என் மலர்tooltip icon

    விளையாட்டு

    12 அணிகள் பங்கேற்கும் தமிழ்நாடு கோல்ப் பிரீமியர் லீக் போட்டி 25-ந்தேதி தொடக்கம்
    X

    12 அணிகள் பங்கேற்கும் தமிழ்நாடு கோல்ப் பிரீமியர் 'லீக்' போட்டி 25-ந்தேதி தொடக்கம்

    • அனைத்து வீரர்களும் போட்டியின்போது குறைந்தது ஒரு தகுதிச் சுற்றில் பங்கேற்க வேண்டும்.
    • 4 ரவுண்டுகள் முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் சாம்பியன் பட்டத்துக்கான சுற்றுக்கு முன்னேறும்.

    தமிழ்நாடு கோல்ப் கூட்டமைப்பு (டி.என்.ஜி.எப்) சார்பில் முதலாவது டேப்லெட்ஸ் இந்தியா- தமிழ்நாடு கோல்ப் பிரீமியர் லீக் (டி.பி.எல்) போட்டி வருகிற 25-ந் தேதி முதல் மார்ச் 25-ந் தேதி வரை சென்னை நந்தனத்தில் உள்ள காஸ்மோபாலிட்டன் கிளப் கோல்ப் மைதானத்தில் நடைபெறுகிறது.

    அம்ருத் வாரியர்ஸ் கோல்ப், ஓபி எக்ஸ்பிரஸ், மெட்ராஸ் ஈகிள்ஸ், பென்டகன் கோல்ப் அடிக்ட்ஸ், சென்னை ஹஸ்ட்லெர்ஸ் உள்பட 12 அணிகள் இந்த போட்டி தொடரில் பங்கேற்கின்றன.

    ஒவ்வொரு அணியிலும் 16 வீரர்கள் இடம் பெறுவார்கள். 2 பேர் நேரடியாக தேர்வு செய்யப்படுவார்கள். 14 வீரர்கள் ஏலம் முறையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். அனைத்து வீரர்களும் போட்டியின்போது குறைந்தது ஒரு தகுதிச் சுற்றில் பங்கேற்க வேண்டும்.

    4 ரவுண்டுகள் முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் சாம்பியன் பட்டத்துக்கான சுற்றுக்கு முன்னேறும்.

    சென்னையில் நடைபெற்ற தமிழ்நாடு கோல்ப் பிரீமியர் லீக் அறிமுக நிகழ்ச்சியில் டி.பி.எல். மற்றும் தமிழ்நாடு கோல்ப் பெடரேசன் தலைவர் கே.சி.

    ரகுநாதன், போட்டி இயக்குநர்கள் ராமசுப்பிரமணியன், ஏ. சந்திரசேகரன் கே.சுந்தர், பாபு தண்டபாணி மற்றும் அணி உரிமை யாளர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×