என் மலர்
விளையாட்டு
- டி20 உலகக் கோப்பை தொடரில் இலங்கை அணி லீக் சுற்றுடன் வெளியேறியது.
- இலங்கை அணி 3 போட்டிகளில் விளையாடி 1 புள்ளி மட்டுமே பெற்றுள்ளது.
ஆண்டிகுவா:
டி20 உலகக் கோப்பை தொடரில் முன்னாள் சாம்பியனான இலங்கை அணி லீக் சுற்றுடன் வெளியேறியது.
நடப்பு உலகக் கோப்பையில் டி பிரிவில் இடம்பிடித்த இலங்கை அணி, தென் ஆப்பிரிக்கா மற்றும் வங்காளதேசத்திடம் தோல்வியை தழுவியது.
நேபாளத்திற்கு எதிரான ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது. இதனால் 3 போட்டிகளில் விளையாடி 1 புள்ளி மட்டுமே பெற்றுள்ள இலங்கை அணி அடுத்த சுற்றுக்கு முன்னேற முடியாமல் தொடரில் இருந்து வெளியேறியது. நாளை நடைபெற உள்ள கடைசி லீக் ஆட்டத்தில் அந்த அணி நெதர்லாந்துடன் மோதுகிறது.
இந்நிலையில், லீக் சுற்றுடன் வெளியேறியது குறித்து இலங்கை சீனியர் வீரரும், முன்னாள் கேப்டனுமான ஏஞ்சலோ மேத்யூஸ் கூறியதாவது:
டி20 உலகக் கோப்பை தொடரில் நாங்கள் தோல்வியடைந்தது மட்டுமின்றி ஒட்டுமொத்த நாட்டையும் கீழே தள்ளிவிட்டோம்.
எங்களுக்கு ஆதரவளிக்கும் ரசிகர்களுக்காக எங்களால் மகிழ்ச்சியை தரமுடியாதது வருத்தம் அளிக்கிறது. அதற்காக ரசிகர்கள் அனைவரிடமும் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறோம். இப்படி நடக்கும் என கொஞ்சம்கூட நினைக்கவில்லை.
சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறாதது சற்றும் எதிர்பார்க்காதது. ஆப்கானிஸ்தான், ஜிம்பாப்வே மற்றும் வங்காளதேசம் சுற்றுப் பயணத்திலும் எதிர்பார்த்த அளவிற்கு விளையாடவில்லை. அதேபோல் உலகக் கோப்பையைப் பொறுத்தவரை எந்த அணியையும் சாதாரணமாக நினைக்கக் கூடாது.
இதற்கு முன் நாங்கள் விளையாடிய பிட்சுகளுக்கும், டி20 உலகக் கோப்பையில் விளையாடிய பிட்சிற்கும் இடையில் மிகப்பெரிய வித்தியாசம் இருந்தது. ஆனால் இலங்கை அணியின் தரத்திற்கு ஏற்ப நாங்கள் விளையாடவில்லை. நேபாளம் அணிக்கு எதிரான போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டது எதிர்பாராதது என கூறினார்.
- இத்தாலியில் சேலஞ்சர் டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது.
- இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் இந்திய வீரர் சுமித் நாகல் வென்றார்.
ரோம்:
இத்தாலியில் நடக்கும் பெருகியா சேலஞ்சர் போட்டியின் ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதி போட்டி இன்று நடைபெற்றது. இதில் இந்திய வீரர் சுமித் நாகல், ஸ்பெயின் வீரர் மிராலிஸ் உடன் மோதினார்.
இதில் சுமித் நாகல் 7-6 (7-2), 1-6, 6-2 என்ற நேர் செட்களில் வென்று இறுதிப் போட்டிக்கு முன்னேறி அசத்தினார்.
- இத்தாலி மற்றும் அல்பேனியா அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
- அலெசாண்ட்ரோ பஸ்டோனி போட்டியின் 11 ஆவது நிமிடத்தில் கோல் அடித்தார்.
ஐரோப்பிய கோப்பை கால்பந்து தொடர் ஜூன் 14 ஆம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் ஐரோப்பியாவை சேர்ந்த 24 அணிகள் விளையாடுகின்றன. இதில் இன்று நடைபெற்ற போட்டியில் இத்தாலி மற்றும் அல்பேனியா அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
இந்த போட்டி தொடங்கிய 23 நொடியிலேயே அல்பேனிய வீரர் நெடிம் பஜ்ராமி தனது அணிக்காக முதல் கோலை அடித்து அசத்தினார். இது ஐரோப்பிய கால்பந்து வரலாற்றில் அதிவேகமாக அடிக்கப்பட்ட கோல் என்ற சாதனையாக அமைந்தது.
இதைத் தொடர்ந்து இத்தாலி அணியின் அலெசாண்ட்ரோ பஸ்டோனி போட்டியின் 11 ஆவது நிமிடத்தில் தனது அணிக்காக கோல் அடித்தார். இது ஐரோப்பிய கால்பந்து வரலாற்றில் அடிக்கப்பட்ட மூன்றாவது அதிவேக கோல் என்ற சாதனையானது.
இந்த போட்டியில் இத்தாலி அணி 2-1 என்ற கணக்கில் அல்பேனியாவை வீழ்த்தி வெற்றி பெற்றது. ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் தொடர்களில் இத்தாலி அணி இரண்டாவது முறையாக பத்து போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது.
முன்னதாக ஜூன் 1968 முதல் ஜூன் 1988 வரையிலான காலக்கட்டத்தில் இத்தாலி அணி தனது முதல் பத்து போட்டிகளில் வெற்றி பெற்று அசத்தியது குறிப்பிடத்தக்கது.
- முன்னணி அணிகள் லீக் சுற்றிலேயே வெளியேறின.
- ஸ்காட்லாந்து அணிக்கு எதிராக ஆஸ்திரேலியா வெற்றி.
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் ஏராளமான டுவிஸ்ட் சம்பவங்களுடன் அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறி வருகின்றன. நடப்பு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் முன்னணி அணிகள் லீக் சுற்றிலேயே வெளியேறின.
இந்த தொடரில் இங்கிலாந்து அணி க்ரூப் பி-இல் இடம்பெற்றுள்ளது. இதில் இங்கிலாந்து அணி விளையாட வேண்டிய முதல் போட்டியே மழை காரணமாக கைவிடப்பட்டது. அதன் பிறகு விளையாடிய இரண்டாவது போட்டியில் ஆஸ்திரேலியா அணியிடம் தோல்வியை தழுவியது.
இதைத் தொடர்ந்து ஓமன் மற்றும் நமீபியா அணிகளுக்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து அணி அபார வெற்றி பெற்று தனது நெட் ரன் ரேட்டை அதிகப்படுத்தியது. இந்த நிலையில், இன்று காலை நடைபெற்ற போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் ஸ்காட்லாந்து அணிகள் மோதின.
இதில் ஸ்காட்லாந்து அணி வெற்றி பெற்றால், இங்கிலாந்து அணி தொடரில் இருந்து வெளியேறும் சூழல் உருவானது. எனினும், ஸ்காட்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற்றது.
இதன் காரணமாக நெட் ரன் ரேட் அடிப்படையில், க்ரூப் பி-இல் இருந்து ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன.
- அடுத்த மாதம் 5-ந் தேதி சேலத்தில் தொடங்குகிறது.
- சேப்பாக் சூப்பர் கில்லீஸ்- லைகா கோவை கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.
சேலம்:
தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் 8-வது டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டி அடுத்த மாதம் (ஜூலை) 5-ந் தேதி சேலத்தில் தொடங்குகிறது.
இதுகுறித்து தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் உதவி செயலாளர் டாக்டர் ஆர்.என்.பாபா, டி.என்.பி.எல். தலைமை செயல் அதிகாரி பிரசன்ன கண்ணன் ஆகியோர் சேலத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-
2024-ம் ஆண்டு டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடர் சேலம் மாவட்டம் வாழப்பாடியில் உள்ள சேலம் கிரிக்கெட் பவுண்டேசன் மைதானத்தில் ஜூலை 5-ந் தேதி தொடங்குகிறது.
முதல் போட்டியில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ்- லைகா கோவை கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்திய கிரிக்கெட் அணிக்காக விளையாடி வரும் அஸ்வின், நடராஜன் உள்ளிட்ட சர்வதேச போட்டிகளில் விளையாடிய வீரர்களும் இந்த தொடரில் பங்கேற்கிறார்கள்.
டி.என்.பி.எல். தொட்ரில் உள்ள 13 வீரர்கள் ஐ.பி.எல். போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
பேட்டியின்போது, தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் முன்னாள் செயலாளர் ராமசாமி, டி.என்.பி.எல். கவர்னிங் கவுன்சில் உறுப்பினர் தினேஷ்குமார், சேலம் கிரிக்கெட் பவுண்டேசன் இயக்குனர் செல்வமணி, சேலம் மாவட்ட கிரிக்கெட் சங்க தலைவர் பிரகாஷ், செயலாளர் பாபு குமார் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
- ஆட்டத்தின் முதல் நிமிடத்திலேயே அல்பேனியா கோல் அடித்தது.
- 11-வது நிமிடத்தில் பதில் கோல் அடித்து இத்தாலி சமன் செய்தது.
டார்ட்மென்ட்:
17-வது ஐரோப்பிய கோப்பை கால்பந்து போட்டி ஜெர்மனியில் நேற்று முன்தினம் தொடங்கியது.
24 நாடுகள் பங்கேற்றுள்ள இந்த போட்டியின் தொடக்க ஆட்டத்தில் ஜெர்மனி 5-1 என்ற கோல் கணக்கில் ('ஏ' பிரிவு) ஸ்காட்லாந்தை வீழ்த்தியது.
நேற்று நடந்த ஒரு ஆடடத்தில் சுவிட்சர்லாந்து 3-1 என்ற கோல் கணக்கில் அங்கேரியை ('ஏ') தோற்கடித்தது. மற்றொரு ஆட்டத்தில் 'பி' பிரிவில் உள்ள ஸ்பெயின் -குரோஷியா அணிகள் மோதின.
இதில் ஸ்பெயின் 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது. ஸ்பெயின் அணிக்காக மொரட்டா (29-வது நிமிடம்) பேபியன் (32-வது நிமிடம்) கார்வஜல் (47-வது நிமிடம்) ஆகியோர் கோல் அடித்தனர்.
நள்ளிரவு 12.30 மணிக்கு நடந்த போட்டியில் இத்தாலி- அல்பேனியா ('பி' பிரிவு) அணிகள் மோதின. ஆட்டத்தின் முதல் நிமிடத்திலேயே அல்பேனியா கோல் அடித்தது. பஜ்ராமி இந்த கோலை அடித்தார்.
11-வது நிமிடத்தில் பதில் கோல் அடித்து இத்தாலி சமன் செய்தது. பஸ்டோனி தலையால் முட்டி இந்த கோலை அடித்தார். இதனால் 1-1 என்ற சமநிலை ஏற்பட்டது.
16-வது நிமிடத்தில் இத்தாலி 2-வது கோலை அடித்தது. நிக்கோலா பாரெல்லா இந்த கோலை மிகவும் அற்புதமாக அடித்தார். இதன் மூலம் இத்தாலி 2-1 என்ற முன்னிலையை பெற்றது. முதல் பாதி ஆட்டத்தின் முடிவில் இதே நிலை இருந்தது.
2-வது பாதி ஆட்டத்திலும் இதே நிலை தான் நீடித்தது. இத்தாலி வீரர்கள் 3-வது கோலை அடிக்க கிடைத்த பல வாய்ப்புகளை தவற விட்டனர். இதேபோல 2-வது கோலை அடித்து சமன் செய்ய அல்பேனியா வீரர்கள் கடைசி வரை போராடி னார்கள். ஆனால் அது பலன் அளிக்கவில்லை.
இறுதியில் இத்தாலி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இத்தாலி 2-வது ஆட்டத்தில் ஸ்பெயினுடன் 20-ந் தேதியும், அல்பேனியா 2-வது போட்டியிலும் குரோஷியாவுடன் 19-ந் தேதியும் மோதுகின்றன.
இன்று நடைபெறும் ஆட்டங்களில் போலந்து- நெதர்லாந்து (மாலை 6.30 மணி), சுலோவெனியா- டென்மார்க் (இரவு 9.30), இங்கிலாந்து - செர்பியா (நள்ளிரவு 12.30) அணிகள் மோதுகின்றன.
- டிராவிஸ் ஹெட் சிறப்பாக ஆடி அரைசதம் கடந்தார்.
- சஃப்யன் ஷரிஃப், மார்க் வுட் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் நடைபெற்ற 35-வது போட்டியில் ஸ்காட்லாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதின. இந்த போட்டியில் ஸ்காட்லாந்து அணி முதலில் பேட்டிங்கை செய்தது.
அந்த அணிக்கு துவக்க வீரராக களமிறங்கிய ஜார்ஜ் முன்செ 23 பந்துகளில் 35 ரன்களை அடுத்து அவுட் ஆனார். இவரடுன் களமிறங்கிய மைக்கேல் ஜோன்ஸ் 2 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். பிரெண்டன் மெக்குல்லென் 34 பந்துகளில் 60 ரன்களை விளாசினார். இதில் 2 பவுண்டரிகளும், 6 சிக்சர்களும் அடங்கும்.

அடுத்து வந்த கேப்டன் ரிச்சி பெரிங்டன் ஆட்டமிழக்காமல் 31 பந்துகளில் 42 ரன்களை சேர்த்தார். இதன் காரணமாக 20 ஓவர்கள் முடிவில் ஸ்காட்லாந்து அணி 5 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 180 ரன்களை குவித்தது. ஆஸ்திரேலியா சார்பில் மேக்ஸ்வெல் 2 விக்கெட்டுகளையும், ஆஷ்டன் ஆகர், நாதன் எல்லிஸ் மற்றும் ஆடம் ஜாம்பா தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.
181 ரன்களை துரத்திய ஆஸ்திரேலிய அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. அந்த அணியின் டேவிட் வார்னர், கேப்டன் மிட்செல் மார்ஷ் மற்றும் கிளென் மேக்ஸ்வெல் ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர். இவர்கள் முறையே 1, 8 மற்றும் 11 ரன்களை எடுத்தனர்.

ஒருபுறம் விக்கெட்டுகள் சரிந்த நிலையிலும், துவக்க வீரரான டிராவிஸ் ஹெட் சிறப்பாக ஆடி அரைசதம் கடந்தார். இவர் 49 பந்துகளில் 68 ரன்களை அடித்து அவுட் ஆனார். இவருடன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய மார்கஸ் ஸ்டாயினிஸ் 29 பந்துகளில் 59 ரன்களை விளாசினார்.
பேட்டிங்கை தொடர்ந்து ஸ்காட்லாந்து அணி பந்துவீச்சிலும் சிறப்பாக செயல்பட்டது. ஸ்காட்லாந்து அணி போட்டியை கடைசி ஓவர் வரை கொண்டு சென்ற போதிலும், 19.4 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்த ஆஸ்திரேலியா அணி 186 ரன்களை அடித்து 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஆஸ்திரேலியா சார்பில் டிம் டேவிட் 14 பந்துகளில் 24 ரன்களுடனும், மேத்யூ வேட் 4 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். ஸ்காட்லாந்து சார்பில் சஃப்யன் ஷரிஃப் மற்றும் மார்க் வுட் தலா இரண்டு விக்கெட்டுகளையும், பிராட் வீல் 1 விக்கெட் வீழ்த்தினர்.
- ஆஸ்திரேலியா அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது.
- மெக்குல்லென் 34 பந்துகளில் 60 ரன்களை விளாசினார்.
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் நடைபெற்ற 35-வது போட்டியில் ஸ்காட்லாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது.
அதன்படி பேட்டிங்கை தொடங்கிய ஸ்காட்லாந்து அணிக்கு துவக்க வீரராக களமிறங்கிய ஜார்ஜ் முன்செ 23 பந்துகளில் 35 ரன்களை அடுத்து அவுட் ஆனார். இவருடன் களமிறங்கிய மைக்கேல் ஜோன்ஸ் 2 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்.

அடுத்து வந்த பிரெண்டன் மெக்குல்லென் 34 பந்துகளில் 60 ரன்களை விளாசினார். இதில் 2 பவுண்டரிகளும், 6 சிக்சர்களும் அடங்கும். அடுத்து வந்த கேப்டன் ரிச்சி பெரிங்டன் ஆட்டமிழக்காமல் 31 பந்துகளில் 42 ரன்களை சேர்த்தார். இதன் காரணமாக 20 ஓவர்கள் முடிவில் ஸ்காட்லாந்து அணி 5 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 180 ரன்களை குவித்தது.
ஆஸ்திரேலியா சார்பில் மேக்ஸ்வெல் 2 விக்கெட்டுகளையும், ஆஷ்டன் ஆகர், நாதன் எல்லிஸ் மற்றும் ஆடம் ஜாம்பா தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.
- மழை காரணமாக இரு அணிகளுக்கும் தலா 11 ஓவர்கள் நிர்ணயிக்கப்பட்டது.
- போட்டியின் பாதியில் மீண்டும் மழை வந்ததால் ஆட்டம் 10 ஓவர்களாக குறைக்கப்பட்டது.
டிரினிடாட்:
டி20 உலகக்கோப்பை தொடரில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் இங்கிலாந்து -நமீபியா அணிகள் மோதின. இந்த போட்டியில் போட்டியில் திடீரென மழை குறுக்கிட்டது. மழை தொடர்ந்து பெய்ததால், ஆட்டம் நடைபெறுமா என்ற கேள்வி எழுந்தது. எனினும், சிறிது நேரத்தில் மழை நின்றது. தொடர்ந்து மைதானத்தை தயார்ப்படுத்தும் பணிகள் நடைபெற்றது.
மழை காரணமாக ஆட்டம் இரண்டரை மணி நேரத்துக்கும் மேலாக பாதிக்கப்பட்டதால், இரு அணிகளுக்கும் தலா 11 ஓவர்களாக குறைக்கப்பட்டது. தொடர்ந்து ஆட்டத்தில் டாஸ் வென்ற நமீபிய அணி பந்துவீச்சை தேர்வுசெய்தது.
அதன்படி இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது. இங்கிலாந்து அணி பேட்டிங் செய்துகொண்டிருந்தபோது மீண்டும் சிறிது நேரம் மழை குறுக்கிட்டதால், ஆட்டம் 10 ஓவர்களாக மீண்டும் குறைக்கப்பட்டது.
தொடக்கம் முதலே இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் அதிரடி ஆட்டத்தை தொடர்ந்தனர். குறிப்பாக பேர்ஸ்டோ (31), ஹாரி புரூக் (47) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தாலும், மொயீன் அலி மற்றும் லிவிங்ஸ்டன் ஆகியோரின் சில சிக்சர்களாலும் இங்கிலாந்து அணி 10 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 122 ரன்கள் குவித்தது. நமீபியா தரப்பில் ட்ரம்பல்மன் அதிகபட்சமாக 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இதனை தொடர்ந்து டி.எல். விதிப்படி 127 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் நமீபிய அணி பேட்டிங் செய்தது.
ஆனால் இங்கிலாந்து அணியினரின் அபார பந்துவீச்சால் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த முடியாமல் நமீபிய பேட்ஸ்மேன்கள் திணறினர். இறுதியில் நமீபிய அணியால் 10 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 84 ரன்களே எடுக்க முடிந்தது. இதன் மூலம் 41 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி அபார வெற்றி பெற்றது. அத்துடன், அடுத்த சுற்றுக்கான வாய்ப்பை பிரகாசமாக்கியுள்ளது.
இன்று நடைபெறவிருக்கும் மற்றொரு ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி, ஸ்காட்லாந்தை வீழ்த்தினால் இங்கிலாந்து அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறும் என்பது குறிப்பிடத்தக்கது.
- சூப்பர் 8 சுற்றின் மீதமுள்ள இரு இடங்களுக்கு வங்காளதேசம், நெதர்லாந்து, இங்கிலாந்து, ஸ்காட்லாந்து ஆகிய 4 அணிகளுக்கிடையே கடும் போட்டி நிலவுகிறது.
- இங்கிலாந்து அணி சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேற வேண்டுமெனில் இன்று நடைபெறும் போட்டியில் நமீபியா அணிக்கு எதிராக வெற்றி பெற வேண்டும்.
டிரினிடாட்:
டி20 உலகக்கோப்பை தொடரில் இன்று இங்கிலாந்து மற்றும் நமீபியா அணிகள் மோதுகிறது. இதில் டாஸ் வென்ற நமீபியா பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. மழை காரணமாக போட்டிகள் 11 ஓவர்களாக குறைக்கப்பட்டுள்ளது.
சூப்பர் 8 சுற்றின் மீதமுள்ள இரு இடங்களுக்கு வங்காளதேசம், நெதர்லாந்து, இங்கிலாந்து, ஸ்காட்லாந்து ஆகிய 4 அணிகளுக்கிடையே கடும் போட்டி நிலவுகிறது.
இதில் குரூப் சி-யில் குறிப்பாக இங்கிலாந்து அணி சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேற வேண்டுமெனில் இன்று நடைபெறும் தங்களது கடைசி போட்டியில் நமீபியா அணிக்கு எதிராக வெற்றி பெற வேண்டும்.
- மழையால் சில போட்டிகள் நடக்க முடியாமல் போனதால் முக்கிய அணிகள் வெளியேறும் சூழல் ஏற்பட்டுள்ளது.
- மொத்த மைதானத்தையும் மூடுவதற்கு தேவையான வசதிகள் இல்லாத மைதானத்தில் ஐசிசி போட்டியை நடத்தக் கூடாது.
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது. லீக் சுற்றுகள் இறுதி கட்டத்தை நெருங்கி உள்ள நிலையில் நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் ஆகிய அணிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேற முடியாமல் வெளியேறியுள்ளது.
மழையால் சில போட்டிகள் நடக்க முடியாமல் போனதால் முக்கிய அணியான பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து வெளியேறும் சூழல் ஏற்பட்டுள்ளது.
ஒருவேளை அமெரிக்காவுக்கு எதிரான போட்டியில் அயர்லாந்து வெற்றியிருந்தால் இந்நேரம் பாகிஸ்தான் லீக் சுற்றுடன் வெளியேறி இருந்திருக்காது. இருப்பினும் யாராலும் தடுக்க முடியாத மழை காரணமாக தொடர்ந்து அங்கே 3 போட்டிகள் ரத்து செய்யப்பட்டது. ஆனால் உண்மையில் அங்கே மழையை சமாளிப்பதற்கான வசதிகள் போதுமானதாக இருந்திருந்தால் மேற்குறிப்பிட்ட போட்டிகள் நடைபெற்றிருக்கும் என்றே சொல்லலாம்.
இந்நிலையில் தார்ப்பாய் இல்லாத மைதானங்களில் போட்டியை நடத்தாதீர்கள் என்று ஐசிசி-யை சுனில் கவாஸ்கர் கடுமையாக சாடியுள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
மொத்த மைதானத்தையும் மூடுவதற்கு தேவையான வசதிகள் இல்லாத மைதானத்தில் ஐசிசி போட்டியை நடத்தக் கூடாது. நீங்கள் பிட்ச்சை மட்டும் மூடி விட்டு மற்ற பகுதிகளை ஈரமாக விட முடியாது என்று கூறினார்.
அதே போல மைக்கேல் வாகன் ட்விட்டரில் விமர்சித்துள்ளது பின்வருமாறு.
மொத்த மைதானத்தையும் மூடுவதற்கு தார்ப்பாய் எப்படி இல்லாமல் போகிறது என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. இந்தப் போட்டிகளால் அனைத்து பணமும் கிடைக்கிறது. அதையும் தாண்டி ஈரப்பதமான மைதானத்தால் போட்டி ரத்து செய்யப்படுகிறது.
என்று கூறினார்.
- இந்திய அணி ஏற்கனவே சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்று விட்டது.
- கனடா 4 ஆட்டத்தில் ஒரு வெற்றி, 2 தோல்வி பெற்று 3 புள்ளிகளுடன் உள்ளது.
புளோரிடா:
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் 'ஏ' பிரிவில் இடம்பெற்றுள்ள இந்தியா தான் மோதிய 3 ஆட்டங்களிலும் வென்று சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்று விட்டது.
அயர்லாந்து, பாகிஸ்தான், அமெரிக்கா ஆகிய அணிகளை வீழ்த்திய இந்தியா, தனது 4-வது மற்றும் கடைசி லீக் ஆட்டத்தில் இன்று கனடாவை எதிர்கொள்ள இருந்தது. இப்போட்டி அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள லாடர்ஹில்லில் நடைபெற இருந்தது.
மழை பெய்ததால் மைதானத்தில் ஈரப்பசை அதிகம் இருந்ததால். இதனால் டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டது.
இந்நிலையில், இந்தியா-கனடா இடையிலான போட்டி கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
இதன்மூலம் இந்திய அணி 4 போட்டிகளில் விளையாடி 7 புள்ளிகளுடன் ஏ பிரிவில் முதலிடத்தில் உள்ளது. கனடா 3 புள்ளிகள் பெற்று 3-ம் இடத்தில் உள்ளது.






