என் மலர்tooltip icon

    விளையாட்டு

    • குரூப் ‘சி’ பிரிவில் நடைபெற்ற போட்டியில் டென்மார்க்- ஸ்லோவேனியா அணிகள் மோதின.
    • ஆட்டத்தின் முதல் பாதியில், 17-வது நிமிடத்தில் டென்மார்க் வீரர் கிறிஸ்டியன் எரிக்சென் முதல் கோல் அடித்து அணிக்கு முன்னிலை பெற்றுத்தந்தார்.

    ஐரோப்பிய நாடுகளுக்கு இடையிலான யூரோ கோப்பை கால்பந்து போட்டி ஜெர்மனியில் தொடங்கி நடைபெற்று வருகிறது. சுமார் 3 ஆயிரம் கோடி ரூபாய் பரிசுத்தொகை கொண்ட இந்தப் போட்டியில் ஜெர்மனி, இத்தாலி, பிரான்ஸ் உள்ளிட்ட 24 அணிகள் பங்கேற்றுள்ளன.

    ஒவ்வொரு பிரிவிலும் 4 அணிகள் என 6 பிரிவுகளாக பிரித்து லீக் போட்டி நடைபெறுகிறது. இதில் நேற்று குரூப் 'சி' பிரிவில் நடைபெற்ற போட்டியில் டென்மார்க்- ஸ்லோவேனியா அணிகள் மோதின.


    ஆட்டத்தின் முதல் பாதியில், 17-வது நிமிடத்தில் டென்மார்க் வீரர் கிறிஸ்டியன் எரிக்சென் முதல் கோல் அடித்து அணிக்கு முன்னிலை பெற்றுத்தந்தார். இதற்கு ஸ்லோவேனியா அணியினரால் பதிலடி தர முடியவில்லை. முதல் பாதி முடிவில் டென்மார்க் அணி 1-0 என முன்னிலையில் இருந்தது.

    ஆட்டத்தின் 2-வது பாதியில் ஸ்லோவேனியா வீரர் எரிக் ஜான்சா 77-வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்து, ஆட்டத்தை சமனுக்கு கொண்டுவந்தார். அதன் பின்னர் இரு அணி வீரர்களும் கோல் எதுவும் அடிக்காததால் ஆட்டம் டிரா ஆனது.

    • பாகிஸ்தான் அணி முதலில் பந்தவீச்சு தேர்வு செய்தது.
    • அயர்லாந்து சார்பில் பேரி மெக்கார்த்தி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

    டி20 உலகக் கோப்பை தொடரின் 36-வது லீக் போட்டி புளோரிடாவில் நடைபெற்றது. இதில் அயர்லாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்தவீச்சு தேர்வு செய்தது.

    அதன்படி பேட் செய்த அயர்லாந்து அணி ஆரம்பத்திலேயே விக்கெட்டுகளை இழந்து தடுமாறிது. அந்த அணியின் துவக்க வீரர்கள் ரன் குவிக்க முடியாமல் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர். இதைத் தொடர்ந்து களமிறங்கிய அந்த அணியின் கரெத் டிலானி 19 பந்துகளில் 31 ரன்களை அடித்தார்.

     


    இருடன் ஆடிய மார்க் அடைர் 15 ரன்களையும், ஜோஷ் லிட்டில் 22 ரன்களையும் எடுத்தனர். இதன் காரணமாக அயர்லாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 106 ரன்களை எடுத்தது. பாகிஸ்தான் சார்பில் ஷாகீன் ஷா அப்ரிடி மற்றும் இமாத் வாசிம் தலா மூன்று விக்கெட்டுகளையும், முகமது ஆமிர் 2 விக்கெட்டுகளையும், ஹாரிஸ் ரவுப் 1 விக்கெட் வீழ்த்தினர்.

    எளிய இலக்கை துரத்திய பாகிஸ்தான் அணிக்கு துவக்க வீரர்களான முகமது ரிஸ்வான் மற்றும் சயிம் ஆயிப் தலா 17 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த கேப்டன் பாபர் அசாம் விக்கெட் கொடுக்காமல் ஆடி வந்தார். இவருடன் களமிறங்கிய மற்ற வீரர்கள் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.


     

    எனினும், 18.5 ஓவர்களில் பாகிஸ்தான் அணி 7 விக்கெட்டுகளை இழந்து 111 ரன்களை அடித்து 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பாகிஸ்தான் சார்பில் கேப்டன் பாபர் அசாம் 32 ரன்களுடனும் ஷாகீன் ஷா அப்ரிடி 13 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.

    அயர்லாந்து சார்பில் பேரி மெக்கார்த்தி 3 விக்கெட்டுகளையும், கர்டிஸ் காம்பர் 2 விக்கெட்டுகளையும், மார்க் அடைர் மற்றும் பென் வைட் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.

    • ஷிகர் தவான் ஆஷா முகர்ஜியை கடந்த 2012-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.
    • இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்றுள்ளனர்.

    இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி தொடக்க வீரர்களில் ஒருவர் ஷிகர் தவான். இவர் ஏற்கனவே திருமணமான ஆஸ்திரேலிய குத்துச்சண்டை வீராங்கனை ஆஷா முகர்ஜியை கடந்த 2012-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு ஒரு ஆண் குழந்தை இருக்கிறது.

    இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்றுள்ளனர். ஆஷா முகர்ஜியும் அவரது மகனோடு ஆஸ்திரேலியாவில் வசித்து வருகிறார். அதனால் தனது மகனை பார்க்க முடியாமல் தவான் தவித்து வருகிறார்.

    இன்று சர்வதேச தந்தையர் தினம் கொண்டாடப்படுகிறது. அதனையொட்டி தவான் தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் தனது அப்பா மற்றும் மகனுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

    அதில், "என்னுடைய அப்பாவுக்கு தந்தையர் தின வாழ்த்துக்கள். என்னுடைய மகன் என்னுடன் இல்லாமல் நான் கொண்டாடும் தந்தையர் தினம் என்பதால் இது எனக்கு ரொம்ப எமோஷனலாக உள்ளது. என்னால் என் மகனுடன் பேச கூட முடியவில்லை. அனைத்து அப்பாக்களுக்கு தந்தையர் தின வாழ்த்துக்கள். எல்லாருக்கும் அன்பை பகிர்வோம்" என்று பதிவிட்டுள்ளார்.

    • டாஸ் வென்ற பாகிஸ்தான் பவுலிங் தேர்வு செய்தது.
    • அதன்படி, முதலில் ஆடிய அயர்லாந்து 106 ரன்கள் எடுத்தது.

    புளோரிடா:

    டி20 உலகக் கோப்பை தொடரின் 36வது லீக் ஆட்டம் புளோரிடாவில் நடைபெறுகிறது. இதில் பாகிஸ்தான், அயர்லாந்து அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற பாகிஸ்தான் பவுலிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் களமிறங்கிய அயர்லாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 106 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் கரீத் டெலானி 31 ரன்கள் எடுத்தார்.

    பாகிஸ்தான் சார்பில் ஷாஹின் அப்ரிடி, இமாத் வாசிம் தலா 3 விக்கெட்டும், முகமது அமீர் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 107 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் களமிறங்குகிறது.

    • ஆட்டத்தின் 16-வது நிமிடத்தில் போலந்து அணி ஒரு கோல் அடித்தது.
    • 29 மற்றும் 83-வது நிமிடங்களில் நெதர்லாந்து அணி கோல் அடித்து வென்றது.

    பெர்லின்:

    17-வது ஐரோப்பிய கோப்பை கால்பந்து போட்டி ஜெர்மனியில் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் 24 நாடுகள் பங்கேற்றுள்ளன.

    இன்று மாலை 6.30 மணிக்கு நடைபெற்ற லீக் போட்டியில் போலந்து, நெதர்லாந்து அணிகள் மோதின.

    ஆட்டத்தின் 16வது நிமிடத்தில் போலந்தின் ஆடம் புக்சா ஒரு கோல் அடித்து தனது அணிக்கு முன்னிலை பெற்றுக் கொடுத்தார். இதற்கு பதிலடியாக ஆட்டத்தின் 29வது நிமிடத்தில் நெதர்லாந்தின் காகி காக்போ ஒரு கோல் அடித்து சமனிலைக்கு கொண்டு வந்தார். முதல் பாதியில் இரு அணிகளும் 1-1 என சமனிலை வகித்தன.

    இரண்டாவது பாதியில் இரு அணி வீரர்களும் கோல் போட முயன்றனர். கடைசியில் ஆட்டத்தின் 83வது நிமிடத்தில் நெதர்லாந்தின் வெகோர்ஸ்ட் ஒரு கோல் அடித்து தனது அணியை முன்னிலைப்படுத்தினார்.

    இறுதியில், நெதர்லாந்து 2-1 என கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

    • முதலில் பேட் செய்த இந்திய மகளிர் அணி 50 ஓவரில் 265 ரன்கள் சேர்த்தது.
    • அடுத்து ஆடிய தென் ஆப்பிரிக்கா 122 ரன்களில் சுருண்டது.

    பெங்களூரு:

    தென் ஆப்பிரிக்கா மகளிர் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து ஒரு டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.

    இரு அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் இன்று நடைபெறுகிறது. டாஸ் வென்ற இந்திய மகளிர் அணி பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய இந்திய மகளிர் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 265 ரன்கள் சேர்த்தது. ஸ்மிருதி மந்தனா பொறுப்புடன் ஆடி சதமடித்து 117 ரன்னில் அவுட்டானார். தீப்தி ஷர்மா 37 ரன்னில் ஆட்டமிழந்தார். பூஜா வஸ்த்ராகர் 31 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார்.

    தென் ஆப்பிரிக்கா அணி சார்பில் அயப்ங்கா 3 விக்கெட்டும், மசபடா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 266 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென் ஆப்பிரிக்கா அணி களமிறங்கியது. இந்திய வீராங்கனைகள் துல்லியமாக பந்து வீசினர். இதனால் சீரான இடைவெளியில் விக்கெட்கள் வீழ்ந்தன.

    இறுதியில், தென் ஆப்பிரிக்கா அணி 37.4 ஓவரில் 122 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. சூன் லுலுஸ் அதிகமாக 33 ரன்கள் எடுத்தார். இதன்மூலம் 143 ரன் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.

    இந்தியா சார்பில் ஆஷா ஷோபனா 4 விக்கெட்டும், தீப்தி ஷர்மா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    • அவரது சொந்த ஊரான ராஞ்சிக்கு சென்றார்.
    • சமூக வலைதளங்களில் டோனி தனது வளர்ப்பு நாயுடன் இருக்கும் புகைப்படமும் வைரலாகி வருகிறது.

    ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரில் சென்னை மற்றும் பெங்களூரு அணிகள் 18-ந் தேதி நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற சென்னை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் விளையாடிய பெங்களூரு அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 218 ரன்கள் குவித்தது. இதனையடுத்து களமிறங்கிய சென்னை அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 191 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது. இதனால் சென்னை அணி பிளே ஆஃப் சுற்றில் இருந்து வெளியேறியது.

    இந்நிலையில் சிஎஸ்கே அணியில் இருந்து முன்னாள் கேப்டன் எம் எஸ் டோனி விடைபெற்றார். அதனை தொடர்ந்து அவரது சொந்த ஊரான ராஞ்சிக்கு சென்றார்.


    தந்தையர் தினமான இன்று தனது எக்ஸ் தள பதிவில் அனைவருக்கும் தந்தையர் தின வாழ்த்துக்கள் என்று கூறி டோனி மகளுடன் தனது வளர்ப்பு நாயை தொட்டு வருடும் புகைப்படமும் வைரலாகி வருகிறது.

    தற்போது சமூக வலைதளங்களில் டோனி தனது வளர்ப்பு நாயுடன் கொஞ்சி விளையாடும் வீடியோ வைரலாகி வருகிறது. 

    • இன்று சர்வதேச தந்தையர் தினம் கொண்டாடப்படுகிறது.
    • மகன் அகஸ்தியா உடன் விளையாடும் வீடியோவை ஹர்திக் பாண்ட்யா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

    கடந்த 2020 ஆம் ஆண்டு ஹர்திக் பாண்டியா மற்றும் நடாஷா ஸ்டான்கோவிக் ஜோடி திருமணம் செய்து கொண்டனர். இதைத் தொடர்ந்து இந்த தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு அகஸ்தியா என பெயர் சூட்டினர்.

    இந்நிலையில், நடாஷா ஸ்டான்கோவிக் தனது இன்ஸ்டாகிராம் தளத்தில் இருந்து பாண்டியா என்ற பெயரை நீக்கியுள்ளார். இன்ஸ்டா பயோ-வில் இருந்து பாண்டியா பெயர் நீக்கப்பட்டு இருப்பதை அடுத்து, இருவரும் பிரிந்துவிட்டார்கள் என்று சமூக வலைத்தளங்களில் பலரும் கருத்து தெரிவித்தனர். ஆனால் அவை எல்லாம் வதந்தி என்று பின்னர் தெரிய வந்தது.

    இன்று சர்வதேச தந்தையர் தினம் கொண்டாடப்படுகிறது. அதனையொட்டி, தனது மகன் அகஸ்தியா உடன் விளையாடும் வீடியோவை ஹர்திக் பாண்ட்யா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

    அதில், "என் வாழ்க்கையில் இவ்வளவு அன்பையும் மகிழ்ச்சியையும் கொண்டு வந்ததற்கு நன்றி. முழு மனதுடன் உன்னை நேசிக்கிறேன். எப்போதும் உன்னை நினைத்து பெருமைப்படுகிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.

    • விராட் கோலி பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவைத் திருமணம் செய்து கொண்டார்.
    • இந்த தம்பதிக்கு வமிகா என்ற பெண் குழந்தை உள்ளது.

    சர்வதேச கிரிக்கெட்டில் முன்னணி வீரர் விராட் கோலி. இந்திய அணிக்காக விளையாடி வரும் விராட் கோலி பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவைத் திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு வமிகா என்ற பெண் குழந்தை உள்ளது.

    இந்நிலையில், கடந்த பிப்ரவரி 15-ம் தேதி விராட் கோலி - அனுஷ்கா சர்மா தம்பதிக்கு இரண்டாவதாக அழகிய ஆண் குழந்தை பிறந்துள்ளது. தங்களது ஆண் குழந்தைக்கு அகாய் என பெயரிட்டுள்ளனர்.

    இன்று சர்வதேச தந்தையர் தினம் கொண்டாடப்படுகிறது. அதனையொட்டி, தனது மகள் வமிகா செய்த தந்தையர் தின வாழ்த்து அட்டையை அனுஷ்கா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் வமிகாவின் கால்தடம் வண்ணங்களால் பதிக்கப்பட்டுள்ளது.

    அதில், "ஒருவரால் எப்படி இதனை விஷயங்களில் இவ்வளவு திறமையாக இருக்க முடியும்" என்று கோலியை அனுஷ்கா புகழ்ந்துள்ளார்.

    • முதலில் ஆடிய இந்திய அணி 50 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 265 ரன்கள் சேர்த்தது.
    • தொடக்க வீராங்கனை ஸ்மிருதி மந்தனா சதமடித்து அசத்தினார்.

    பெங்களூரு:

    தென் ஆப்பிரிக்கா மகளிர் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து ஒரு டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.

    இரு அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் இன்று நடைபெறுகிறது. டாஸ் வென்ற இந்திய மகளிர் அணி பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, இந்திய மகளிர் அணியின் ஷபாலி வர்மா, ஸ்மிருதி மந்தனா ஆகியோர் தொடக்க வீராங்கனைகளாக இறங்கினர். ஷபாலி வர்மா, தயாளன் ஹேமலதா, ஹர்மன்பிரீத் கவுர், ஜெமிமா ரோட்ரிக்ஸ், ரிச்சா கோஷ் ஆகியோர் விரைவில் அவுட்டாகினர்.

    ஒருபுறம் விக்கெட்கள் வீழ்ந்தாலும் ஸ்மிருதி மந்தனா பொறுப்புடன் ஆடி சதமடித்து அசத்தினார். தீப்தி ஷர்மா அவருக்கு ஒத்துழைப்பு அளித்தார். 6-வது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 81 ரன்கள் சேர்த்தது. தீப்தி ஷர்மா 37 ரன்னிலும், ஸ்மிருதி மந்தனா 117 ரன்னிலும் அவுட்டாகினர்.

    இறுதியில், இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 265 ரன்கள் சேர்த்தது. பூஜா வஸ்த்ராகர் 31 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார்.

    தென் ஆப்பிரிக்கா அணி சார்பில் அயப்ங்கா 3 விக்கெட்டும், மசபடா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 266 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென் ஆப்பிரிக்கா அணி களமிறங்குகிறது.

    • டி20 உலகக் கோப்பை தொடரில் இலங்கை அணி லீக் சுற்றுடன் வெளியேறியது.
    • இலங்கை அணி 3 போட்டிகளில் விளையாடி 1 புள்ளி மட்டுமே பெற்றுள்ளது.

    ஆண்டிகுவா:

    டி20 உலகக் கோப்பை தொடரில் முன்னாள் சாம்பியனான இலங்கை அணி லீக் சுற்றுடன் வெளியேறியது.

    நடப்பு உலகக் கோப்பையில் டி பிரிவில் இடம்பிடித்த இலங்கை அணி, தென் ஆப்பிரிக்கா மற்றும் வங்காளதேசத்திடம் தோல்வியை தழுவியது.

    நேபாளத்திற்கு எதிரான ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது. இதனால் 3 போட்டிகளில் விளையாடி 1 புள்ளி மட்டுமே பெற்றுள்ள இலங்கை அணி அடுத்த சுற்றுக்கு முன்னேற முடியாமல் தொடரில் இருந்து வெளியேறியது. நாளை நடைபெற உள்ள கடைசி லீக் ஆட்டத்தில் அந்த அணி நெதர்லாந்துடன் மோதுகிறது.

    இந்நிலையில், லீக் சுற்றுடன் வெளியேறியது குறித்து இலங்கை சீனியர் வீரரும், முன்னாள் கேப்டனுமான ஏஞ்சலோ மேத்யூஸ் கூறியதாவது:

    டி20 உலகக் கோப்பை தொடரில் நாங்கள் தோல்வியடைந்தது மட்டுமின்றி ஒட்டுமொத்த நாட்டையும் கீழே தள்ளிவிட்டோம்.

    எங்களுக்கு ஆதரவளிக்கும் ரசிகர்களுக்காக எங்களால் மகிழ்ச்சியை தரமுடியாதது வருத்தம் அளிக்கிறது. அதற்காக ரசிகர்கள் அனைவரிடமும் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறோம். இப்படி நடக்கும் என கொஞ்சம்கூட நினைக்கவில்லை.

    சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறாதது சற்றும் எதிர்பார்க்காதது. ஆப்கானிஸ்தான், ஜிம்பாப்வே மற்றும் வங்காளதேசம் சுற்றுப் பயணத்திலும் எதிர்பார்த்த அளவிற்கு விளையாடவில்லை. அதேபோல் உலகக் கோப்பையைப் பொறுத்தவரை எந்த அணியையும் சாதாரணமாக நினைக்கக் கூடாது.

    இதற்கு முன் நாங்கள் விளையாடிய பிட்சுகளுக்கும், டி20 உலகக் கோப்பையில் விளையாடிய பிட்சிற்கும் இடையில் மிகப்பெரிய வித்தியாசம் இருந்தது. ஆனால் இலங்கை அணியின் தரத்திற்கு ஏற்ப நாங்கள் விளையாடவில்லை. நேபாளம் அணிக்கு எதிரான போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டது எதிர்பாராதது என கூறினார்.

    • இத்தாலியில் சேலஞ்சர் டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது.
    • இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் இந்திய வீரர் சுமித் நாகல் வென்றார்.

    ரோம்:

    இத்தாலியில் நடக்கும் பெருகியா சேலஞ்சர் போட்டியின் ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதி போட்டி இன்று நடைபெற்றது. இதில் இந்திய வீரர் சுமித் நாகல், ஸ்பெயின் வீரர் மிராலிஸ் உடன் மோதினார்.

    இதில் சுமித் நாகல் 7-6 (7-2), 1-6, 6-2 என்ற நேர் செட்களில் வென்று இறுதிப் போட்டிக்கு முன்னேறி அசத்தினார்.

    ×