என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Laika Coimbatore Kings"

    • சேலம் அணி 3-வது வெற்றியையும், திருப்பூர் அணி 2-வது வெற்றியையும் குறிவைத்து உள்ளன.
    • சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி ஹாட்ரிக் வெற்றியை பெறும் ஆர்வத்தில் உள்ளது.

    9-வது டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கோவையில் உள்ள எஸ்.என்.ஆர். கல்லூரி மைதானத்தில் கடந்த 5-ந்தேதி தொடங்கியது. 11-ந்தேதியுடன் அங்கு போட்டிகள் முடிவடைந்தன.

    8 அணிகள் பங்கேற்றுள்ள இந்த போட்டி தொடரில் ஒவ்வொரு அணியும், மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் புள்ளிகள் அடிப்படையில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறும்.

    8 ஆட்டங்கள் முடிவில் 4 முறை சாம்பியனான சேப்பாக் சூப்பர் கில்லீஸ், சேலம் ஸ்பார்டன்ஸ் தலா 4 புள்ளிகளுடன் முன்னிலையில் உள்ளன.

    திருப்பூர் தமிழன்ஸ், மதுரை பாந்தர்ஸ், நெல்லை ராயல் கிங்ஸ், திண்டுக்கல் டிராகன்ஸ் ஆகிய அணிகள் தலா 2 புள்ளிகள் பெற்றுள்ளன. திருச்சி கிராண்ட் சோழாஸ், கோவை கிங்ஸ் புள்ளி எதுவும் பெறவில்லை.

    ஒருநாள் ஓய்வுக்கு பிறகு சேலத்தில் டி.என்.பி.எல். போட்டிகள் இன்று ஆரம்பமாகிறது. வருகிற 19-ந் தேதி வரை அங்கு 9 ஆட்டங்கள் நடக்கிறது. வாடிப்பாடியில் உள்ள சேலம் கிரிக்கெட் பவுண்டேசன் மைதானத்தில் இன்று இரவு 7.15 மணிக்கு நடைபெறும் 9-வது லீக் ஆட்டத்தில் திருப்பூர் தமிழன்ஸ்- சேலம் ஸ்பார்டன்ஸ் அணிகள் மோதுகின்றன. சேலம் அணி 3-வது வெற்றியையும், திருப்பூர் அணி 2-வது வெற்றியையும் குறிவைத்து உள்ளன.

    டி.என்.பி.எல் கிரிக்கெட்டில் நாளை 2 ஆட்டங்கள் நடக்கிறது. மாலை 3.15 மணிக்கு தொடங்கும் போட்டியில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ்- கோவை கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.

    பாபா அபராஜித் தலைமையிலான சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி தான் மோதிய 2 ஆட்டங்களிலும் வெற்றி பெற்றது. திருப்பூரை 8 விக்கெட் வித்தியாசத்திலும். நெல்லையை 41 ரன்கள் வித்தியாசத்திலும் தோற்கடித்தது. சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி ஹாட்ரிக் வெற்றியை பெறும் ஆர்வத்தில் உள்ளது.

    அந்த அணியில் கேப்டன் பாபா அபராஜித், ஆஷிக், விஜய் சங்கர், ஆல்-ரவுண்டர்கள் அபிஷேக் தன்வர், ஸ்வப்னில் சிங், பந்துவீச்சாளர் எம். சிலம்பரசன் ஆகியோர் நல்ல நிலையில் உள்ளனர். சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி பேட்டிங், பந்து வீச்சில் சமபலத்துடன் உள்ளது.

    ஷாருக்கான் தலைமையிலான கோவை கிங்ஸ் அணி தான் மோதியுள்ள 2 ஆட்டங்களிலும் (திண்டுக்கல், மதுரை அணிகளுக்கு எதிராக) தோற்றது. அந்த அணி முதல் வெற்றியை பெறும் முனைப்பில் உள்ளது. கோவை அணியில் பி.சச்சின், லோகேஷ்வர், ஆண்ட்ரே சித்தார்த், ரோ கித், எம். சித்தார்த், ஜதவேத் சுப்பிரமணியன் ஆகிய வீரர்கள் உள்ளனர்.

    நாளை இரவு 7.15 மணிக்கு நடக்கும் ஆட்டத்தில் அஸ்வின் தலைமையிலான திண்டுக்கல் டிராகன்ஸ்- சதுர்வேத் தலைமையிலான மதுரை பாந்தர்ஸ் அணிகள் மோதுகின்றன.

    இரு அணிகளும் 2 ஆட்டத்தில் விளையாடி தலா ஒரு வெற்றி, ஒரு தோல்வி பெற்று உள்ளன. அந்த அணிகள் 2-வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் உள்ளன.

    • அடுத்த மாதம் 5-ந் தேதி சேலத்தில் தொடங்குகிறது.
    • சேப்பாக் சூப்பர் கில்லீஸ்- லைகா கோவை கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.

    சேலம்:

    தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் 8-வது டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டி அடுத்த மாதம் (ஜூலை) 5-ந் தேதி சேலத்தில் தொடங்குகிறது.

    இதுகுறித்து தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் உதவி செயலாளர் டாக்டர் ஆர்.என்.பாபா, டி.என்.பி.எல். தலைமை செயல் அதிகாரி பிரசன்ன கண்ணன் ஆகியோர் சேலத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    2024-ம் ஆண்டு டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடர் சேலம் மாவட்டம் வாழப்பாடியில் உள்ள சேலம் கிரிக்கெட் பவுண்டேசன் மைதானத்தில் ஜூலை 5-ந் தேதி தொடங்குகிறது.

    முதல் போட்டியில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ்- லைகா கோவை கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்திய கிரிக்கெட் அணிக்காக விளையாடி வரும் அஸ்வின், நடராஜன் உள்ளிட்ட சர்வதேச போட்டிகளில் விளையாடிய வீரர்களும் இந்த தொடரில் பங்கேற்கிறார்கள்.

    டி.என்.பி.எல். தொட்ரில் உள்ள 13 வீரர்கள் ஐ.பி.எல். போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    பேட்டியின்போது, தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் முன்னாள் செயலாளர் ராமசாமி, டி.என்.பி.எல். கவர்னிங் கவுன்சில் உறுப்பினர் தினேஷ்குமார், சேலம் கிரிக்கெட் பவுண்டேசன் இயக்குனர் செல்வமணி, சேலம் மாவட்ட கிரிக்கெட் சங்க தலைவர் பிரகாஷ், செயலாளர் பாபு குமார் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

    ×