்டித் தொடரில் இந்திய அணி பல சாதனைகளைப் புரிந்துள்ளது. இன்றைய ஆட்டத்தில் ரன் குவிப்பில் புதிய சாதனை படைக்குமா என ஆவலுடன் எதிர்பார்க்கப் படுகிறது.

    டி20 போட்டியில் இந்திய அணி வங்காள தேசத்துக்கு எதிராக 297 ரன் குவித்ததே அதிகபட்ச ஸ்கோராகும். இதைத் தாண்டி புதிய சரித்திரம் படைக்க காத்திருக்கிறது.

    சூப்பர் 8 சுற்றுக்கு தகுதிபெற்று விட்டதால் விளையாடாத வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படுமா என எதிர்பார்க்கப்படுகிறது.

    தமிழகத்தைச் சேர்ந்த சுழற்பந்து வீச்சாளர் வாஷிங்டன் சுந்தர் மட்டுமே இதுவரை ஆடவில்லை. உடல் தகுதியுடன் இருந்தால் அவருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று கருதப்படுகிறது. வெற்றி அணியே தேவை என்று கருதினால் மாற்றம் இருக்காது.

    பேட்டிங்கில் இஷான் கிஷன் (158 ரன்), கேப்டன் சூர்யகுமார் யாதவ் (128 ரன்), திலக்வர்மா, ஷிவம் துபே ஆகியோரும், பந்து வீச்சில் வருண் சக்கரவர்த்தி, அக்சர் படேல் (தலா 6 விக்கெட்), பும்ரா (3 விக்கெட்) நல்ல நிலையில் உள்ளனர். ஆல்ரவுண்டர் பணியில் ஹர்திக் பாண்ட்யா சிறப்பாக செயல்படுகிறார்.

    டி20 போட்டியில் இந்திய அணி நெதர்லாந்துடன் மோதுவது 2-வது முறை. இதற்குமுன் 2022 உலகக் கோப்பையில் சிட்னியில் நடந்த ஆட்டத்தில் 56 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி இருந்தது.

    நெதர்லாந்து ஒரு வெற்றி, 2 தோல்வியுடன் 2 புள்ளி பெற்றுள்ளது. பாகிஸ்தானிடம் 3 விக்கெட் வித்தியாசத்திலும், அமெரிக்காவிடம் 93 ரன் வித்தியாசத்திலும் தோற்றது. நமீபியாவை 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்று இருந் தது.

    • துபாய் சர்வதேச ஓபன் டென்னிஸ் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வருகிறது.
    • இதில் இத்தாலி வீராங்கனை ஜாஸ்மின் பவுலினி தோல்வி அடைந்தார்.

    துபாய்:

    துபாய் சர்வதேச ஓபன் டென்னிஸ் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வருகிறது.

    பெண்கள் ஒற்றையர் பிரிவில் இரண்டாவது சுற்றுக்கு இத்தாலியின் ஜாஸ்மின் பவுலினி நேரடியாக தகுதி பெற்றார். அவர் பிலிப்பைன்சின் அலெக்சாண்டர் ஈலா உடன் மோதினார்.

    இதில் சிறப்பாக ஆடிய பிலிப்பைன்ஸ் வீராங்கனை 6-1, 7-6 (7-5) என்ற செட் கணக்கில் வென்றார். இதன்மூலம் முன்னணி வீராங்கனையான பவுலினி தொடரில் இருந்து வெளியேறினார்.

    • ஐசிசி டி20 பெண்களுக்கான பந்துவீச்சாளர்களுக்கான பட்டியலை வெளியிட்டது.
    • பாகிஸ்தான் வீராங்கனை சாதியா இக்பால் இடதுகை சுழல் பந்துவீச்சாளராக இருக்கிறார்.

    துபாய்:

    ஐசிசி டி20 பெண்களுக்கான பந்துவீச்சாளர்களுக்கான பட்டியலை வெளியிட்டுள்ளது.

    இதில், பாகிஸ்தான் வீராங்கனை சாதியா இக்பால் ஐசிசி டி20 தரவரிசையில் முதலிடம் பிடித்துள்ளார்.

    ஆஸ்திரேலியா வீராங்கனை அன்னாபெல் சதர்லேண்ட், இந்திய வீராங்கனை தீப்தி சர்மாவை முந்தி முதலிடம் பிடித்துள்ளார்.

    சாதியா இக்பால் இடதுகை சுழல் பந்துவீச்சாளராக இருக்கிறார். தென் ஆப்பிரிக்கா உடனான டி20 தொடரில் அசத்திய சாதியா இக்பால் 5 விக்கெட் எடுத்து அசத்தினார். இதனால் 2 இடம் முன்னேறி முதலிடம் பிடித்தார். கடைசி போட்டியில் 3 விக்கெட் எடுத்து வெற்றிக்கு வித்திட்டார்.

    கடந்த 2024-ல் முதலிடம் பிடித்த இவர், சதர்லேண்ட் 2025-ல் முதலிடத்துக்கு வந்த பிறகு தரவரிசையில் கீழிறங்கினார்.

    பாகிஸ்தானின் சாதியா இக்பால் 743 புள்ளிகள் பெற்று முதலிடத்திலும், இந்தியாவின் தீப்தி சர்மா 729 புள்ளிகள் பெற்று இரண்டாவது இடத்திலும், இங்கிலாந்தின் சோஃபி எக்லெஸ்டோன் 727 புள்ளிகள் பெற்று மூன்றாமிடத்தையும், ஆஸ்திரேலியாவின் அன்னாபெல் சதர்லேண்ட் 721 புள்ளிகள் பெற்று நான்காமிடத்தையும் பெற்றனர்.

    • கத்தார் ஓபன் டென்னிஸ் தொடர் தோஹாவில் நடக்கிறது.
    • முதல் சுற்றில் ஸ்பெயின் வீரர் கார்லோஸ் அல்காரஸ் வென்றார்.

    தோஹா:

    கத்தார் ஓபன் டென்னிஸ் தொடர் தோஹாவில் நடக்கிறது. இதில் முன்னணி வீரர்கள் பங்கேற்று உள்ளனர்.

    இந்நிலையில், ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் ஸ்பெயினின் கார்லோஸ் அல்காரஸ், பிரான்சின் ஆர்தர் ரின்டெர்னெக் உடன் மோதினார்.

    இதில் சிறப்பாக ஆடிய அல்காரஸ் 6-4, 7-6 (7-5) என்ற செட் கணக்கில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

    மற்றொரு போட்டியில் இத்தாலியின் ஜானிக் சின்னர் 6-1, 6-4 என்ற செட் கணக்கில் செக் குடியரசின் தாமஸ் மொசாக்கை வீழ்த்தி 2வது சுற்றுக்கு முன்னேறினார்.

    ×