என் மலர்
விளையாட்டு
- முதலில் ஆடிய இந்தியா 297 ரன்களை குவித்தது.
- அடுத்து ஆடிய வங்கதேசம் 164 ரன்களை மட்டுமே எடுத்தது.
ஐதராபாத்:
இந்தியா, வங்கதேச அணிகளுக்கு இடையேயான 3-வது டி20 போட்டி இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய இந்தியா தொடக்கம் முதலே ரன் மழை பொழிந்தது. தொடக்க ஆட்டக்காரர் அபிஷேக் சர்மா 4 ரன்னில் ஆட்டமிழந்தார்.
அடுத்து ஜோடி சேர்ந்த சாம்சன், சூர்யகுமார் ஜோடி வங்கதேச பந்துவீச்சை நாலா பக்கமும் சிதறடித்தனர். இந்த ஜோடி 150 ரன்கள் பார்ட்னர்ஷிப் கடந்து அசத்தியது.
சிக்சர் மழை பொழிந்த சஞ்சு சாம்சன் 40 பந்தில் சதம் அடித்து, 111 ரன்னில் அவுட்டானார். இன்னொரு பக்கம் அதிரடி காட்டிய சூர்யகுமார் யாதவ் 35 பந்தில் 75 ரன் எடுத்து ஆட்டமிழந்தார்.
ரியான் பராக் 13 பந்தில் 34 ரன்னும், பாண்ட்யா 18 பந்தில் 47 ரன்கள் குவித்தும் ஆட்டமிழந்தனர்.
இறுதியில், இந்திய அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 297 ரன்கள் குவித்தது டி20 கிரிக்கெட் வரலாற்றில் இது 2-வது அதிகபட்ச ஸ்கோராகும். முதல் இடத்தில 314 ரன்கள் அடித்து நேபாளம் அணி உள்ளது.
இதையடுத்து 298 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் வங்கதேசம் களமிறங்கியது. அந்த அணியில் ஹிருடோய் தனி ஆளாக போராடி 63 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். லிட்டன் தாஸ் 42 ரன்கள் சேர்த்தார்.
இறுதியில் வங்கதேசம் 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 164 ரன்கள் சேர்த்தது. இதன்மூலம் 133 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றதுடன், டி2 தொடரை 3-0 என முழுமையாக கைப்பற்றியது.
இந்தியா சார்பில் ரவி பிஷ்னோய் 3 விக்கெட்டும், மயங்க் யாதவ் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
- சிக்சர் மழை பொழிந்த சஞ்சு சாம்சன் 40 பந்துகளில் அதிரடி சதம் அடித்தார்.
- அதிரடி காட்டிய சூர்யகுமார் யாதவ் 35 பந்துகளில் 75 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
இந்தியா- வங்கதேச அணிகளுக்கு இடையேயான 3-வது டி20 போட்டி இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது.
இந்திய அணியில் ஓப்பனிங் பேட்ஸ்மேன்களாக அபிஷேக் சர்மா, சஞ்சு சாம்சன் களம் இறங்கினர். 4 ரன்களில் அபிஷேக் சர்மா ஆட்டமிழந்தார். பின்னர் ஜோடி சேர்ந்த சாம்சன் - சூர்யகுமார் வங்கதேச பந்துவீச்சை நாளா பக்கமும் சிதறடித்தனர். 150 ரன்கள் பார்ட்னர்ஷிப்பை கடந்து இந்த ஜோடி அதிரடி காட்டியது.
அதிரடியாக விளையாடி சிக்சர் மழை பொழிந்த சஞ்சு சாம்சன் 40 பந்துகளில் சதம் அடித்தார். பின்னர் 111 ரன்கள் எடுத்து சாம்சன் அவுட்டானார். இன்னொரு பக்கம் அதிரடி காட்டிய சூர்யகுமார் யாதவ் 35 பந்துகளில் 75 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
பின்னர் களத்தில் இருந்த ரியான் பராக் - ஹர்திக் பாண்ட்யா ஜோடி வங்கதேச பந்துவீச்சை சிதறடித்து சிக்சர் மழை பொழிந்தனர். 13 பந்துகளில் 34 ரன்கள் அடித்து ரியான் பராக் ஆட்டமிழந்தார். 18 பந்துகளில் 47 ரன்கள் குவித்து பாண்ட்யா ஆட்டமிழந்தார்.
இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 297 ரன்கள் குவித்தது இந்திய அணி. டி20 கிரிக்கெட் வரலாற்றில் இது 2 ஆவது அதிகபட்ச ஸ்கோராகும். முதல் இடத்தில 314 ரன்கள் அடித்து நேபாளம் அணி உள்ளது.
- இந்திய அணி 10 ஓவர்களிலேயே 150 ரன்களை கடந்தது.
- சாம்சன் - சூர்யகுமார் ஜோடி 150 ரன்கள் பார்ட்னர்ஷிப்பை கடந்து அதிரடியாக விளையாடி வருகிறது.
இந்தியா- வங்கதேச அணிகளுக்கு இடையேயான 3-வது டி20 போட்டி இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது.
இந்திய அணியில் ஓப்பனிங் பேட்ஸ்மேன்களாக அபிஷேக் சர்மா, சஞ்சு சாம்சன் களம் இறங்கினர். 4 ரன்களில் அபிஷேக் சர்மா ஆட்டமிழந்தார். பின்னர் ஜோடி சேர்ந்த சாம்சன் - சூர்யகுமார் வங்கதேச பந்துவீச்சை நாளா பக்கமும் சிதறடித்தனர்.
அதிரடியாக விளையாடிய இந்திய அணி 10 ஓவர்களிலேயே 150 ரன்களை கடந்தது. அதிரடியாக விளையாடி சிக்சர் மழை பொழிந்த சஞ்சு சாம்சன் 40 பந்துகளில் அதிரடி சதம் அடித்தார்.
இன்னொரு பக்கம் அதிரடி காட்டிய சூர்யகுமார் யாதவ் அரைசதம் அடித்து அசத்தினார். 150 ரன்கள் பார்ட்னர்ஷிப்பை கடந்து இந்த ஜோடி அதிரடியாக விளையாடி வருகிறது.
- முகமது சிராஜ்-க்கு க்ரூப் 1 அரசு பணி வழங்குவதாக முதல்வர் ரேவந்த் ரெட்டி அறிவித்து இருந்தார்.
- தெலங்கானா மாநில காவல் துறை துணை கண்காணிப்பாளராக முகமது சிராஜ் நேற்று பதவியேற்றுக் கொண்டார்.
இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ். கடந்த சில மாதங்களுக்கு முன் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணியில் இடம்பெற்று இருந்தார்.
டி20 உலகக் கோப்பை தொடரை இந்திய அணி வென்ற நிலையில், இந்திய வீரர் முகமது சிராஜ்-க்கு க்ரூப் 1 அரசு பணி, ஜூப்ளி ஹில்ஸ் பகுதியில் சுமார் 600 சதுர அடி பரப்பளவு கொண்ட நிலம் வழங்குவதாக தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி அறிவித்து இருந்தார்.
இந்நிலையில், தெலங்கானா மாநில காவல் துறை துணை கண்காணிப்பாளராக முகமது சிராஜ் நேற்று பதவியேற்றுக் கொண்டார்.
தெலங்கானா காவல்துறையில் DSP-யாக பொறுப்பேற்ற இந்திய வீரர் முகமது சிராஜ்க்கு ரிஷப் பண்ட் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
- சமூக வலைத்தளங்களில் எம்.எஸ்.டோனியின் புதிய புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது.
- தற்போது இந்த புதிய லுக்கில் டோனி இளமையாக தோற்றமளிக்கிறார்.
இந்திய அணியின் வெற்றிகர கேப்டன்களில் ஒருவர் எம்.எஸ். டோனி. சர்வதேச கிரிக்கெட்டில் ஓய்வு பெற்றுவிட்ட எம்.எஸ். டோனி ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறார். உலகளவில் எம்.எஸ். டோனிக்கு ரசிகர்கள் அதிகம்.
வரும் ஐபிஎல் தொடரில் அப்கேப்புடு வீரராக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் எம்.எஸ்.டோனி விளையாடுவார் என்று சொல்லப்படுகிறது.
இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் எம்.எஸ்.டோனியின் புதிய புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது.
சென்ற வருடம் ஐபிஎல் தொடரின்போது, நீண்ட முடியுடன் வலம் வந்த டோனி தற்போது இந்த புதிய லுக்கில் இளமையாக தோற்றமளிக்கிறார்.
அவ்வப்போது தனது சிகை அலங்காரத்தை மாற்றி, மிகவும் 'ட்ரெண்டிங்'ஆக இருக்கும் தோனியின் தற்போதைய லுக் ரசிகர்களை உற்சாகமடைய செய்துள்ளது.
- 2024 ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 உலகக் கோப்பையை இந்தியா கைப்பற்றியது.
- ரிஷப் பண்ட்டின் புத்திசாலித்தனம் இந்திய அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றது.
சமீபத்தில் நடந்து முடிந்த டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி உலகக் கோப்பையை தட்டிச் சென்றது. 2008-ம் ஆண்டுக்கு பிறகு இந்திய அணி முதல் முறையாக டி20 உலகக் கோப்பையை வென்று சாதனை படைத்தது.
இறுதிப்போட்டியின் முக்கிய கட்டத்தில் ரிஷப் பண்ட்டிற்கு காயம் ஏற்பட்டு ஆட்டம் தடைபட்டது. அந்த தாமதம் இந்திய அணிக்கு சாதகமாக அமைந்தது.
இது குறித்து பேசிய ரோகித் சர்மா, "தென் ஆப்பிரிக்கா அணிக்கு 30 பந்தில் 30 ரன்கள் தேவைப்பட்டது. அந்த நேரத்தில் ரிஷப் பண்ட் தனது புத்திசாலிதனத்தை உபயோகித்து ஆட்டத்தை சிறிது நேரம் நிறுத்தினார். காலில் காயம் ஏற்பட்டதாக கூறி அதில் டேப் போடப்பட்டது. ஆட்டம் அதிரடியாக சென்ற நிலையில் இந்த சம்பவத்தால் ஆட்டம் மெதுவாகியது.
சிறிது நேரம் கழித்து ஆட்டம் தொடங்கியதால் முதல் பந்திலேயே கிளாசன் அவுட் ஆனார். அதனால் தென் ஆப்பிரிக்கா அணிக்கு பதட்டம் ஏற்பட்டது. இந்திய அணி வீரர்கள் எதிரணி வீரர்களை ஸ்லெட்ஜிங் செய்தனர். இதனால் ஆட்டம் எங்கள் பக்கம் திரும்பியது. ரிஷப் பண்ட்டின் புத்திசாலித்தனம் இந்திய அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றது" என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் தனக்கு ஏற்பட்ட காயம் குறித்து பேசிய ரிஷப் பண்ட், "நான் என் பிசியோவிடம் முடிந்தவரை நேரம் கடத்த சொல்லி கேட்டு கொண்டேன். நாம் சிறிது நேரத்தை வீணடிக்க வேண்டும் என்று அவரிடம் கூறினேன். அவர் என்னிடம் உன் முழங்கால் நன்றாக இருக்கிறதா? என்று கேட்டார். அதெல்லாம் நன்றாக தான் இருக்கிறது. நான் சும்மா நடிக்கிறேன் என்று அவரிடம் கூறினேன்" என்று தெரிவித்தார்.
- அஜய் தனது வாரிசாக வருவதற்கு ஒப்புக்கொண்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.
- ஜாம்நகர் மக்களுக்கு உண்மையிலேயே ஒரு வரப்பிரசாதம்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் அஜய் ஜடேஜாவின் தந்தை தௌலட்சின்ஜி ஜடேஜா ஜாம்நகர் மக்களவையில் இருந்து மூன்று முறை பாராளுமன்ற உறுப்பினராக இருந்தவர். இவரது தாயார் கேரளாவின் ஆலப்புழாவை சேர்ந்தவர். ஜடேஜா, ஜெயா ஜெட்லியின் மகள் அதிதி ஜெட்லியை மணந்தார்.தம்பதியருக்கு ஐமன் மற்றும் அமீரா என்ற இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
அரச குடும்பம் பின்னணியைக் கொண்ட அஜய் ஜடேஜா ஜாம்நகரின் அரச சிம்மாசனத்தின் வாரிசாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
நவாநகரைச் சேர்ந்த ஜாம் சாஹேப், சத்ருசல்யாசின்ஹ்ஜி திக்விஜய்சின்ஹ்ஜி ஜடேஜா, ஒரு கடிதத்தில், அஜய் தனது வாரிசாக வருவதற்கு ஒப்புக்கொண்டதாகக் குறிப்பிட்டுள்ளார். சத்ருசல்யாசின்ஹ்ஜி அஜய்யின் தந்தையின் உறவினர் சகோதரர்.

இதுதொடர்பான கடிதத்தில் கூறியிருப்பதாவது:-
தசரா கொண்டாட்டம் - ஜம்சாஹேப் தசரா நாள் என்பது பாண்டவர்கள் தங்கள் இருப்பை மறைத்து 14 ஆண்டுகள் வெற்றிகரமாக முடித்து வெற்றி பெற்ற நாளாக நம்பப்படுகிறது.
இன்று, தசரா அன்று, நான் மகிழ்ச்சியடைகிறேன். ஏனென்றால் எனது நீண்ட நாள் யோசனைக்கு தீர்வைக் கண்டுபிடித்துவிட்டேன். எனது வாரிசாக அஜய் ஜடேஜாவை அறிவிப்பது தான் அது.
ஜாம்நகர் மக்களுக்கு சேவை செய்யும் பொறுப்பை அஜய் ஜடேஜா ஏற்றுக்கொண்டது ஜாம்நகர் மக்களுக்கு உண்மையிலேயே ஒரு வரப்பிரசாதம்.
அஜய் ஜடேஜாவுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஜெய் ஜடேஜா 1992 முதல் 2000 வரை இந்தியாவுக்காக 196 ஒருநாள் மற்றும் 15 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- வூஹான் ஓபன் டென்னிஸ் தொடர் சீனாவில் நடந்து வருகிறது.
- இதில் அமெரிக்க வீராங்கனை அரையிறுதிக்கு முன்னேறினார்.
பீஜிங்:
வூஹான் ஓபன் டென்னிஸ் தொடர் சீனாவில் நடந்து வருகிறது. இந்த தொடரில் நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதி ஆட்டத்தில் பெலாரசின் அரினா சபலென்கா, போலந்து வீராங்கனை மேக்டலெனா உடன் மோதினார்.
இந்த ஆட்டத்தில் சபலென்கா 6-2, 6-2 என்ற செட் கணக்கில் எளிதில் வென்று அரையிறுதிக்கு முன்னேறினார்.
மற்றொரு போட்டியில் அமெரிக்காவின் கோகோ காப், போலந்தின் மேக்டா லினெட் உடன் மோதினார். இதில் கோகோ காப் 6-0, 6-4 என வென்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
இன்று நடைபெறும் அரையிறுதியில் கோகோ காப், சபலென்காவை எதிர்கொள்கிறார்.
- ஷான் மசூத் கேப்டனாக பொறுப்பேற்று ஆடிய 6 டெஸ்ட் போட்டிகளில் பாகிஸ்தான் தோல்வி அடைந்தது.
- ஷான் மசூத் ஒரு கேப்டனாக தோல்வி அடைந்துவிட்டார். என தெரிவித்தார்.
முல்தான்:
இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 47 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது.
இந்தப் போட்டியில் பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் 556 ரன்கள் குவித்தது. அடுத்து ஆடிய இங்கிலாந்து 823 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. தொடர்ந்து ஆடிய பாகிஸ்தான் இரண்டாவது இன்னிங்சிலும் ஆல் அவுட்டானது.
ஷான் மசூத் கேப்டனாக பொறுப்பேற்ற பின் பாகிஸ்தான் அணி ஆடிய 6 டெஸ்ட் போட்டிகளிலும் தோல்வி அடைந்துள்ளது.
இந்நிலையில், ஷான் மசூத் ஒரு கேப்டனாக தோல்வி அடைந்துவிட்டார். ஷான் மசூத் ஒரு துவக்க வீரர். அவர் துவக்க வீரராகவே ஆட வேண்டும் என நான் சொல்லிக் கொண்டு இருக்கிறேன்.
ஆனால் அவர் மூன்றாம் வரிசையில் இறங்குகிறார். இப்போது என்ன செய்வது? யாரை அணியிலிருந்து நீக்குவது? அவர், அவரது இடத்தில் விளையாட வேண்டும். அவருக்கு எப்படி கேப்டன்சி செய்ய வேண்டும் என்று தெரியவில்லை. இந்த கிரிக்கெட் அணிக்கு என்னதான் நடக்கிறது? இது மிகவும் அவமானமாக உள்ளது என முன்னாள் வீரர்கள் கருத்து தெரிவித்தனர்.
- நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது.
- ரோகித் சர்மா கேப்டனாகவும், பும்ரா துணை கேப்டனாகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
புதுடெல்லி:
நியூசிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது.
இந்நிலையில், நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது. ரோகித் சர்மா கேப்டனாகவும், பும்ரா துணை கேப்டனாகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
இந்திய அணியின் விவரம் வருமாறு:
ரோகித் சர்மா (கேப்டன்), ஜஸ்பிரீத் பும்ரா (துணை கேப்டன்), ஜெய்ஸ்வால், சுப்மன் கில், விராட் கோலி, கே எல் ராகுல், சர்பராஸ் கான், ரிஷப் பண்ட், துருவ் ஜூரல், அஸ்வின் ஜடேஜா, அக்சர் படேல், குல்தீப் யாதவ், சிராஜ், ஆகாஷ் தீப்
ரிசர்வ் வீரர்கள்: ஹர்ஷித் ரானா, நிதிஷ் ரெட்டி, மயங்க் யாதவ், பிரசித் கிருஷ்ணா
முதல் டெஸ்ட் போட்டி வரும் 16ம் தேதி பெங்களுரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற உள்ளது.
- முதலில் ஆடிய பாகிஸ்தான் 82 ரன்களில் ஆல் அவுட்டானது.
- அடுத்து ஆடிய ஆஸ்திரேலியா எளிதில் வெற்றி பெற்றது.
துபாய்:
9-வது மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் மற்றும் சார்ஜாவில் நடந்து வருகிறது.
இந்நிலையில், இன்று துபாயில் நடைபெற்ற 14-வது லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் அணிகள் மோதின. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பவுலிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி 82 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அலியா ரியாஸ் அதிகபட்சமாக 26 ரன்கள் எடுத்தார்.
ஆஸ்திரேலியா சார்பில் ஆஷ்லே கார்ட்னர் 4 விக்கெட்டும், அன்னபெல் சதர்லேண்ட், ஜார்ஜியா தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
இதையடுத்து, 83 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலியா 11 ஓவரில் ஒரு விக்கெட் இழப்புக்கு 83 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.
நடப்பு தொடரில் ஆஸ்திரேலியா அணி பெறும் 3-வது வெற்றி இதுவாகும்.
- ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் சீனாவில் நடந்து வருகிறது.
- இதில் செர்பியாவின் ஜோகோவிச் அரையிறுதிக்கு முன்னேறினார்.
பீஜிங்:
ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் சீனாவில் நடந்து வருகிறது.
இந்த தொடரில் இன்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி ஆட்டத்தில் செர்பியாவின் ஜோகோவிச், செக் வீரர் ஜாகுப் மென்சிக் உடன் மோதினார்.
இதில் முதல் செட்டை 6-7 (4-7) என இழந்த ஜோகோவிச், அடுத்த இரு செட்களை 6-1, 6-4 என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதிக்குள் நுழைந்தார்.
மற்றொரு காலிறுதியில் பெல்ஜியத்தின் டேவி கோபின், அமெரிக்காவின் டெய்லர் பிரிட்ஸ் உடன் மோதினார். இந்த ஆட்டத்தில் கோபின் 6-3, 6-4 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார்.
நாளை நடைபெறும் அரையிறுதியில் டேவிட் கோபின், ஜோகோவிச்சை சந்திக்கிறார்.






